சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 02
ஆம்..! நானும் என் நண்பர்களும் வெளிநாட்டிற்கு வர முயற்சி செய்த நாட்களில் மூன்று முறை இரயிலில் மும்பை போகும் நிலை ஏற்பட்டது. முதல் முறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடப்போகிறோம் என்ற ஆவலுடனும், உற்சாகத்துடனும் வந்ததால் அந்த இரயில் பயணம் சுகமாகத்தான் இருந்தது (அது மட்டுமில்லாமல் கூடவே என் நண்பர்களும் வந்தார்கள்..!). என் கூட வந்த நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் முன் அனுபவம் உள்ளவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக விரைவில் வெளிநாட்டு வேலை கிடைத்து, மும்பை சாந்தா குரூஸ் ஏர்போர்ட்டில் நகரும் படிகட்டுகளில் (Elevator) ஏறி நின்றபடி, சினிமாவில் வருவது போல ஸ்டைலாக டாட்டா காட்டி பறந்து போனார்கள் (அதன் பிறகு அவர்களுக்கு மோசமான சம்பளத்தில், கஷ்டமான வேலை கிடைத்ததை என்னிடம் சொல்லி அழுததெல்லாம் தனிக்கதை..!!).
தனிமைப்படுத்தப் பட்ட நான் உடைந்து போனேன். இயலாமையில் துடித்தேன். எனக்கும் ஒரு ஏஜெண்ட் மாட்டினான் (அவனுக்கு தலைக்கு மேலே இரண்டு கொம்புகளை மட்டும் வைத்து பார்த்தால் அசல் கிங்கரன் மாதிரியே இருப்பான்..!!). என்னை வெளிநாடு அனுப்ப அவன் என்னிடம் அளந்த பொய்கள் இருக்கிறதே..! சொல்லி மாளாது..!! பயணம் எல்லாம் ரெடியாகி �ஊருக்கு போய் இருங்கள், விசா தயாரானதும் தகவல் தெரிவிக்கிறேன். உடனே புறப்பட்டு வரவும்..!� என்று சொல்லி அனுப்பினான். வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் ஊருக்கு திரும்பினேன். அடுத்த 10 நாட்களில் கிங்கரனிடமிருந்து பதில் உடனே புறப்பட்டு வரச்சொல்லி..! வானம் என் கையில் வசப்பட்டது போல் உணர்ந்தேன். எல்லோரிடமிருந்து பயணம் சொல்லி விடை பெற்றேன் (அன்று என் மனைவி அழுத அழுகையில் சௌகார் ஜானகி தோற்றுப்போனார்..!!). மும்பை போன எனக்கு இடி காத்திருந்தது.!!
Crisis Hotline: Veterans Press 1க்ரைஸிஸ் ஹாட்லைன் : வெடரன்ஸ் ப்ரெஸ் 1 2013
-
Crisis Hotline: Veterans Press 1 என்ற ஆங்கில ஆவணப்படம் 2013 ஆம் ஆண்டு
வெளியானது.
எல்லன் கூசன்பெர்க் இயக்கி டானா பெர்ரி தயாரித்த இந்த ஆவணப்படம் நிதர்ச...
19 மணிநேரம் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக