நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-06)

i






திருக்குரான் தமிழில் உள்ளதா..?


உலகின் ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. தமிழில் காண கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி பாருங்கள்


தமிழில் திருக்குரான்




ஷியா, சன்னி பிரிவு வித்தியாசம் இந்தியாவில் எந்த பிரிவு இருக்கிறது..?
தமிழகத்தில் எந்த பிரிவு இருக்கிறது..?



இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை இந்த ஷியா, சன்னி பிரிவுகள் தெரிவிப்பதால் அதை நான் இங்கு அவசியம் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் எடுக்கும் அஸ்திரங்களில் கண்டிப்பாக இதுவும் இருக்கும். அனைவரும் சமம் என்று கொள்கையுடைய இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என்ற பெயரில் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்பது தான் அவர்கள் வைக்கும் கேள்வி. அவர்களுக்கு இது சம்பந்தமான தெளிவான விபரம் தெரியாததால் வந்த கேள்வி இது.

இந்த பிரிவுகளை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஷியாவுடன் தொடர்புடைய ஒருவரைப்பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். அவர் பெயர் அலி. வீரத்தில் சிறந்தவர். போர்களில் எதிரிகளை திணறடிப்பவர். அதனாலேயே அவருக்கு "இறைவனின் சிங்கம் (Lion of Allah)" என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அவர் வேறு யாருமல்ல, முகமது நபிகளின் மருமகன். அலி தன்னுடைய 19-வயதில் இஸ்லாத்தை தழுவினார். இவர் நபிகளின் மகளான ஃபாத்திமாவை திருமணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் ஹசன், ஹுசேன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

பொதுவாக உண்மையை, நல்லவற்றை உலகிற்கு உரைக்கும் போது அதை எதிர்க்க என்றே ஒரு கூட்டம் கிளம்பும். அப்படித்தான் நபிகள் உலக மக்களுக்கு உண்மையை, நன்மையை சொன்ன போது அங்கேயும் நடந்தது. இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கை, அதன் பெரும்பாலான கொள்கைகளை ஏற்று பின்பற்றிய அவர்கள் நபிகளார் இறைவனின் இறுதித்தூதர் என்பதில் மட்டும் முரண்பட்டார்கள். இது வளர்ந்து, விருட்சமாகி அலி அவர்களை தலைவராக கொண்டு ஷியா என்ற பிரிவின் பெயரில் இஸ்லாத்தை பின்பற்றத் தொடங்கினர். ஆனால், இந்த பிரிவினை பல உயிர்களை குடித்திருக்கிறது என்பது மறைக்க முடியாத, கசப்பான உண்மை. அதன் பின்னணியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை பட்டியலிட்டால் இந்த திரி இப்போது முடியாது. ஷியா என்ற பிரிவு தோன்றியதின் அடிப்படை, அதன் பின்னணி மட்டும் போதும் என்று நினைக்கிறேன். அதனிடமிருந்து முரண்பட்ட, இறைவன் மக்களுக்கு நபிகள் மூலம் அளித்த இஸ்லாம், அதன் கொள்கைகள் என்று இந்த திரியில் கூறி வருபவை தான் சன்னி பிரிவு என்று சொல்லப்படுகிறது.

அடிப்படையில் ஷியா முஸ்லீம்களும் சன்னி போலவே ஓரிறைக்கொள்கையை பின்பற்றுபவர்கள் தான். ஆனால், அதன் வணக்க வழிபாடுகள், நடைமுறைகள், கொள்கைகளில் வேறுபாடுகள் நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்களால் பின்பற்றப்படும் சில கொள்கைகள், சடங்குகள் பகுத்தறிவிற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் பயனளிக்காதவை. அதில் ஒன்று தான் வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் நடத்தும் சடங்கில் ஆதிவாசிகளைப்போல் தன்னை தானே சாட்டையால் அடித்து காயப்படுத்திக் கொள்வது. ஷியா பிரிவினரை முஸ்லீம்கள் என்று சொல்வதை கூட ஏற்கலாம், ஆனால் அவர்கள் ஒரு இஸ்லாத்தின் ஒரு பிரிவு என்று சொல்லுமளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏற்புடையாகாது. காரணம், அதை பின்பற்றுவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருப்பது தான். ஷியா முஸ்லீம்களின் எண்ணிக்கை உலகளவிலும், இந்திய அளவிலும் சொற்பமே. தமிழகத்தில் மிக, மிக அரிது. அடுத்த மதத்தை மட்டுமல்ல, மாற்றுக்கருத்துள்ளவர்களைக்கூட கட்டாயப்படுத்த உரிமை இல்லை என்ற கொள்கையும், இஸ்லாத்திற்கு எதிரானவர்களும் தான் அவர்களை ஒரு பிரிவினராக உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த இரு பிரிவினரும் ஒரே மசூதியில் தான் தொழுவார்கள். அவர்களுக்கும் திருக்குரான் தான் வேத நூல். ஆனால், இரு வகையான முஸ்லீம்களிலும் எந்த காலகட்டத்திலும், சூழ்நிலையிலும் ஷியா, சன்னி முஸ்லீம்கள் என்று பிரிவினையுடன், பெருமையுடன் பகிரங்க அறிமுகம் செய்து கொள்வதில்லை. நிறைய ஷியா முஸ்லீம்களை நான் அறிந்து கொண்டது அவர்கள் என்னோடு மசூதியில் தொழ வந்த போது தான்.

மற்றபடி எல்லா மதங்களிலும், சாதிகளிலும் இருப்பது போல் கொள்கை, அதிகாரம், பொருள் பலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு பிரிவினைகள் இல்லாமல் இஸ்லாம் தன்னுடைய ஓரிறை கொள்கை என்ற ஒரே பலம் வாய்ந்த தூணால் தாங்கப்பட்டு இன்னும் கம்பீரமாக நிற்கிறது.





LOLLUVAATHIYAR:
விளக்கம் அருமை ஜாபர்.
இப்பொழுது ஓரளவுக்கு சியா சன்னி பற்றி தெரிந்து கொண்டேன்.
இன்னும் சில சர்சைகுறிய சந்தேகங்கள் இவற்றை பற்றி இருக்கின்றன.
ஆனால் இஸ்லாமை பற்றி விளக்கமாக அமைதியான பாதையில் செல்லும் இந்த திரி திசை மாற கூடாது என்ற என்னத்தில் நான் சில காலம் என் சந்தேகங்களை மூட்டை கட்டி விடுகிறேன்.

எனக்கு தெரிந்த சில விபரங்கள் சரியா என்று கூறுங்கள்


சியா அதிகமாக் இருக்கும் நாடுகள் - ஈரான், ஈராக், சிரியா

சன்னி அதிகமாக் இருக்கும் நாடுகள் - ஆப்கான், பாகிஸ்தான்

மற்ற நாடுகளில் எப்படி.


நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் அதிகமாக சன்னிகள் தான் இருகிறார்கள் என்று நினைகிறேன்.


அடுத்த சந்தேகம்.

சுபியிசம் (Sufisam)என்றால் என்ன என்று விளக்கவும் கூறுங்கள்,
இந்தியாவில் தான் சுபியிசம் தோண்றியதாக கூறபடுகிறது, உன்மையா
சுபியசம் என்பது சியா, சன்னி போண்ற ஒரு பிரிவா?

அக்னி:
அராபியர்கள் பல திருமணங்கள் செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்... இது உண்மைதானா?
அப்படியானால்,
மார்க்கத்தில் ஏற்கப்பட்டுள்ளதா?
தமிழ்பேசும் இஸ்லாம் மதத்தவரும் இதனை வாழ்வில் கொண்டுள்ளனரா?
ஆண்களுக்கு மட்டுமா அல்லது பெண்களுக்கும் பொருந்துமா...?

நான் வாழ்ந்த சூழலில்,

ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் இஸ்லாம் மதத்தவரும் வாழ்ந்தார்கள்...


கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails