ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை இஸ்லாம் தடை செய்வதின் விஞ்ஞான நோக்கத்தை காண்போம். அறிவியல் கண்டுபிடிப்பின் படி எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கான ஊற்றுக்கண்ணாக இருப்பது முறைகேடான உறவு என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது மனைவி அல்லாது இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளுதல். அந்த பெண்ணும் இன்னும் பல ஆணுடன் உறவு வைத்திருப்பாள் என்பது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலை பாலியல் நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் பலரிடம் உறவு கொள்ளும் விபசாரிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களிடம் உறவு கொள்ளும் மனைவிக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் கூட நடைமுறையில் ஒத்துவராத விஷயமிது. காரணம், அவர்கள் உடல் ரீதியாகவே அப்படிப்பட்ட நிலையை பெற்றுள்ளார்கள்.
அது மட்டுமல்ல, அவனே அவனுக்கென்று கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி சின்னவீடு வைத்துக்கொள்ளும் இந்த உலகத்தில் ஒன்று மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு மனைவியின் மீது மற்ற கணவர்களுக்கு அன்பும், காதலும், ஈடுபாடும் இருக்காது. அவன் மனைவியை விடுத்து பிற பெண்களிடம் உறவு கொண்டு அவன் பாலியல் நோயை பெற்று அதை அவன் மனைவிக்கு கொடுத்து, அவள் மற்ற கணவர்களுக்கு கொடுத்து, மற்ற கணவர்கள் உறவு கொள்ளும் மற்ற பெண்களுக்கு கொடுத்து இந்த நோய் பரவி உலகமே பாலியல் நோயால் பீடிக்கப்படும். ஆனால், ஒரே கணவரிடம் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த அபாயம் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கே உரிய அதிகாரம், ஆளுமை குணம் கணவர்களுக்குள் போட்டி பொறாமையை ஏற்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்கி அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும்.
சரி.. அப்படியானால் இதன் மூலம் இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..? நிச்சயம் இல்லை. ஒரு பிரச்சினையின் தீர்வாக விவாகரத்து, அதனால் பெண்ணின் வாழ்க்கை இழப்பு, விபசாரம், நோய் என்று போகாமல் சுமுகமாக, சுகமாக வாழ இஸ்லாம் சொல்லித்தரும் வழி இது. இஸ்லாத்தில் இந்ததபல தார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து இவ்வளவு விமர்சிக்கப்படுகிறதே.. நீங்களே சொல்லுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை தொகையில் எல்லா மதத்தினரின் சதவீதத்தில் பல தார மணம் செய்த முஸ்லீம்களின் சதவீதம் எவ்வளவு..? மற்ற மதத்தினரைவிட குறைவாக இருப்பார்கள். காரணம், கடுமையான நிபந்தனைகளும், வழி முறைகளும். அது மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதற்கான மன பலம், உடல்பலம், பொருள் பலம் அவசியம் வேண்டும்.
நமக்கு ஒரு மனைவியுடன் வாழ்க்கை தள்ளுவதற்கே நாக்கு தள்ளுகிறது..!! நம் முதல்வருக்கு 2 மனைவிகள். ஆனால், அவர் முஸ்லீம் இல்லை. அவரை சமுதாயம் ஒதுக்கவில்லை. அவர்களுக்குள் பிரச்சினையும் இல்லை. எனக்கு ஒரே ஒரு மனைவி தான். என்னால் பலதார மணத்தை என் விஷயத்தில் ஏற்கமுடியாது. ஏனென்றால் அதற்கான காரணகாரியங்கள் எங்கள் இருவருக்கும் இல்லாததால் அதன் அவசியம் இல்லை. அவசியம் உள்ளவர்கள் தீர்விற்காக அதை செய்வதில் தவறில்லை. அது வழிகெட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்தது. கடைசியாக, பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பவை நம் மதமல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் தேவை, புரிதல், அனுசரித்தல், பகிர்தல் ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன.
Quote:
அருமை ஜாபர் இதயம்.... சில கேள்விகளுக்கு சரியான பதிலடி பதில்கள் கொடுத்து சிறப்பாக நடத்திச்செல்லுகிறீர்கள்... மனைவி சம்பந்த கேள்விகள் எனக்கு ஒரு பாடம்..... கீழ்கண்ட வாசகம் நான் சிறு வயதில் எனது அப்பாவின் அலுவலகத்திற்கருகே உள்ள மசூதியில் படித்தது... அதற்கு விளக்கம் சொல்லமுடியுமா? மஸ்ஜிதே அஹமத் மதரஸா கைரூல் உலூம்.. தக்லே சுன்னத் தக்னி ஜமாத்.... இது மிகவும் சிறு வயதில் ஆழமாக பதிந்திட்ட வாக்கியம்... அர்த்தம் மட்டும் தெரியவில்லை... சொல்லுங்கள்.... |
ஆதவனுக்கு நன்றிகள்..! நான் எழுதுவதை படிப்பதன் மூலம் மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டம் ஒரு சிறு அளவேனும் களையப்பட்டால் அதுவே என் மீதான கடவுளின் அன்பிற்கு தொடக்கமுமாக, நான் எழுதும் இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றியுமாக இருக்கும்.
மஸ்ஜித் அஹமத் - அரபு மொழியில் மஸ்ஜித் என்பது நான் முன்பே சொன்னது போல் வழிபடும் இடம் அதாவது மசூதி எனப்படும். அஹமத் என்பது ஒரு பெயர். எப்படி நம் ஊரில் பிரகதீஸ்வரர் கோவில் என்று கடவுளின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறதோ, அதே போல் இஸ்லாமிய வரலாற்றில் பெரும் புகழ்பெற்றவர்களின் பெயரையோ, அல்லது அழகிய இஸ்லாமிய பெயரையோ கொண்டு அழைப்பது வழக்கம். தெற்கு தெரு மசூதி, வடக்குத்தெரு மசூதி என்று அழைக்காமல் அஹமத் மசூதி, முகமது மசூதி என்பது சிறப்பு என்பது என் கருத்து.
மதரஸா கைரூல் உலூம் - அரபு மொழியில் மத்ரஸா என்றால் கல்விக்கற்கும் கல்விக்கூடம். அரபு நாடுகளில் கல்வி கற்கும் இடம் (School) மத்ரஸா எனப்படும். ஆனால், நம் ஊரில் இஸ்லாம் மார்க்க கல்வியை கற்றுத்தரும் இடம் மத்ரஸா என்று அழைப்பது வழக்கம். அந்த மத்ரஸாவின் பெயர் தான் கைரூல் உலூம்.
தக்லே சுன்னத் தக்னி ஜமாத் - முஸ்லீம்களில் சாதி பிரிவினைகள் இல்லயென்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் இருக்குமோ என்று ஒரு தோற்றம் ஏற்படுத்த மொழி, தேசம், கலாச்சார விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு தமிழ் முஸ்லீம், உருது முஸ்லீம், தக்னி முஸ்லீம் என்பது. அரபியில் ஜமாத் என்றால் ஒன்று கூடுதல் என்று பொருள். மசூதியில் அனைவரும் ஒன்றாக தொழுவதை ஜமாத் தொழுகை என்பார்கள். ஊர் பொதுமக்கள் திருமணத்திற்கு வந்தார்கள் என்பதை ஜமாத் வந்தது, ஜமாத்தாக வந்தார்கள் என்றும் சொல்வார்கள். ஒரு சிறு ஊர் இருந்தால் அங்கு அறிஞர் அண்ணா நற்பணி மன்றம், எம்ஜியார் தொழிலாளர் கூட்டமைப்பு என்று இருக்கும். அது அவர்களின் செயல் அடிப்படையில், தொழில் அடிப்படையில் செயல்படும் கூட்டமைப்புகள். இதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அது போல தக்காண பீடபூமி பகுதியைச் சார்ந்த சில தென்மாநில மக்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் தக்னி முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தக்லே என்ற பெயரில் உண்டாக்கிய ஒரு கூட்டமைப்பு தான் தக்லே சுன்னத் தக்னி ஜமாத். நான் இந்த பெயரை இதுவரை கேள்விப்பட்டது கூட கிடையாது. ஆராய்ந்ததில் கிடைத்த ஆதாரங்கள் இவை. நான் ஏற்கனவே சொன்னது போல் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் ஒரே இறை.. ஒரே திருமறை.. ஒரே வழிமுறை..!!
ஆதவா:
எல்லாவற்றையும் நன்றாக கருத்தூன்றி படித்தேன் இதயம்... எனது அப்பா அலுவலகத்திலருகே இருக்கும் மசூதியில் காலையில் சிறு பிள்ளைகள் உருது படிக்க வருவார்கள்... உருதுவா என்று எனக்குத் தெரியாது.... எனினும் உங்கள் பதில்கள் நெஞ்சைக் கவருகின்றன... மேலும் தொடர் சிறப்பாகச் செல்லவேண்டும்..... வாழ்த்துக்கள்...
இதன்படி தொடர்ந்ததற்கு 500 பணம் அன்பளிப்பாக....
LOLLUVAATHIYAR:
ஜாபர் உங்கள் மதத்தை பற்றி நிறைய தகவல்கள் தந்திருகிறீர்கள்.
உங்கள் சேவைக்கு நிச்சயம் அல்லாவில் அருள் கிட்டும்
தொழுகை அரபு மொழியில் மட்டும் தான் இருக்கிறதா?
அரபு மொழி அனைத்து முஸ்லீம்களுக்கும் தெரியுமா? (எழுத படிக்க)
(இல்லை அது சமஸ்கிருதம் பொழி போல சிலருக்கு மட்டும் தான் தெரியுமா)
முஸ்லீம்களின் தாய் மொழி அரபுவா? உருதுவா?
உருது படிக்காத முஸ்லீம்கலுக்கும் தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக