நேரம்:

செவ்வாய், 24 நவம்பர், 2009

தமிழில் எழுதுவது எப்படி..?

தமிழில் எழுதுவது எப்படி..?

நண்பர்களே..!

எனக்கு கணினி தமிழ் எழுதுவது என்பது பெரும் கனவாகவே இருந்தது. அந்த கனவு நனவாக நான் கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதை கூட நான் தொடராக எழுதியிருக்கிறேன். அது போன்ற கஷ்டங்கள் ஏதும் இல்லாமல் எளிமையாக எழுதி மகிழ இப்பொழுது யுனிகோட் முறை வந்து எல்லோர் வயிற்றிலும் பாலை வார்த்துவிட்டது. நம்மில் பலருக்கு எழுதும் திறமை இருந்தும், ஆசை இருந்தும் அதன் வழி அறியாமல் இருப்பார்கள். அவர்களுக்காக இந்த பதிவை அளிக்கிறேன். இந்த செயலியை நிறுவுவதிலும், தட்டச்சு செய்வதிலும் ஏதேனும் பிரச்சினை இருக்குமானால் தயங்காது தெரிவியுங்கள்..!!

தமிழில் எழுத முரசு அஞ்சல், இ-கலப்பை என பல மென்பொருட்கள் இருந்தாலும், எளிய மற்றும் சிறப்பான மென்பொருளாக NHM Writer-ஐ கருதுகிறேன். அதை பயன்படுத்தும் வழி முறைகள் கீழே..!! இந்த பதிவை இட காரணமான வடகரையை சேர்ந்த, தற்பொழுது சவுதி அரேபியாவின் கமீஸ் முஷாயத்தில் வசிக்கும் அன்பு நண்பர் அஹமது ஜமீல் அவர்களுக்கு என் நன்றிகள்..!

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?


NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.


  1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?


NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.


எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.


image


உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.


பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.


முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


image


2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


image


3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image



4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


image


5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


image


6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்


image


பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.


image


NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?


NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற imageஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.


தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?


நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.


image


தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.


மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.


தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.


செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?


NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.


image


அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.


image


தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?


முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.


ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.


image


அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


image


நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.


யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?


எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.


Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.


image


அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்


image


உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு "" என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த "" என்ற தழிழ் எழுத்தை "ய்" என்றோ, அல்லது "யா" என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


image


நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.


இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!






நன்றி: இணையம்





(S)iringa (M)anasara (S)iringa..! - SMS ஜோக்ஸ்

 

SMS ஜோக்ஸ்

 

 

 

 

 

 

 

நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.

 

டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...

 

 

ஒரு "சின்னத்" தத்துவம்.

 

பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது

 

ஆண்களுக்கு பெரிய வீடு, சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?

 

 

காதலுக்கு மதிப்பெண்கள்:

 

சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்

 

சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்

 

சின்சியரா காதல் பண்ணுனா

-

-

-

 

 

வேறு என்ன "டாஸ் மாக்" தான்

 

 

ஒருவர்: பஸ்ஸ்டாப்புல நின்னு மேலயே பாத்துகிட்டு இருக்கிங்களே ஏன்?

 

சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு "மேல" வரும்ன்னு சொன்னாங்க.

 

 

பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.?

 

புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு

 

பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு

 

புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.

 

 

பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?

 

வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?

 

பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.

 

 

ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்

 

டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?

 

ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது

 

 

பெத்தப் பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

என்னன்னா…..

 

ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அடிவயிற்றுல ஒரு நெருப்பு பத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.

 

 

சர்தார் 1: வெயிட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல

 

சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க

 

சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)

 

 

கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?

 

மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.

 

கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு

 

 

ஒரு மொபைல் தத்துவம்:

 

பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி

 

பசங்க மனசு மொபைல் மாதிரி

 

தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்

 

மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்

 

சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்.!!!

 

 

.சிறப்பு தத்துவம்.

ஒரு மஞ்சக்கயித்த உன் கையில கட்டுனா அதுக்கு பேரு காப்பு..!!

 

அதையே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நீ

 

உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பு.!!

 

 

 

.நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?

 

திருடன்: சதா அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.

 

 

நச்சுன்னு ஒரு உண்மை சொல்லுறேன் கேட்டுக்குங்க.

 

என்னதான் 220CC பல்சரிலும், 350CC ராயல் என்பீல்டுலயும் இந்த பசங்க சுத்தினாலும் ஃபாலோ பண்ணப்போறது என்னவோ 80CC ஸ்கூட்டியைதான்.

 

 

143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.

 

I love you வா ம்ஹூம் இல்லை

 

I hate you வா இல்லவே இல்லை

 

I like you வா ம்ஹூம்

 

I miss you வா இல்லை

 

I wish you வா இல்லை இல்லை இல்லை

 

சரி நான் சரியாக சொல்லுறேன்

 

143ன்னா

-

-

நூத்தி நாப்பத்து மூன்று. (அய்யோ அடிக்க வராதிங்க)

 

 

ஹமாம் சோப் ரீ மிக்ஸ் விளம்பரம்:

 

பவித்ரா கடைக்குப் போயி ஒரு குவார்ட்டர் சரக்கு வாங்கிட்டு வர்றியாம்மா?

 

சரிம்மா.....

 

அய்யய்யோ என் பொண்ணுகிட்ட என்ன சரக்குன்னு சொல்லலியே

 

வாந்தி வருமே

 

தலைவலிக்குமே

 

ஒவர் ஹேங் ஆகுமே

 

போதை ஏறாதே

 

பவித்ரா ..........

 

என்னம்மா (பவித்ரா கையில் ஒல்ட் மங்குடன்)

 

ஓல்ட் மங்கிருக்க பயமேன்.!!!

 

 

தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரி அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்

 

அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?

 

தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.

 

 

தண்ணீர் தெளிச்சு ஏன் கோலம் போடுறாங்க தெரியுமா?

 

ஏன்னா

 

கோலம் போட்டுட்டு அப்புறம் தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்.

 

 

காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

இப்பத்தான் தெரியுது நாம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு.!!

 

 

.ஜோசியர்: உங்க ஜாதகப் படி நீங்க ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கனுமே

 

ஜோசியம் பார்ப்பவர்: ஆமாம் சாமி.. இப்ப உங்களுக்கு கொடுக்கக் கூட கையில் பத்துப் பைசா இல்லை.

 

 

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்

 

படிப்புத்தான் வரல

 

தூக்கமாவது வருதேன்னு நினைச்சு

 

சமத்தா தூங்கிடனும்.

 

 

.தினம் ஒரு kural படிக்கனும்

 

எனவே இன்னிக்கு இந்த kural படிங்க

 

"மியாவ் மியாவ் "

 

சரியா நாளைக்கு வேற kural படிக்கலாம் என்ன?(சரி சரி அழக்கூடாது)

 

 

பையன்: அம்மா எல்லா வெடியும் தீந்துப் போச்சு இந்த சிவப்பு கலர் பெரிய வெடியை விடவா?

 

அம்மா: சனியனே அது கேஸ் சிலிண்டருடா.....

 

 

.மனசு இருந்தா SMS அனுப்புங்க...

 

அன்பு இருந்தா பிக்சர் மெசேஜ் அனுப்புங்க

 

காசு இருந்தா CALL பண்ணுங்க...

 

எல்லாம் இருந்தா .....

 

உங்க செல்லை கொரியரில் அனுப்புங்க ஹி ஹி....

 

 

.ஒரு பையன் ரோட்டுல தும்மிகிட்டே போறான்

 

ஏன்?

 

ஏன்னா

 

அவன் பொடிப் பையன்.

 

 

நாம் வாழனும்னா எத்தனைப் பொண்ணை வேனும்னாலும் காதலிக்கலாம்

 

ஆனா சாவனும்னா

 

ஒரே ஒரு பொண்ணை

 

கல்யாணம் கட்டிக்கிட்டாப் போதும்.

 

 

பசங்க காதலுக்கும் பொண்ணுங்க காதலுக்கும் என்ன வித்தியாசம்.

 

பசங்க பிரண்டுன்னு சொல்லிட்டு பின்னாடி காதலிப்பாங்க

 

பொண்ணுங்க காதலிச்சுட்டு பின்னாடி பிரண்டுன்னு சொல்லுவாங்க.

 

 

.நண்பா..!! நேற்று என் கனவில் நீ வந்தாய்

 

கட்டுக்கட்டாக பணத்தினை எண்ணிக்கொண்டிருந்தாய்

 

ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை

 

அது என்னவென்றால்

 

ஏன் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாய்?

 

 

ஒருவர். ஹலோ சிங்ஜி ஏன் உங்க புது வீட்டுக்கு பாடி ஸ்பிரே அடிக்கிறிங்க

 

சர்தார். ஏன்னா இது வியர்வை சிந்தி கட்டிய வீடு.

 

 

திருடர்கள் ஜாக்கிரதை என்னும் தலைப்பில் கவிதை எழுத

கண் மூடி ஒரு நிமிடம் யோசித்தேன் விழித்துப் பார்த்தால்

என் பேனாவை காணவில்லை.

 

 

இப்ப நீங்க பைசா செலவில்லாம டென்னிஸ் பார்க்கப் போறிங்க

 

IS IS IS IS IS IS IS IS IS IS

 

பாத்தாச்சா டென்னிஸை

 

மீண்டும் வருகிறென்.

 

நன்றி

 

 

.தங்கச் செயினை உருக்கினால் தங்கம் வரும்

 

வெள்ளிச்செயினை உருக்கினால் வெள்ளி வரும்

 

அதுமாதிரி சைக்கிள்செயினை உருக்கினால் சைக்கிள் வருமா?

 

 

ஒருவன்: பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது

 

கேட்பவர்: ஏன் என்னாச்சு

 

ஒருவன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னா அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது.

 

 

 

அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை

 

அதனால் எனக்கும் எண்னைப் பிடிக்கவில்லை.

 

ஆகவே

 

-

 

-

 

ரெண்டு பேரும் எண்ணை இல்லாமல் தோசை சுட்டு சாப்பிட்டோம். ஒகே.

 

 

.ஓட்டுப்போடுவதற்கான அதிகாரபூர்வ வயது 18

 

திருமணத்திற்கான அதிகாரபூர்வ வயது 24

 

இதிலிருந்து என்ன தெரியுது.

 

IT IS TOUGHER TO CONTROL A LADY THAN A COUNTRY

 

 

 

 

 

 

 

 

நன்றி: இணையம்

 

Related Posts with Thumbnails