நேரம்:

வியாழன், 9 செப்டம்பர், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-11)




இஸ்லாம் உண்மையிலேயே அமைதி மார்க்கமா..?!!

இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், சமாதானத்தை விரும்பும் மார்க்கம். உடனே நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். இஸ்லாம் உலகெங்கும் பரப்பப்பட்டதே வாள் முனையில் தான் என்று சொல்லப்படும் போது அது எப்படி அமைதியான மார்க்கமாக இருக்கும்..? சமாதானத்தை விரும்பும் மார்க்கமாக இருக்கும்..? இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளில் ஒன்று பட விரும்பாதவர்களால் பரப்பப்பட்ட செய்தி இது.  நான் சில விஷயங்களை இது சம்பந்தமாக சொல்ல விரும்புகிறேன். அதன் பிறகு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.

இஸ்லாம் என்ற வார்த்தை "சலாம்" என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது. அரபி மொழியில் சலாம் என்றால் அமைதி, சமாதானம் என்று பொருள். அது மட்டுமல்ல, அதற்கு அடிபணிதல், அர்ப்பணித்தல் என்ற பொருளும் உண்டு. அதாவது இஸ்லாம் என்பது கடவுள் என்ற மகா சக்திக்கு அடிபணியும், அற்பணிப்பவர்கள் பின்பற்றும் சன்மார்க்கம் என்பது பொருள்.



உங்களுக்கு தெரியுமா..? மனித சமூகத்தில் அமைதி என்பது தானாக கிடைக்காது. சில நேரங்களில் அதற்காக சில வழிகளில் அடக்குமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது. இந்த உலகில் எந்த மனிதனும் அமைதியை தானாக சிந்தித்து செயல்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையோர் மனித சமுதாயத்தில் அடுத்தவர்களுக்கு பல வகைகளில் தொந்தரவையும், கஷ்டத்தையும் உண்டாக்குபவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடக்கி அமைதியை கொண்டு வர அடக்குமுறையை கையாள வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேசத்தில் அமைதியை, சமாதானத்தை தவழ விட முடிகிறது. அந்த அடிப்படையில் தான் நாம் காவல்துறையும், நீதித்துறையும் பெற்றுள்ளோம். சமாதானத்தை போதிக்கும் இஸ்லாம், அதே நேரத்தில் சமாதானத்திற்கு எதிராக ஊறு விளைவிப்பவர்களை அடக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் சமாதானத்தை, அமைதியை நிலை நாட்ட மட்டுமே அடக்குமுறை என்பது இஸ்லாத்தில் கையாளப்படுகிறது.



De Lacy O�Leary என்ற வரலாற்று ஆசிரியர் தன்னுடைய "Islam at the cross road" புத்தகத்தின் 8-வது பக்கத்தில் என்ன சொல்கிறார் தெரியுமா..? "History makes it clear however, that the legend of fanatical Muslims sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fantastically absurd myth that historians have ever repeated."



முஸ்லீம்கள் ஸ்பெயினை 800 வருஷங்கள் ஆண்டார்கள். ஸ்பெயினில் உள்ள முஸ்லீம்கள் ஒரு போதும் வாளின் முனையில் மற்றவர்களை மதமாற்ற ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஆனால் அதன் பிறகு ஸ்பெயினுக்கு வந்த கிறிஸ்துவர்கள் அங்குள்ள முஸ்லிம்களை அழிப்பதிலேய தன் நோக்கமாக கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு முன் அழைக்கும் பாங்கு என்ற வணக்க அழைப்பை வெளிப்படையாக செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன. 1400 வருடங்களாக அரபு தேசத்தின் பிரபுக்களாக முஸ்லீம்கள் இருந்தார்கள். சில காலம் அரபு தேசம் பிரிட்டிஷாராலும், ஃப்ரெஞ்சுக்காரர்களாலும் ஆளப்பட்டாலும் நீண்ட நெடுங்காலம் ஆளப்பட்டது முஸ்லீம்களால் மட்டுமே. அந்த அரபு தேசத்தில் இப்போது இருக்கும் 14 மில்லியன் மக்கள் யார் தெரியுமா..? கிறிஸ்துவர்கள் அதாவது முந்தைய கிறிஸ்துவர்களின் வாரிசு வந்தவர்கள். அந்த நேரத்தில் வாளை பயன்படுத்தி இஸ்லாத்தை பரப்பியிருந்தால் அந்த 14 மில்லியன் மக்களில் ஒருவர் கூட கிறிஸ்தவராக இருந்திருக்க மாட்டார்கள்.


உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடு இந்தோனேஷியா. மலேஷியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். மிக வேகமாக இஸ்லாம் பரவி வரும் ஒரு நாடு தென்னாப்பிரிக்கா. நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். எந்த இஸ்லாமிய படை இந்த நாடுகளுக்கு சென்று வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பியது..??


அவ்வளவு ஏன் வெளிநாடுகளைப்பற்றி பேச வேண்டும். நம் நாட்டிற்கே வருவோம். இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் முஸ்லீம்கள். அவர்கள் அப்போது நினைத்திருந்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முஸ்லிம் அல்லாதவரையும் மிரட்டி, அடிபணியவைத்து முஸ்லீமாக மாற்றியிருக்க முடியும். அப்படி செய்யவில்லை. அதனால் தான் நம் நாட்டில் இப்போது 80% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள். இஸ்லாம் வாள் முனையில் தன் மார்க்கத்தை பரப்பவில்லை என்பதற்கு இந்த 80% மக்களைத்தவிர வேறு யார் சாட்சியாக இருக்க முடியும்..?? இஸ்லாத்தின் இந்த அபரித வளர்ச்சிக்கு காரணம் கொலை வெறி பிடித்த வாளல்ல, அது கொண்ட கொள்கை தான்..!! இஸ்லாத்தின் உயரிய கொள்கை உங்களிடம், என்னிடம், அரேபியர்களிடம் என்று யாரிடமிருந்தும் கற்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆதாரமாக விளங்கும் புனித குரானிலிருந்து கற்க வேண்டும். இஸ்லாத்தின் கொள்கைகளை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எடுத்துச்சொல்வது பற்றி குரான் என்ன சொல்கிறது தெரியுமா..?


உங்களுடைய இறைவனின் கருணையை கொண்டு அனைவரையும் வரவேற்று அழைத்து அழகான முறையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதற்கான தர்க்கங்களில் மிகவும் சிறப்பான, கனிவான முறையில் ஈடுபடுங்கள் என்று சொல்கிறது.


1984- வெளிவந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் "அல்மனாக்"-ல் 1934 முதல் 1984 வரையிலான அரை நூற்றாண்டில் பெரும்பான்மையான மதங்களின் வளர்ச்சிபற்றிய ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது. அதில் 235% அளவில் இஸ்லாம் அசுர வளர்ச்சி பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்துவ மதம் அதில் 47% வளர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரை நூற்றாண்டு கால கட்டத்தில் எந்த போர் நடைபெற்று, எந்த முஸ்லீம்களால் இத்தனை மில்லியன் கணக்கானோர் முஸ்லீம்களாக மாற்றப்பட்டனர்..? உங்களுக்கு தெரியுமா..? ஒரு நேரத்தில் இஸ்லாம், முஸ்லீம் என்றால் எதிரியைப் போல் கண்ட அமெரிக்காவில், ஐரோப்பிய தேசத்தில் இஸ்லாம் மிக வேகமாக வளரும் சமயங்களில் முதலாவதாக இருக்கிறது. அங்கு இதற்கு காரணமாக யார் வாளை பயன்படுத்தினார்கள்..?



டாக்டர் ஜோசஃப் ஆதம் பியர்சன் சொன்னார்; "நியூக்ளியர் அணு ஆயுதம் அரபுக்களின் கைகளுக்கு வந்து உலகை அவர்கள் ஆளும் நிலைக்கு வந்து விடுமோ என்று பயப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை அறியவில்லை. அதை விட சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் முன்பே இஸ்லாம் என்ற பெயரில் முகமது பிறந்த அன்றே கிடைத்துவிட்டது."







LOLLUVATHIYAR

திரு இதயம் அவர்களே, இஸ்லாம் மதம், குரான் அமைதி வழியில் தான் பரப்ப சொன்னதாக எழுதி இருகிறீர்கள்
அதை நான் மனமார ஏற்று கொள்கிறேன். ஆனால் இஸ்லாம் வாள் முனையில் பரவ வில்லை என்று கூறுவதை நான் ஏற்கவில்லை
(மன்னிக்கவும் உன் மனதில் உள்ள உன்மையை தான் நான் கூறினேன், இஸ்லாமியர்களை புன்படுத்த அல்ல)

ஆனாலும் நீங்கள் ஆரம்பித்த இந்த திரி இஸ்லாம் மதத்தை பற்றி நல்லவைகளை பற்றி விளக்கி செல்லும் ஒரு ஆண்மீக பயனம்.

இந்த திரியில் என் கருத்தை இட்டு அதை பற்றிய விவாதம் வளர நான் விரும்பவில்லை.
எனக்கு இந்த திரியின் நோக்கம் நிறைவேற வேண்டும். இடையில் விவாதம் செய்து இந்த புனித பயனத்தை திசை மாற்ற விரும்பவில்லை.
ஆகையால் மற்ற ஹிந்து நன்பர்களும் இந்த திரியை திசை மாராமல் பார்த்துகொள்ளுங்கள்.
நண்றி.

மேலும் சில சந்தேகம்

இஸ்லாம் சகோதரர்கள் குரானை அடிபடையாக கொண்டு வாழ்கை நடத்துகிறார்கள்
பல நாடுகளில் ஷரியத் என்ற சட்டம் தான் இஸ்லாமியர் சட்டம் என்று கேள்வி பட்டிருகிறேன்
ஷரியத் என்றால் என்ன?

ஷரியத் சட்டம் இந்தியாவிலும் உண்டா?

அது குரானோடு சம்மந்தபட்டதுதானா? இல்லை வேறு நூலா?

இதை பற்றி சற்று விளக்கவும் 



இதயம் 
ஐயா லொள்ளு வாத்தியார் அவர்களே.. இந்த திரி தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர் நீங்கள். நானறிந்த இஸ்லாத்தை மற்ற மாற்றுமத நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்ல காரணமான உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல் பெரும் பணிப்பளுவிற்கிடையில் இதை தொடங்கி எழுதி வருகிறேன். இஸ்லாம், முஸ்லீம்களைப் பற்றி மாற்றுமதத்தவர்களின் மனதில் உள்ள முரண்பாடுகளைக் களையவே நான் இதை எழுதுகிறேன்.

என்னுடைய கடைசி பதிவின் நோக்கம் இஸ்லாம் வாளின் முனையில் பரப்பப்படவில்லை என நிரூபிப்பது. அதை தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு, மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேன். அதைப்படித்த நீங்கள் என் கருத்தில் உடன்பாடில்லை எனில் அதற்கு தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு மறுத்த கூறவேண்டும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏற்க வேண்டியது என் கடமை. ஆனால், அதை விடுத்து மனதை புண்படுத்தும் என்றோ, திரியின் போக்கை மாற்றும் என்று எழுதுவதில் அர்த்தமில்லை. அது என் எழுத்தையும், கருத்தையும் அவமதித்தது போலாகிவிடும். அதற்கு நீங்கள் இப்படி சொல்லாமலேயே இருந்திருக்கலாமே..!! இப்படி போகிற போக்கில் ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டு போகவேண்டிய அவசியமில்லையே..?!


தமிழ்மன்றத்தில் கூடும் நாமெல்லாம் நாகரிகம் அறிந்தவர்கள், நற்கல்வி கற்றவர்கள் என்று நம்புகிறேன். தவறு எங்கிருந்தாலும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டவர்கள். அதைவிடுத்து கண்டும் காணாமல் போவதென்பது நல்ல குடிமகனுக்கு அழகல்ல. என் கருத்தில் நீங்கள் முரண்படும் பட்சத்தில் அதற்கு ஈடான ஏற்றுக்கொள்ளத்தகுந்த எதிர்கருத்தை கூறவேண்டும் என்பது தான் நம் மன்ற நண்பர்களின் விருப்பமாக இருக்கும். நான் எழுதுவதையெல்லாம் "ஆமாம் சாமி" போட வேண்டும் என்றால் நான் இவ்வளவு எழுதவேண்டியதில்லையே..! "இஸ்லாம் தான் உலகின் உயர்ந்த சமயம்" என்று எழுதி ஒரு வாக்கியத்தோடு முடித்துக் கொள்ளலாமே..! ஆரோக்கியமான விவாதம் என்பது என்னைப்பொறுத்தவரையில் வரவேற்கத்தக்கது. விவாதம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் தான் நாம் மன்றத்திற்கு வருகிறோம். எனவே உங்கள் கருத்துக்களை தாராளமாக விளக்குங்கள். அப்படி எழுதவில்லை என்றால்
என் கருத்தை ஆமோதிப்பதாக அர்த்தமாகிவிடும்.
குறிப்பு: இதைப்பற்றி மற்ற நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்..? நான் சொன்னது நியாயமா இல்லையா..?




Quote:
Originally Posted by lolluvathiyar View Post
இஸ்லாம் சகோதரர்கள் குரானை அடிபடையாக கொண்டு வாழ்கை நடத்துகிறார்கள் பல நாடுகளில் ஷரியத் என்ற சட்டம் தான் இஸ்லாமியர் சட்டம் என்று கேள்வி பட்டிருகிறேன்

ஷரியத் என்றால் என்ன?


ஷரியத் சட்டம் இந்தியாவிலும் உண்டா?


அது குரானோடு சம்மந்தபட்டதுதானா? இல்லை வேறு நூலா?

இதை பற்றி சற்று விளக்கவும்

இஸ்லாத்தில் முஸ்லீம்களை பொருத்தவரை குரான் என்பது ஒரு மார்க்க நூல் மட்டுமல்ல அல்ல. அது இறைவனால் அருளப்பட்ட இறைச்செய்தி. அந்த இறைச்செய்தியில் அடங்காத விஷயங்களே இல்லை. வாழ்க்கைக்கு தேவையான, வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்ந்து அதில் உள்ள பிரச்சினைகளைச் சொல்லி, அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது. அதை சார்ந்து விளக்கிச் சொல்வது நபிகளாரின் வழிமுறைகள். இவை இரண்டையும் ஒன்றிணைந்தது தான் ஷரியத் என்பது. ஷரியத் என்பது ஷரியா என்ற அரபி மொழியில் இருந்து வந்தது. ஷரியா என்ற அரபிச்சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று பொருள். ஒரு மனிதன் எதைச்செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அதன் ஆதாரம், வழிமுறை, விளைவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து சொல்லப்பட்ட சட்டதிட்டங்கள் ஷரியத் எனப்படுகிறது.

ஷரியத் சட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து முஸ்லீம்களும் பின்பற்றுகிறார்கள். ஏற்கனவே நான் சொன்னது போல் முஸ்லீம்களைப் பொருத்தவரை குரான் உலகப்பொதுமறை. அது நாட்டுக்கு, மொழிக்கு, இனத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவதில்லை.

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails