அசைவம் உண்பது பாவமா..?
விலங்குகளைக் கொல்வது என்பது கொடிய செயல் எனும் போது முஸ்லீம்கள் ஏன் அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்கள்..? அதனால் தான் அவர்கள் வன்முறையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அந்த கருத்து உண்மையா..? அதைப்பற்றி இங்கே காண்போம். அதற்கு முன்பு அசைவத்தை மனிதர்கள் உண்ணலாமா என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
இது முஸ்லீம்களை குறை சொல்ல பயன்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று. நான் ஏற்கனவே சொன்னது போல் இஸ்லாம் தர்க்க ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் தன் கொள்கையை விளக்கி அதன் பரிசுத்தத்தை நிலைநாட்டுகிறது. அதே வழியில் மேலே உள்ள குற்றச்சாட்டிற்கும் நான் பொருத்தமான விளக்கத்தை அளிக்கிறேன்.
உணவில் சைவம் என்பது இப்போது �Vegetarianism� என்ற பெயரில் உலகளவில் பேசப்பட்டுவரும் ஒரு விஷயம். அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு எதிராகவும், அவற்றின் உரிமை பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் இறைச்சி உண்பது பற்றியும், அசைவ உணவுகள் பயன்படுத்துவது பற்றியும் விலங்குகளின் உரிமைகளுக்கு எதிரான விஷயம் என்ற வகையில் பேசி வருகிறார்கள். உயிர்களின் மீது கருணை, ஆதரவு காட்டுவதை இஸ்லாம் வரவேற்கிறது. அதே நேரம் இந்த உலகம், அதிலுள்ள குறிப்பிட்ட ஜீவராசிகள், தாவரங்கள் மனித குலத்தின் பயன்பாட்டிற்காக படைக்கப்பட்டது என்பதையும் மறுக்காமல் நிலைநாட்டுகிறது. இந்த உலகத்தில் மனிதனின் பயன்பாட்டிற்கு கிடைக்கும் அனைத்தும் இறைவனின் ஆசியுடன் கூடிய பரிசு ஆகும். ஒரு சில விஷயங்களை பட்டியலிட்டு "அப்படியா" என்று கேட்குமளவுக்கு ஆச்சரியப்படுத்தி விடுகிறேன்.
1. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? ஒரு முஸ்லீம் அசைவத்தை தொட்டுக்கூட பார்க்காத சைவனாக தன் வாழ்நாள் முழுதும் எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லாமல் இஸ்லாத்தில் இருக்க முடியும். அவனுக்கு அசைவ உணவு என்பது கட்டாயப்படுத்தப்படவில்லை. அதே நேரம் (ஒரு குறிப்பிட்ட இஸ்லாம் தடுக்கும் பறவை, விலங்கினங்களை தவிர) மற்ற விலங்குகளை கொண்ட அசைவ உணவு உண்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது
2. இறைச்சி உணவு மனித உடம்புக்கு சக்தியை கொடுக்கக்கூடியது. அது தான் உடம்புக்கு தேவையான புரோட்டினுக்கு ஆதாரமாக இருக்கிறது. இறைச்சியில் அமினோ அமிலத்தை உள்ளடக்கிய 8 வகையான அடிப்படை மூலங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இறைச்சியில் இரும்புச்சத்து, நியாசின், விட்டமின் B1-ம் கூட அமைந்துள்ளன.
3. மனிதன் இறைச்சி உண்ணலாம் என்பதை இறைவன் கொடுத்த உடலில் உள்ள பற்களின் அமைப்பில் இருந்தே அறியலாம். நீங்கள் சைவத்தை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் (எ.கா) பசு, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அவற்றிற்கு பற்கள் அமைப்பு ஒத்திருக்கும். அது மட்டுமல்லாமல் சைவ உணவிற்கு ஏற்ற வகையில் கடவாய் பற்கள் தட்டையாக அமைந்திருக்கும். இதுவே அசைவத்தை உண்ணும் புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றின் பற்களை அமைப்பை கண்டால் அவைகளின் அசைவ உணவு பழக்கத்திற்கேற்ப மாமிசத்தை குத்திக்கிழித்து உண்ண ஏதுவாக நீண்ட, கூர்மையான கோரைப்பற்கள் இருக்கும். மனிதனின் பற்களைக்கண்டால் இருவகையான பற்களையும் கொண்ட அமைப்பாக இருக்கும். இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், நாம் இருவகையான உணவையும் உண்ணலாம் என்பதை.
4. பற்களின் அமைப்பு மட்டுமல்ல, விலங்குகளின் ஜீரண அமைப்பை எடுத்துக் கொள்வோம். சைவ உணவு உண்ணும் விலங்கு அசைவத்தை உண்ணாது. அதே போல் அசைவ உணவு உண்ணும் விலங்கு சைவத்தை உண்ணாது (அதைத்தான் நம் முன்னோர்கள் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்றார்கள்..!!). அப்படி தின்றால் ஜீரண மண்டலத்தில் சிக்கல் ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடும். ஆனால், மனிதன் இரு வகையான உணவை உண்டாலும் ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அசைவம் கூடாது என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.
5. இந்து மதத்தில் பெரும் எண்ணிக்கையில் அசைவத்தை உண்ணாதவர்கள் உள்ளார்கள். குறிப்பாக இந்து மதத்தின் குறிப்பிட்ட பிரிவைச்சேர்ந்த ஜைனர்கள், பிராமணர்கள் அசைவத்தை உண்பது தன் மதத்திற்கு எதிரானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. இந்து மதம் அசைவம் உண்ண அனுமதித்திருக்கிறது என்பது உண்மை. அதை இந்துக்களின் புனித நூலிலிருந்தே என்னால் எடுத்துச் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சில:
(அ) இந்து சமய சட்ட நூலான மனு ஸ்மிருதியில் அத்தியாயம் 5, பகுதி 30 -ல் கீழே உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
"The eater who eats the flesh of those to be eaten does nothing bad, even if he does it day after day, for God himself created some to be eaten and some to be eater."
(ஆ) அதே நூலில் அதே அத்தியாயம் 5, பகுதி 31-ல் சொல்லப்படுகிறது..
"Eating meat is right for the sacrifice, this is traditionally known as a rule of the gods."
(இ) அதே அத்தியாயம் 5, பகுதி 39 மற்றும் 40 -ல்...
"God himself created sacrificial animals for sacrifice, ...., therefore killing in a sacrifice is not killing."
(ஈ) மஹாபாரதத்தில் அனுஷாஷன் பர்வா அத்தியாயம் 88 பகுதியில் பீஷ்மருக்கும் யுதிஷ்திடருக்கும் நடைபெறும் உரையாடலில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்களை திருப்திபடுத்த எந்த வகையான உணவுகளை படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் ஆங்கில வடிவம் கீழே:
"Yudhishthira said, "O thou of great puissance, tell me what that object is which, if dedicated to the Pitiris (dead ancestors), become inexhaustible! What Havi, again, (if offered) lasts for all time? What, indeed, is that which (if presented) becomes eternal?"
"Bhishma said, "Listen to me, O Yudhishthira, what those Havis are which persons conversant with the rituals of the Shraddha (the ceremony of dead) regard as suitable in view of Shraddha and what the fruits are that attach to each. With sesame seeds and rice and barely and Masha and water and roots and fruits, if given at Shraddhas, the pitris, O king, remain gratified for the period of a month. With fishes offered at Shraddhas, the pitris remain gratified for a period of two months. With the mutton they remain gratified for three months and with the hare for four months, with the flesh of the goat for five months, with the bacon (meat of pig) for six months, and with the flesh of birds for seven. With venison obtained from those deer that are called Prishata, they remaingratified for eight months, and with that obtained from the Ruru for nine months, and with the meat of Gavaya for ten months, With the meat of the bufffalo their gratification lasts for eleven months. With beef presented at the Shraddha, their gratification, it is said , lasts for a full year. Payasa mixed with ghee is as much acceptable to the pitris as beef. With the meat of Vadhrinasa (a large bull) the gratification of pitris lasts for twelve years. The flesh of rhinoceros, offered to the pitris on anniversaries of the lunar days on which they died, becomes inexhaustible. The potherb called Kalaska, the petals of kanchana flower, and meat of (red) goat also, thus offered, prove inexhaustible.
அப்படியென்றால் முன்னோர்களை திருப்தி படுத்த சிவப்பு இறைச்சி கொண்ட ஆடுகளையும் படைக்க வேண்டும் என்று கூறப்படுவதை தெரிந்து கொள்ளலாம். என் மொழிபெயர்ப்பின் மூலம் அதன் பொருள் மாறிவிட வாய்ப்புள்ளது என்பதால் மேலே உள்ளவற்றை நான் ஆங்கிலேயத்திலேயே கொடுத்துள்ளேன். நான் கொடுத்துள்ளது சரிதானா என்பதை மன்றத்தின் சிறந்த இந்து மத ஆன்மீகவாதியான திரு. சிவசேவகன் அவர்கள் படித்து தன் விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர் ஒரு சைவர் என்பதால் அவர் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
7. இந்துத்துவம் என்பது பல கூறுகளாக பிரிந்து தன் சமய நூல்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றமுடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணத்திற்கு இந்து சமயத்தில் அசைவம் உண்ணலாம் சமய நூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும் அவர்கள் தன்னுடைய சுய விருப்பத்திற்காக பிராமண, ஜைன பிரிவுகளை சேர்ந்த இந்துக்களும், தன் மதத்தை நேசிப்பதாக சொல்லும் பல இந்துக்களும் சைவத்தை மட்டும் உண்ணுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில கருத்துக்களை எழுத உள்ளேன்.
உயிர்களை கொல்லக்கூடாது என்பது தான் சைவத்தை வற்புறுத்துவதின் நோக்கம் என்றால் சைவர்கள் உண்ணும் தாவரங்கள் மட்டும் உயிர் இல்லையா..? இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் உயிர் உள்ளதை நிரூபித்துவிட்டது. அதனால் தான் அவைகள் வளர்கின்றன, பூக்கின்றன, காய்க்கின்றன, நம்மைப்போல் இனப்பெருக்கமும் செய்கின்றன. உயிர்களை உணவுக்காக கொல்லாமல் மனிதன் வாழ்வது என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லை.
உடனே நம்மவர்கள் தாவரங்களுக்கு விலங்குகளைப்போல் ஐந்தறிவு கிடையாது, மிகக்குறைந்த அறிவே இருப்பதால் கொல்வது தவறில்லை என்று தர்க்கம் செய்வார்கள். அந்த தர்க்க ரீதியிலேயே அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுடைய காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத சகோதரன் (மூன்றறிவுடன்) இருக்கிறார். அவர் யாராவது ஒருவரால் கொல்லப்பட்டால் மூன்றறிவு மனிதனைத்தானே கொன்றான் என்று தண்டனையை குறைக்கச் சொல்லி நீதி மன்றத்தில் சொல்வீர்களா..? அப்படி நீங்கள் சொன்னாலும் சட்ட கேட்காது. அறிவு குறைந்த அப்பாவியை கொன்றதற்காக அந்த குற்றவாளிக்கு உண்மையான தண்டனையை விட கொடுமையான தண்டனை கொடுக்கத்தான் பரிந்துரைப்பார்கள். அதனால் தாவரங்களின் குறைந்த அறிவு பற்றிய வாதம் இங்கு எடுபடாது.
சிலரோ, நம்மை போல் தாவரங்களுக்கு வலியும், வேதனையும் கொல்லும் போது இல்லை. அதனால் அது குற்றம் இல்லை என்று விஞ்ஞானம் வழியாக சொல்வார்கள். யார் சொன்னது அப்படி..? உயிர் என்று வரும் போது வலி என்பது பொதுவாகிவிடும். இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் வலியை உணர்கின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவைகள் துன்புறுத்தப்படும் போது நம்மைப் போலவே சத்தமிட்டு அழுகின்றன. இதென்ன கதை என்கிறீர்களா..? கதையல்ல ஐயா.. அறிவியல் உண்மை..!! மனிதனின் உடல் செயல்பாடுகளில் ஏகப்பட்ட குறைபாடுகள் உண்டு. அதில் ஒன்று தான் இயற்கையாக அமைந்த கேட்கும் திறனில் உள்ள குறைபாடும்.
மனிதக்காதின் கேட்கும் திறனானது ஒலி 20 ஹெர்ட்ஸ் கீழோ அல்லது 20,000 ஹெர்ட்ஸ் மேலோ போகும் போது கேட்க இயலாது. ஒரு நாய் 40,000 ஹெர்ட்ஸ் வரை மனிதனை விட கூடுதலாக கேட்க முடியும். அதனால் தான் அருகில் நிற்கும் நமக்கு கேட்காத அந்த நாய் எஜமானனின் விசில் ஒலி நாய்க்கு கேட்டு ஓடுகிறது. அமெரிக்காவில் ஒருவர் கண்டுபிடித்த ஒரு சாதனம் தாவரங்களின் ஒலியை மனிதர்களின் கேட்கும் திறனுக்கு ஒத்துபோகும் படி செய்கிறது. அதை அவர் பயன்படுத்திய போது தாவரங்கள் நீரில்லாமல் இருக்கும் போது அதற்காக அவை அழுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. நாம் ஒரு தாவரத்தை பார்ப்பதின் மூலம் அதன் தோற்றத்தின் அடிப்படையில் அதன் சந்தோஷம், வேதனையை தெரிந்து கொள்கிறோம். ஆனால், தற்போதைய கண்டுபிடிப்புகள் தாவரம் சந்தோஷம், வேதனையினால் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
உலகில் உள்ள எல்லோரும் சைவத்தை மட்டும் உண்டால் அது விலங்குகளின் கூடுதல் இனப்பெருக்கத்திற்கு வழி செய்துவிடும். அதை பராமரிப்பதில், விவசாயத்தை, நம்மை விலங்குகளிடமிருந்து காப்பதில் பெரும்பிரச்சினை ஏற்படும். இதை தடுக்க இறைவனால் அருளப்பட்ட பரிசே அசைவ உணவு என்பது. அதுமட்டுமல்ல எல்லோரும் சைவ உணவு உண்டால் காய்கறிகளின் தேவை அதிகமாகி, உற்பத்தி சமநிலைப்படாமல் அதன் விலைகள் விண்ணை நோக்கி உயர்ந்து விடும். அசைவ உணவின் விலை அதளபாதாளத்திற்கு தாழ்ந்து விடும். இதையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..?
நான் இங்கு எழுதியிருப்பவை அனைத்தும் குற்றம்சாட்டும் முயற்சி அல்ல. நான் செய்வது தவறில்லை என்பதை உங்களைக் கொண்டே நிரூபிக்கும் தன்னிலை விளக்கம். அவ்வளவே..!!
சத்தியம்:
வாழ்த்துக்கள் ஜாபர் தொடருங்கள் உன்கள் அழைப்பு பணியை அல்லா உன்களுக்கு அருள் புரிவனாக
LOLLUVATHIYAR:
Quote:
நீங்கள் என் கருத்தில் உடன்பாடில்லை எனில் அதற்கு தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு மறுத்த கூறவேண்டும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏற்க வேண்டியது என் கடமை. [/COLOR] |
நான் நினைப்பது முதலில் இஸ்லாம் மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ள.
அதாவது உங்கள் மூலம் இந்த திரியில் பதித்து கொள்ள வேண்டும்.
சர்சைகள் அனைத்தும் பிறகு விவாதித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
சர்ச்சை இல்லாமல் எந்த கருத்தும் இல்லை. ஆனால் முதலில் கருத்து சொன்னவர் தான் சொல்ல வந்த கருத்தை அனைத்து பதித்து விட வேண்டும்.
அப்படி மற்றவர்கள் இந்த திரியை தொடர்ச்சியாக முழுவதும் படித்து விட்டு, பிறகு ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவித்து விட்டு விவாதம் தொடரலாம்.
விவாதம் ஆரம்பத்திலேயே தொடங்கினால், விவாதம் வளரும்
ஆனால் மாற்று மத பிரிவினர் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்ள வாய்பில்லாமல் போய்விடும்.
அடுத்தது இந்துகள் மதத்தில் அசைவம் பற்றிய உங்கள் கருத்து சரியானதே.
மனு, வேதம் எதை சாப்பிட்டால் ஆரோக்கியம், சிறந்தது , எதை சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் என்று மட்டுமே கூறும்,
இதை சாப்பிட்டே ஆக வேண்டும், இதை சாப்பிடவே கூடாது என்று கட்டாய படுத்தாது.
ஒரு குறிப்பு : வேதம் பொதுவாக மனித வாழ்கை அமைவதை பற்றி எழுதபட்டது. இந்து என்ற மதத்துக்காக எழுதபட்டதல்ல.
அந்த காலத்தில் இந்து மதத்தவர்கள் அதை பின்பற்றினார்கள் அவ்வளவுதான். வேதத்துக்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை
இதயம்
Quote:
வாழ்த்துக்கள் ஜாபர் தொடருங்கள் உன்கள் அழைப்பு பணியை அல்லா உன்களுக்கு அருள் புரிவனாக |
தங்கள் ஆதரவுக்கு நன்றி..!
LOLLUVATHIYAR:
இதயம் அவர்களே என் அடுத்த கேள்வி முஸ்லீம்களின் ஹஜ் பயனத்தை பற்றி கூறுங்கள்.எந்த வயது பிரிவினர் ஹஜ் பயனம் மேற்கொள்ளலாம்.
பெண்கள் ஹஜ் பயனம் போவார்களா.
ஹஜ் பயனம் எங்கு செல்கிறார்கள், அங்கு என்ன பன்னுகிறார்கள்.
அங்கு தூனுக்கு கல் எறிவார்கள், அது ஏன்?
ஹஜ் பயனத்தின் மகிமை என்ன?
இதயம்
Quote:
நான் நினைப்பது முதலில் இஸ்லாம் மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ள. |
Quote:
சர்சைகள் அனைத்தும் பிறகு விவாதித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. சர்ச்சை இல்லாமல் எந்த கருத்தும் இல்லை. ஆனால் முதலில் கருத்து சொன்னவர் தான் சொல்ல வந்த கருத்தை அனைத்து பதித்து விட வேண்டும். அப்படி மற்றவர்கள் இந்த திரியை தொடர்ச்சியாக முழுவதும் படித்து விட்டு, பிறகு ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவித்து விட்டு விவாதம் தொடரலாம். விவாதம் ஆரம்பத்திலேயே தொடங்கினால், விவாதம் வளரும் |
Quote:
வேதம் பொதுவாக மனித வாழ்கை அமைவதை பற்றி எழுதபட்டது. இந்து என்ற மதத்துக்காக எழுதபட்டதல்ல.அந்த காலத்தில் இந்து மதத்தவர்கள் அதை பின்பற்றினார்கள் அவ்வளவுதான். வேதத்துக்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை |
அக்னி:
அட, இவ்வளவு பக்கங்களாகிவிட்டனவா..?
வாசித்துவிட்டு வருகின்றேன் இதயம்... வாசித்தவரை, அருமையாக உள்ளது...
பாராட்டுக்கள்...
இதயம்:
நன்றி அக்னி..! உங்களைப்போன்றவர்கள் ஆதரவு, ஊக்கம் இல்லாமல் என்னால் இதைச் செய்ய முடிந்திருக்காது..!!
LOLLUVATHIYAR:
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது இதயம்.
Quote:
இஸ்லாம் பற்றி கொஞ்சமே தெரிந்த நீங்கள் இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்படவில்லை என்பதை நான் தகுந்த ஆதாரம், காரண காரியங்களுடன் விளக்கும் போது அதை ஏற்க மறுப்பது முரண்பாடாக தெரியவில்லையா வாத்தியார் அவர்களே..? இஸ்லாம், குரானின் நெரிகள் பற்றி தான் எனக்கு அதிகமாக தெரியாது என்று சொன்னேன் இதயமே. அது உன்மையும் கூட. ஆனால் வரலாறு தெரியாது என்று நான் சொல்லவில்லை. நான் முரன்படவில்லை. இஸ்லாம் மதம் வாளின் உதவியால் பரப்ப வேண்டும் என்று குரான் கூறவில்லை என்பதை உங்கள் படைப்பின் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். ஆனால் வரலாறு வேறு, அதுக்கு குரானுக்கும் சம்மந்தமில்லை அல்லவா? தோராயமாக 750 வருடக்க்களுக்கு முன் சில இஸ்லாமிய மனிதர்கள் (மன்னர்கள்) செய்த தவறுக்கு இஸ்லாம் காரனமல்ல என்பதை உங்கள் படைப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் முகலாய மன்னர்கள் இஸ்லாமை வாள் முனையில் பரப்பவில்லை என்ற ஒரே கருத்தை தான் ஏற்க மறுகிறேன். இந்த திரி இஸ்லாம் பற்றிய திரி, முகலாய மன்னர்களை பற்றி இப்பொழு ஏன் விவாதிக்க வேண்டும் என்று தான் என் கேள்வி. !! அப்படியானால் அடுத்தவர்கள் எப்படி போதித்தார்களோ, அதையே அறைகுறையாக அறிந்து நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மனிதனுக்கே உரிய குற்றம் கண்டு பிடிக்கும் குணம் உறுதுணையாக இருக்கிறது. அப்படி தானே..? ஆன் உன்மைதான் நான் அப்படிதான் குரானை பற்றி தவறாக நினைத்து கொண்டிருந்தேன். உங்கள் குற்றத்தை ஒப்பு கொள்கிறேன். எல்லாம் முடிந்த பிறகு கேள்வி கேட்கிறேன் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. காரணம், இஸ்லாத்தில் உள்ள விஷயங்களை சொல்ல ஆரம்பித்தால் என் வாழ்நாள் போதாது. உன்மைதான் , முழுவதாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஓரளவுக்காக தெரிந்து கொள்ளாமல்லவா? அதனால் தான் நான் உங்களை கேள்வி மூலம் கேட்கிறேன். நீங்கள் என் கேள்வியை உற்று நோக்கினாலே தெரியும். வேதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் அந்த மதச்சட்டங்களாக வேதங்களில் குறிப்பிடப்பட்டவை ஏன் பின்பற்றப்படுகிறது.? வேதங்களில் சட்டம் என்று எதுவுமே குறிப்படவில்லை. முன்பு எப்படி நீங்கள் சொன்னீர்கள் பலவிசயம் இடை சொருகல்கள் அது போல தான். வேதத்தின் சட்டத்தை இந்துகள் பின்பற்றவில்லை, சட்டம் வேறு வாழ்கை முரை வேறு. வேதம் ஆரோக்கியமாக வாழவும் அமைதியாக வாழவும் தனி மனிதனுக்கும், சமுதாயதுக்கும் கற்று கொடுக்கும் ஒரு நூல். எந்த குறிபிட்ட மததுக்கும் எழுத படவில்லை. உங்களுடைய பதில் இந்துத்துவத்தின் அடிப்படையையே உலுக்குகிறது. தயவு செய்து விபரமாக விளக்குங்கள். அறிய ஆவலாய் இருக்கிறேன். இந்துகள் (அந்த் காலத்தில் சைவர்கள், வைனவர்கள் இன்னும் பல) வேதத்திலிருந்து சில கோட்பாடுகளை பின் பற்றினார்கள் என்பது உன்மை. ஆனால் வேதம் இந்துகளுக்காக எழுதபடவில்லை. வேதம் எழுதிய போது இந்து என்ற மதமே இல்லை. இந்துத்துவா என்பதும் முழுவதாக ஒரு மதத்தை குறிப்பிடுவதல்ல, அதை பற்றியும் தவறாக புரிந்து கொண்டார்கள். சமீபத்தில் தான் சுப்ரீம் கோர்ட் அதை பற்றி விளக்கியது. இதை பற்றி ஒரு தனி திரியாக எழுத வேண்டும் என்பது என் ஆசை. இந்துத்துவா என்பது - இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்கள் மற்றும் விலங்கினம், இயர்கை செல்வம் அனைத்தையும் பாத்காப்பது ஆகும். |
கவலை படாதீர்கள், நிச்சயம் சர்சையான கேள்விகளும் பின்னால் வரும். (நான் கேட்பேன்)
அதன் மூலம் நீங்கள் இஸ்லாம் ஒரு அண்பு மதம் என்று நிருபிக்க முடியும். அப்பொழுது விவாதம் சுறுப்பாக இருக்கும்.
ஒன்றை மட்டும் நான் சொல்லி கொள்கிறேன் இதயம் நான் அமாம் சாமி போடுபவன் அல்ல, அது உங்களுக்கு தெரியும்.
சிவசேவகர் திரிகளில் அவரையும், தேவேந்திரரையும், உதயசூரியனையும் நான் பல இடங்களில் விமர்சித்தவன்.
சிவா.ஜி:
வாத்தியார் அவர்களே மிக மிக அழகாக விளக்கங்களை அளித்துள்ளீர்கள். இஸ்லாம் என்ற மதத்தை அறிந்துகொள்வதுதான் உங்கள் நோக்கம் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் இதயம் அவர்களும் மிக நேர்த்தியானா முறையில் அதைப்பற்றி விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.இந்த திரியை நான் முதலிலிருந்தே படித்து வந்தாலும் நீங்கள் நினைத்ததுபோலத்தான் நானும் அவரின் விளக்கங்கள் முடிந்த பிறகு சில கேள்விகளை எழுப்பலாம் என்று நினைத்திருந்தேன். ஆரம்பத்திலேயே இதயம் அவர்கள் இஸ்லாம் வாள் முனையில் பரப்பபட்டதல்ல என்று சொன்னதில் வரலாறு படித்த எனக்கு உடன்பாடு இல்லை. பழமையில் ஊறிப்போயிருந்த,ஒரே தத்துவத்தை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் கடைபிடித்து வந்த அந்தக்காலத்து மக்கள் விரும்பி வேறு மதத்தை ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்போது வேறு. பகுத்தறிவு மிகுந்துவிட்ட காலம். தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக ஆலோசித்துத்தான் செய்கிறார்கள். முகலாய அரசர்கள் எல்லோருமே அப்படி இல்லை. செங்கிஸ்கான் என்ற மங்கோலிய அரசன் இப்போதுள்ள கஸக்ஸ்த்தான் என்ற நாட்டை கிறித்துவத்திலிருந்து முழுவதுமாய் எப்படி மாற்றினான் என்று சரித்திரம் சொல்கிறது.அதனால் நீங்கள் சொல்வதைப்போல இஸ்லாம் என்ற அன்பு மதம் பற்றி எந்த தவறான அபிப்பிராயமும் இல்லை.
இதயம்:
வாத்தியார் கேள்வி, பதில்களில் என்றும் சோடை போனதில்லை. என்னுடைய கேள்விக்கு வாத்தியாரின் பதில்கள் மிகச்சிறப்பு. ஆனால், இந்த உண்மையை சிவா.ஜியைப்போல் எத்தனை நண்பர்கள் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஏற்காவிட்டாலும் உண்மை உண்மை தானே. எனவே அதைப்பற்றி நாம் விவாதிக்க வேண்டியதில்லை.
அடுத்து நான் மிகவும் எதிர்பார்த்த சிவா.ஜியின் பின்னூட்டம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதைப்போன்ற விவாதங்களும், பகிர்தலும் தான் உண்மையை வெளிக்கொணரும். அவருடைய கருத்துக்கு நான் பதிலை இடவேண்டியது என் கடமை.
Quote:
பழமையில் ஊறிப்போயிருந்த,ஒரே தத்துவத்தை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் கடைபிடித்து வந்த அந்தக்காலத்து மக்கள் விரும்பி வேறு மதத்தை ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்போது வேறு. பகுத்தறிவு மிகுந்துவிட்ட காலம். தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக ஆலோசித்துத்தான் செய்கிறார்கள். |
இஸ்லாத்தின் பலம் மாசு, மருவற்ற அதன் கொள்கைகள். பலவீனம் இஸ்லாத்தின் பெயரில் சில காலிகள் செய்யும் செயல்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்படுவது. அப்படித்தான் நான் நண்பர் சிவா.ஜி சொன்னதும் என்று நினைக்கிறேன். எனக்கு கஜகஸ்தான் பற்றிய வரலாறு தெரியாது. அதனால், அவர் சொல்வதை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால், வரலாறு தெரிந்து கொண்டு திரும்பி வருகிறேன். ஜகஸ்தானைப்பற்றி சொன்ன சிவா.ஜி நான் சொன்ன மற்ற நாடுகளைப்பற்றிய கருத்தை சொல்லவில்லை. அதற்கு காரணமாக என்ன இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும்..?
இந்தியாவில் முகலாயர்கள் நினைத்திருந்தால் அனைவரையும் மதமாற்றியிருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்யவில்லை. அதுமட்டுமல்ல, முகலாய சக்ரவர்த்திகளில் மிக புகழ்பெற்ற அக்பர் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றவில்லை. அவர் "தீன் இலாஹி" என்ற பெயரில் ஒரு மதத்தை தோற்றுவித்தவர். அவரை ஒரு முஸ்லீம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் நன்றி..!
சிவா.ஜி:
நன்றி ஜாஃபர்.நான் சொல்லவந்ததும் இதைத்தான்.எல்லா முகலாய மன்னர்களும் மதம் பரப்ப வாள் எடுக்கவில்லை. மாறாக மற்ற மதத்தினரையும் மதித்து அவர்களுக்கான சலுகைகளையும் செய்து கொடுத்தனர்.இன்றளவும் மிக அற்புதமாக திகழும் இந்தொ-மொகல் கட்டிடக்கலையை அறிமுகப்படுத்தினர். அப்படி சமநோக்கு உடையவர்கள் அதிகம் இருந்ததால்தான் எல்லோரையும் மாற்றவில்லை.அந்தக்காலத்து மக்களுக்கு பகுத்தறிவே இல்லை என்று சொல்லவில்லை. மதசம்பிரதாயங்களில் தங்கள் பகுத்தறிவைக்காட்ட விரும்பவில்லை அவர்கள்.விரும்பி ஏற்றுக்கொண்டடவர்கள் ஒருகோடி பேர்கள் இருக்கலாம்.நாம் அவர்களைப்பற்றி பேசவில்லை, வாள்முனை மாற்றத்தைப்பற்றித்தான் நாம் பேசுகிறோம். ஆரோகியமான இந்த விவாதம் மிக்க மகிழ்ச்சி தருகிறது. உங்கள் எழுத்தை மிக மிக நேசிப்பவன் நான். தொடர்ந்து எழுதுங்கள்.தெரிந்துகொள்ளவேண்டியது இன்னும் பலப்பல இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக