விசாவில் ஏதோ பிரச்சினை என்றும் உடனே என் வீட்டிற்கு ஃபோன் செய்ததாகவும், புறப்பட்டு வருவதாக வீட்டில் தகவல் சொன்னதாகவும் சொன்னான். நான் மனதை தளரவிட வில்லை. கிங்கரனோ மீண்டும் ஊர் போய் விட்டு வரச் சொன்னான். அம்மாடி..! முடியற காரியமா இது..! போய் எவன் முகத்தில் விழிப்பது..? எவ்வளவு நாளானாலும் சரி ஃப்ளைட்டில் அடி வைக்காமல் வீட்டுக்கு திரும்ப மாட்டேன் என்ற என் சபதத்தை சொன்னேன். என் சபதத்தை அவன் சட்டை செய்யவே இல்லை. செலவுக்கு வைத்திருந்த பணம் கொஞ்சம், கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடும் நிலைக்கு வந்தேன். அந்த அரை பசி மயக்கத்திலேயே என் நிலமையை கிங்கரனிடம் சொல்லி புலம்பினேன். ஊரில் என் வீட்டார் சவுதி ஸ்டாம்ப் ஒட்டிய கடிதத்தையும், ஐ.எஸ்.டி ஃபோனையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!
மனமிரங்கிய கிங்கரன் கையில் ஐநூறு ரூபாய் கொடுத்து (அப்பாடி..! இன்னைக்கு டெல்லி தர்பார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கட்டலாம்..!!) ஊருக்கு போகச்சொல்லி கெஞ்சினான். நான் ஊரில் அனைவரிடமும் பயணம் சொல்லி வந்ததை சொன்னதும் �இந்த ஒரு முறை மட்டும் ஊர் போய் வாங்க..! அடுத்த முறை அனுப்பாவிட்டால் என்னை உங்க செருப்பால் அடிங்க..! (ஹையா..! நல்ல வாய்ப்பு..!!)� என்று சொன்னான். அவன் என்னை ஊருக்கு அனுப்பப் போகும் விஷயத்தை விட, எல்லா கோபத்தையும் சேர்த்து அவனை காலணியால் மாத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆதரவாக இருந்தது. சோகத்துடன் திரும்பினேன். அன்று எனக்கு இரயில் பயணம் நரகமாக இருந்தது. அதன் பிறகு ஊருக்கு வந்து அடுத்த பயணம் போகும் வரை யாருக்கும் தெரியாமல், மனைவியோடு என் பாட்டி வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது தனிக்கதை. கிங்கரனிடமிருந்து இரண்டாவது மரண ஓலை வந்தது (தந்தி..!). ஆனால் நான் யாருக்கும் பயணம் சொல்லவில்லை. என் மனைவியிடம் கூட �போய் 4 நாளில் திரும்பி வந்து விடுகிறேன்� என்று சொன்னதும் சந்தோஷமாக வழியனுப்பு விழா நடந்தது. மறக்காமல் புதுச்செருப்பு ஒன்று வாங்கிக் கொண்டேன் (ஏஜெண்ட் இதற்காக காத்திருப்பாரே..!!). அடுத்த பயணம் மும்பை நோக்கி மூன்றாவது முறையாக..!! ஏஜெண்டை நான் சந்தித்த போது அவர் பார்வை என் முகத்தை விட என் செருப்பு மீதே நிலைத்தது. என் செருப்பின் மகிமையோ என்னவோ அடுத்த நாளே பயணம் ரெடியானது (அதற்கு பரிசாக அந்த புதுச்செருப்பை நம் கிங்கரருக்கே தாரை வார்த்து கொடுத்தேன்..!!).
யாரிடமும் பயணம் சொல்லாமல் வந்ததை நினைத்து நொந்தேன். எஜெண்டிடம் பாஸ்போர்ட், டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நிலையைச் சொல்லி �ஊருக்கு போய் அனைவரிடமும் பயணம் சொல்லிவந்துவிடவா..?� என்று கேட்டதற்கு �முடியாது..! நாளை ஃப்ளைட்டில் ஏறியாக வேண்டும்..!� என்று கறாராக சொல்லிவிட்டான் (பாவி..!). எனக்கு வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட எப்படி தொலைபேசி மூலம் என் சகியை சமாதானப்படுத்துவது என்ற கவலை தான் அதிகமானது. நடுங்கிய படியே விஷயத்தை சொன்னதும் சௌகார் ஜானகியின் கண்ணீர் தொழிற்சாலை சுறு சுறுப்புடன் இயங்கத் தொடங்கியது..! இரண்டு பேரும் மாற்றி மாற்றி அழுது இரு பக்கமும் வெள்ளக்காடானது..!! இப்படி இரயில் பயணம் என் வாழ்வில் நிறையவே விளையாடி விட்டது.
Crisis Hotline: Veterans Press 1க்ரைஸிஸ் ஹாட்லைன் : வெடரன்ஸ் ப்ரெஸ் 1 2013
-
Crisis Hotline: Veterans Press 1 என்ற ஆங்கில ஆவணப்படம் 2013 ஆம் ஆண்டு
வெளியானது.
எல்லன் கூசன்பெர்க் இயக்கி டானா பெர்ரி தயாரித்த இந்த ஆவணப்படம் நிதர்ச...
19 மணிநேரம் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக