தில்லாலங்கடி திட்டம்..!!
என் நண்பனை பில்கேட்ஸுக்கு மருமகனாகவும், வேர்ல்ட் பேங்க் பிரசிடெண்டாகவும் ஆக்க என்னால் முடியும்..
எப்படின்னு சொல்றேன் கேளுங்க..
முதல்ல நான் என் நண்பனை சந்திக்கிறேன்.
நானும் நண்பனும்...
நான்: மாப்ள.. உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கேன்.. அதை கட்டிக்கிறியா..?!!
நண்பன்: இல்ல..இல்ல.. முடியாது.. ஏன்னா நான் வேற ஒரு பொண்ணை நெட்ல கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன்..!!
நான்: ஆனா நான் பார்த்திருக்கும் பொண்ணு பில்கேட்ஸ் மகள்..ராசா..!!
நண்பன்: அப்படின்னா டபுள் ஓகே..!!
அடுத்து என்னோட டார்கெட் பில்கேட்ஸ்...
நானும் பில்கேட்ஸும்..
நான்: சார்..உங்க பொண்ணுக்கு ஒரு சூப்பர் பையனை மாப்பிள்ளையா பார்த்திருக்கேன்...! அவன் என் ஃப்ரெண்ட்..!!
பில்கேட்ஸ்: உன் ஃப்ரெண்டுக்கெல்லாம் நான் பொண்ணு தர மாட்டேன்..!!
நான்: ஆனா அந்த பையன் வேர்ல்ட் பேங்க் பிரசிடெண்டா இருக்கான் மிஸ்டர் பில்கேட்ஸ்..!!
பில்கேட்ஸ்: அப்படின்னா டபுள் ஓகே..!!
கடைசியா நான் சந்திக்கிறது அமெரிக்க அதிபர் ஒபாமா..!!
நானும் ஒபாமாவும்..
நான்: வேர்ல்ட் பேங்க்-க்கு ஒரு அருமையான பிரசிடெண்டை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்.. என்ன சொல்றீங்க..!!
ஒபாமா: ஏற்கனவே ஏகப்பட்ட பேர் ரெகமண்டேஷன் லிஸ்ட்ல இருக்காங்க..அதெல்லாம் வேணாம்...!!
நான்: ஆனா நான் செலக்ட் பண்ணி வச்சிருக்கிற ஆள் பில்கேட்ஸ் மருமகன் சார்..!!
ஒபாமா: அப்படின்னா டபுள் ஓகே..!!
இப்ப என் நண்பன் பில்கேட்ஸ் மருமகன் + வேர்ல்ட் பேங்க் பிரசிடெண்ட்.!!
இதிலேர்ந்து என்ன தெரியுது..?!! ஒரு தில்லாலங்கடியை பெரிய ஆளாக்க எதுவும் தேவை இல்ல.. ஒரு டுபாக்கூர் ஃப்ரெண்ட் போதும்..!!
நன்றி: இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக