நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-10)




எல்லாம் அறிந்த ஆண்டவனுக்கு இஸ்லாத்தில் ஏன் தொழுகை அரபியில் மட்டும் நடத்தப்படுகிறது..? 

தொடர்ந்து சொல்வதற்கு முன் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு வளைவு நெளிவில்லாத ஒரு கோட்டை தாளில் வரைந்து உங்களிடம் தந்து அதைப்பார்த்து அதே போல் இன்னொரு கோட்டை மற்றொரு தாளில் வரைந்து தரவேண்டும் என்று சொல்கிறேன். அதையே நீங்களும் அடுத்தவருக்கு சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொருவரிடம் கைமாறி வரையப்பட்ட கோடு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பிறகு பார்த்தால் அந்த கோடு நான் ஆரம்பத்தில் வரைந்த கோடுபோல் இல்லாமல் வளைவு நெளிவுகளுடன் முதல் நேர்க்கோட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும். இந்த நிலை தான் இப்போதுள்ள நிறைய மத நூல்களுக்கு. நான் பெயர் குறிப்பிட்டு எதையும் சொல்லவிரும்பவில்லை. சமயத்தின் மூலமாக இருக்கும் முதல் நூல் அதன் பிறகு காலம் செல்ல, செல்ல அந்த காலத்திற்கு ஏற்றார்போல் திருத்தியமைக்கப்படுகிறது. இடைச்செருகல்கள் செய்யப்படுகின்றன. முக்காலமும் அறிந்த இறைவனால் அளிக்கப்படும் ஒரு நூல் முன் காலத்திற்கு பொருந்தியும் தற்காலத்திற்கு பொருந்தாமலும் நிச்சயம் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனால் வழங்கப்பட்டதாக இருக்கவே முடியாது. அது மனிதர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவன் எப்பொழுதும் தன்னை அரபி மொழி கொண்டு வணங்க வேண்டும் என்று தெரிவித்ததே கிடையாது. காரணம், மொழிப்பிரச்சினை கடவுளுக்கு கிடையாது. ஆனால், இது இறைவனின் வாக்கு தான் குரான் என்பதை நிரூபிக்க நபிகள் சொன்ன வழிகாட்டுதல் தான் அரபி மொழி தொழுகை என்பது. குழப்புகிறதா..? விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். முஸ்லீம்களின் தொழுகையில் சொல்லப்படும் அனைத்து அரபுச்சொற்றொடர்களும் குரானின் உள்ள இறைவசனங்கள் மட்டுமே. இறைவேதத்தில் கலப்படம், திருத்தம் ஏற்படுவதை தடுக்க நபிகள் சொன்ன வழி முறை இது. இந்த மொழி நிபந்தனை மட்டும் இல்லையென்றால் குரான் இன்று நாடு, மொழி, இன வாரியாக இஸ்லாமிய மக்களாலாயே குதறப்பட்டு, அதிலுள்ள மூலமான இறைவனின் செய்தி மறைக்கப்பட்டு மனிதர்களின் சிந்தனைகள் திணிக்கப்பட்டிருக்கும், இடைச்செறுகல் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்த நிபந்தனையால் தான் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனால் எப்படி அருளப்பட்டதோ அப்படியே, அதன் பொருள் மாறாமல் ஏன், அதன் ஒரு எழுத்துக்கூட மாறாமல் அப்படியே இருக்கிறது. காரணம், தொழுகையின் மூலம் குரானின் மூலமான ஒவ்வொரு அரபி மொழி வசனங்களும் தினமும் 5 வேளை தொழுகையினால் முஸ்லீம்களின் இதயங்களில் செதுக்கப்பட்டுள்ளது. யாரும் தங்கள் இஷ்டப்பட்டி அதை மாற்றமுடியாது. தொழுகை வசனங்கள் வேண்டுமானால் அவை அரபி மொழியில் இருக்கலாம். ஆனால் வணங்கும் போது ஒவ்வொருவரும் தன்னுடைய மொழியை மனதில் கொண்டே தன் வணக்கத்தையும் வேண்டுதலையும் செய்வார்கள். அதனால், அதில் எந்த கஷ்டமோ, சிரமமோ இருக்காது. இறைவனுடைய கட்டளைகள் கொண்டு தொகுக்கப்பட்ட முதல் குரான் தொகுப்பு பிரதி இன்றும் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் எங்கு, யாரிடம் உள்ள குரானை வேண்டுமானாலும் வாங்கி, அதனுடன் துருக்கியில் பாதுக்காக்கப்பட்டு வரும் உலகின் முதல் குரானோடு ஒப்பிட்டால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றுள் ஒரு வேறுபாட்டையும் காணமுடியாது.


அது மட்டுமல்லாமல், அரபு மொழிக்கே உரிய இனிமை குரானை அம்மொழியில் தொழுகையினை நடத்தும் போது அழகினையும், இனிமையையும் தருவது என்பது மறுக்க இயலாத ஒரு விஷயம். அரபு மொழிக்கு மற்றொரு சிறப்பியல்பும் உண்டு. அதாவது குறிப்பிட்ட அரபு வார்த்தைகளை மற்றொரு மொழியில் ஒரே வார்த்தையில் மொழி பெயர்க்க முடியாத அளவுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கும். அதை மொழிபெயர்க்கும் போது சில சொற்றொடர் கொண்டு அதைவிளக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட அர்த்தம் மிகுந்த மொழியை மாற்றாமல், அதே மொழியை கொண்டு பயன்படுத்தினால் தான் அதன் உள்ளே உள்ள அர்த்ததின் பயனை அடைய முடியும். அரபு மொழியில் தொழுகையின் வசனங்கள் இருந்தாலும் அதை அப்படியே மூளைச்சலவை செய்தது போல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கக்கூடாது என்று தான் குரான், உலகின் எல்லா மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அதைப்படித்து அதிலுள்ள கருத்துக்களை புரிந்தே தொழுகை முதற்கொண்டு எதையும் செய்ய வேண்டும் என்பதே இஸ்லாம் சொல்லும் வழி முறை. குரானுக்கு மட்டுமே அதன் தனித்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த நிபந்தனை, ஹதீஸ் என்னும் நபிகளாரின் வழிமுறைகளுக்கல்ல..!!







LOLLUVAATHIYAR:
அரபு மொழியில் தொழுகை நடத்துவதை பற்றிய விளக்க அருமை இதயம்.
உங்கள் விளக்கம் எங்களுக்கு உன்மையில் எங்கள் மதத்தை பற்றி கூட சில உன்மைகள் புரியவைத்து விட்டது.
குறிப்பாக இந்த வாக்கியம்

Quote:
Originally Posted by இதயம் View Post
சமயத்தின் மூலமாக இருக்கும் முதல் நூல் அதன் பிறகு காலம் செல்ல, செல்ல அந்த காலத்திற்கு ஏற்றார்போல் திருத்தியமைக்கப்படுகிறது. இடைச்செருகல்கள் செய்யப்படுகின்றன.
.
இதே நிலை தான் ஹிந்து மத நூல்களுக்கும் வந்து விட்டது
சமஸ்கிருத்தத்திலிருந்து பொழி பெயர்க்க பட்ட போது இடைசொர்கள் புகுத்தி விட பட்டது.
நீங்கள் சொன்ன இதே காரனத்துக்காக தான் சமஸ்கிருத்ததில் பூஜைகள் என்று உலகம் பூராவும்
இருந்திருக்கலாம் என்று எனக்கு தோண்றுகிறது. உங்கள் விளகத்துக்கு நண்றி

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-09)



இஸ்லாமின் அடிப்படை கொள்கைகள் என்னென்ன..? அதன் அவசியம் என்ன..?
 
இஸ்லாத்தினை தாங்கி நிற்பது 5 தூண்கள். அவை..

1. ஒன்றே கடவுள், முகமது நபி அவர்கள் கடவுளின் இறுதித் தூதர் என்ற நம்பிக்கை

2. தொழுகை
3. நோன்பு
4. ஈகை
5. மக்கா புனிதப்பயணம்.

தொழுகை என்றால் என்ன..? அது ஏன்..?


இஸ்லாத்தின் கொள்கையை பொறுத்தவரை இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் பெரிய மகா சக்தி ஒன்று இருக்கிறது. அது தான் கடவுள். அவன் தான் இவ்வுலகம், அதில் உள்ள ஜீவராசிகள், உலகம் தாண்டிய அண்டவெளி, சூரியன், சந்திரன் நட்சத்திரம் எல்லாவற்றையும் படைத்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். அப்படிப்பட்ட இறைவன் தன் படைப்புக்களில் சிறந்த படைப்பாக சொல்வது மனித இனத்தை. காரணம், அவனுடைய பகுத்தறிவு. மனிதனின் இந்த உலக வாழ்க்கை மிகச்சிறியது. அவன் மரணத்திற்கு பிறகு முடிவில்லாத ஒரு வாழ்க்கை அவனுக்கு இருக்கிறது. அங்கு அவனுக்கு இந்த உலகத்தில் அவன் செய்த நன்மை தீமைகளை வைத்து அவனுக்கு இன்பம் நிறைந்த சொர்க்க வாழ்க்கையோ, துன்பம் நிறைந்த நரகமோ கிடைக்கும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்கள் நற்கருமங்களை செய்ய முனைய வேண்டும். மனிதன் தனக்கு கிடைத்த பகுத்தறிவை கொண்டு கடவுளின் கருணை உள்ளத்தை நினைத்து இவ்வுலகில் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியும், மரணத்திற்கு பிறகு கிடைக்க வேண்டிய சொர்க்கத்திற்காகவும் செய்கிற ஊழியம் தான் தொழுகை. பொதுவாக ஊழியம் செய்பவருக்கு கஷ்டத்தையும், பெருபவருக்கு இன்பமும் கொடுக்கும். ஆனால், தொழுகையை பொறுத்தவரை இரு தரப்பினரும் பயனடையலாம். அந்த வகையில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பகுத்தறியும் பருவம் முதல் உடல் ஒத்துழைக்கும் காலம் வரை தினம் ஐந்து தடவைகள் தொழ வேண்டும். இது ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்றமும் ஒழுங்குகள் நிறைய இருக்கின்றன.


தூய மனம்

தூய உடல்
தூய உடை ஆகியவற்றுடன் தொழுகையில் ஈடுபட வேண்டும். தொழுகை சிலருக்கு விதிவிலக்காக சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகள், நீண்ட பயணம் செய்பவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாதவிலக்கு பெண்கள், உடல் ஒத்துழைக்கா முதியவர்கள் ஆகியோர் தொழ தேவையில்லை. இவர்களை தவிர்த்து மற்ற அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் மதியநேர தொழுகை சிறப்பு தொழுகை அங்கீகாரம் பெற்றிருப்பதால் அதன் சிறப்பும், தொழுபவர்களின் கூடுதல் எண்ணிக்கையும், சிறப்பு உரையும் இருக்கும். அரபியில் வெள்ளிக்கிழமை என்பது ஜும்மா என்பதால் அதற்கு ஜும்மா தொழுகை என்று பெயர்.

தொழுகையின் செயல்பாடுகள் அனைத்தும் அரபு மொழியில் இருக்கும். இவ்வுலகை படைத்து பரிபாலிக்கும் கடவுளுக்கு ஏன் அரபி மொழியில் வழிபாடு என்பது உங்கள் கேள்வி சரிதானே..? நீங்கள் சொல்வது உண்மை தான். நமக்கு தான் மொழி பிரச்சினை, நம்மை படைத்த கடவுளுக்கல்ல. பிறகு ஏன் அரபு மொழியில்..? காரணம் இருக்கிறது. இறைவன் மனித குலத்திற்கு தன் செய்தியைச் சொல்ல பல தூதுவர்களை அனுப்பியிருக்கிறான். உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு தூதுவரை அனுப்பியதாக திருக்குரான் சொல்கிறது. எழுதப்படிக்க தெரியாத, நாகரீகம் இல்லாமல் காட்டுமிராண்டிகளை போல் மனிதர்கள் வாழ்ந்த அரேபியாவில் எழுதப்படிக்க தெரியாத முகமது நபிகளின் மூலமாக தன் செய்திகளைச் சொல்லித்தான் இஸ்லாத்தை இறைவன் நிறைவு செய்தான். இருந்தாலும் அரபு மொழியில் மட்டும் தொழுகை ஏன்..?


நேரமின்மையால் இப்போது நிறுத்திக் கொள்கிறேன். கேள்விகள் குறித்த பதில்கள் தொடர்ந்து கிடைக்கும்.




LOLLUVAATHIYAR:
இப்படி தெளிவாக விளக்கும் போது எங்கள் மத நம்பிக்களும் எங்களுக்கு புரிகிறது ஜாபர்.
இஸ்லாம் பற்றி உங்கள் பதிவை படிக்கும் போது உங்கள் மதத்தை புரிந்து கொள்வது மட்டுமல்ல
அனைத்து மதத்திலும் ஒன்றே சொல்ல பட்டிருக்கு என்று தெளிவாக புரிகிறது 



 ஜெயாஸ்தா:
Quote:
Originally Posted by அக்னி View Post
முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்?
நண்பர் லொள்ளுவின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளிக்கும் நண்பர் இதயத்திற்கு என் வாழ்த்துக்கள்.

மேற் கண்ட அக்னியின் கேள்விக்கான பதிலில் ஒரு விஞ்ஞான விளக்கமும் புதைந்துள்ளது. பெரும்பாலும் விலங்குகளில் இருந்து பரவக்கூடிய நோய்கள் அதன் இரத்தத்திலிருந்து பரவுகிறது என்பது அறிவியல் ரீதியான உண்மை. அதனால்தான் இஸ்லாம் பிராணிகளின் ரத்தத்தை சாப்பிடுவதை அனுமதிக்கவில்லை. உதரணமாக ஒரு ஆடு வெட்டப்பட்டுவதை விட அறுக்கப்படுவதே சிறந்தது. என்ன காரணமென்றால், வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தம் முழுவதுமாக வெளியேறாமால் அப்படியே உள்ளேயே உறைந்து இருந்துவிடுகிறது. அதனால் அந்த ரத்தத்திலுள்ள கிருமிகள் அந்த ஆட்டின் இறைச்சியில் கலந்துவிடும் அபாயம் உண்டு. ஆனால் அறுக்கப்படும்போது, ஆட்டின் இரத்தம் முழுமையாக வெளியாகிவிடும். இஸ்லாமியர் கடைகளில் இந்தமுறை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள். அது மட்டுமல்லாமல் நண்பர்கள் சொன்ன மாதிரி மாற்றுமத நண்பர்களும் இதே முறையை பின்பற்றுகிறார்கள். எங்கள் ஊர்பகுதிகளில் 'சிக்கன் கார்னர்' கடைகளில் 'ஹலால் செய்யப்பட்டது' என்று போர்டு வைத்துள்ளார்கள்.






இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-08)





ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை இஸ்லாம் தடை செய்வதின் விஞ்ஞான நோக்கத்தை காண்போம். அறிவியல் கண்டுபிடிப்பின் படி எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கான ஊற்றுக்கண்ணாக இருப்பது முறைகேடான உறவு என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது மனைவி அல்லாது இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளுதல். அந்த பெண்ணும் இன்னும் பல ஆணுடன் உறவு வைத்திருப்பாள் என்பது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலை பாலியல் நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் பலரிடம் உறவு கொள்ளும் விபசாரிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களிடம் உறவு கொள்ளும் மனைவிக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் கூட நடைமுறையில் ஒத்துவராத விஷயமிது. காரணம், அவர்கள் உடல் ரீதியாகவே அப்படிப்பட்ட நிலையை பெற்றுள்ளார்கள்.

அது மட்டுமல்ல, அவனே அவனுக்கென்று கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி சின்னவீடு வைத்துக்கொள்ளும் இந்த உலகத்தில் ஒன்று மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு மனைவியின் மீது மற்ற கணவர்களுக்கு அன்பும், காதலும், ஈடுபாடும் இருக்காது. அவன் மனைவியை விடுத்து பிற பெண்களிடம் உறவு கொண்டு அவன் பாலியல் நோயை பெற்று அதை அவன் மனைவிக்கு கொடுத்து, அவள் மற்ற கணவர்களுக்கு கொடுத்து, மற்ற கணவர்கள் உறவு கொள்ளும் மற்ற பெண்களுக்கு கொடுத்து இந்த நோய் பரவி உலகமே பாலியல் நோயால் பீடிக்கப்படும். ஆனால், ஒரே கணவரிடம் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த அபாயம் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கே உரிய அதிகாரம், ஆளுமை குணம் கணவர்களுக்குள் போட்டி பொறாமையை ஏற்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்கி அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும்.


சரி.. அப்படியானால் இதன் மூலம் இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..? நிச்சயம் இல்லை. ஒரு பிரச்சினையின் தீர்வாக விவாகரத்து, அதனால் பெண்ணின் வாழ்க்கை இழப்பு, விபசாரம், நோய் என்று போகாமல் சுமுகமாக, சுகமாக வாழ இஸ்லாம் சொல்லித்தரும் வழி இது. இஸ்லாத்தில் இந்ததபல தார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து இவ்வளவு விமர்சிக்கப்படுகிறதே.. நீங்களே சொல்லுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை தொகையில் எல்லா மதத்தினரின் சதவீதத்தில் பல தார மணம் செய்த முஸ்லீம்களின் சதவீதம் எவ்வளவு..? மற்ற மதத்தினரைவிட குறைவாக இருப்பார்கள். காரணம், கடுமையான நிபந்தனைகளும், வழி முறைகளும். அது மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதற்கான மன பலம், உடல்பலம், பொருள் பலம் அவசியம் வேண்டும்.


நமக்கு ஒரு மனைவியுடன் வாழ்க்கை தள்ளுவதற்கே நாக்கு தள்ளுகிறது..!! நம் முதல்வருக்கு 2 மனைவிகள். ஆனால், அவர் முஸ்லீம் இல்லை. அவரை சமுதாயம் ஒதுக்கவில்லை. அவர்களுக்குள் பிரச்சினையும் இல்லை. எனக்கு ஒரே ஒரு மனைவி தான். என்னால் பலதார மணத்தை என் விஷயத்தில் ஏற்கமுடியாது. ஏனென்றால் அதற்கான காரணகாரியங்கள் எங்கள் இருவருக்கும் இல்லாததால் அதன் அவசியம் இல்லை. அவசியம் உள்ளவர்கள் தீர்விற்காக அதை செய்வதில் தவறில்லை. அது வழிகெட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்தது. கடைசியாக, பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பவை நம் மதமல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் தேவை, புரிதல், அனுசரித்தல், பகிர்தல் ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன. 




Quote:
Originally Posted by ஆதவா View Post
அருமை ஜாபர் இதயம்.... சில கேள்விகளுக்கு சரியான பதிலடி பதில்கள் கொடுத்து சிறப்பாக நடத்திச்செல்லுகிறீர்கள்... மனைவி சம்பந்த கேள்விகள் எனக்கு ஒரு பாடம்.....

கீழ்கண்ட வாசகம் நான் சிறு வயதில் எனது அப்பாவின் அலுவலகத்திற்கருகே உள்ள மசூதியில் படித்தது... அதற்கு விளக்கம் சொல்லமுடியுமா?


மஸ்ஜிதே அஹமத்

மதரஸா கைரூல் உலூம்..

தக்லே சுன்னத் தக்னி ஜமாத்.... இது மிகவும் சிறு வயதில் ஆழமாக பதிந்திட்ட வாக்கியம்... அர்த்தம் மட்டும் தெரியவில்லை... சொல்லுங்கள்....

ஆதவனுக்கு நன்றிகள்..! நான் எழுதுவதை படிப்பதன் மூலம் மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டம் ஒரு சிறு அளவேனும் களையப்பட்டால் அதுவே என் மீதான கடவுளின் அன்பிற்கு தொடக்கமுமாக, நான் எழுதும் இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றியுமாக இருக்கும்.
மஸ்ஜித் அஹமத் - அரபு மொழியில் மஸ்ஜித் என்பது நான் முன்பே சொன்னது போல் வழிபடும் இடம் அதாவது மசூதி எனப்படும். அஹமத் என்பது ஒரு பெயர். எப்படி நம் ஊரில் பிரகதீஸ்வரர் கோவில் என்று கடவுளின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறதோ, அதே போல் இஸ்லாமிய வரலாற்றில் பெரும் புகழ்பெற்றவர்களின் பெயரையோ, அல்லது அழகிய இஸ்லாமிய பெயரையோ கொண்டு அழைப்பது வழக்கம். தெற்கு தெரு மசூதி, வடக்குத்தெரு மசூதி என்று அழைக்காமல் அஹமத் மசூதி, முகமது மசூதி என்பது சிறப்பு என்பது என் கருத்து.

மதரஸா கைரூல் உலூம்
- அரபு மொழியில் மத்ரஸா என்றால் கல்விக்கற்கும் கல்விக்கூடம். அரபு நாடுகளில் கல்வி கற்கும் இடம் (School) மத்ரஸா எனப்படும். ஆனால், நம் ஊரில் இஸ்லாம் மார்க்க கல்வியை கற்றுத்தரும் இடம் மத்ரஸா என்று அழைப்பது வழக்கம். அந்த மத்ரஸாவின் பெயர் தான் கைரூல் உலூம்.

தக்லே சுன்னத் தக்னி ஜமாத்
- முஸ்லீம்களில் சாதி பிரிவினைகள் இல்லயென்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் இருக்குமோ என்று ஒரு தோற்றம் ஏற்படுத்த மொழி, தேசம், கலாச்சார விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு தமிழ் முஸ்லீம், உருது முஸ்லீம், தக்னி முஸ்லீம் என்பது. அரபியில் ஜமாத் என்றால் ஒன்று கூடுதல் என்று பொருள். மசூதியில் அனைவரும் ஒன்றாக தொழுவதை ஜமாத் தொழுகை என்பார்கள். ஊர் பொதுமக்கள் திருமணத்திற்கு வந்தார்கள் என்பதை ஜமாத் வந்தது, ஜமாத்தாக வந்தார்கள் என்றும் சொல்வார்கள். ஒரு சிறு ஊர் இருந்தால் அங்கு அறிஞர் அண்ணா நற்பணி மன்றம், எம்ஜியார் தொழிலாளர் கூட்டமைப்பு என்று இருக்கும். அது அவர்களின் செயல் அடிப்படையில், தொழில் அடிப்படையில் செயல்படும் கூட்டமைப்புகள். இதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அது போல தக்காண பீடபூமி பகுதியைச் சார்ந்த சில தென்மாநில மக்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் தக்னி முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தக்லே என்ற பெயரில் உண்டாக்கிய ஒரு கூட்டமைப்பு தான் தக்லே சுன்னத் தக்னி ஜமாத். நான் இந்த பெயரை இதுவரை கேள்விப்பட்டது கூட கிடையாது. ஆராய்ந்ததில் கிடைத்த ஆதாரங்கள் இவை. நான் ஏற்கனவே சொன்னது போல் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் ஒரே இறை.. ஒரே திருமறை.. ஒரே வழிமுறை..!!  

ஆதவா:
 எல்லாவற்றையும் நன்றாக கருத்தூன்றி படித்தேன் இதயம்... எனது அப்பா அலுவலகத்திலருகே இருக்கும் மசூதியில் காலையில் சிறு பிள்ளைகள் உருது படிக்க வருவார்கள்... உருதுவா என்று எனக்குத் தெரியாது.... எனினும் உங்கள் பதில்கள் நெஞ்சைக் கவருகின்றன... மேலும் தொடர் சிறப்பாகச் செல்லவேண்டும்..... வாழ்த்துக்கள்...

இதன்படி தொடர்ந்ததற்கு 500 பணம் அன்பளிப்பாக.... 





LOLLUVAATHIYAR:
ஜாபர் உங்கள் மதத்தை பற்றி நிறைய தகவல்கள் தந்திருகிறீர்கள்.
உங்கள் சேவைக்கு நிச்சயம் அல்லாவில் அருள் கிட்டும்
தொழுகை அரபு மொழியில் மட்டும் தான் இருக்கிறதா?

அரபு மொழி அனைத்து முஸ்லீம்களுக்கும் தெரியுமா? (எழுத படிக்க)
(இல்லை
அது சமஸ்கிருதம் பொழி போல சிலருக்கு மட்டும் தான் தெரியுமா)

முஸ்லீம்களின் தாய் மொழி அரபுவா? உருதுவா?

உருது படிக்காத முஸ்லீம்கலுக்கும் தெரியுமா?

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-07)








இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் பலதார மணம் செய்ய அனுமதி? 

அருமையான கேள்வியைக் கேட்ட அக்னிக்கு என் நன்றிகளும் பாராட்டுக்கள். காரணம் இஸ்லாத்தை குறை கூறுபவர்கள் வீசும் குற்றச்சாட்டு ஏவுகணையில் இந்த கேள்வியும் உண்டு.

திருமணம் என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும்பாலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுவது திருமணத்திற்கு பிறகு தான். எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவர் திருந்தி சீரான வாழ்க்கைப்பாதையில் பயணிக்கத்தொடங்குவது மனைவி என்ற உறவு கிடைத்த பிறகு தான். அத்தனை சிறப்புடைய திருமணம் பற்றியும், திருமணம் என்றால் என்ன, கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? இஸ்லாம் திருமணம் குறித்து சொல்லும் நடைமுறைகளை சுருக்கமாக பார்க்கலாம்.

இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன?

பொதுவாக திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் உள்ளம், உடலால் இணைந்து வாழ ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு என்று தான் நாம் அறிந்து வைத்திருக்கும். ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது இரு தரப்பினரின் சம்பந்தத்துடன் செய்யப்படும் ஒரு கண்ணியத்திற்குரிய வாழ்வியல் ஒப்பந்தம். இந்தியாவைப் பொறுத்தவரையில் முஸ்லீம்களுக்கான தனி திருமணச்சட்டங்கள் இருக்கின்றன. அது முஸ்லீம்களின் நடைமுறைகளில் என்றும் தலையிட்டதில்லை. மதச்சார்பின்மையை இதன் மூலமும் இந்தியா நிரூபிக்கிறது. இஸ்லாமிய திருமணத்திற்கு மணமக்கள் சம்மதம், இரு வீட்டார் ஒப்புதல், சாட்சிகள், ஜமாத்தார்கள் எனப்படும் ஊர் பொதுமக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக பெண் தரப்பில் பெண்ணின் தந்தை, சகோதரர்கள் அல்லது அதற்கு சமமான பாதுகாவலர்களின் ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் இல்லாத திருமணம் செல்லாது. இந்த முறை மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிடும் சில காவாலிகளிலிடமிருந்து பெண்ணிணம் காப்பாற்றப்படுகிறது.

திருமணத்தின் போது மணமக்கள் இருவரின் சம்மதம் வாய்மொழியாக கேட்கப்பட்டு, அது பதிவுசெய்யப்பட்டு கையெழுத்தும் வாங்கப்படுகிறது. பொதுவாக இஸ்லாத்தில் காதல் (!!) மணமென்பது மிகவும் குறைவு. காரணம், காதல் என்ற பெயரில் காம களியாட்டங்கள் நிகழ்த்தி, அதன் விளைவாக கர்ப்பமாக்கி அந்த பெண்ணை கைவிடுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால், இஸ்லாம் காதலுக்கு எதிரியில்லை. உடல் உணர்ச்சியை அடிப்படையாக கொண்டு கொள்ளப்படும் அன்பை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. உதாரணத்திற்கு பருவமடைந்த ஒரு பெண் வேற்று ஆணை தனிமையை சந்திக்கக்கூடாது. அப்படி சந்திக்கும் போது அங்கு 3 பேர் இருப்பார்கள். 1. ஆண் 2. பெண். 3. அவர்களை தவறு செய்ய வைத்து வழி கெடுக்க தூண்டும் ஷைத்தான். ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுக்கும் போது இஸ்லாம் சொல்லித்தரும் வழி. 1. இறைவனின் மார்க்கத்தில் சிறந்தவள் 2. ஒழுக்கத்தில் சிறந்தவள் 3. குடும்ப பாரம்பரியத்தில் சிறந்தவள் 4. கல்வியில் சிறந்தவள் 5. அழகில் சிறந்தவள், 6. செல்வத்தில் சிறந்தவள். இஸ்லாம் பணத்திற்கு கடைசி இடத்தை கொடுக்கிறது. தனக்கான இணையை தேர்ந்தெடுக்கவும், நிராகரிக்கவும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

இஸ்லாத்தில் எத்தனை திருமணம் செய்யலாம்..?

இஸ்லாத்தின் சட்டப்படி ஒரு ஆண் 4 திருமணம் வரை செய்யலாம். உடனே புருவமுயர்த்தி இதென்ன அநியாயம் என்காதீர்கள். பொறுமை..!! இந்த கட்டளை இறைவனிடமிருந்து வந்த காலகட்டம் என்ன தெரியுமா? அறியாமையும், விஞ்ஞானமும் இல்லாத காலகட்டம். போர், கொள்ளை நோய் என்று மனித உயிர்கள் மாய்ந்த நேரம். அதில் குறிப்பாக போர்களில் ஆண்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ வழியில்லாமல் வறுமையால் பீடிக்கப்பட்டு விபசாரத்தொழிலுக்கு தள்ளப்படும் நிலை நிலவியது. அப்போது ஏற்பட்டது தான் இந்த சட்டம். அது மட்டுமல்ல, ஒரு ஆண் மணமடைந்து அவன் மனைவியோடு திருப்தியில்லாத பட்சத்தில் அவளை பிரிந்தால் காலம் முழுக்க அவன் தனிமையிலும், உடல் ஆசை இல்லாமலும் வாழ முடியுமா..? நிச்சயம் முடியாது. அவனும் விபசாரியைத் தேடி தான் போவான். உலக மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உலகில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை கூடுதல். இது இயற்கை. இந்த நிலை காலம், செல்ல செல்ல பெண்ணுக்கு கணவன் கிடைக்காத நிலையை உண்டாக்கும். இல்லறத்திற்கு வழி இல்லாத பெண்கள் பிழைக்க அவர்களும் விபசாரம் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படி எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பது தான் பலதார மணம்.

சரி.. அப்படியானால் ஆண் இஷ்டப்பட்டபடி 4 பெண்களை மணக்கலாமா..? அதான் நடக்காது. அதற்கென்று மிக கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் முதல் நிபந்தனை என்னவென்றால் முதல் மனைவியின் மனப்பூர்வ சம்மதம் வேண்டும். இப்போது சொல்லுங்கள். கிடைக்குமா..? ஆனால், அந்த காலத்தில் கிடைத்தது. அரேபியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்தார்கள். எப்படி சாத்தியம் தெரியுமா..? திருமணம் பற்றி இஸ்லாம் சொன்னதை கடை பிடித்தார்கள். இஸ்லாம் சொல்கிறது, யார் ஒருவர் ஒன்று மேற்பட்ட திருமணம் செய்யப்போகிறாரோ, அவர் தங்கள் மனைவிகளுக்குள் எல்லா வகையிலும் நியாயமாக சமமாக அவர்களை நடத்த வேண்டும். அதை செயல்படுத்த இயலாதவர்களுக்கு அது அனுமதி இல்லை. அதே போல் நடந்தார்கள், திருமணமும் செய்தார்கள். இல்லையென்றால் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இத்தனை அல்லல்படும் நாம், இன்னொரு திருமணத்தை நினைப்பது எளிதா..? பெண்கள் தன் கணவனை இன்னொரு திருமணம் செய்ய சம்மதிக்க பல காரணம் இருந்தன. கணவனின் சமமாக நடத்தும் குணம், அவன் மீது கொண்டு அதீத அன்பு, குழந்தையின்மை, நோய், முதுமை அல்லது இயலாமை காரணமாக இருந்தது. இந்த கடைசி 3 பிரச்சினைகள் இருந்தால் நாம் எடுக்கும் நடவடிக்கை விவாகரத்தாக இருக்கும். அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு அவனும் தன் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு இஸ்லாம் சொன்னதை விட சரியான தீர்வு வேறு எதுவும் உண்டா..?

இதென்ன அநியாயம்..? ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா? என்ற கேள்வி வரும். அதற்கும் இஸ்லாத்தில் பதில் உண்டு. இஸ்லாத்தில் ஆண் பெண் உடற்கூறுகளை வைத்து சில விஷயங்களை நன்மைக்காக கற்பிக்கிறதே தவிர உறவில், உரிமையில், நடத்தப்படுவதில் இரு பாலாரும் சமமே. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் பெண்களை மிகவும் மேன்மைப்படுத்துகிறது. சரி.. நான் கேள்விக்கு வருகிறேன். ஆண்களைப் போலவே பெண்களும் இன்னொரு ஆணை மணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், நிபந்தனை இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள் தாராளமாக மறுமணம் செய்யலாம். அப்படி திருமணம் செய்பவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நபிகள். அவர் ஒரு விதவையைத்தான் மணம் புரிந்தார். அது ஏன் பெண்ணுக்கு இந்த நிபந்தனை என்று கேட்கலாம். இஸ்லாம் காரணகாரியமில்லாமல் எதையும் சொல்வதில்லை.

உதாரணத்திற்கு மனிதனுக்கு தாய், தந்தை உறவும், அவர்கள் மூலம் கிடைக்கும் கௌரவம், மரியாதை, சொத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. ஒரு அனாதைக்கு, தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் மரியாதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்கள் மூலம் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகள் எல்லோருக்கும் அவன் ஒருவன் தந்தை என்பது மிகவும் தெளிவாக தெரியும். அதன் மூலம் உரிமையும், சொத்துக்களும் எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியும். இதுவே, ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்கள் இருந்து அவளுக்கு பல குழந்தைகள் இருந்தால் எந்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்று அவர்களை இனம் காண முடியுமா..? கணவன்கள் ஒருவொருக்கொருவர் விலகிசெல்ல வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, இதனால் பல வழிகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நியாயமான முடிவும் எடுக்க முடியாது. இது சம்பந்தமாக இஸ்லாம் சமூகத்தின் சொல்லும் வழியான விளக்கம். விஞ்ஞானத்தின் வழியாக இஸ்லாம் சொல்லும் விளக்கம் என்ன..? அதை அடுத்த பதிவில் காண்போம்.




அக்னி:
அருமையான விளக்கம். உங்கள் விஞ்ஞான விளக்கமும் முடிந்தபின் அடுத்த வினா எழுப்புகின்றேன். உங்கள் எழுதும் திறன் ரசனையாய் உள்ளது. பொறுமையான விரிவான ஆய்வு போல இத்திரி அமைய வாழ்த்துகின்றேன்...  






LOLLUVAATHIYAR:
பலதார மணம் பற்றி அருமையான விளக்க தந்திருகிறீகள் ஜாபர்
இஸ்லாம் மதத்தில் மட்டும் பலதார மணம் இல்லை, மற்ற மதங்களிலும் அவை இருந்ததே.

ஹிந்துகளிலும் பழைய காலத்தில் பல மனைவிகள் வைத்து கொள்ள அனுமதி இருந்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஹிந்துகள் ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும்
என சட்டம் கொண்டு வர பட்டது அநியாமாக நம் தலையில் தினிக்க பட்டது.
அது ராஜ ராம் மொகன் ராய், காந்தி முயர்ச்சியில் தான் Hindu Polygamy Abolition Act கொண்டு வர பட்டது.

ஒரு உன்மையை கூறி கொள்கிறேன், இந்த Polygamy Abolition Act சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. முதல் மனைவி சம்மதித்தால், அடுத்த மனைவி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் 



ஆதவா:
அருமை ஜாபர் இதயம்.... சில கேள்விகளுக்கு சரியான பதிலடி பதில்கள் கொடுத்து சிறப்பாக நடத்திச்செல்லுகிறீர்கள்... மனைவி சம்பந்த கேள்விகள் எனக்கு ஒரு பாடம்.....

கீழ்கண்ட வாசகம் நான் சிறு வயதில் எனது அப்பாவின் அலுவலகத்திற்கருகே உள்ள மசூதியில் படித்தது... அதற்கு விளக்கம் சொல்லமுடியுமா?

மஸ்ஜிதே அஹமத்
மதரஸா கைரூல் உலூம்..

தக்லே சுன்னத் தக்னி ஜமாத்.... இது மிகவும் சிறு வயதில் ஆழமாக பதிந்திட்ட வாக்கியம்... அர்த்தம் மட்டும் தெரியவில்லை... சொல்லுங்கள்.... 




இதயம்:
Quote:
Originally Posted by lolluvathiyar View Post
பலதார மணம் பற்றி அருமையான விளக்க தந்திருகிறீகள் ஜாபர்
நன்றி வாத்தியார் அவர்களே..

பல தார மணமென்பது ஏறக்குறைய எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இஸ்லாத்தில் மட்டும் தான் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. காரணம், அது புனித நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதால். பலதார அனுமதியை தெரிந்து கொண்டவர்கள், அது அனுமதிக்கப்பட்டதன் நோக்கத்தை தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. காரணம், பெரும்பாலும் அவர்கள் நோக்கம் குறை காண்பதே தவிர, தெரிந்து தெளிவடைய அல்ல.


புராணமென்றாலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் இரு மிகப்பெரும் இதிகாசமான இராமாயணம், மஹாபாரதங்களில் திருமணம் குறித்த நிறைய, முரண்பட்ட விஷயங்கள் உண்டு. உதாரணத்திற்கு 2 மட்டும். 1. இராமாயணத்தில் இராமனின் தந்தையான தசரதனுக்கு 60,000 மனைவிமார்கள். 2.மஹாபாரதத்தில் துரௌபதிக்கு ஐந்து கணவர்கள். இரண்டுமே சமுதாய ரீதியாக, அறிவியல் ரீதியாக ஏற்கமுடியாதவை. புராண இதிகாசங்களின் நோக்கம் அதைப்படிப்பதின் மூலம் மனிதர்கள் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான். அதனால், அல்லவை நீக்கி நல்லவை பிரிக்கும் அன்னப்பறவையாக நாம் இருத்தல் மிக முக்கியம். 











இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-06)

i






திருக்குரான் தமிழில் உள்ளதா..?


உலகின் ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. தமிழில் காண கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி பாருங்கள்


தமிழில் திருக்குரான்




ஷியா, சன்னி பிரிவு வித்தியாசம் இந்தியாவில் எந்த பிரிவு இருக்கிறது..?
தமிழகத்தில் எந்த பிரிவு இருக்கிறது..?



இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை இந்த ஷியா, சன்னி பிரிவுகள் தெரிவிப்பதால் அதை நான் இங்கு அவசியம் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் எடுக்கும் அஸ்திரங்களில் கண்டிப்பாக இதுவும் இருக்கும். அனைவரும் சமம் என்று கொள்கையுடைய இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என்ற பெயரில் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்பது தான் அவர்கள் வைக்கும் கேள்வி. அவர்களுக்கு இது சம்பந்தமான தெளிவான விபரம் தெரியாததால் வந்த கேள்வி இது.

இந்த பிரிவுகளை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஷியாவுடன் தொடர்புடைய ஒருவரைப்பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். அவர் பெயர் அலி. வீரத்தில் சிறந்தவர். போர்களில் எதிரிகளை திணறடிப்பவர். அதனாலேயே அவருக்கு "இறைவனின் சிங்கம் (Lion of Allah)" என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அவர் வேறு யாருமல்ல, முகமது நபிகளின் மருமகன். அலி தன்னுடைய 19-வயதில் இஸ்லாத்தை தழுவினார். இவர் நபிகளின் மகளான ஃபாத்திமாவை திருமணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் ஹசன், ஹுசேன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

பொதுவாக உண்மையை, நல்லவற்றை உலகிற்கு உரைக்கும் போது அதை எதிர்க்க என்றே ஒரு கூட்டம் கிளம்பும். அப்படித்தான் நபிகள் உலக மக்களுக்கு உண்மையை, நன்மையை சொன்ன போது அங்கேயும் நடந்தது. இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கை, அதன் பெரும்பாலான கொள்கைகளை ஏற்று பின்பற்றிய அவர்கள் நபிகளார் இறைவனின் இறுதித்தூதர் என்பதில் மட்டும் முரண்பட்டார்கள். இது வளர்ந்து, விருட்சமாகி அலி அவர்களை தலைவராக கொண்டு ஷியா என்ற பிரிவின் பெயரில் இஸ்லாத்தை பின்பற்றத் தொடங்கினர். ஆனால், இந்த பிரிவினை பல உயிர்களை குடித்திருக்கிறது என்பது மறைக்க முடியாத, கசப்பான உண்மை. அதன் பின்னணியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை பட்டியலிட்டால் இந்த திரி இப்போது முடியாது. ஷியா என்ற பிரிவு தோன்றியதின் அடிப்படை, அதன் பின்னணி மட்டும் போதும் என்று நினைக்கிறேன். அதனிடமிருந்து முரண்பட்ட, இறைவன் மக்களுக்கு நபிகள் மூலம் அளித்த இஸ்லாம், அதன் கொள்கைகள் என்று இந்த திரியில் கூறி வருபவை தான் சன்னி பிரிவு என்று சொல்லப்படுகிறது.

அடிப்படையில் ஷியா முஸ்லீம்களும் சன்னி போலவே ஓரிறைக்கொள்கையை பின்பற்றுபவர்கள் தான். ஆனால், அதன் வணக்க வழிபாடுகள், நடைமுறைகள், கொள்கைகளில் வேறுபாடுகள் நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்களால் பின்பற்றப்படும் சில கொள்கைகள், சடங்குகள் பகுத்தறிவிற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் பயனளிக்காதவை. அதில் ஒன்று தான் வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் நடத்தும் சடங்கில் ஆதிவாசிகளைப்போல் தன்னை தானே சாட்டையால் அடித்து காயப்படுத்திக் கொள்வது. ஷியா பிரிவினரை முஸ்லீம்கள் என்று சொல்வதை கூட ஏற்கலாம், ஆனால் அவர்கள் ஒரு இஸ்லாத்தின் ஒரு பிரிவு என்று சொல்லுமளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏற்புடையாகாது. காரணம், அதை பின்பற்றுவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருப்பது தான். ஷியா முஸ்லீம்களின் எண்ணிக்கை உலகளவிலும், இந்திய அளவிலும் சொற்பமே. தமிழகத்தில் மிக, மிக அரிது. அடுத்த மதத்தை மட்டுமல்ல, மாற்றுக்கருத்துள்ளவர்களைக்கூட கட்டாயப்படுத்த உரிமை இல்லை என்ற கொள்கையும், இஸ்லாத்திற்கு எதிரானவர்களும் தான் அவர்களை ஒரு பிரிவினராக உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த இரு பிரிவினரும் ஒரே மசூதியில் தான் தொழுவார்கள். அவர்களுக்கும் திருக்குரான் தான் வேத நூல். ஆனால், இரு வகையான முஸ்லீம்களிலும் எந்த காலகட்டத்திலும், சூழ்நிலையிலும் ஷியா, சன்னி முஸ்லீம்கள் என்று பிரிவினையுடன், பெருமையுடன் பகிரங்க அறிமுகம் செய்து கொள்வதில்லை. நிறைய ஷியா முஸ்லீம்களை நான் அறிந்து கொண்டது அவர்கள் என்னோடு மசூதியில் தொழ வந்த போது தான்.

மற்றபடி எல்லா மதங்களிலும், சாதிகளிலும் இருப்பது போல் கொள்கை, அதிகாரம், பொருள் பலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு பிரிவினைகள் இல்லாமல் இஸ்லாம் தன்னுடைய ஓரிறை கொள்கை என்ற ஒரே பலம் வாய்ந்த தூணால் தாங்கப்பட்டு இன்னும் கம்பீரமாக நிற்கிறது.





LOLLUVAATHIYAR:
விளக்கம் அருமை ஜாபர்.
இப்பொழுது ஓரளவுக்கு சியா சன்னி பற்றி தெரிந்து கொண்டேன்.
இன்னும் சில சர்சைகுறிய சந்தேகங்கள் இவற்றை பற்றி இருக்கின்றன.
ஆனால் இஸ்லாமை பற்றி விளக்கமாக அமைதியான பாதையில் செல்லும் இந்த திரி திசை மாற கூடாது என்ற என்னத்தில் நான் சில காலம் என் சந்தேகங்களை மூட்டை கட்டி விடுகிறேன்.

எனக்கு தெரிந்த சில விபரங்கள் சரியா என்று கூறுங்கள்


சியா அதிகமாக் இருக்கும் நாடுகள் - ஈரான், ஈராக், சிரியா

சன்னி அதிகமாக் இருக்கும் நாடுகள் - ஆப்கான், பாகிஸ்தான்

மற்ற நாடுகளில் எப்படி.


நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் அதிகமாக சன்னிகள் தான் இருகிறார்கள் என்று நினைகிறேன்.


அடுத்த சந்தேகம்.

சுபியிசம் (Sufisam)என்றால் என்ன என்று விளக்கவும் கூறுங்கள்,
இந்தியாவில் தான் சுபியிசம் தோண்றியதாக கூறபடுகிறது, உன்மையா
சுபியசம் என்பது சியா, சன்னி போண்ற ஒரு பிரிவா?

அக்னி:
அராபியர்கள் பல திருமணங்கள் செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்... இது உண்மைதானா?
அப்படியானால்,
மார்க்கத்தில் ஏற்கப்பட்டுள்ளதா?
தமிழ்பேசும் இஸ்லாம் மதத்தவரும் இதனை வாழ்வில் கொண்டுள்ளனரா?
ஆண்களுக்கு மட்டுமா அல்லது பெண்களுக்கும் பொருந்துமா...?

நான் வாழ்ந்த சூழலில்,

ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் இஸ்லாம் மதத்தவரும் வாழ்ந்தார்கள்...


இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-05)






ஹலால்- அனுமதிக்கப்பட்டது
ஹராம்- தடுக்கப்பட்டது.
சுன்னத் - செய்தால் சிறப்பு, ஆனால் செய்யாவிட்டாலும் தவறில்லை.
பர்ளு - அவசியம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் பாவம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் இஸ்லாம் மனிதனுக்கு எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்று சொல்லி அவற்றுக்கான பிரிவுகளையும் சொல்கிறது. இங்கே சிவப்பு நிறத்தில் உள்ளவை குரானில் குறிப்பிடப்பட்டுள்ள அரபு வார்த்தைகள். அதன் அர்த்தத்தை தான் அருகில் நீல நிறத்தில் பார்க்கிறீர்கள்.


உதாரணத்திற்கு

மது அருந்துவது இஸ்லாத்தில் ஹராம். அதாவது தடுக்கப்பட்டது.
மாமிசம் உண்பது இஸ்லாத்தில் ஹலால் - அதாவது அனுமதிக்கப்பட்டுள்ளது
தொழும் போது தொப்பி அணிவது சுன்னத். அதாவது கூடுதல் சிறப்பு. செய்யாவிட்டால் குற்றமில்லை.
மனிதனுக்கு தொழுகை பர்ளு - அதாவது அவசியம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் அது பாவத்திற்கு நிகரானது. புரிந்ததா நண்பரே..? 





Quote:
Originally Posted by lolluvathiyar View Post
இவற்றில் எனக்கு சுன்னத என்றால் என்ன என்றூ மட்டுமே தெரியும்
அந்த விஷயத்திலும் முழுதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. சுன்னத் என்ற அரபு வார்த்தைக்கு ஒரு செயல் செய்தால் சிறப்பு, செய்யாவிட்டால் குற்றமில்லை என்று பொருள் படும். ஆனால், மாற்றுமத நண்பர்களை பொருத்தவரை சுன்னத் என்பதற்கு ஆண் உறுப்பின் முன் தோல் நீக்கும் செயல் விழாவாக எடுக்கப்படுதல் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல அர்த்தம்.

முன் தோல் நீக்கப்படுதல் இஸ்லாத்தை பொருத்தவரை சிறப்பு கொடுக்கும் ஒன்று. சுத்தம், நோய்க்கு எதிரான நடவடிக்கை, உடலுறவில் கூடுதல் இன்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ளது. ஆனால், அதைச் செய்யாவிட்டால் குற்றமில்லை. அப்படி என்றால் அப்படி செய்யப்படாமலும் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு மாற்றுமத நண்பர் இஸ்லாத்தை தழுவினால் அவர் கட்டாயம் அந்த செயலை செய்து கொள்ளவேண்டியதில்லை. அது அவர் இஷ்டம். அதன் பயன்பாட்டை வைத்து விரும்பி செய்து கொண்டால் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் தேவையில்லை.


இஸ்லாத்தில் உள்ள ஷியா, சன்னி மதப்பிரிவுகள் பற்றி அடுத்த பதிப்பில் இடுகிறேன். 





Quote:
Originally Posted by agnii View Post
முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்?
பொதுவாக உயிர் எடுக்கும் நிகழ்ச்சியான கொலை என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இதில் சிறிய, பெரிய, விலங்கு, மனிதன் என்ற பேதம் இஸ்லாத்தில் இல்லை.

ஆனால், சில இடங்களில் கொலையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும். அவனை தூண்டுமளவுக்கு அந்த பெண் அரைகுறை ஆடை அணிந்து தூண்டியிருந்தால் அது அவன் தவறு மட்டுமே இல்லையே என்று நீங்கள் சொல்வீர்கள். அதற்கும் தான் இஸ்லாம் தீர்வு சொல்கிறதே. பெண்கள் அந்நிய ஆண்களை கவராத அளவிற்கு உடை உடுத்த வேண்டும். உடம்பின் வளைவு நெளிவுகள் தெரியாத அளவிற்கு லூஸான உடை என்றும் சொல்லிக்கொடுக்கிறது. அதையும் தாண்டி ஒரு பெண்ணை அவன் கற்பழித்தான் என்றால் அந்த தண்டனை நியாயம் தானே.

மரணதண்டனை என்பது அதிகம் இல்லையா..? என்று கேட்பீர்கள். மூன்றாம் மனிதனான உங்களுக்கு அது அதிகம். நம் குடும்ப பெண்கள் அந்த இடத்தில் இருந்தால் நிச்சயம் நியாயம் என்பீர்கள். இஸ்லாம் பிரச்சினைகளை சம்பந்தவர்களின் இடத்தில் இருந்து யோசித்து சொல்கிறது. அது தானே நியாயம்.??

உயிர்க்கொலையை பொருத்தவரை அனுமதிக்கப்படும் இன்னொரு விஷயம் உணவுக்காக. ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை உணவுக்காக சார்ந்தே இருக்கிறது. அது இயற்கை. அதை மாற்ற நினைப்பது முட்டாள் தனம். அப்படித்தான் உணவுக்காக விலங்குகளை கொல்வது. இதில் விலங்குகளை உணவைத்தவிர வேறு எதற்காகவும் கொல்ல அனுமதி இல்லை. விலங்கு வேட்டையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

அந்த விலங்கு உணவுக்காக தான் கொல்லப்படுகிறது என்பதை உறுதி செய்ய இஸ்லாம் ஒரு வழிமுறை சொல்லுகிறது. உணவுக்காக எந்த உண்ண அனுமதிக்கப்பட்ட விலங்கை கொல்லும் போதும் "உணவுக்காக இறைவன் பெயரில் பலியிடுகிறேன்" என்று உறுதி மொழி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்பது அர்த்தமாகிவிடும். அப்படி சொல்லப்படாத எந்த விலங்கையும் உண்ணக்கூடாது. உதாரணத்திற்கு விபத்தில் அடிபட்டவை, நோயில் இறந்தவையும் அனுமதிக்கப்படவில்லை. காரணம், அதன் இறப்பு உணவுக்காக இல்லை என்ற விஷயத்தை அங்கும் இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. மேலே சொன்னவற்றை முஸ்லீம்கள் செய்கிறார்கள் என்பதால் அவர்களிடம் போய் வாங்குகிறார்கள். காரணம், கொல்பவன் மட்டுமல்ல, அதை அறிந்தே வாங்கி உண்பவனும் பாவியாகிறான்.



 அக்னி:
அருமையான பொறுமையான அழகான விளக்கம்...
நன்றிகள்... 



ஜோய்ஸ்:


இன்னமும் எழுதுங்கள் ஜாபர் சாப்.






அக்னி:
கண்ணியமான கருத்துப் பகிர்வு செய்வதற்கு வாழ்த்துக்கள். கருத்துத் திணிப்பு இல்லாதவிடத்து இயல்பாகவே கவர்ச்சி ஏற்படும் என்பதற்கு உதாரணமாக இத்திரி விளங்கும். 


LOLLUVAATHIYAR: 


Quote:
Originally Posted by agnii View Post
முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்?
மாமிசம் சாப்பிடுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலும் உள்ளது.
ஹிந்துகள் மாமிசம் சாப்பிடுவது தொண்று தொட்டு உள்ள பழக்கம்.
ஹிந்துகளில் மாமிசம் சாப்பிடாத பிரிவுகள் குரைவுதான்.
இன்று ஹிந்துகளில் 60 % மாமிசம் சாப்பிடுவார்கள்.   



இதயம்:


நண்பரின் கேள்வி முஸ்லீம்கள் மாமிசம் சாப்பிடுவது மட்டும் பற்றியல்ல, அவர்கள் ஏன் முஸ்லீம்களிடம் மற்றும் குறிப்பிட்ட கடைகளை தேடிப் போய் வாங்குகிறார்கள் என்பது பற்றியும் தான்.

இதற்காகவே மாற்று மத இறைச்சி கடை நண்பர்கள் ஒரு முஸ்லீமைக் கொண்டு விலங்குகளை பலியிட்டு, பிறகு இறைச்சியை விற்பார்கள். மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். 


சிவா.ஜி:
இஸ்லாம் தொடங்கப்பட்ட காலத்தில் முஹம்மது நபி அவர்கள் சில பழக்க வழக்கங்களை யூதர்களிடமிருந்து பெற்று இஸ்லாத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.சுன்னத்,பன்றி இறைச்சி உண்ணாமை மற்றும் உண்ணா நோன்பு ஆகியவைகள். அதனால் தான் சுன்னத் என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

ஆதாரம

A General History of the Middle East என்ற கட்டுரையில் 157 ஆவது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Mohammed thought that Jews and Christians would readily follow him, once they recognized him as a prophet. Several Judeo-Christian traditions found their way into the Koran, and Mohammed initially adopted some Jewish practices, like circumcision, a prohibition on pork, fasting on the Day of Atonement, and praying toward Jerusalem. Later, when he realized that the Dhimmi would not convert so easily, he made Islam a religion with an Arabian character 



இதயம்:
முஸ்லீம்களின் நம்பிக்கை படி இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் எல்லாம் இறைவனால் முஹம்மது நபிகள் வழியாக அருளப்பட்டவை. அவையே தொகுக்கப்பட்டு திருக்குரான் ஆகியது.

நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் ஒரு தனி மனிதரால் எழுதப்பட்டிருக்கிறது. அதில் இஸ்லாத்திற்கு முரணான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் என்பது நபிகள் தோற்றுவித்த மதம் அல்ல. இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி. அதை உலகுக்கு எடுத்துச் சொன்னது, அதன் மூலம் வாழ்ந்து காட்டியது நபிகளின் பங்கு.

ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதெல்லாம் உண்மையாகாது. நம்பகத்தன்மை என்பது ஆதாரம் என்பது மூலமே நிரூபிக்கப்படும். இஸ்லாம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 





சிவா.ஜி:
தெரிந்து கொண்டதை தெளிவுபடுத்திக்கொள்ளத்தான் கேட்டேன். தெளியவைத்ததற்கு நன்றி.தனி நபரின் கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தெரிந்தவரிடம் கேட்டால் தான் உண்மையான தகவல் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.நன்றி. 

இணைய நண்பன்:
தோழர் ஜாபர் அவர்களே.உங்கள் சேவை பாராட்டத்தக்கது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 

அக்னி:

Quote:
Originally Posted by lolluvathiyar View Post
மாமிசம் சாப்பிடுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலும் உள்ளது.
ஹிந்துகள் மாமிசம் சாப்பிடுவது தொண்று தொட்டு உள்ள பழக்கம்.
ஹிந்துகளில் மாமிசம் சாப்பிடாத பிரிவுகள் குரைவுதான்.
இன்று ஹிந்துகளில் 60 % மாமிசம் சாப்பிடுவார்கள்.
Quote:
Originally Posted by mehajaafar View Post
நண்பரின் கேள்வி முஸ்லீம்கள் மாமிசம் சாப்பிடுவது மட்டும் பற்றியல்ல, அவர்கள் ஏன் முஸ்லீம்களிடம் மற்றும் குறிப்பிட்ட கடைகளை தேடிப் போய் வாங்குகிறார்கள் என்பது பற்றியும் தான்.

இதற்காகவே மாற்று மத இறைச்சி கடை நண்பர்கள் ஒரு முஸ்லீமைக் கொண்டு விலங்குகளை பலியிட்டு, பிறகு இறைச்சியை விற்பார்கள். மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்.
நான் கேட்டது சரி. பதிலும் கிடைத்துவிட்டது. இடையில் ஒரு விளக்கம் என்னவென்றால்...
Quote:
Originally Posted by agnii View Post
முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்?
உண்பனால் - உண்பது ஆகையால் > வழக்கமான செயல்
உண்பதானால் - உண்பது என்றால் > விருப்பம் என்றால் செய்யும் செயல்


இதுதான் வித்தியாசம்.


இதே விளக்கம்தான்,


வாங்குவதானால் என்பதிலும் என்பதிலும் வரும்...


மொக்கச்சாமி:
மிக்க நன்றி...ஜாபர்
ரொம்ப நாளாக இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது...
உங்கள் பகிர்தலுக்கு நன்றி 


அக்னி:
புனித நூலான குர்ரான் தமிழில் உள்ளதா..?






இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-04)






மசூதிக்குள் காலனியுடன் போகலாமா?

தொழுகைக்கு சுத்தமென்பது அவசியம். அது உடல் சுத்தம், உடை சுத்தம், மன சுத்தம் எல்லாவற்றையும் குறிக்கும். சுத்தத்தின் அடிப்படையாகக் கொண்டதே காலணியும். காலணியுடன் போனால் சுத்தத்திற்கு பங்கம் ஏற்படும் என்றால் வெளியில் விட்டுத்தான் செல்ல வேண்டும். நம் வீட்டிலும் அப்படித்தானே..!!

சில நேரங்களில் இட நெருக்கடி, சூழ்நிலை காரணத்தால் இந்த விஷயம் அனுசரிக்கப்படும். உதாரணத்திற்கு கூட்ட நெரிசலில் காலணி தொலைந்து போக, மாறிப்போக வாய்ப்பு இருந்தால் மசூதிக்குள் எடுத்துச் சென்று அதற்கான பகுதியில் வைக்கலாம். இஸ்லாம் சூழ்நிலை பொருட்டு நிறைய அனுசரித்துக் கொள்கிறது. தொழுக இடம் கிடைக்காவிட்டால், சூழ்நிலையின் காரணமாக மசூதி இல்லாவிட்டால் தொழுக வேண்டாம் என்று சொல்லாமல் கிடைத்த வழியில் பயன்படுத்த சொல்கிறது. வீட்டில், சாலைகளில், கப்பலில், விமானத்தில் என்று கிடைத்த இடத்தில் தொழுது கொள்ளலாம். வாகனங்களில் செல்லும் போது மட்டும் திசை நிரந்தரம் இல்லை என்பதால் அது விதிவிலக்கு. தொழுகைக்கு அவசியம் சுத்தம், வெளிச்சம்.


மசூதிக்குள் செல்பவர்கள் பெரும்பாலும் வெள்ளை ஜிப்பா அனிந்து போகிறார்கள்..ஏன்?

இறைவனுக்கு பிடித்த நிறமாக வெண்ணிறம் கருதப்படுகிறது. காரணம், அதன் தூய்மை. மற்ற உடைகள் அழுக்கடைவதை விட வெண்ணிற உடை மிக எளிதில் அழுக்கை எடுத்துக் காட்டும். தொழுகையின் போது கழுத்திலிருந்து முட்டிக்கால் வரை மூடியிருக்க வேண்டும் தொப்புள் தெரியக்கூடாது. கையில் மணிக்கட்டு வரை உடை மூடியிருந்தால் கூடுதல் சிறப்பு. மற்றபடி ஜிப்பா என்பது அவசியமில்லை. அது அவரவர் விருப்பம். 

குல்லாவுடன் தான் மசூதிக்குள் செல்ல அனுமதிப்பார்களா?

தொப்பி என்பது ஒரு சிறப்பு அடையாளம். அதை அணிந்து தான் தொழ வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாத்தில் செய்யலாம், செய்யக்கூடாது என்று சில நிபந்தனைகள் உண்டு. அவை..
ஹலால்- அனுமதிக்கப்பட்டது
ஹராம்- தடுக்கப்பட்டது.
சுன்னத் - செய்தால் சிறப்பு, ஆனால் செய்யாவிட்டாலும் தவறில்லை.
பர்ளு - அவசியம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் பாவம்.

இதில் தொப்பி விஷயம் சுன்னத் பிரிவில் சேரும்.


எனக்கு தெரிந்து பெண்கள் மசூதி பக்கம் பார்த்ததில்லை. பெண்கள் மசூதிக்குள் போகலாமா?
பெண்களுக்கு என்று தனி மசூதி இருகிறதா?

 
பெண்கள் மசூதிக்கு போய் தொழ தாராளமாய் அனுமதி இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, சமையல், கணவனை கவனித்துக் கொள்ளுதல், வீட்டு பராமரிப்பு என்று பல பொறுப்புகள் வீட்டில் உள்ளதாலும், மாதாந்திர உபாதை உள்ளதாலும் தொழுகை ஆணைப்போல் அத்தனை கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், தொழலாம். பெண்களுக்கென்று தனி மசூதி கிடையாது. அதே மசூதியில் தொழலாம். ஆனால், ஆண்களோடு இணைந்து தொழாமல் அவர்களுக்கான பகுதியில் தொழ வேண்டும். 

இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு போக மாட்டார்கள். அதே போல் உங்கள் மதத்திலும் பழக்கம் இருகிறதா.?
 
மாதாந்திர உபாதை என்பது உடல் கஷ்டத்தையும், அசுத்தத்தையும் குறிக்கும். இந்த இரண்டு நிலையில் உள்ளவர்கள் தொழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை.


ஊரில் இருக்கும் மசூதிக்குள் தொழுகை தெரியாத ஹிந்து பார்வையாளராக வரலாமா?

மசூதி என்பது இறைவனை வழிபடும் இடம். அங்கு ஒரு இந்து நண்பர் நிச்சயம் வணங்க வரமாட்டார். அப்படி அவர் இஸ்லாமிய கொள்கையில் பற்று கொண்டு வணங்க வந்தால் அவருக்கு எந்த தடையும் இல்லை. மற்றபடி சாதாரணமாக மற்ற பணிகளுக்காக மாற்றுமதத்தவர்கள் வர எந்த பிரச்சினையும் இல்லை. உதாரணத்திற்கு மசூதியை சீரமிக்கும் போது அவர்கள் வருவதில் எந்த தவறுமில்லை. நோக்கத்தை பொறுத்து நிபந்தனைகள் மாறுபடும்.

விசேச காலங்களில் மசூதியில் எங்கள் கோவிலில் தரபடுவது போல
பிரசாதம் ஏதாது உண்டா?

மசூதி என்பது இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவனை வணங்கும் இடம். அதை தவிர மற்ற செயல்களுக்கு அங்கு அனுமதி இல்லை. அப்படி நீங்கள் நல்லது செய்யும் பொருட்டு ஏழைகளுக்கு உணவளித்தல், உதவி செய்தல் போன்றவை எந்த இடத்தில் இருந்து கொண்டும் செய்யலாம். காரணம், இறைவன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை மட்டும் பார்ப்பதில்லை, உங்கள் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்றும் பார்க்கிறான்.

நீங்கள் சொன்ன பிரசாத விஷயம் தர்ஹாக்களில் காணப்படும். தர்ஹா என்பதின் பிரப்பிடமே கோயில்கள் தான். இந்து கலாச்சாரத்தில் ஊறிய மனிதர்கள் அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பிறகு பழைய கலாச்சாரத்தை மறக்க முடியாமல் அல்லது அதன் மூலம் பயன் அனுபவிக்க தோற்றுவித்தவை தான் தர்ஹா வழிபாடு என்பதும்.

தர்ஹா வழிப்பாட்டிற்கும் கோவில் வழிப்பாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

1. கோவிலில் கடவுள் சிலையாக இருப்பார். தர்ஹாவில் சமாதியாக இருப்பார்.
2. மாலை போட்டு சிலைக்கு அலங்காரம். பச்சை விரிப்பு, மல்லிகைப்பூ மாலை சமாதிக்கு அலங்காரம்.
3. தீப ஆராதனை நடக்கும். ஊதுபத்திகள் மூலம் ஆராதனை நடக்கும்.
4. லட்டு, பொங்கல், புளியோதரை போன்றவை பிரசாதம். சர்க்கரை, பேரீச்சம்பழம், பூந்தி ஆகியவை பிரசாதம். அதில் மல்லிகை பூக்கள் அவசியம் இருக்கும்.
5. தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். மயிலிறகால் தடவி ஆசீர்வாதம்.
6. காணிக்கை உண்டியல் இருக்கும். இங்கும் காணிக்கை உண்டியல் இருக்கும் (அது தானே எல்லாவற்றுக்கும் ஆதாரம்)
7. வருடம் ஒரு முறை திருவிழா நடக்கும். இங்கும் கந்தூரிவிழா என்ற பெயரில் நடக்கும்.
8. திருவிழாவுக்கு முன் காப்பு கட்டப்படும். கந்தூரிக்கு முன் கொடி ஏற்றப்படும்.
9. திருவிழாவில் தேர் இழுக்கப்படும். இங்கு சந்தனக்கூடு என்ற பெயரில் அலங்கார கோபுரம் இழுக்கப்படும்.
10. முடி பொருட்கள் போன்ற காணிக்கைகள் உண்டு. இங்கும் அவை எல்லாம் உண்டு.

இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். நான் மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் யாருடைய மனம் புண்படும் பொருட்டு குறிப்பிடவில்லை. என் பகுத்தறிவுக்கு தர்ஹா வழிபாடு ஏன் ஏற்புடையதில்லை என்பதை இஸ்லாம் வழியாக சொல்ல முயன்றிருக்கிறேன். மற்ற மத நம்பிக்கைகளை காயப்படுத்துவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அப்படி ஏதேனும் தாங்கள் உணர்ந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

வாத்தியார் அவர்களே..! உங்கள் கேள்விகளில் எந்த சிறுபிள்ளைத்தனமும் இல்லை. மனிதனின் சிறப்பே பகுத்தறிவு தான். அதைச் செய்யத்தூண்டும் எந்த செயலும் சின்னத்தனம் இல்லை. இப்படி பலருக்கும் புரியாத, தெரியாத விஷயங்களை விளக்க வாய்ப்புக் கொடுத்த உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.




அக்னி:
பர்ளு என்றால் என்ன? மேலே கூறியுள்ளீர்கள் ஆனால் விளக்கம் இல்லை. 



 LOLLUVAATHIYAR:
அருமையான விளக்க ஜாபர் அவர்களே
தர்காவுக்கும் மசூதிக்கும் நீங்கள் வித்தியாசம் காட்டி இருகிறீர்கள்.
எனக்கு இப்பொழுதுதான் தர்கா என்றால் என்ன என்று தெரிந்தது
(நான் அதுவும் ஒரு மசூதி என்று நினைத்தேன்)

இஸ்லாத்தில் கூறபட்டுள்ள உன்மைகளை நீங்கள் கூறும் போது அது யாருடைய மனதையும் புன்படுத்தாது.


உங்கள் பதிலில் இருந்து சில சந்தேகம்


Quote:
Originally Posted by mehajaafar View Post

இஸ்லாத்தில் செய்யலாம், செய்யக்கூடாது என்று சில நிபந்தனைகள் உண்டு. அவை..
ஹலால்- அனுமதிக்கப்பட்டது
ஹராம்- தடுக்கப்பட்டது.
சுன்னத் - செய்தால் சிறப்பு, ஆனால் செய்யாவிட்டாலும் தவறில்லை.
பர்ளு - அவசியம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் பாவம்.
இவற்றில் எனக்கு சுன்னத என்றால் என்ன என்றூ மட்டுமே தெரியும்



உலக முஸ்லீமகளை பற்றி எனக்கு தெரிந்து கொள்ள ஆர்வமில்லை.

இந்திய முஸ்லீம்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள ஆர்வம்.

என் அடுத்த சந்தேகம் இஸ்லாம பிரிவுகள் பற்றி

சியா , சன்னி என்ற பிரிவுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் (இருவருக்கும் அல்லா தானெ கடவுள்) ஷியா சன்னி இருவருக்கும் மசூதி வழிபாடு அமைப்பு ஒன்றுதானா
இது போன்ற வேறு பிரிவுகள் இருகிறதா?
இந்தியாவில் இருக்கும் பிரிவு என்ன (ஷியா, சன்னியா அல்லது வேறு ஏதாவது பிரிவா)

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-03)


மசூதியின் அடிப்படை கட்டுமானம் என்ன..?

மசூதிக்கென்று அடிப்படை கட்டுமானம் என்று எதுவும் கிடையாது. சலவைக்கல்லால் இழைக்கப்பட்டும் இருக்கலாம், சாதாரண ஓலை வேயப்பட்டும் இருக்கலாம். சிறியதாகவும் இருக்கலாம், பரந்து விரிந்தும் இருக்கலாம். இரண்டும் மசூதி தான். அந்தந்த பிரதேசமக்களின் பொருளாதார நிலைக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால், வழிபாட்டுத்தலமான மசூதி பொழுதுபோக்குக்கான இடம் என்று குறிக்கும் எந்த பொருளும் இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள், விளையாட்டு சம்பந்தமான பொருட்கள். ஒரு மசூதி இருந்தால் அங்கு ஒரு பொது கழிப்பறையும், தொழுகைக்கு முன் சுத்தம் செய்து கொள்ள தேவையான தண்ணீர் வசதியும் அவசியம் இருக்கும். இறை வழிப்பாட்டை மசூதிக்கு செல்லாமல் வீட்டிலும் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மிக தொலைவில் மசூதி இருந்தால், போய் தொழ முடியாத அளவுக்கு உடல்நிலை இருந்தால் போன்ற சூழ்நிலைகளின் போது வீட்டில் தொழலாம். ஆனால், வீட்டில் தொழுவதை விட பல மடங்கு சிறப்பும், இறைவனுக்கு பிடித்ததுமானது பள்ளியில் போய் தொழுவது. அங்கு போவதின் மூலம் சகோதரத்துவம் வளர்கிறது. ஒரு நாளில் ஐந்து முறை நமக்குள் சந்தித்துக் கொள்ளும் போது உறவு, நட்பு வளர்கிறது. சகோதரத்துவத்தை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுடன் சண்டையிட்டு பேசுவதை நிறுத்திக் கொண்டால் 3 நாட்களுக்கு மட்டும் அது நீடிக்க வேண்டும். அடுத்த நாள் அவன் மற்றவனிடம் பேச வேண்டும். இல்லயென்றால் அவன் இறைவனின் வெறுப்புக்கு ஆளாகிறான். எவன் தானாக இறங்கி வந்து பேசி உறவை வளர்க்கிறானோ, அவன் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவனாவான்.



உள்ளே என்ன இருக்கும்?


நீங்கள் நினைப்பது போல் மாயஜால விஷயங்கள் எதுவும் அங்கு இருக்காது. நாம் வாழ்க்கையில் தேடும் அமைதியும், நிம்மதியும் அங்கு இருக்கும். மசூதி உள்பகுதி ஒரு வீட்டின் அறையைப் போலவோ, ஹால் போலவோ பெரும்பகுதி பொருட்கள் இல்லாமல் காலியாக இருக்கும். மற்றபடி அவரவர் வசதிக்கேற்ப மின்விசிறி, விளக்குகள் இருக்கும். அலமாரி போன்றவற்றில் திருக்குரான், நபி வழி பிரதிகள் இருக்கும். அதை தொழ வருபவர்கள் தொழுகைக்கு முன்னும், பின்னும் விருப்பப்பட்டவர்கள் படிப்பார்கள். நீங்கள் சொல்லும் கருவறை, மூலவர் போன்ற விஷயங்கள் எதுவும் இருக்காது. வெளிச்சத்தால் நிறைக்கப்பட்டிருக்கும். நிசப்தமாக இருக்கும். எப்படிப்பட்டவர்களும் மசூதியில் உள் நுழைந்தால் அமைதியின் சொரூபமாக மாறி விடுவார்கள். பச்சை விளக்கிற்கும் பள்ளிவாசலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பொதுவாக இஸ்லாமியர்களின் நிறம் பச்சை என்பது போல் ஒரு தோற்றம் இருக்கிறது (சவுதியின் தேசியக் கொடி கூட பச்சை தான்). அது இயல்பான ஒன்றே தவிர உருவாக்கப்பட்டதல்ல. எந்த வகையான உருவப்படங்களோ, கையால் வரையப்பட்ட ஓவியங்களோ அங்கு இருக்காது. உருவ வழிப்பாடு விஷயத்தில் அணுவளவும் அனுசரிப்பதில்லை இஸ்லாம். மேலும் மசூதியின் உள்ளே திருக்குரான் வசனங்கள், நபி மொழிகள் ஆகியவை வருபவர்களின் பார்வைக்காக சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் அல்லது வைக்கப்பட்டிருக்கும்.




இறைவனுக்காக தொழப்படும் எந்த தொழுகையும் மக்காவில் அமைந்துள்ள கஃபா எனப்படும் இறைவனுக்காக கட்டப்பட்ட முதல்வழிப்பாட்டுத் தலத்தின் திசை நோக்கி செய்யப்படல் வேண்டும் (அது பற்றி இனி வரும் பகுதிகளில் விளக்கப்படும்). அதை அரபியில் கிப்லா என்பார்கள். மசூதியின் வாசல் எந்த திசையை நோக்கியும் இருக்கலாம். ஆனால், தொழுகையில் நிற்கும் போது அனைவரும் கிப்லாவை நோக்கி நிற்க வேண்டும். இது மிக அவசியம் (அதற்கும் காரணம் உள்ளது). 



LOLLUVAATHIYAR:


இதுவரை நான் தெரியாத விசயங்களை தெரிய படுத்தினீர்கள். நண்றி ஜாபர்
மசூதியை பற்றி மேலும் சந்தேகங்களை கேட்டு விடுகிறேன்.

மசூதிக்குள் காலனியுடன் போகலாமா?
மசுதிக்குள் செல்பவர்கள் பெரும்பாலும் வெள்ளை ஜிப்பா அனிந்து போகிறார்கள்
குல்லாவுடன் தான் மசூதிக்குள் செல்ல அனுமதிப்பார்களா?

எனக்கு தெரிந்து பெண்கள் மசூதி பக்கம் பார்த்ததில்லை.

பெண்கள் மசூதிக்குள் போகலாமா?
பெண்களுக்கு என்று தனி மசூதி இருகிறதா?

இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு போக மாட்டார்கள்.

அதே போல் உங்கள் மதத்திலும் பழக்கம் இருகிறதா.
ஊரில் இருக்கும் மசூதிக்குள் தொழுகை தெரியாத ஹிந்து பார்வையாளராக வரலாமா?
விசேச காலங்களில் மசூதியில் எங்கள் கோவிலில் தரபடுவது போல
பிரசாதம் ஏதாது உண்டா?

மிகவும் சின்ன பிள்ளைதனமாக என் கேள்வி இருக்கிறது என்று தவறாக நினைக்க வேண்டாம்.

இந்த சின்ன சமாச்சாரங்கள் கூட எனக்கு தெரியாது. 



SNS:


மசூதியை பற்றிய மேலதிக தாகவழுக்காக எமது ஊரில் தற்போது நிர்மானித்துவரும் மசூதியிங் 2 படங்கலை இத்துடன் இனைத்துல்லேன், அதை பார்தலே உங்களுக்கு புரியும் மசூதியினுல் எவ்வித ரகசியமும்மில்லை என்று

இது உற்பாள்ளியின் தோற்றம்


http://img249.imageshack.us/img249/2969/internalxv4.th.jpg




இது பாள்ளியினுல் நுலய முன்பு சுத்தாம் செய்வதற்ககா நீர் வைக்கப்பட்டுல்ல இடம்


http://img510.imageshack.us/img510/1058/hawz1ry9.th.jpg

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-02)




இத்திரி ஆரம்பிக்க, தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியவர்களுக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். இஸ்லாம் என்ற தலைப்பில் எழுதலாம் என்று தொடங்கிய நான் எதில் ஆரம்பிப்பது என்று குழப்பமாகிவிட்டது. காரணம், இஸ்லாம் பற்றி எழுத தொடங்கினால் ஆதி மனிதனான ஆதாம் நபி அவர்களிடமிருந்து தொடங்க வேண்டும். அந்த வரலாற்று நிகழ்வுகளை எழுத ஆரம்பித்தால் அத்தியாயம் அத்தியாயமாக எழுதலாம். சரி, இஸ்லாம் எழுச்சியுடன் வளர காரணமான இறுதி இறைத்தூதர் முகமது (ஸல்) அவர்களின் பிறப்பிலிருந்து எழுத ஆரம்பித்தாலும் அதை படிக்க எழுத நேரம் எனக்கும், உங்களுக்கும் வேண்டும். என் பிரச்சினையை தெரிந்தது போலவே நண்பர் தனக்கு தெரியாத விஷயங்களை கேள்வியாக கேட்டு பதிலளிக்க சொல்லியிருக்கிறார். இது மிகவும் எளிது. இதன் மூலம் மாற்று மத நண்பர்களின் மனதில் குடிகொண்டிருக்கும் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்து தெளிவு பெற வழி வகுக்கும். ஆனால், நண்பர் எழுப்பிய கேள்விகள் என்னை சற்றே மனம் வருந்த வைத்து விட்டது. எப்படி என்றால், ஒரே நாட்டில், ஒரே ஊரில், ஒரே தெருவில் தாயாய், பிள்ளையாய் மற்ற மத சகோதரர்களுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை ஏதோ ஒரு மாயக்குகைக்குள் மந்திரக்கிளி இருக்குமோ என்ற தொனியில் கேட்டிருக்கிறார்கள். இதற்கு நான் இஸ்லாமியர்களைத் தான் குறை சொல்வேன். இஸ்லாத்தை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்ட அவர்கள் ஏதோ இமயத்தின் உச்சியில் இருப்பது போல் இருமாப்புடனும், மசூதியை மற்றவர்கள் காணக்கூடாத மாய உலகமாகவும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சரி.. நாமும் விஷயத்திற்கு போகலாம். இறைவனை வணங்கும் மசூதியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அதற்கு ஆதாரமுமான எல்லாம் வல்ல அல்லாஹ் (இறைவன்) யார்? அவனுடைய இயல்புகள் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.



அல்லாஹ் என்றால் என்ன..? அது யார்..??


நம்மில் பலரிடையே அல்லாஹ் என்றால் முஸ்லீம் கடவுள் என்ற எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி சொல்லும் போது நான் அதை நகைச்சுவையாக எண்ணி சிரிப்பேன். எப்படி ஆங்கிலத்தில் கடவுளை காட் (God) என்றும், தமிழில் இறைவன், கடவுள் என்கிறோமோ அதே போல் அரபு மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன், கடவுள் என்று பொருள். சில நண்பர்கள் என்னிடம் "நமக்குள் ஒரே வித்தியாசம் தான். நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள், நாங்கள் கடவுளை வணங்குகிறோம்" என்பார்கள். ஆக, அவர்கள் சொல்வது போல் அல்லாஹ், கடவுள் என்ற பெயர் தானே வேறே தவிர மற்றபடி அர்த்தமும், ஆண்டவனும் ஒன்று தான். ஒரு ஊருக்கு பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சென்று அடையும் போது அது ஒரே ஊர் தான்.



இறைவன் எப்படிப்பட்டவன்?


இந்த இறைவன் தான் இந்த உலகத்தை படைத்து, அதில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அருள்பாலிப்பவன். அவன் ஒருவன். தனித்தவன். அவனுக்கு ஈடு இணை கிடையாது. அவன் ஆணுமில்லை, பெண்ணுமில்லை (நம் கலாச்சாரத்தில் சமுதாயத்தில் புத்திகூர்மை, உழைப்பு, வலிமை என்று சிறப்பு குணங்கள் ஆணுக்கே என்று நினைப்பதால் பேச்சிலும், எழுத்திலும் இறைவனை ஆண்பாலில் குறிக்கிறோம்). அவனுக்கு வாரிசுகள் கிடையாது. அவனுக்கு பசி, தூக்கம், பலவீனங்கள், பிறப்பு, இறப்பு, தேவைகள் எதுவும் கிடையாது. அவன் ஒரு அளவிடமுடியாத மகா சக்தி. அவன் சக்திக்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் சொல்லி வைத்தது போல் அததன் வேலையை சரியாக செய்யும் பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரம் போன்ற எல்லாமே சொல்லலாம்.



மசூதி என்றால் என்ன..?


அரபு மொழியில் மஸ்ஜித் என்றால் இறைவனை வழிபடும் தலம் என்று பொருள். அதுவே தமிழில் பள்ளிவாசல், பள்ளிவாயில், மசூதி என்று அழைக்கப்படுகிறது. ஓரிறையை மட்டும் மனதில் நம்பிக்கை வைத்தவர்கள் சென்று இறைவனை வழிபடும் இடம் இது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஐவேளை தொழுகையை நிறைவேற்ற இங்கு தான் செல்வார்கள். இந்த மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. அவன் ஓரிறையை மட்டும் வணங்க வேண்டும். மற்றபடி சாதி, மொழி, இனம் போன்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு இங்கு வேலை இல்லை. மனித சமூகத்தின் சமத்துவத்தை நீங்கள் நேரில் காணவேண்டுமானால் முஸ்லீம்களின் தொழுகையின் போது காண வேண்டும். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கொண்ட எல்லா மனிதர்களும் எந்த ஒரு பாகுபாடின்றி தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் போது அங்கு நெஞ்சை நிமிர்த்தி நிற்பது முஸ்லீம்கள் மட்டுல்ல, மானிட சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு சாவு மணி அடிக்கும் மானுடமும் தான்!!



LOLLUVAATHIYAR:

நண்றி ஜாபர்
உங்கள் விளக்க அருமை
Quote:
Originally Posted by mehajaafar View Post
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை ஏதோ ஒரு மாயக்குகைக்குள் மந்திரக்கிளி இருக்குமோ என்ற தொனியில் கேட்டிருக்கிறார்கள்.

நான் மசூதிக்குள் என்ன இருக்கும் என்று கேட்டது ஆர்வத்தினால்.
உன்மையை கூறுகிறேன். எங்கள் வீட்டுக்கு பக்கதிலேயே மசூதி இருக்கிறது.
ஆனால் நான் இதுவரை உள்ளே போனதே இல்லை.
உள்ளே பார்வையாளராக அனுமதிப்பார்களா என்று கூட எனக்கு தெரியாது என்பதை வெட்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அல்லா என்பது ஒரு பெயரல்ல, அது இரைவன் என்ற தகவல் தாங்கள் சொல்லிதான் தெரிந்தது.

தொடர்ந்து எழுதுங்கள், நாங்கள் தெரிந்து கொள்வோம். உங்களுக்கு இரைவனின் ஆசி கிட்டும்





இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-01)




இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை என்ற தலைப்பில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழ் மன்றம் என்ற இணைய தளத்தில் இதயம் என்ற புனைப்பெயரில் எழுதி வந்தேன். இஸ்லாம் தொடர்பான தவறான புரிதல்களை போக்கவும், மத நல்லிணக்கம் வளர்க்கவும் நான் எடுத்துக்கொண்ட முயற்சி அது.! மாற்று மத சகோதரர்கள் மட்டுமில்லாமல் இஸ்லாத்தை தவறாக விளங்கி வைத்திருக்கும் முஸ்லீம்களுக்கும் நிறைய புரிதல்களை ஏற்படுத்தியது இந்த கேள்வி பதில் கட்டுரை (அதை நிரூபிக்கும் பொருட்டு அவர்களின் பின்னூட்டங்களையும் கூடவே இணைத்திருக்கின்றேன்).

பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்பது போலவே எந்தவொரு நல்ல விஷயத்திற்கும் கட்டாயம் என்பது தேவைப்படுவதில்லை. சரி என்று உணரும் பட்சத்தில் அனைவரும் தாங்களாகவே வருவார்கள் என்பது என் பொறுப்பு. அதை விடுத்து சங்கத்திற்கு ஆள் பிடிப்பது போல் சில இஸ்லாமிய அமைப்புகள் நடந்து கொள்வது வருத்தத்திற்குரியது. அவர் உண்மையில் செய்யவேண்டியது இஸ்லாம் சொல்லிக்கொடுக்கும் கொள்கைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே...!!  புனித ரமலான் மாதம் தொடங்கி இருக்கும் தருணத்தில் உங்களுக்கு இதை அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்..!!

என் முன்னுரை:


இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்கள் பற்றிய விளக்கங்களுக்காக இந்த திரியை தொடங்குகிறேன். தொடக்கத்திலேயே அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் மதம், என் மதம் என்று பிரித்து கூறுவதை நான் விரும்பவில்லை. காரணம், எந்த மதமும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சொந்தமும் கிடையாது. மனிதனி பகுத்தறிவிற்கேற்ப அவன் மதங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடிகிறது.

எனக்கும் இஸ்லாத்தை பற்றி உங்கெளுக்கெல்லாம் எடுத்துரைக்க ஆசை. ஆனால், அலுவல்கள் என்னை விடுவதில்லை. அது மட்டுமல்ல, எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நினைக்காமல், நாம் எழுதினால் போதும், அடுத்தவர்களுக்கு புரிந்ததா என்று கூட கவலைப்படாமல் எழுதித் தள்ளவும் முடியாது. இஸ்லாத்தில் உள்ள விஷயங்களை நான் கற்பனையாக எழுதாமல் புனித குரான், நபி வழிகளில் உள்ளதை உள்ளது உள்ளபடி அத்தியாயம், வசன எண் குறிப்பிட்டு எழுத வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த அலட்சியம் தான் அறியாமையை ஆரம்பித்து வைக்கும். சில நேரங்களில் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல நேரமில்லாமல் போகலாம். ஆனால், அதற்கு நண்பர்கள் அதற்கான பதில் இல்லாமல் பின்னூட்டம் இடவில்லை என்று நினைக்கக் கூடாது.


இஸ்லாத்தை அறிந்து கொள்ள நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம் என்னை சந்தோஷப்படுத்துகிறது. ஆனால், நீங்கள் எல்லாவற்றையும் என்னிடமிருந்து அறிந்து கொள்ளுமளவுக்கு எல்லாம் தெரிந்தவனா என்றால், நிச்சயம் கிடையாது. நான் சொன்ன கருத்துக்கள் உங்களை கவர்ந்தால் அது நான் கொண்டிருக்கும் அடிப்படை அறிவால் மட்டுமே வந்தது. இருந்தாலும் இருக்கும் அறிவை பயன்படுத்தி ஓரளவுக்கு உங்களுக்காக இஸ்லாத்தை பற்றிய விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்.


பொதுவாக வலுக்கட்டாய மதமாற்றம் ஒன்று நடந்தது என்று சொல்வார்கள். ஆனால், அப்படி வலுக்கட்டாயம் என்பதே இஸ்லாத்தில் கிடையாது. அதன் கொள்கைகளால் கவரப்பட்டு வருவது வரவேற்கப்படுகிறது. வாள் முனையால் இஸ்லாம் பரப்பப்பட்டதாக பெரும்பாலனரால் சொல்லப்படுகிறது. அதில் உண்மை எதுவும் இல்லை. இந்தியாவிற்குள் யார் வந்து போரிட்டு இஸ்லாத்தை பரப்பினார்கள் அல்லது மதமாற்றினார்கள்.?அரேபியர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு நம் நாட்டிற்குள் வந்து நம் மக்களோடு கலந்து வணிகம் செய்தபோது அவர்களின் நற்குணம், நன்னம்பிக்கை, கனிவு, அன்பு, நாணயம் ஆகியவற்றால் கவரப்பட்டு நம்மவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். இன்றளவும் கூட வலுக்கட்டாயத்தின் பேரில் இஸ்லாத்திற்குள் வருதல் என்பது சொந்த விருப்பும், வறுமையும், சாதிக்கொடுமைகளும் இணைந்து தான் நடைபெறுகிறது. எந்த மதம் நல்ல மதம், எது மனிதனை வாழ வைக்கிறது, வழி நடத்துகிறது என்பதை மதத்தின் பெயரில் யாரும் சொல்லக் கூடாது. அது சம்பந்தப்பட்டவர்களே புரிந்து கொள்ள வேண்டும். அது தான் நிலைக்கும்.!!




பின்னூட்டங்கள்:

சுட்டிபையன்
:
உங்கள் ஆரம்பம் மெய்சிலிர்க்க வைக்கிறது எல்லோரும் ஆண்டவனின் பிள்ளைகள், ஆண்டவன் ஒருவனே என்ற கொள்கை

உங்கள் கட்டுரைய படிக்க ஆவலுடனிருகிறோம் மேலும் தொடருங்கள் நண்பரே  


LEOMOHAN:
அருமையான பகுதி. நானும் அறிந்ததை பகிர்ந்துக் கொள்ளலாம் அல்லவா? 


அக்னி: 
மதங்கள் நல்லுறவிற்காக இருப்பவையே... ஆனால், அவற்றை விஷமாக்குபவர்களை விட்டுவிட்டு இதயசுத்தியுடன் ஒன்றிணைவோம்.

திரியைத் தொடருங்கள் நண்பர்களே... வாழ்த்துக்கள்... 




LOLLUVATHIYAAR:
நான் கேட்டு கொண்டதன் பேரில் இந்த ஆன்மீக திரி ஆரம்பித்த சகோதரர் ஜாபருக்கு நண்றி.
என் அருமை ஹிந்து நன்பர்களே இந்த ஆண்மீக திரியில் சர்சைக்கு உண்டான கேள்விகளை தவிர்த்து
முதலில் நாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

நேரமின்மை காரனமாக உங்களுக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பம் இருக்கலாம்.


எங்களுக்கு அருமையான விளக்கம் பெற உங்களுக்கு நான் உதவி செய்யலாம் என்று இருகிறேன்.

நான் வரிசையாக வேள்விகள் கேட்கிறேன்.
அவற்றிர்கு உங்கள் பதிலை தாருங்கள் நன்பரே.

முதல் கேள்வி மசூதியை பற்றியது.

மசுதியின் Basic Structure என்ன?
உள்ளே என்ன இருக்கும்?
உருவமில்லை என்று கேள்வி பட்டிருகிறேன்.
ஹிந்து கோவிலை போல கருவரை இருக்குமா?
அப்படி இருந்தால் அங்கு என்ன இருக்கும்?
பச்சை விளக்கு இருக்கும் என்று என் நன்பர்கள் சொன்னார்கள். அது சரியா?

சிலை இருக்காது, ஆனால்
ஏதாவது படங்கள் இருக்குமா?

மெக்காவின் திசை நோக்கி இருப்பது - மசூதியின் வாசலா, அல்லது தொழுகை செய்யும் திசையா?


உங்கள் விளக்கம் பார்த்து அடுத்த சந்தேகங்களை கேட்கிறேன்.

நண்றி ஜாபர் 


ஓவியா:
அருமையான ஆரம்பம். நானும் உங்கள் மதத்தை கற்றுக்கொள்கிறேன்.

மிக்க மகிழ்சியுடன் நன்றிகள்..


தொடருங்கள் நண்பரே.



தங்கவேல்:
உமர் முக்தாரை தந்த இஸ்லாம், அலி ,பே என்று எனது இளம்பிராயத்து உருது மொழி படிக்கும் ஆர்வம், பாத்தியா ஓதும் போது விழி விரிய பார்த்தது. பெரு நாள் அன்று நண்பர்களின் வீட்டில் இருந்து வரும் ஆட்டுக்கறி, பலகாரங்கள் இதெல்லாம் மறக்கவும் முடியுமோ..?? மட்டன் பிரியானி, கிரேவி டேஸ்ட்டுக்கு என்ன விலை கொடுத்தாலும் தகாதே.. எழுதுங்கள் ஜாபர்.. ஆர்வமாய் இருக்கிறது படிக்க...










Related Posts with Thumbnails