நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-10)




எல்லாம் அறிந்த ஆண்டவனுக்கு இஸ்லாத்தில் ஏன் தொழுகை அரபியில் மட்டும் நடத்தப்படுகிறது..? 

தொடர்ந்து சொல்வதற்கு முன் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு வளைவு நெளிவில்லாத ஒரு கோட்டை தாளில் வரைந்து உங்களிடம் தந்து அதைப்பார்த்து அதே போல் இன்னொரு கோட்டை மற்றொரு தாளில் வரைந்து தரவேண்டும் என்று சொல்கிறேன். அதையே நீங்களும் அடுத்தவருக்கு சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொருவரிடம் கைமாறி வரையப்பட்ட கோடு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பிறகு பார்த்தால் அந்த கோடு நான் ஆரம்பத்தில் வரைந்த கோடுபோல் இல்லாமல் வளைவு நெளிவுகளுடன் முதல் நேர்க்கோட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும். இந்த நிலை தான் இப்போதுள்ள நிறைய மத நூல்களுக்கு. நான் பெயர் குறிப்பிட்டு எதையும் சொல்லவிரும்பவில்லை. சமயத்தின் மூலமாக இருக்கும் முதல் நூல் அதன் பிறகு காலம் செல்ல, செல்ல அந்த காலத்திற்கு ஏற்றார்போல் திருத்தியமைக்கப்படுகிறது. இடைச்செருகல்கள் செய்யப்படுகின்றன. முக்காலமும் அறிந்த இறைவனால் அளிக்கப்படும் ஒரு நூல் முன் காலத்திற்கு பொருந்தியும் தற்காலத்திற்கு பொருந்தாமலும் நிச்சயம் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனால் வழங்கப்பட்டதாக இருக்கவே முடியாது. அது மனிதர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவன் எப்பொழுதும் தன்னை அரபி மொழி கொண்டு வணங்க வேண்டும் என்று தெரிவித்ததே கிடையாது. காரணம், மொழிப்பிரச்சினை கடவுளுக்கு கிடையாது. ஆனால், இது இறைவனின் வாக்கு தான் குரான் என்பதை நிரூபிக்க நபிகள் சொன்ன வழிகாட்டுதல் தான் அரபி மொழி தொழுகை என்பது. குழப்புகிறதா..? விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். முஸ்லீம்களின் தொழுகையில் சொல்லப்படும் அனைத்து அரபுச்சொற்றொடர்களும் குரானின் உள்ள இறைவசனங்கள் மட்டுமே. இறைவேதத்தில் கலப்படம், திருத்தம் ஏற்படுவதை தடுக்க நபிகள் சொன்ன வழி முறை இது. இந்த மொழி நிபந்தனை மட்டும் இல்லையென்றால் குரான் இன்று நாடு, மொழி, இன வாரியாக இஸ்லாமிய மக்களாலாயே குதறப்பட்டு, அதிலுள்ள மூலமான இறைவனின் செய்தி மறைக்கப்பட்டு மனிதர்களின் சிந்தனைகள் திணிக்கப்பட்டிருக்கும், இடைச்செறுகல் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்த நிபந்தனையால் தான் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனால் எப்படி அருளப்பட்டதோ அப்படியே, அதன் பொருள் மாறாமல் ஏன், அதன் ஒரு எழுத்துக்கூட மாறாமல் அப்படியே இருக்கிறது. காரணம், தொழுகையின் மூலம் குரானின் மூலமான ஒவ்வொரு அரபி மொழி வசனங்களும் தினமும் 5 வேளை தொழுகையினால் முஸ்லீம்களின் இதயங்களில் செதுக்கப்பட்டுள்ளது. யாரும் தங்கள் இஷ்டப்பட்டி அதை மாற்றமுடியாது. தொழுகை வசனங்கள் வேண்டுமானால் அவை அரபி மொழியில் இருக்கலாம். ஆனால் வணங்கும் போது ஒவ்வொருவரும் தன்னுடைய மொழியை மனதில் கொண்டே தன் வணக்கத்தையும் வேண்டுதலையும் செய்வார்கள். அதனால், அதில் எந்த கஷ்டமோ, சிரமமோ இருக்காது. இறைவனுடைய கட்டளைகள் கொண்டு தொகுக்கப்பட்ட முதல் குரான் தொகுப்பு பிரதி இன்றும் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் எங்கு, யாரிடம் உள்ள குரானை வேண்டுமானாலும் வாங்கி, அதனுடன் துருக்கியில் பாதுக்காக்கப்பட்டு வரும் உலகின் முதல் குரானோடு ஒப்பிட்டால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றுள் ஒரு வேறுபாட்டையும் காணமுடியாது.


அது மட்டுமல்லாமல், அரபு மொழிக்கே உரிய இனிமை குரானை அம்மொழியில் தொழுகையினை நடத்தும் போது அழகினையும், இனிமையையும் தருவது என்பது மறுக்க இயலாத ஒரு விஷயம். அரபு மொழிக்கு மற்றொரு சிறப்பியல்பும் உண்டு. அதாவது குறிப்பிட்ட அரபு வார்த்தைகளை மற்றொரு மொழியில் ஒரே வார்த்தையில் மொழி பெயர்க்க முடியாத அளவுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கும். அதை மொழிபெயர்க்கும் போது சில சொற்றொடர் கொண்டு அதைவிளக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட அர்த்தம் மிகுந்த மொழியை மாற்றாமல், அதே மொழியை கொண்டு பயன்படுத்தினால் தான் அதன் உள்ளே உள்ள அர்த்ததின் பயனை அடைய முடியும். அரபு மொழியில் தொழுகையின் வசனங்கள் இருந்தாலும் அதை அப்படியே மூளைச்சலவை செய்தது போல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கக்கூடாது என்று தான் குரான், உலகின் எல்லா மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அதைப்படித்து அதிலுள்ள கருத்துக்களை புரிந்தே தொழுகை முதற்கொண்டு எதையும் செய்ய வேண்டும் என்பதே இஸ்லாம் சொல்லும் வழி முறை. குரானுக்கு மட்டுமே அதன் தனித்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த நிபந்தனை, ஹதீஸ் என்னும் நபிகளாரின் வழிமுறைகளுக்கல்ல..!!







LOLLUVAATHIYAR:
அரபு மொழியில் தொழுகை நடத்துவதை பற்றிய விளக்க அருமை இதயம்.
உங்கள் விளக்கம் எங்களுக்கு உன்மையில் எங்கள் மதத்தை பற்றி கூட சில உன்மைகள் புரியவைத்து விட்டது.
குறிப்பாக இந்த வாக்கியம்

Quote:
Originally Posted by இதயம் View Post
சமயத்தின் மூலமாக இருக்கும் முதல் நூல் அதன் பிறகு காலம் செல்ல, செல்ல அந்த காலத்திற்கு ஏற்றார்போல் திருத்தியமைக்கப்படுகிறது. இடைச்செருகல்கள் செய்யப்படுகின்றன.
.
இதே நிலை தான் ஹிந்து மத நூல்களுக்கும் வந்து விட்டது
சமஸ்கிருத்தத்திலிருந்து பொழி பெயர்க்க பட்ட போது இடைசொர்கள் புகுத்தி விட பட்டது.
நீங்கள் சொன்ன இதே காரனத்துக்காக தான் சமஸ்கிருத்ததில் பூஜைகள் என்று உலகம் பூராவும்
இருந்திருக்கலாம் என்று எனக்கு தோண்றுகிறது. உங்கள் விளகத்துக்கு நண்றி

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails