நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-09)



இஸ்லாமின் அடிப்படை கொள்கைகள் என்னென்ன..? அதன் அவசியம் என்ன..?
 
இஸ்லாத்தினை தாங்கி நிற்பது 5 தூண்கள். அவை..

1. ஒன்றே கடவுள், முகமது நபி அவர்கள் கடவுளின் இறுதித் தூதர் என்ற நம்பிக்கை

2. தொழுகை
3. நோன்பு
4. ஈகை
5. மக்கா புனிதப்பயணம்.

தொழுகை என்றால் என்ன..? அது ஏன்..?


இஸ்லாத்தின் கொள்கையை பொறுத்தவரை இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் பெரிய மகா சக்தி ஒன்று இருக்கிறது. அது தான் கடவுள். அவன் தான் இவ்வுலகம், அதில் உள்ள ஜீவராசிகள், உலகம் தாண்டிய அண்டவெளி, சூரியன், சந்திரன் நட்சத்திரம் எல்லாவற்றையும் படைத்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். அப்படிப்பட்ட இறைவன் தன் படைப்புக்களில் சிறந்த படைப்பாக சொல்வது மனித இனத்தை. காரணம், அவனுடைய பகுத்தறிவு. மனிதனின் இந்த உலக வாழ்க்கை மிகச்சிறியது. அவன் மரணத்திற்கு பிறகு முடிவில்லாத ஒரு வாழ்க்கை அவனுக்கு இருக்கிறது. அங்கு அவனுக்கு இந்த உலகத்தில் அவன் செய்த நன்மை தீமைகளை வைத்து அவனுக்கு இன்பம் நிறைந்த சொர்க்க வாழ்க்கையோ, துன்பம் நிறைந்த நரகமோ கிடைக்கும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்கள் நற்கருமங்களை செய்ய முனைய வேண்டும். மனிதன் தனக்கு கிடைத்த பகுத்தறிவை கொண்டு கடவுளின் கருணை உள்ளத்தை நினைத்து இவ்வுலகில் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியும், மரணத்திற்கு பிறகு கிடைக்க வேண்டிய சொர்க்கத்திற்காகவும் செய்கிற ஊழியம் தான் தொழுகை. பொதுவாக ஊழியம் செய்பவருக்கு கஷ்டத்தையும், பெருபவருக்கு இன்பமும் கொடுக்கும். ஆனால், தொழுகையை பொறுத்தவரை இரு தரப்பினரும் பயனடையலாம். அந்த வகையில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பகுத்தறியும் பருவம் முதல் உடல் ஒத்துழைக்கும் காலம் வரை தினம் ஐந்து தடவைகள் தொழ வேண்டும். இது ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்றமும் ஒழுங்குகள் நிறைய இருக்கின்றன.


தூய மனம்

தூய உடல்
தூய உடை ஆகியவற்றுடன் தொழுகையில் ஈடுபட வேண்டும். தொழுகை சிலருக்கு விதிவிலக்காக சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகள், நீண்ட பயணம் செய்பவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாதவிலக்கு பெண்கள், உடல் ஒத்துழைக்கா முதியவர்கள் ஆகியோர் தொழ தேவையில்லை. இவர்களை தவிர்த்து மற்ற அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் மதியநேர தொழுகை சிறப்பு தொழுகை அங்கீகாரம் பெற்றிருப்பதால் அதன் சிறப்பும், தொழுபவர்களின் கூடுதல் எண்ணிக்கையும், சிறப்பு உரையும் இருக்கும். அரபியில் வெள்ளிக்கிழமை என்பது ஜும்மா என்பதால் அதற்கு ஜும்மா தொழுகை என்று பெயர்.

தொழுகையின் செயல்பாடுகள் அனைத்தும் அரபு மொழியில் இருக்கும். இவ்வுலகை படைத்து பரிபாலிக்கும் கடவுளுக்கு ஏன் அரபி மொழியில் வழிபாடு என்பது உங்கள் கேள்வி சரிதானே..? நீங்கள் சொல்வது உண்மை தான். நமக்கு தான் மொழி பிரச்சினை, நம்மை படைத்த கடவுளுக்கல்ல. பிறகு ஏன் அரபு மொழியில்..? காரணம் இருக்கிறது. இறைவன் மனித குலத்திற்கு தன் செய்தியைச் சொல்ல பல தூதுவர்களை அனுப்பியிருக்கிறான். உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு தூதுவரை அனுப்பியதாக திருக்குரான் சொல்கிறது. எழுதப்படிக்க தெரியாத, நாகரீகம் இல்லாமல் காட்டுமிராண்டிகளை போல் மனிதர்கள் வாழ்ந்த அரேபியாவில் எழுதப்படிக்க தெரியாத முகமது நபிகளின் மூலமாக தன் செய்திகளைச் சொல்லித்தான் இஸ்லாத்தை இறைவன் நிறைவு செய்தான். இருந்தாலும் அரபு மொழியில் மட்டும் தொழுகை ஏன்..?


நேரமின்மையால் இப்போது நிறுத்திக் கொள்கிறேன். கேள்விகள் குறித்த பதில்கள் தொடர்ந்து கிடைக்கும்.




LOLLUVAATHIYAR:
இப்படி தெளிவாக விளக்கும் போது எங்கள் மத நம்பிக்களும் எங்களுக்கு புரிகிறது ஜாபர்.
இஸ்லாம் பற்றி உங்கள் பதிவை படிக்கும் போது உங்கள் மதத்தை புரிந்து கொள்வது மட்டுமல்ல
அனைத்து மதத்திலும் ஒன்றே சொல்ல பட்டிருக்கு என்று தெளிவாக புரிகிறது 



 ஜெயாஸ்தா:
Quote:
Originally Posted by அக்னி View Post
முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்?
நண்பர் லொள்ளுவின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளிக்கும் நண்பர் இதயத்திற்கு என் வாழ்த்துக்கள்.

மேற் கண்ட அக்னியின் கேள்விக்கான பதிலில் ஒரு விஞ்ஞான விளக்கமும் புதைந்துள்ளது. பெரும்பாலும் விலங்குகளில் இருந்து பரவக்கூடிய நோய்கள் அதன் இரத்தத்திலிருந்து பரவுகிறது என்பது அறிவியல் ரீதியான உண்மை. அதனால்தான் இஸ்லாம் பிராணிகளின் ரத்தத்தை சாப்பிடுவதை அனுமதிக்கவில்லை. உதரணமாக ஒரு ஆடு வெட்டப்பட்டுவதை விட அறுக்கப்படுவதே சிறந்தது. என்ன காரணமென்றால், வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தம் முழுவதுமாக வெளியேறாமால் அப்படியே உள்ளேயே உறைந்து இருந்துவிடுகிறது. அதனால் அந்த ரத்தத்திலுள்ள கிருமிகள் அந்த ஆட்டின் இறைச்சியில் கலந்துவிடும் அபாயம் உண்டு. ஆனால் அறுக்கப்படும்போது, ஆட்டின் இரத்தம் முழுமையாக வெளியாகிவிடும். இஸ்லாமியர் கடைகளில் இந்தமுறை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள். அது மட்டுமல்லாமல் நண்பர்கள் சொன்ன மாதிரி மாற்றுமத நண்பர்களும் இதே முறையை பின்பற்றுகிறார்கள். எங்கள் ஊர்பகுதிகளில் 'சிக்கன் கார்னர்' கடைகளில் 'ஹலால் செய்யப்பட்டது' என்று போர்டு வைத்துள்ளார்கள்.






கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails