நேரம்:

என் சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 டிசம்பர், 2011

”ஒஸ்தி”யான பாட்டு..! (கொலவெறி Ver.02)


என் தோழிக்கு சினிமா பாட்டு அதிகம் பிடிக்காது...!! ரொம்பவே செலக்டிவா, மெலடியா கேட்கிற இரசனை உள்ளவர். குத்துப்பாட்டு, சிம்பு போன்றவர்களின் பாட்டுன்னா வேப்பங்காய் கசப்பு..!! நேத்து திடீர்னு ச்சேட்ல வந்து “ஒஸ்தி பட பாட்டு கேட்டீங்களா..?”னு கேள்வி..எனக்கு என்னையே நம்ப முடியல...காரணம் ஒஸ்தி சிம்பு படம்..!

இல்லையே ஏன்னு கேட்டேன். இன்னும் கேட்கலையா..? அதெல்லாம் கேட்காம என்ன தான் இண்டர்நெட்ல பொழுதை கழிக்கிறீங்களோன்னு மிரட்டல் கேள்வி. ”அந்த பாட்டை முதல்ல கேளுங்க.. அதைக் கேட்டா நீங்க பாடுறது போலவே ஃபீல்”னு பில்டப் வேற..!! இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை..? அப்படி என்னதான் சிம்பு பாட்டில் இருக்குனு எனக்கு ஒரே கேள்வி.( அத்தோட விடாம “எவ்ளோ அழகான, அர்த்தமுள்ள வரிகள்...அந்த பாட்டை கேட்கவே சந்தோஷமா இருக்கு”ன்னு ஒரே புலம்பல். முதலில் ”அதை கேட்டுட்டு அப்புறம் வந்து பேசுங்க”ன்னு சொல்லிட்டு .ஃபோன் கட்..!! சரி அப்படி என்ன தான் அந்த பாட்டுல இருக்கு, அதுவும் சிம்பு படப்பாட்டுலனு இண்டர்நெட்ல தேடி எடுத்து கேட்டா.... அடப்பாவிகளா.....இதுக்கு பேர் தான் கொல வெறியா..? பெண்கள் எப்பவும் பெண்களா தான் இருக்காங்கப்பா.!!


கீழே இருக்கிறது தான் அந்த “ஒஸ்தி”யான பாட்டு..!!

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி


ஒஸ்தியில் லவ் யூ டில் யூ ஆர் ஏ பாட்டி...
தேவையில்லை வாப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..

உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேக படுற மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை டெய்லி நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி....



அந்த பாடலை கேட்க...




 பின் குறிப்பு:
எனக்கும் அவங்க போலவே ஒரு நல்ல, புகழ் பெற்ற பாட்டை அறிமுகப்படுத்த தான் ஆசை.. ஆனா அந்த பாட்டு ஆரம்பிப்பதே ”ஒய் திஸ் கொல வெறி  கொலவெறிடி..!”னு தான்... அதான் யோசிக்கிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்..!!

வியாழன், 25 மார்ச், 2010

பெரியார்தாசன் இறைநேசன் ஆன கதை..!! (01)


அங்கே நாத்திகம் தொடர்பான பிரமாண்ட கடவுள் மறுப்பு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தந்தை பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார் என்பதால் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த பெரியாரின் சிறப்புரை முடிந்து வேறொருவர் நன்றியுரை நிகழ்த்த வேண்டும். நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் பேச்சை கேட்ட மக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்து வரப்போகும் நன்றியுரையை கேட்க பொறுமை இல்லாமல் கலைகிறார்கள். அந்த நேரத்தில் இவற்றை எல்லாம் மேடையின் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த இளைஞன் திடீரென்று மேடையின் மேல் ஏறி மைக்கை கைப்பற்றுகிறான். ”கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை” என்று இத்தனை நேரமும் திராவிட தோழர்கள் முழங்கிய அதே மேடையில் அந்த இளைஞன் முழங்கியது என்ன தெரியுமா..? “சாமியேஏஏஏஏய்.... சரணம் ஐயப்பா..!!! சபரி மலை சாஸ்தாவே.. சரணம் ஐயப்பா..!!” என்பது தான்..!! 

“பகுத்தறிவு பகலவன்” என்று புகழப்படும் பெரியாரின் மேடையில் இப்படி ஒரு நாத்திக முழக்கத்தை கேட்டதும் கலைந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் கல் சிலை போல் அப்படி நிற்கிறார்கள். குரல் வந்த மேடையின் திசை நோக்கி அதிர்ச்சியும், ஆர்வமுமாய் திரும்பி பார்க்கிறார்கள். இப்பொழுது மைக்கை கையில் பிடித்திருந்த இளைஞன் தன் பேச்சை “.....என்றெல்லாம் முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எதிராய் நாத்திக கொள்கையை நிலை நாட்ட வந்திருக்கும் திராவிடர் கழக சிங்கங்களே..!!!” என்று முடிக்கிறான். கூட்டம் இளைஞனின் புத்திசாலித்தனத்தில் புல்லரித்துப்போய் அப்படியே அமர்ந்து அவன் பேச்சை கேட்க தயாராகிறார்கள். அதன் பிறகு அந்த இளைஞன் 45 நிமிடங்கள் அதே மேடையில் பேசுகிறான். நன்றியுரையை அவன் 45 நிமிடங்கள் நிகழ்த்தியதும், அதனை அத்தனை ஆர்வமுடன் குழுமியிருந்த மக்கள் கேட்டு ரசித்ததும் தமிழக பொதுக்கூட்ட வரலாற்றில் அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.!! 


அந்த இளைஞன் சாஸ்திர சம்பிரதாயங்கள் மிகுந்த ஒரு குலத்தில் பிறந்தவன். ஆனால் அவன் சிந்தனைகளோ அவன் குலத்திற்கு எதிரான நாத்திகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் அவனிருக்கும் ஊருக்கு அருகில் இருக்கும் ஊருக்கு பெரியாரின் பிரமாண்ட கடவுள் மறுப்பு தொடர்பான  பொதுக்கூட்டம் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. இவனின் நாத்திக சிந்தனைகளை அறிந்த திராவிடர் கழக தோழர் ஒருவர் பெரியாரின் வருகை குறித்து அவனிடம் சொல்லி, அதில் பேசுகிறாயா என்று கேட்கிறார். ஏற்கனவே பெரியாரின் கருத்துக்களில் அளவற்ற பற்று கொண்டிருந்த அவனும் அதை பெரும் பேறாக நினைத்து ஆவலுடன் அதற்கு சம்மதிக்கிறான். அடுத்து வந்த இரவுகளில் எல்லாம் தூங்காமல் அந்த  மேடையில் பேசுவதற்கு உரை தயாரிக்கிறான். பொதுக்கூட்ட நாளன்று மேடையில் பேசப்போவதை தன் தந்தையிடம் தெரிவிக்கிறான்.  நாத்திக மேடையில் பேசப்போகும் அந்த இளைஞனுக்கு அவன் தந்தை சொன்னது என்ன தெரியுமா..? “நல்லா சாமியை கும்பிட்டு விட்டு போய் மேடையில் ஏறி பேசு..!!” 

ஆனால் பாவம்.. அத்தனை கஷ்டப்பட்டு உரை தயார் செய்து கொண்டு போன அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே போனார்கள். கடைசியாக நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பெரியாரும் பேசி முடித்து விட்டார். அவனுக்கு தெரிந்து விட்டது, சிறப்பு பேச்சாளர் பேசி முடித்து விட்டார் என்றால் நன்றியுரையோடு பொதுக்கூட்டமே முடிந்து போகும் என்று..! ஆனால் அவன் நினைத்தது ஒன்று.. கடவுள் நினைத்தது ஒன்று..!! அப்படியென்றால் அன்று என்ன தான் நடந்தது..? அன்று நடந்ததை தான் முதல் பாராவில் படித்தீர்கள்..!!


இரசனைக்குரிய மேற்கண்ட நிகழ்ச்சியில் வரும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சமீபத்தில் இஸ்லாத்தை தழுவி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார்தாசன் என்கிற அப்துல்லா தான்.!! ஒரு சிறு திருப்பம் நம்மில் பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படி தான் கல்லில் கடவுளை கண்டு, அதை கண்ணெதிரே வைத்து வைத்து வழிபடும் குலத்தில் பிறந்த இவர், அந்த கல்லால் ஆன சிலைகளை உடைக்கும் கழக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் ஆனார். அதே பெரியார்தாசன் என்கிற நாத்திகவாதி கண்ணுக்கு தெரியாத நிலையிலும் கடவுளை வணங்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு வந்திருக்கிறார். யார் இந்த பெரியார்தாசன்..? கருத்தம்மா திரைப்படம் வரும் வரை இந்த பெரியார்தாசன் யாரென்று எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்தில் இவர் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொலைகார தந்தையின் வேடத்தில் நடித்திருந்தார். இவரின் பாமர தோற்றம், எளிய பேச்சு பெரும் ஆர்வத்தை அவர் மேல் எனக்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் பெயரின் முன் ஒட்டியிருந்த பேராசிரியர் பட்டமும், பெரியார்தாசன் என்ற அடை மொழியும் அவரை பற்றி அறியும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது. 

பிறகு தெரிந்தது...அந்த பாமர தோற்றத்திற்குள் ஒரு பழுத்த பகுத்தறிவாளர் நிறைந்திருந்தார். சிறந்த சிந்தனாவாதி ஒளிந்திருந்தார். மனோவியலை கரைத்துக்குடித்த மனோதத்துவ நிபுணர் மறைந்திருந்தார். பட்டங்கள் பல பெற்ற படிப்பாளி மறைந்திருந்தார். பெரியாருடனான நேரடி தொடர்பு வைத்திருந்தவர் போன்ற அவரைப்பற்றிய தகவல்கள் எனக்கு பெரும் ஆச்சரியத்தை விதைத்தாலும், இத்தனை பெருமைகளுக்கு பிறகும் தளும்பா நிறை குடமாக அவர் காட்சியளித்தது அவரை என் மனதில் பெரிதும் உயர்த்தி கொண்டு சென்று வைத்தது. இந்துவாக பிறந்த இந்த சேஷாசலம், பிறகு நாத்திக கொள்கையில் ஈடுபட்டு பெரியார்தாசன் என்ற அவதாரம் எடுத்தார். பின் ”அன்பே கடவுள்” என உபதேசிக்கும் புத்தமதக்கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்து சித்தார்த்தன் ஆனார். பிறகு ஓரிறைக் கொள்கையை கொண்ட இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்துல்லாவாக ஆகியிருக்கிறார். அப்படி என்றால்... அடுத்து...?????????


(தொடரும்...!!)

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர்..!! - 03






காதல் வயப்பட்டிருப்பதை எப்படி உணர்ந்து கொள்வது..? எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். நேரா நேரத்திற்கு பசிக்காது, அப்படியே பசித்தாலும் சாப்பிட அமர்ந்தால் சாப்பிடவே பிடிக்காது, கண்ணாடியின் முன் அதிக நேரம் செலவழிப்பீர்கள், இரவு நேரம் மிக நீளமாக தெரியும் (தூங்கினால் தானே..!), நாம் தான் பெரிய ஆள் போலவும், நம்மைத் தான் எல்லோரும் கவனிக்கிறார்கள் என்பது போலவும் உணர்வீர்கள், எதையாவது எழுத கை துறுதுறுக்கும் (உங்களுக்கு கையெழுத்தே போடத் தெரியாவிட்டாலும் கூட..!), பல் விலக்காமல் குளிப்பீர்கள், சாப்பிட்டு விட்டு பல் விளக்குவீர்கள், குடும்பத்தினரிடம் திருட்டுத்தனமாக நடந்து கொள்வீர்கள், தனி அறைக்குள் சென்று அவசியமே இல்லாமல் கதவை தாழிட்டு, விளக்கை அணைத்து, படுக்கையில் விழுந்து, கொட்ட, கொட்ட விழித்துக் கிடப்பீர்கள், உங்கள் “ஆளை”ப் பார்த்தால், பேச்சைக் கேட்டால் முகத்தில் 100 வாட்ஸ் பல்பின் பிரகாசம் வரும் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்..! காதல் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தக் காதலால் நிறைய சாம்ராஜ்யங்கள் சரிந்த கதையெல்லாம் உண்டு. பெற்ற தாய், தகப்பன் எதையாவது சொன்னால் சுலபமாக மறுக்கப்படும், ஆனால் அதே விஷயம் “மேலிடத்திலிருந்து” ஒரு வரியில் எழுதி வந்தாலோ, அல்லது நேருக்கு நேர் கண்ணுக்குள் பார்த்து “செய்யாதே” என்று ஒரு வார்த்தை சொன்னாலோ போதும். அதற்கு அப்பீலே கிடையாது. அப்படியே பெட்டிப் பாம்பாய் அடங்கி போவான். அதற்கு பெயர் பயமல்ல..! அது அவன் கொடுக்கும் “ஃபாசில் இயக்கி, விஜய்-ஷாலினி நடித்த வெற்றிப்படத்தி‎ன் தலைப்பு ..!!”.

என்னைப் பொறுத்தவரை (நன்றாக கவனியுங்கள்..! என்னைப் பொறுத்தவரை..!) காதலித்து திருமணம் செய்யும் வாழ்க்கையில் உள்ள சந்தோஷம், இருவருக்கிடையேயான புரிதல் பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணத்தில் இல்லையோ என்று எண்ணுவதுண்டு. ஆனால், அதே நேரம் காதல் திருமணம் செய்து விவாகரத்து செய்து பிரிந்தவர்களும் உண்டு, பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்தால் இன்றும் காதலித்து வாழ்பவர்களும் உண்டு. காதல் எந்த வகை திருமணத்தில் என்பது இல்லை, இருவருடைய புரிதலில் தான் இருக்கிறது..!. பொதுவாக மனிதர்களுக்கு குணம் உண்டு. ஒரு பொருள் கிடைக்காத வரை அதைப் பெற போராடுவார்கள். அதைப் பெற்றதும் அதன் மேல் உள்ள முக்கியத்துவம் போகும். அடுத்த பொருளின் மீது நாட்டம் போகும் (இந்த விஷயத்தில் பெண்கள் எவ்வளவோ தேவலை..!). இந்த தத்துவத்தில் தான் சில காதல் திருமணங்கள் தோல்வியுறுகின்றன. பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டு, உடல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் வரும் வினை இது.

இவ்வுலகில் எதுவும் நிலை இல்லை. உடல் உணர்விற்கு அடிப்படையாக இருக்கும் உடலழகும் கூட நிலையில்லை. ஆனால், காதல் நிலையானது. காதல் எத்தனையோ வகையான மனிதர்களைக் கண்டிருக்கிறது. அதை நாம் மறந்து விடக்கூடாது. காலத்திற்கு எதையும் மறக்கடிக்கும் குணம் உண்டு என்பார்கள், ஆனால் ஒன்றைத் தவிர..! அது தான் காதல்..! வெட்ட, வெட்ட வளரும், முன்பை விட வேகமாக வளரும் மரம் போல் பிரிந்திருக்கும் காலம் அதிகரிக்க, அதிகரிக்க காதலின் வீரியமும் கூடும். இது காதலின் தனிச் சிறப்பு. காதலை எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் கைவிடாதீர்கள். காதலில் விழுந்தவர்களுக்கெ‎ன்று ஒரு சில சிறப்பு குணங்கள் உண்டு. ஒரு மலர் மொட்டவிழ்த்து மலரும் ஓசையை அவர்களால் கேட்க முடியும், தனிமையில் ‏இருக்கும் ஒரு மரத்தி‎ன் வேதனையை உணர முடியும், பறந்து திரியும் சுதந்திர பறவைகளி‎ன் பாஷை புரியும். ஒரிஸாவி‎ல் வெள்ளம், குஜராத்தில் கலவரம், கல்கத்தாவில் விபத்து, மும்பையில் குண்டுவெடிப்பு, ஆந்திராவில் மழை, காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல், தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பிரச்சினை என்று எது நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அது வருடாவருடம் நிகழ்வது தா‎ன். நீங்கள் உங்கள் காதலில் உறுதியாய், உண்மையாய் இருங்கள். உங்கள் காதலை நீ‎ங்கள் முழுதும் நம்புங்கள். நம்பிக்கை தான் காதலின் அடிப்படை. அந்த நம்பிக்கை தா‎ன் உங்கள் காதலுக்கு எதிராக எத்தனை எதிர்ப்புகள் வந்து எரிக்கப்பட்டாலும், அந்த சாம்பலிலிருந்து ·பீனிக்ஸ் பறவையாய் இ‎ன்னும் வீரியத்துடன் உயிர்த்தெழும்..!

திருமணம் ஆனவர்கள் உங்கள் துணையைக் காதலியுங்கள். திருமணமாகாதவர்கள் அத்தை மகளாக, மாமன் மகளாக இருந்தாலும் கூட காதலித்து திருமணம் செய்யுங்கள். காதலுக்கு உறவு எதிரி அல்ல..! மனிதனை அமைதியாக, நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வைப்பதில் காதலுக்கு என்றும் முதலிடம். நான் உன்னை காதலிக்கிறேன் (தமிழ்), ஐ லவ் யூ (இங்கிலீஷ்), நின்னே ஞான் பிரேமிக்குன்னு (மலையாளம்), மை தும்சே ப்யார் கர்த்தாஹும் (ஹிந்தி), அனா ஒஹிபுக் (அராபிக்), நானு நின்னனு ப்ரீத்திசுத்தேனு (கன்னடம்). இதெல்லாம் காதலை வெளிப்படுத்த சில மொழிகளில் உள்ள வாக்கியங்கள்.
இவ்வளவு தானான்னு கேட்பவர்களுக்கு உலக மொழிகளில் காதலை எப்படி சொல்வது என கீழே கொடுத்திருக்கிறேன். காதலுக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, கலாச்சாரம், தோற்றம் எதுவும் தடையில்லை. காதலிக்க இதயம் மட்டும் வேண்டும். எனவே காதலியுங்கள்..! என்றும் இளமையாக இருப்பீர்கள். காதலியுங்கள்..! என்றும் அழகாக இருப்பீர்கள். காதலியுங்கள் என்றும் சந்தோஷமாக இருப்பீர்கள். காதலியுங்கள்..! என்றும் நிம்மதியாக இருப்பீர்கள். காதலியுங்கள்..! என்றும் வாழ்க்கை சுவைக்கும். காதலியுங்கள்..! வானம் உங்கள் வசப்படும். ஆதலினால் காதல் செய்வீர்..!


காதல் சொல்ல வாருங்கள்:

Afrikaans - Ek het jou lief
Albanian - Te dua
Arabic - Ana behibak (to male)
Arabic - Ana behibek (to female)
Armenian - Yes kez sirumen
Bambara - M'bi fe
Bangla - Aamee tuma ke bhalo baashi
Belarusian - Ya tabe kahayu
Bisaya - Nahigugma ako kanimo
Bulgarian - Obicham te
Cambodian - Bung Srorlagn Oun (to female)
Oun Srorlagn Bung (to male)
Cantonese/Chinese  Ngo oiy ney a
Catalan - T'estimo
Cheyenne - Ne mohotatse
Chichewa - Ndimakukonda
Corsican - Ti tengu caru (to male)
Creol - Mi aime jou
Croatian - Volim te
Czech - Miluji te
Danish - Jeg Elsker Dig
Dutch - Ik hou van jou
English - I love you
Esperanto - Mi amas vin
Estonian - Ma armastan sind
Ethiopian - Ewedishalehu : male/female to female
Ewedihalehu: male/female to male.
Faroese - Eg elski teg
Farsi - Doset daram
Filipino - Mahal kita
Finnish - Mina rakastan sinua
French - Je t'aime, Je t'adore
Gaelic - Ta gra agam ort
Georgian - Mikvarhar
German - Ich liebe dich
Greek - S'agapo
Gujarati - Hu tumney prem karu chu
Hiligaynon - Palangga ko ikaw
Hawaiian - Aloha wau ia oi
Hebrew - Ani ohev otah (to female)
Hebrew - Ani ohev et otha (to male)
Hiligaynon - Guina higugma ko ikaw
Hindi - Hum Tumhe Pyar Karte hai
Hmong - Kuv hlub koj
Hopi - Nu' umi unangwa'ta
Hungarian - Szeretlek
Icelandic - Ég elska þig
Ilonggo - Palangga ko ikaw
Indonesian - Saya cinta padamu
Inuit - Negligevapse
Irish - Taim i' ngra leat
Italian - Ti amo
Japanese - Aishiteru
Kannada - Naa ninna preetisuve
Kapampangan - Kaluguran daka
Kiswahili - Nakupenda
Konkani - Tu magel moga cho
Korean - Sarang Heyo
Latin - Te amo
Latvian - Es tevi miilu
Lebanese - Bahibak
Lithuanian - Tave myliu
Macedonian Te Sakam
Malay - Saya cintakan mu / Aku cinta padamu
Malayalam - Njan Ninne Premikunnu
Maltese - Inhobbok
Mandarin Chinese - Wo ai ni
Marathi - Me tula prem karto
Mohawk - Kanbhik
Moroccan - Ana moajaba bik
Nahuatl - Ni mits neki
Navaho - Ayor anosh'ni
Nepali - Ma Timilai Maya Garchhu
Norwegian - Jeg Elsker Deg
Pandacan - Syota na kita!!
Pangasinan - Inaru Taka
Papiamento - Mi ta stimabo
Persian - Doo-set daaram
Pig Latin - Iay ovlay ouyay
Polish - Kocham Cie
Portuguese - Amo-te
Romanian - Te ubesc
Roman Numerals - 333
Russian - Ya tebya liubliu
Rwanda - Ndagukunda
Scot Gaelic - Tha gra\dh agam ort
Serbian - Volim te
Setswana - Ke a go rata
Sign Language - ,\,,/ (represents position of fingers when signing 'I Love You'
Sindhi - Maa tokhe pyar kendo ahyan
Sioux - Techihhila
Slovak - Lu`bim ta
Slovenian - Ljubim te
Spanish - Te quiero / Te amo
Surinam- Mi lobi joe
Swahili - Ninapenda wewe
Swedish - Jag alskar dig
Swiss-German - Ig liebe di
Tajik Man turo Dust Doram
Tagalog - Mahal kita
Taiwanese - Wa ga ei li
Tahitian - Ua Here Vau Ia Oe
Tamil - Naan unnai kathalikiraen
Telugu - Nenu ninnu premistunnanu
Thai - Chan rak khun (to male)
Thai - Phom rak khun (to female)
Turkish - Seni Seviyorum
Ukrainian - Ya tebe kahayu
Urdu - mai aap say pyaar karta hoo
Vietnamese - Anh ye^u em (to female)
Vietnamese - Em ye^u anh (to male)
Welsh - 'Rwy'n dy garu
Yiddish - Ikh hob dikh
Yoruba - Mo ni fe
Zimbabwe - Ndinokuda



முற்றும்..!!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர்..!! - 02



சிலரைப் பார்த்திருக்கிறீர்களா..! பையன் பத்தாவது படித்துக் கொண்டிருப்பான், அதே வகுப்பில் அந்தப் பெண்ணும். இருவரும் காதலிப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அதற்கென்றே தமிழ் சினிமாவில் வரையறுக்கப்பட்ட நிறைய சேட்டைகளையும் செய்வார்கள். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் தனிமையில் இருக்கும் போது அவ‎ன் வயதுக் கோளாறில் சேட்டை ஏதோ செய்ய, அதை யாராவது பார்த்து, அது வீட்டுக்கு தெரிந்து பெண்ணுக்கு படிப்பு கட்டாகும், ஆணுக்கு முதுகுத் தோல் உரியும். அதன் பிறகு அவன் அந்தப் பெண் பக்கமே திரும்ப மாட்டான், அந்தப் பெண்ணும் அப்படியே..! இதே இன்னும் கொஞ்ச அட்வான்ஸாக போய் ஊர்க் கலவரம் வரை போவதும் உண்டு. இப்போது இந்த இருவருக்குமிடையே இருந்த உறவு என்ன..? அது தான் காதலா..? நிச்சயமாக இல்லை. அது ஆண், பெண் பாலின ஹார்மோன்களின் சாகசம். எதிர்பாலினரிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (infatuation)..! ஒரு குறிப்பிட்ட வயதில் இந்த மாயையிலிருந்து நாம் யாரும் தப்ப முடியாது. அவருக்கு வயது 40, அந்த ஊரில் இருக்கும் தன் கணவனை இழந்த பெண் மேல் இவருக்கு ஒரு ஈர்ப்பு, அவளுக்கும் அப்படியே..! ஊருக்கு பயந்து, யாருக்கும் தெரியாமல் நடு இரவில் அந்தப் பெண்ணை போய் சந்தித்து வருவார். ஒரு நாள் அப்படி போகும் போது யாராவது பார்த்து விட்டால் போச்சு..! அதற்கப்புறம் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூட அவர் படுக்க மாட்டார். அதற்கு பெயரென்ன..? அதுவும் இனக்கவர்ச்சிதான் என்றாலும் நம்மூரில் அதற்கு செல்லமாக வேறு பேர் வைத்துக் கூப்பிடுவார்கள் (இந்த விஷயத்தால் தான் குடும்பத்தில் நிறைய கொலைகள் விழுவதாக தினந்தந்தி நிருபர்கள் கூறுகிறார்கள். அதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்..!).

இதிலிருந்து காதலுக்கு எப்படி கண் இல்லையோ, அது போலதான் வயதும் இல்லை. காதலிப்பவர் மற்றும் காதலிக்கப்படுபவர் எந்த வயதிலும் இருக்கலாம் னால், அது தான் முதல் காதல் உணர்வாக இருக்க வேண்டும். இதென்ன கலாட்டா என்கிறீர்களா..? அய்யா..! நான் யார் சொன்னதையாவது மொழிபெயர்த்து உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கவில்லை. காதலைப் பற்றின என்னுடைய பார்வையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்..! உடனே நீங்கள் கேட்பீர்கள்..? நீ வாழ்க்கையில் ஒரு முறைதான் காதலித்திருக்கிறாயா என்று ..? யார் சொன்னது அப்படி..! நிறைய..! அதாவது காதலிப்பதாக நினைத்திருக்கிறேன், என்னையுமறியாமலேயே..! அந்த வகையில் பார்க்கப் போனால் என்னுடைய முதல் (!) காதல் நான் எட்டாவது படிக்கும் போது ஏற்பட்டது..! (சிரித்தால் அப்புறம் நா‎ன் சொல்ல மாட்டேன்..!!). அதற்கு காதல் என்று நானாக அர்த்தம் செய்து கொண்டேன் (அந்த அமர காதல் (!) அந்தப் பெண்‎ணிடம் நா‎ன் கேட்ட ஹீரோ பேனாவை கொடுக்காததால் முறிந்து போனது சோகமான கதை..!!!). ஆனால் இப்போது மூளைக்கு உரைக்கிறது அது காதல் அல்ல என்று..! சரி..! காதல் எந்த வயதில் வரும் என்று எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். அதற்கு நேரமில்லை, காலமில்லை. ஆனால் நிச்சயம் வரும். அந்த நேரத்தை சரியாக தன் பகுத்தறிவை கொண்டு கண்டறிந்து, அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்தக் காதலில் உறுதியாக இருந்து, எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்து, திருமணம் செய்து, அந்த காதலை திருமணத்திற்கு பிறகும் இம்மி கூட குறையாமல் தொடருங்கள். அப்போது தெரியும் வாழ்க்கை எவ்வளவு சுவையானது, சுகமானது என்று..!

நான் சொன்ன அந்தக் காதல் இருபாலினராலும் உணரப்பட வேண்டும். ஒருதலைக் காதல் இந்த வகையில் சேராது. ஒருதலைக்காதல், உண்மைக்காதல் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே எனக்கு சிரிப்பு தான் வருகிறது. காதல் என்பது இரு உள்ளங்களின் சங்கமம் தான். பிறகு ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் நேசம் மட்டும் எப்படி காதலாகும்..? அடுத்து அதென்ன உண்மைக் காதல்..? அப்படியென்றால் காதலில் பொய்க்காதலும் உண்டா..? காதல் என்றால் அங்கு உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. காதலைக் கெடுத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் காட்டப்படுவது தான் காதல் என்று அர்த்தப்படுத்தி அதனால் கிடைக்கும் பலனை பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் (அன்றாட செய்திகளை கவனித்தால் புரியும்). காதலுக்கான அர்த்தம் தெரிய சினிமா தா‎ன் காதலின் அகராதியாக புரட்டப்படுகிறது. இது நிழலை நிஜமாக நம்பியதால் வந்த வினை. காதல் சுகமானது, இதமானது, புனிதமானது. மே‎ன்மையானது. காதலுக்கு யாரையும் சந்தோஷப்படுத்தத் தெரியுமே தவிர, காயப்படுத்தத் தெரியாது.!!

தொடரும்....




சனி, 13 பிப்ரவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர்..!! - 01



நண்பர்களே..!
காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்றைய பதிவு காதல் ஸ்பெஷலாக மலர்கிறது. 

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா..! உங்களிடம் போய் நான் கேட்கிறேன் பாருங்கள்..! நீங்கள் தான் அந்த விஷயத்தில் ரேகாவின் தந்தையாயிற்றே (அதாங்க..! "காதல் மன்னன்" ஜெமினி கணேசன்..!!). சரி..! காதல் பற்றி உங்க கருத்து என்ன..? என்னது..? என் கருத்து என்னவா..? என்னங்க..! சின்னப் பைய‎ன்கிட்ட போய் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டு..?! சரி..! நீங்கள் வற்புறுத்தி கேட்பதால் சொல்கிறேன். காதல் என்றால்.....அதென்ன அங்கே யாரோ சத்தம் போடுகிறார்கள்..? ஹலோ..! எதுவாக இருந்தாலும் நேரடியாக என்னிடம் கேளுங்கள். தூரத்தில் இருந்து கொண்டு முனக வேண்டாம். சரி..! என்னிடம் என்ன கேட்க வேண்டும் கேளுங்கள்..?! நண்பர்களே..... இவர் என்ன கேட்டார் பார்த்தீர்களா..? காதலைப் பற்றி எனக்கு என்ன தெரியும்..? என்று கேட்கிறார். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரே பெண்ணையே நினைவு தெரிந்தது முதல் நேசித்து, அந்த நேசம் காதலாக மலர்ந்து, ஏகப்பட்ட போராட்டங்களுக்கிடையில் அந்தப் பெண்ணையே மணந்தவன் நான். அதனால் காதல் எனக்கும் கொஞ்சம் தெரியும், அதைப் பற்றி பேசவும் எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிகைகளோடோ அல்லது நடிகர்களோடோ உருண்டு, புரண்டு காதல் செய்வதாக நடிக்கும் நடிகர், நடிகையரிடம் பத்திரிக்கையாளர்கள் “காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன..?” என்று கேட்கும் போது, அதற்கு அவர்கள் அமெரிக்கையாக காதலைப் பற்றி வியாக்கியானம் பேசலாம். ஆனால் காதலித்தவன் (உண்மையாக..!), காதலித்த பெண்ணையே கரம் பிடித்தவன், அந்த பெண்ணையே இன்னும் காதலித்துக் கொண்டிருப்பவனான நான் பேசக் கூடாதா..? இதென்ன அநியாயமாக இருக்கிறது..??!! எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா..!!

காதலுக்கு நம்மவர்கள் கற்பித்து வைத்திருக்கும் அர்த்தம் அபத்தமானது. சிலருக்கு காதல் என்றால் பொழுது போக்கு, சிலருக்கு தகுதி, சிலருக்கு கௌரவம், சிலருக்கு அவமானம், சிலருக்கு அசிங்கம், சிலருக்கு வேதனை, சிலருக்கு கெட்ட வார்த்தை, வெகு சிலருக்கு மட்டும் அது உயிர்..! இந்த வெகு சிலரால் தான் காதல் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில் காதல் என்றால் என்ன..? காதலிக்க பொருத்தமான வயது என்ன..? சொல்லுங்கள்..! சரி..! என் கருத்தை சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஆண், பெண் இரு பாலினருக்கிடையே ஏற்படும் ஒரு இனிமையான, அற்புதமான உணர்வின் (உணர்ச்சியல்ல..!) பரிமாறல்..!! அந்த உணர்வு பரிமாறல் அவர்களுக்கிடையே ஏற்படும் நேசம், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றால் உறுதியடைந்து இறுகும் நிலை. இந்த நிலையில் இருவருக்குமிடையே இருக்கும் அன்பில் பொய் இருக்காது, போலித் தனம் இருக்காது, சுய நலம் இருக்காது. சரி..! அது எந்த வயதில் வரும்..? அது ஒரு மர்மமான விஷயம்..!

அதை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..! நீங்கள் எத்தனை முறை காதலித்திருக்கிறீர்கள்..! அதற்கு மூன்று வகையான பதில்கள் மட்டும் உங்களிடம் இருக்கும். A.ஒன்றுக்கு மேற்பட்ட முறை. B.எதுவும் இல்லை. C. ஒரே ஒரு முறை தான், ஆனால் அது இன்னும் தொடர்கிறது..! இதில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை என்று சொன்ன A பிரிவினருக்கு இரண்டு வகையான பதில்கள். 1. நீங்கள் காதலின் அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 2. காதலின் பெயரால் பெண்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் (உங்களை எப்போது வேண்டுமானாலும் போலீஸ் பிடிக்கலாம்..!). அடுத்து இரண்டாம் வகையான B பிரிவினருக்கு இரண்டு வகையான பதில்கள்..! 1. நீங்கள் இன்னும் பால் குடி மறக்க வில்லை. 2. உங்கள் வாழ்க்கையை வாழத் தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மூன்றாம் வகையான C வகை மனிதர்கள். ம்ம்..! உட்காருங்கள்..! நீங்கள் தான் எனக்கு வேண்டும் ராஜா..!! மற்ற A-யும், B-யும் சத்தம் போடாமல் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள். இல்லாவிட்டால் போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்..! இந்த C பிரிவில் காதலித்துக் கொண்டிருப்பவர்களில் கல்யாணம் ஆகாதவர்கள் மட்டுமல்ல, ஆனவர்களும் கூட இடம் பெறவேண்டும். மேலே உள்ள எ‎ன் கேள்வியை இன்னும் ஒரு முறை  நன்றாக பார்க்கவும். அங்கு கல்யாணம் ஆன, ஆகாத என்ற எந்த நிபந்தனையும் நா‎ன் குறிப்பிட வில்லை. சரி..! இனி நாம் விட்ட இடத்திற்கே வருவோம். காதல் எந்த வயதில் வரவேண்டும், வரும் என்று எந்த வரம்பும் கிடையாது. ஆனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவறாமல் வரும் வைரஸ் தான் காதல்.!!

தொடரும்....

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பலி Vs பசி - 02



மனிதனைப் பொறுத்தவரை, அடுத்தவர்களை பாதிக்காத எந்த ஒரு விஷயத்தையும் செய்ய அவனுக்கு உரிமை உண்டு. உணவிலும் அப்படியே..! அவனுக்கு சைவம் பிடித்தால் சைவ உணவு உண்ணட்டும், அசைவ உணவு பிடித்தால் அசைவ உணவு உண்ணட்டுமே..! அதை வேண்டாம் எ‎ன்று சொல்ல நாம் யார்..? (இந்த நேரத்தில் சைவ உணவை மட்டும் உண்ணும் கணவ‎ன், தன் மனைவி அசைவம் விரும்பி உண்டால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள். அந்த கணவ‎ன்மார்களுக்கு எ‎ன் ஹேட்ஸ் ஆஃப்..!) அதனால் நமக்கு எ‎ன்ன நஷ்டம்..? நாம் மாடு, யானை, குதிரை போன்ற விலங்குகளை வேலைகளுக்கு பய‎ன்படுத்துகிறோம். கோழி, ஆடு போ‎ன்றவற்றால் உணவை தவிர, மனிதனுக்கு வேறு பய‎ன் என்ன..? அதைக் கூட வேண்டாம் எ‎ன்று சொ‎ன்னால் என்ன சொல்வது..? கடவுளால் அவை படைக்கப்பட்டத‎ன் நோக்கம் மனிதனுக்கு உணவாகத்தா‎ன்.

தனக்கு அசைவம் பிடிக்காது எ‎ன்பதற்காக ஊரில் உள்ள முனியாண்டி விலாஸ்களையும், செட்டி நாடு ஹோட்டல்களையும், டெல்லி தர்பார்களையும் (பட்டியல் நீண்டு கொண்டே போகும், இத்தோடு நிறுத்தி விடுகிறே‎ன்) மூடி விட வேண்டும் எ‎ன்று ஒருவ‎ன் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அது போல் தா‎ன் அசைவம் சாப்பிடக்கூடாது என்று அடுத்தவர்களை கட்டாயப்படுத்துவதும். இவ்வளவு அசைவத்திற்கு ஆரத்தி எடுத்து பேசும் நா‎ன் ஒரு சைவப் பிரியன் என்பது உங்களுக்கு தெரியுமா..? எனக்கு மிகவும் பிடித்த உணவு வற்றல் குழம்பும், கத்திரிக்காய் பச்சடியும்..! ஆனால், நா‎ன் யாரையும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று வற்புறுத்தியது கிடையாது..! வற்புறுத்தவும் கூடாது. எ‎ன் உடன்பிறந்த சகோதரன் பறப்பதில் விமானத்தையும், கடலில் மிதப்பதில் கப்பலையும் தவிர வேறு எல்லாவற்றையும் வெளுத்துக் கட்டுவா‎ன் (அவ‎ன் சாப்பிடும் போது எதற்கும் நா‎ன் கொஞ்சம் எட்டியே நிற்பே‎ன்..!!! விட்டால் என்னையும் விழுந்து, கடித்து தி‎ன்று விடுவானோ எ‎‎ன்று பயமாக இருக்கும்..!!). ஊரில் இருக்கும் போது நான் வெளியூர் போனால் மதிய நேரம் என்னை கற்பகம் ரெஸ்ட்டாரண்டிலோ, லஷ்மி நாராயணபவனிலோ காணலாம். காரணம், எங்கள் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவே சமைக்கப்படும் என்பதால், எனக்கு பிடித்த சைவ உணவை ஹோட்டலில் “வெட்டி” விட்டுத் தான் வீட்டுக்கே போவேன்..!! (ஊரில் நிறைய சைவ ஹோட்டல்களை வாழ வைத்த பெருமை எனக்குண்டு..!).

அரசி‎ன் உத்தரவால் விலங்குகள் பலி கொடுக்கப்படுவது நி‎ன்று விடும் என்றா நினைக்கிறீர்கள்..? நிச்சயம் நடக்காது..!! அதே போல் நாட்டில் விலங்கு, பறவைகளை பலி கொடுத்து நடத்தப்படும் இறைச்சிக் கடைகளை தடை செய்ய தைரியம் உண்டா இந்த அரசுக்கு..! (அப்படி செய்தால் கசாப்பு கடைக்காரர்களி‎ன் கத்திக்கு புது வேலை வரும்..!!). நம் மாநிலத்தில் பலி கொடுக்கப்படாவிட்டால், அவை வேறு இடத்தில் பலி கொடுக்கப்பட்டு,  நாம் உண்ணாத அவற்றை வெளிமாநிலக்கார‎னோ அல்லது வெளிநாட்டுக்கார‎னோ உண்பா‎ன். இதனால் உள்நாட்டில் இறைச்சியி‎ன் விலை அநியாயத்திற்கு அதிகரிக்கும். காய்கறிகள் உண்பவர்கள் அதிகமாவதால் அதை ஈடு செய்யும் அளவுக்கு உற்பத்தி குறைவு என்பதால் காய்கறி விலையும் எகிறும். இறைச்சியை விற்பனை செய்து பிழைக்கும் பல குடும்பங்கள் நலிவடையும் (அவர்களும் தீட்டிய கத்தியை தூர வீசாமல் இ‎ன்னும் நன்றாக கூர் தீட்டிக் கொண்டு சாலைகளில் நடமாட ஆரம்பித்தால், நமக்கெல்லாம் ச‎னி உச்சம் தான்..!). இவை தா‎ன் இந்த சட்டத்தி‎னால் ஏற்படப் போகும் பல‎ன்கள்..! ஜனநாயக நாட்டில் இது போ‎ன்ற அடாவடித்தனமான அதிகார துஷ்பிரயோக சட்டங்கள் அநாவசியமானவை. அப்பாவி மக்கள் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடவேண்டும் என்று ஆசைப்படவில்லை.  அவர்களின் ஒரே கனவு வறுமையற்ற, நிம்மதியான வாழ்க்கை. அதை ஆட்சியாளர்கள் அளிப்பது என்பது அத்தனை கஷ்டமான விஷயமும் இல்லை. அவர்களின் ஏக்கத்தை நிறைவேற்ற அவர்களின் எண்ணங்களை நன்கு அறிந்த, வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்த, முக்கியமாக சமூகத்தின் மேல் அன்பு கொண்ட இதயம் வேண்டும்.

இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் பதவியை சுயலாபத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல் எதிரிகளை பழி தீர்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்கள் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தான் வலிக்கிறது. அரசியலுக்கு வந்து வாய்ப்பு கேட்கும் ஒவ்வொருவரையும் “இவராவது வந்து நமக்கு நல்லது செய்யமாட்டாரா..?” என்ற என்ற நம்பிக்கையில் தான் தேர்ந்தெடுத்து, ஆட்சிப் பொறுப்பை  கையில் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்களும் “பழைய குருடி, கதவை திறடி” கதையாக மற்றவர்கள் செய்ததையே தொடர, மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத, தகுதியில்லாதவரைக் கூட தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விடுகிறார்கள். இந்த போக்கு நாட்டிற்கு தீமையையே விளைவிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஒரு நாடு சிறக்க வேண்டுமென்றால் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தனி மனித ஒழுக்கம் சரியான முறையில் பேணப்பட வேண்டும். அதனால் உங்களை சுத்தப்படுத்துங்கள் வீடு சுத்தமாகும், உங்கள் வீட்டை சுத்தப்படுத்துங்கள் தெரு சுத்தமாகும், உங்கள் தெருவை சுத்தப்படுத்துங்கள் நாடே சுத்தப்படும்..! நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும், தவறை தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர வேண்டும், திறமைக்கு, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் குணம் வரவேண்டும்..! நம் தாய் திருநாடு ஒரு நாள் உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் என்ற நம்பிக்கையை உள்ளடக்கிய கனவோடு, அந்த  நல்ல நாளுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் ஒரு உண்மையான இந்தியக் குடிமகனாய்..!! மெய்ப்படுமா  என் கனவு..???


முற்றும்..!

செவ்வாய், 26 ஜனவரி, 2010

பலி Vs பசி - 01



நண்பர்களே..!

நான் இங்கே எழுதியிருப்பவை நாட்டுப்பற்று கொண்ட, சமூகத்தின்பால் அக்கறை கொண்ட, மானிட ஒற்றுமையில் ஆர்வம் கொண்ட, மனிதர்களை ஜாதி, மதம், இனம், மொழி கடந்து நேசிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனதில் ஏற்பட்ட எண்ணச் சிதறல்கள் மட்டுமே தவிர, வேறு எதுவும் இல்லை..! இதற்கு நீங்கள் எந்த வர்ணமும் பூச மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை, குட்டுக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் கொடுக்கும் எதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எனவே நம் முன் இருக்கும் இரும்புத் திரை விலக்கி தாராளமாய் விமர்சியுங்கள்..! நான் ஏராளமாய் மகிழ்வேன்..!! சரி..! இனி, நம் விஷயத்திற்கு போவோம்.

கடவுளுக்கு விலங்குகளை, பறவைகளை காணிக்கையாக பலியிடுவது குறித்தும், நம் நாட்டில் நிலவும் சைவ, அசைவ வேறுபாடு குறித்தும் பதிவெழுத நெடுநாட்களாக நினைத்திருந்தேன். இன்று சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.  காணிக்கை கொடுப்பது சரியா எ‎ன்பதற்கு மு‎ன், அவை ஏன் பலியிடப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் பலியிடுதல் எ‎ன்பது நேர்ச்சையை நோக்கமாக கொண்டது மட்டுமே..! அதாவது, தான் வேண்டுவதை நிறைவேற்றினால், அதற்கு பிரதிபலனாக ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினமோ அல்லது அ·றிணையான சில்லரை காசிலிருந்து, விலை மதிப்புள்ள ஆபரணங்கள்வரை தருவதாக சொல்லி கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் தா‎ன் நேர்ச்சை என்பது. இதில் நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. ஒரு வேண்டுதலின் பொருட்டு கடவுளுக்காக செய்யப்போவதாக சொல்லப்படும் அட்வான்ஸ் புக்கிங் தான் நேர்ச்சை..! அப்படி வேண்டிக் கொண்டது நிறைவேறினால், சொன்னபடி வேண்டுதலை நிறைவேற்றுவது காணிக்கை (இந்த நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் எந்த மதங்களும் விதி விலக்கல்ல..!). பகுத்தறிவு படி பார்த்தால் நேர்ச்சை மற்றும் காணிக்கையில் அர்த்தமில்லை எ‎ன்றாலும் மனிதனின் மன திருப்திக்காக பகுத்தறிவு கடந்து செய்யக்கூடிய இது போன்ற சில விஷயங்களை ஆராய்வது ஏற்புடையது ஆகாது எ‎ன்றாலும், அது கடவுளோடு சம்பந்தப்படுத்தப்படும் போது தா‎ன் அங்கே முரண்பாடு தோ‎ன்றுகிறது..!.

இவ்வாறு கடவுளுக்கு காணிக்கை செய்யப்படும் எந்தப் பொருளையும் கடவுள் உண்பதில்லை அல்லது உபயோகப்படுத்துவதில்லை (நம்மிடம் அவர் கேட்பதும் இல்லை எ‎ன்பது உபரி தகவல்..!). அதாவது, நாமாகவே ஒரு கற்பனையை செய்து கொண்டு, கடவுளை “கவனித்து” காரியங்களை கைக்குள் அட‎க்க நினைக்கும் நம் அறியாமையின் வெளிப்பாடு தான் நேர்ச்சையும், காணிக்கையும் (இதனால் தா‎ன் இன்னும் திருப்பதி உண்டியல் “ஹவுஸ்·புல்” கவும், உலகின் பணக்கார கடவுளாக திருப்பதி வெங்கடாஜலபதி இருக்கவும் காரணமாய் இருக்கிறது). மனிதர்கள் மன நிறைவிற்காக கடவுளுக்கு காணிக்கை அளிக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் சிறந்தது எ‎ன்றாலும், அதை அடைய அவர் போகும் வழி சரியானதா என்பதை நான் சிந்திக்க வேண்டும். கடவுளின் கருணைப் பார்வை நமக்கு கிட்ட காணிக்கை அளிப்பது தான் சரி என்றால் தாலுகா ஆஃபீஸ் பியூனுக்கும், தன்னுடைய மகாசக்தியால் உலகத்தை காக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள். எந்த தேவைகளும் இல்லாத கடவுளுக்கு, நாம் உண்டியலில் போடும் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் எதற்கு..? உண்மை என்னவென்றால், கடவுளின் பெயரைச் சொல்லி சமூகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சில நயவஞ்சகர்களின் நாச வேலை இது..! கடவுளின் பெயரைச் சொல்லி கௌரவமாக பைசா பார்ப்பது இன்று நாட்டில் முதல் போடாத முக்கிய  பிஸினஸாக இருந்து வருகிறது. நாம் கடவுளின் அருளை அடைவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நல்லதை மட்டும் செய்தால் வெகு சுலபமாக கடவுளி‎ன் அருளை அடையலாம்..! கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக நினைத்துக் கொண்டு, நாம் நாசகாரர்களுக்கு அளிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியூட்டி, கடவுளி‎ன் கருணைப்பார்வையை வெகு சுலபமாக பெறலாமே..! சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் காணிக்கை எ‎‎ன்பது நம்முடைய சுயநலத்தையும், பேராசையையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு கண்ணாடி..!

அடுத்து விலங்குகள் மற்றும் பறவைகளை கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது குறித்து முன்பு அரசின் தடை கூட இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்டவற்றை உண்ணாத பிரிவினர் கூட நம்மிடையே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன..? உயிர்களைக் கொல்வது பாவம் எ‎ன்பதாலா..? ஆமாம், அது தா‎ன் உண்மை என்றால் எனக்கு சிரிப்புத்தா‎ன் வருகிறது. உயிர் எ‎ன்பது விலங்குகளுக்கு மட்டும் உரியதா.? அப்படியெ‎ன்றால் தாவரங்களுக்கு உயிர் இல்லையா..? உயிர் இல்லாமலா அவை முளைத்து, துளிர்த்து, கிளைத்து, செடியாகி, மரமாகி, காய்த்து தன் வாழ்நாள் முடிந்தவுட‎ன் மற்ற உயிரினங்கள் போலவே செத்துப் போகிறது..? சரி, தாவரங்களை விட்டு விடுவோம். உலகில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை மட்டுமா உயிருள்ளவை..? நாம் அருந்தும் நீரில் எவ்வளவு பாக்டீரியாக்கள் உள்ளது தெரியுமா..? நாம் சுவாசிக்கும் காற்றில் எவ்வளவு நுண்ணியிரிகள் உள்ளன தெரியுமா..? அதையெல்லாம் கொல்கிறோமே..! அது பாவமில்லையா..? நியாயம் எ‎ன்பது கண்ணுக்கு தெரிந்த உயிரினத்திற்கு மட்டும் தானா..?  இப்படி ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களை பலியிடுவதை, உண்ணுவதை தடுக்க நினைப்பவர்கள் மதக்கலவரம், ஜாதிக்கலவரம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மூலம் ஆறறிவு உயிர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாய் பலி கொள்ளப்படுகிறதே, அதை எந்த சட்டம் போட்டு அல்லது எப்படி தடுக்கப் போகிறார்கள்..? நம் நாட்டில் ஐந்தறிவு விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட ஆறறிவு மனிதனுக்கு கொடுக்கப்படுவதில்லையே அது ஏ‎ன்..? இந்தக் கேள்விக்கு மேனகா காந்தியால் கூட பதில் சொல்ல முடியாது. முதலில் நாம் கடவுள் படைப்பில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரும், மற்ற உயிர்களை சார்ந்தே வாழ்கிறது. வாழ்ந்தே ஆக வேண்டும்..! தாவரம் இல்லையெ‎ன்றால் தாவர உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. விலங்குகள் இல்லையெ‎ன்றால் ஊண் உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. கடவுளி‎ன் படைப்பு மிகச் சரி..! ஆனால், பலவீனங்கள் நிறைந்த மனித‎ன் அதை மாற்ற நினைப்பது தா‎ன் நகைப்பை உண்டாக்குகிறது.

தொடரும்.......

திங்கள், 7 ஜூலை, 2008

இதயமென்பது இயந்திரமா? அன்பில்லமா..?

நம்பிக்கையும், பகுத்தறிவும் சரிவரக் கலந்தது தான் உலக வாழ்க்கை. "இவர் தான் தன் தந்தையா..?" என்று யாரும் நிரூபணம் செய்ய விரும்புவதில்லை. நாம் அறிந்ததை நம்பிவிடுகிறோம். "இது என்ன நோய்..?" என்று அறியாது அதற்கான மருந்தை நாம் உட்கொள்வதில்லை. அதனை அறிந்த பிறகு தான் அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறோம். ஆக, நம்பிக்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆனால், விசித்திரம் என்னவென்றால் இந்த இரண்டும் இருவேறு துருவங்கள்.! நம்பிக்கை இருக்கும் இடத்தில் பகுத்தறிவு தோற்கும், பகுத்தறிவு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தோற்கும். அதே போல் தான் இதயமும்.!! விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை, பகுத்தறிவு இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?

இதயம் ஒரு விசித்திர உறுப்பு.! சிந்தனை, செயல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு முதற்பொறுப்பான மூளைக்கு கிடைக்க வேண்டிய பெயரை அதற்கு சம்பந்தமேயில்லாமல் இதயம் பெற்றிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கும் என நான் சிந்தித்த வேளையில் எனக்கு கிடைத்த சில பதில்கள். மனிதர்களின் மேன்மையான குணம் அன்பு செலுத்துதல். அதை செய்வதில் தொடர்புடைய உறுப்பு மூளை. அந்த மூளை இருப்பதோ உச்சியில். எல்லாவற்றுக்கும் "நான் தான் காரணம் என்பதால் தான் நான் அனைத்தையும் விட உயரமான இடத்தில் இருக்கிறேன்" என்ற கர்வம் மூளைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையால் மனித சமூகம் அன்பின் அடையாளமாய் மூளையை சொல்லாமல் புறக்கணித்திருக்கலாம். காரணம், அன்பிருக்கும் இடத்தில் கர்வத்திற்கு வேலையில்லை..!!

சரி.. அப்படியென்றால்.. அன்பை சொல்ல இதயத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..? உடம்பில் வேறு பல உறுப்புக்கள் இருக்கின்றனவே..? அதற்கும் காரணம் இருக்கிறது. இதயம் இருக்கும் இடம் உடம்பின் மையப்பகுதி. அன்பைக்கொண்டு நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல், அன்பு எத்தனை பெரிய தீயவனையும் நல்லவனாய் மாற்றும் சக்தியுடையது. அதே போல் தான் இதயமும் கெட்ட இரத்தத்தை சுத்திகரித்து, நல்ல இரத்தமாக மாற்றுகிறது.!! அதுவும் சரி தான்..அப்படியென்றால் இதயம் உடம்பின் மையத்தில் இல்லாமல் ஏன் இடது புறம் இருக்கிறது.? பொதுவாகவே நம் உடலில் வலது பக்க உறுப்புக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. கை குலுக்குவது, சாப்பிடுவது தொடங்கி காலை எடுத்து வைத்து உள் நுழைவது வரை வலது பக்க உறுப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம். ஆனால், அன்பிற்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல.. அதனால் தான் யாரும் சீந்த நினைக்காத இடது புறத்தில் அன்பை உற்பத்தி செய்யும் இதயம் அமைந்துள்ளது.!!

பொதுவாக உண்மையை சொல்ல வைக்க தலையில் கை வைத்து சொன்னால் அது சத்தியம். ஆனால், இதயத்தின் மேல் கை வைத்து சொன்னால் அது மனசாட்சி..! சத்தியத்தை நிறைய மீறுகிறார்கள். ஆனால், மனசாட்சியை மீற நிறைய பேருக்கு துணிவிருக்காது. அப்படி மீறுபவர்கள் குற்றவுணர்ச்சியால் பெரும் சித்ரவதைக்குள்ளாவர்கள். மனசாட்சிக்கு பயந்து திருந்துபவர்கள் மகான் ஆகும் வாய்ப்பு கூட உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து உலகத்தை அமைதிப்பூங்காவாக்கும் அருமருந்து அன்பு மட்டும் தான்.!

கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!

ஞாயிறு, 6 ஜூலை, 2008

தமிழர்களின் மொழிப்பற்றும், புரிதலும்..!

இரு தமிழக தமிலர்கள்(!) சந்தித்துக்கொள்ளும் பொழுது டமிங்கிலத்தில் பேசிக்கொள்வதை பல முறை கண்டிருக்கிறேன். ஆனால், இரு ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது இந்த அவலம் பெரும்பாலும் நிகழ்வதில்லை. இன்றைய காலகட்டம் வரை தமிழை இணையத்தில் வளர்த்ததில் ஈழத்தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னுடைய தமிழார்வம் அதிகரித்ததற்கு இலங்கைத்தமிழர்களும் ஒரு காரணம் என்று சொல்வேன். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழ் என்பது அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது.

அடுத்து, தமிழ் மொழி பயன்பாடு என்பதில் நாட்டுக்கு நாடு, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. நம் பிள்ளை என்பதால் நம் பிள்ளையின் தவறுகளை ஒத்துக்கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நம் மொழியில் உள்ள குறைபாடுகளும், அதன் திருத்துவதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாத தமிழர்களும். அந்த வகையில் தமிழை சரியாக பேசுவதில், மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் முன்னால் நிற்கிறார்கள். ஆனால், இங்கே வந்திருக்கும் உச்சரிப்பு பிரச்சினை வேறு விதமானது. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பிற மொழியை குறிப்பாக ஆங்கில மொழியை எந்த வகையினர் சரியாக பேசுகிறார்கள் என்பது. பொதுவாக மிகச்சரியாக பேசுதல் என்பது பெரும்பாலும் அந்நிய மொழிக்கு பொருந்துவதில்லை.

ஒரு மொழியை அம்மொழியை தாய் மொழியாக கொண்டவனைக்காட்டிலும் மற்ற மொழிக்காரன் அத்தனை சரியாக பேசுவது எளிதான காரியமல்ல. அதனால் இங்கே இந்த வாக்குவாதம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஆழ்ந்து பார்த்தால் தமிழக, இலங்கை உள்ளிட்ட அனைத்து தமிழர்களிடமும் ஆங்கிலத்தை பிரயோகிப்பதில் பலவிதமான முரண்பாடுகள் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தை உபயோகிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து அரேபியர்களுக்கு P உச்சரிப்பு ஆங்கிலத்தில் வருவதில்லை (B மட்டும் தான் உச்சரிப்பார்கள்). துருக்கியர்களுக்கு th(த்) என்பதை ஸ் என்று உச்சரிப்பார்கள். இப்படி நிறைய சொல்லலாம். Bottle என்ற வார்த்தையை அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் உச்சரிப்பதை சரியாக தமிழில் கொண்டு வந்து எழுதி விடமுடியும் என்றோ, அதை படித்து சரியான உச்சரிப்பை கொண்டு வந்துவிட முடியும் என்றோ நான் நம்பவில்லை.

ஒரு மொழியை சரியாக கற்க அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை உற்று நோக்க வேண்டும். பாட்டில், போத்தல் என்பது தமிழில் அவரவர் பகுதி உச்சரிப்பிற்கேற்ப நாமாக உண்டாக்கியவையே தவிர அதற்கான ஒழுங்கான உச்சரிப்பை அந்த மொழியில், அவர்கள் உச்சரிப்பில் சொல்லும் போது மட்டுமே சரி..!! நாம் பாட்டில் அல்லது போத்தல் என்பதற்கு பதிலாக நம் மொழியில் குப்பி அல்லது குடுவை என்று சொல்வது சிறப்பு. சரி.. இப்படி எல்லாவற்றையும் நாம் பேசலாமா..? முடியாது... காரணம் நிறைய பொருட்களுக்கு, செயல்களுக்கு இன்று வரை சரியான தமிழ்ப்பதம் இல்லை. அல்லது அப்படி தமிழ்ப்பதம் இருந்து சொன்னால் புரிவதில் குழப்பம் தான் பெரும்பாலும் ஏற்படும். மொழியை வளர்க்கிறேன் என்ற பெயரில் சிலர் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். மொழியை வளர்ப்பதை விட அந்த மொழியால் நமக்குள் புரிவதில் குழப்பம் ஏற்படக்கூடாது அவசியம் என நான் நினைக்கின்றேன்.

இன்று வரை வழக்கில் மிதிவண்டி, பேருந்து என சொல்வதில்லை. சைக்கிள், பஸ் தான். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் அத்தனை மொழி வளம் இல்லாததும், கற்க சிரமமானதும், அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளதும் தமிழின் பெரும் பலவீனம். இந்த பலவீனம் எதுவும் இல்லாதது ஆங்கிலத்தின் பெரும் பலம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைப்பவற்றிற்கான புதுப்புது பதங்களை உடனுக்குடன் ஆங்கிலத்தில் உண்டாக்கி அகராதியில் சேர்க்கிறார்கள். ஆனால், அதை நாம் பெரும்பாலும் செய்வதில்லை. தமிழை மட்டும் பேசி ஒரு முழுமையான புரிதலையுடைய சமுதாயத்தை நாம் காண முடியாது என்பதை உறுதி செய்ய இரு வேறு தமிழர்கள் ஒரே பொருளின் பெயரை இரு வகையில் உச்சரித்து இருவரும் "தான்" சொல்வது தான் சரி என்பதை கொண்டு புரிந்து கொள்ளலாம்..!! ஆனால், உண்மை இருவர் சொல்வதும் தவறு என்பது என் கருத்து.

இது போன்ற குழப்பத்தை மொழி தீர்க்க முடியாது. ஒருத்தொருக்கொருத்தர் இடையேயான புரிதலும், அறிதலும் மட்டுமே தீர்க்கும்..!!

புதன், 16 ஏப்ரல், 2008

பெண்ணின் பெருமைகள்..! (மனைவி) - 02

தாரம்..! ஒரே உறவு முறையின் மூலம் பல பரிமாணம் காட்டும் பத்தினிப் பெண். அன்பில் இராட்சசிகள் இவர்கள். ஆணின் கண்ணி‎ன் வழி நுழைந்து, முதலில் இதயத்தில் இடம்பிடிப்பவர்கள். பிறகு அங்கிருந்து இம்மியளவும் நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள். இவர்கள் தியாகத்தின் திருவுருவம், தேவதையின் மறு உருவம். தனக்கு தலைவலி வந்தால் தன் கணவனுக்கு தைலம் தேய்ப்பார்கள். நமக்கு ஜலதோஷம் பிடித்தால் அவர்கள் தும்முவார்கள். தன்னை பெற்று வளர்த்து, கஷ்டத்தை அனுபவித்ததற்காக தாய்க்கு தன் வாழ்க்கையில் முதல் பாதியை காணிக்கையாக்கும் மனிதன், இரண்டாம் பகுதியை மனைவிக்கு சுலபமாக மறுபரிசீலனை இன்றி தந்து விடுகிறா‎ன். காரணம், அவர்கள் காட்டும் அ‎ன்பில், பாசத்தில், காதலில், நட்பில், ஆதரவில், பணிவிடையில், த‎ன்னை தருவதில் காட்டும் அர்ப்பணிப்பு, வேகம், வெறி..! ஆரம்பத்தில் மனதிற்குள் தென்றலாய் நுழையும் இவர்கள், தன் அன்பால் சூறாவளியாய் சுழற்றி அடித்து ஆணை சாய்த்து விடுகிறார்கள். அப்போது சாய்பவ‎ன் தான், அதன் பிறகு அவன் எழுவதே இல்லை..!!

பெரும்பாலான மட சாம்பிராணிகள் திருமணத்திற்கு பிறகு மகான்களாய் மாறிப் போகும் மர்மம் இது தான். பெண்கள் இயல்பில் முகர்ந்தால் வாடிப் போகும் மென்மையான அனிச்சமலர்கள் என்றாலும், இதயத்தில் ஒன்றை இருத்தி வைத்தால் இரும்பின் உறுதி தோற்கும்..! தனக்காக இல்லாமல் தன்னைக் கவர்ந்தவனுக்காக வாழும் வாச மலர்கள். முன்பின் தெரியாத ஒருவனை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தாலும், அந்த தெரியாதவனையே தெய்வமாக்கி பூஜிக்கும் இந்தியப் பெண்கள் உலகி‎ன் எட்டாவது உலக அதிசயம்..! இந்திய திருமண முறை குறித்து எனக்கொரு கோபம் உண்டு. நேற்றுப் பார்த்த ஒருவனை திருமண பந்தம் மூலம் இன்று இணைத்து, அப்பெண்ணை அன்றிரவே அவனோடு உடை களைந்து, உறவு கொள்ள வைக்கும் உச்சக்கட்ட அநியாயம் இங்கு தான் நடக்கிறது. இணைந்த இருவரும் தங்களைப் பற்றி இயன்றவரை புரிந்து கொள்ளவே கட்டாயம் கால அவகாசம் தேவைப்படும் போது ஏன் இந்த ஏற்க முடியாத ஏற்பாடு..? முதலிரவு என்பது ஆண்மையை நிரூபிக்கும் ஆராய்ச்சிக் கூடமா..? உடல் உணர்ச்சியை பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்கள் இவ்விஷயத்தில் சராசரியாக அறைகுறை ஆடை அணிந்த அழகியை பார்த்தால் போதும், அவ்வளவு ஏன்..? அவள் அழகியாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அரை குறை ஆடையுடன் இருந்தால் போதும். உணர்ச்சியால் உந்தப்பட்டு உறவுக்கு தயாராகிறான்.

ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல..! அவள் கணவ‎னுடனான உறவுக்கு தயாராக கூட என்னவெல்லாம் அவளுக்குள் நடக்க வேண்டும் தெரியுமா..? அவ‎ன் மீது நேசம், பாசம், அன்பு, பற்றுதல், கை விட மாட்டான் என்ற நம்பிக்கை, நமக்கு சொந்தமானவன் என்ற உரிமை, புண்படுத்த மாட்டான் என்ற தைரியம், இவனோடு உறவு கொண்டால் ஆபத்தில்லை என்ற நிச்சயம், �நம்ம ஆளு� தானே என்ற பரிவு என்று எல்லாம் ஒன்றாக கூடி வந்தால் தான் �சரி, சம்மதிப்போம்..!� என்று துணிவு ஏற்பட்டு உடலும், மனமும் ஒரே நேரத்தில் உறவுக்கு தயாராகிறது. நான் சொன்ன இவை எல்லாம் ஒரு சில நிமிஷங்களில் நடக்கும் இரசவாதம் என்பது தான் ஆண்டவன் படைப்பில் உள்ள அற்புதம். நா‎ன் மேலே பட்டியலிட்ட அத்தனையும் நேற்று பார்த்து, இன்று தாலி கட்டிய கணவனிடம் முதலிரவில் எதிர்ப்பார்க்க முடியுமா..? முதலிரவு என்ற சத்திய சோதனையில் சங்கமிக்க முடியாமல், சக்தி இழந்து, சந்தேகப்பட்டு விடிந்தவுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்த கதையும் உண்டு..! வேண்டாமே இந்த வினையாகும் விளையாட்டு..! கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அள்ளிச் செல்லும்..?!!

திருமணம் என்ற பந்தத்தால் தனக்கு சொந்தமானாள் என்ற ஒரே காரணத்திற்காக மனைவிக்கு சில கணவன் எ‎ன்னும் கழுகுகள் கொடுக்கும் கஷ்டங்கள் ஏராளம், ஏராளம்..!! த‎ன் உடல், மன அரிப்புகளை சொறிந்து கொள்ள உடலாலும், பேச்சாலும் த‎ன் துணையை கொத்திக் கிழிப்பது கொடுமை. நான் மட்டும் ஒரு பெண்ணாக பிறந்து ஒரு நயவஞ்சகனை திருமணம் செய்து, அவன் என்னை நாளும் கொடுமைப் படுத்தினால், அவ‎ன் நன்றாக உறங்கும் போது அம்மிக்கல்லை நடு மண்டையில் நச்சென்று போட்டு �காலி� செய்து, நள்ளிரவில் நடுக்கூடத்தில் நல்லபடியாக புதைத்து, நமஸ்கரித்து விட்டு �நண்பர்களைக் காணப்போன என் நாயகனை நான்கு நாட்களாய் காணவில்லை..!� என்று நடித்து நாட்டையே நம்ப வைப்பே‎ன் (எத்தனை �ந� இருக்கிறது எ‎ன்று எண்ணுங்கள் பார்ப்போம்..!. நல்லவேளை, நான் ஆணாக அவதாரம் எடுத்ததால் உங்களில் யாரோ ஒருவர் உயிர் பிழைத்தீர்கள்..!) ஒவ்வொரு வருடமும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து உலக அழகியாக உலகுக்கு அறிவிக்கிறார்கள் சில உதவாக்கரைகள்..! அழகு என்பதன் அர்த்தம் என்ன..? எனக்கு செந்தூரப்பூ அழகு..! உங்களுக்கு..? செண்பகப்பூவா..? செந்தாழம்பூவா..? சாதாரணமாக மலர்�லேயே இத்தனை இடறல் இருக்கிறதென்றால் மங்கையில் சொல்லவா வேண்டும்..? அழகு என்பது ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். இன்று அழகாய் தோன்றுவது நாளை அது அவலட்சணமாய் தோன்றலாம். ஆனால், மன அழகு எந்நாளும் மாறுவதில்லை. புற அழகும், மன அழகும் இணைந்து, இயல்பாய் அசத்தும் அவரவர் மனைவி தான் உலகின் சிறந்த அழகிகள்..! மனைவியை புரியாதவர்களுக்கு நான் சொல்லியிருப்பது புதிது. புரிந்தால் வாழ்க்கை இனிது..!!

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். ஆனால், தந்தை, கணவ‎ன், மகன், சகோதரன் போ‎ன்ற உறவுகளில் கட்டுண்டு போய், ஆண்களுக்கு வழி விட்டு, அவர்களை சாதிக்க வைத்து சந்தோஷப்படுகிறார்கள். அந்த உயர்ந்த பண்பு ஆண்களுக்கு வராது..!! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே எ‎ன்று தமிழில் ஒரு பதம் உண்டு. ஆனால், எ‎ன்னைப் பொறுத்தவரை அது �அழிவதும் பெண்ணாலே அல்ல, ஆள்வதும் பெண்ணாலே..!!� தா‎ன். தேசத்தி‎ற்கு மன்னனாக இருந்தாலும், அவ‎ன் தாய்க்கு மக‎ன். ஒரு ஆண் தேசத்தை ஆள்வதில் பெண்ணுக்கு அதிக பங்கு உண்டு. Yes, Woman is the real king maker.! இத்தனை பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றுவோம். அவர்கள் மனதில் உள்ள ஆறா இரணங்களை ஆற்றுவோம். உலகம் உயிர்த்து செழித்து வாழ, அதுவே சிறந்த வழி..!

பெண்ணின் பெருமைகள்..! (தாய்) - 01

தாய்..! இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் விட ஒரு அற்புத படைப்பு இருக்குமென்றால் அதை நான் தாய் தான் என்று சொல்வேன். தனக்கென்று எந்த ஒரு தேவைகளும் இல்லாமல் பிறர்க்கென்று வாழ்ந்து இந்த உலகை உய்வித்துக் கொண்டிருக்கும் உன்னதம் தான் தாய். அந்த உன்னதத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பெருமை உரைத்துத் தா‎ன் தெரிய வேண்டும் எ‎ன்ற அவச்�யம் இல்லாவிட்டாலும், நம்மைப் பெற்ற கடனை என் எழுத்து இம்மியளவு குறைத்தால் குளிர்ந்து போவேன். உங்களிடம் நான் ஒரு சிறு பொருளை தந்து உங்களிடமே இது இருக்க வேண்டும், படுக்கும் போது கூட பக்கத்தில் வைத்து விட வேண்டாம் என்றால் எத்தனை நாள் வைத்திருப்பீர்கள். ஒரு நாள் முடியுமா உங்களால்..? ஆனால் தாய் தன் வயிற்றில் கருக்கொள்ளும் சிசுவை பத்து மாதங்களாக அது கொடுக்கும் தொந்தரவை, தொல்லைகளை துடைத்து தூர எறிந்து வ்�ட்டு, அதையே இன்பமாய் ஏற்றுக் கொள்கிறாளே..! அந்த குணம் வருமா இந்த ஆண் வர்க்க வானரங்களுக்கு..! சேயை சுமக்கும் பொழுதில் ஒழுங்காக உண்ண முடியாது, உடை உடுக்க முடியாது, உறங்க முடியாது, எண்ணியபடி நடக்க முடியாது. ஆனாலும், அடி வயிற்றில் குடி கொண்டிருக்கும் குழந்தையே அவள் உலகமாகிறது.

நீங்கள் கருவைச் சுமக்கும் கர்ப்பிணிகளை கவனித்திருக்கிறீர்களா..? நடக்க அல்ல நகர கூட நான்கு நிமிட யோசிக்க வேண்டிய நிலை இருந்தும், அதைப் பற்றிய வேதனையோ, வருத்தமோ இல்லாமல் முகத்தில் புதுப்பொலிவோடும், இழையோடும் புன்னகையோடும் காணும் அந்த எதிர்காலத் தாயை காணும் பொழுது எ‎ன் மனம் ஈரமாய் கச்�யும். ஒரு பிள்ளையைப் பெறுவதில் ஆணுடைய பங்கு படுக்கையறை சம்பந்தப்பட்டது மட்டுமே. ஆனால், அந்தப் பிள்ளையை சுமந்து, பெற்று, வளர்ப்பது எ‎ன்பது பெண்ணுக்கு பெரும்பாடாகும். ஒருவன் எவ்வளவு மோசமானவனாக, கெட்டவனாக, அயோக்கியனாக இருந்தாலும் சரி..! அவன் தாயிடம் அவனைப் பற்றி கேளுங்கள். �என் பிள்ளையா..? அவனைப் போல் வருமா..? அவனுக்கு ஒன்றுமே தெரியாது, அவன் குழந்தை மாதிரி..!� என்று தான் பதில் வரும். நீங்கள் கேட்டது �ஆட்டோ� சங்கர், �ஆசிரமப் புகழ்� பிரேமானந்தா, �இன்டர்நெட் புகழ்� டாக்டர் பிரகாஷ், �அயோத்தியாக்குப்பம்� வீரமணி ஆகியோரைப் பற்றி இருந்தால் கூட இருந்தால் கூட அப்படித்தா‎ன் சொல்வார்கள்..! அப்படி அவர்கள் சொல்வது தவறில்லை. அது தாயி‎ன் தனித் தன்மை. தாய்மைக்கு வெறுக்கத் தெரியாது, கோபப்பட தெரியாது, சுயநலம் தெரியாது, தற்பெருமை தெரியாது, ஆசைகள் தெரியாது. அவளுக்கு தெரிந்தது மூன்றே மூன்று தான். அவை அன்பு, பாசம், பொறுமை.

பெரும்பாலும் வாலிப வயது வரை ஆண்களுக்கு வில்லன் வெளியில் யாரும் கிடையாது. தந்தை என்ற பெயரில் தான் அவர் தரிசனம் தருவார். அவர் உக்ரமடைந்து, சாமியாடும் போதெல்லாம் பொறுமையாய் இருந்து அன்பு நீர் தெளித்து, ஆறுதல் வேப்பிலை அடித்து, அவர் கோபத்தை மலையேற வைக்கும் மகராசி தான் தாய்..! நான் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை, கவலைகளை அடைந்தாலும் கண்ணீர் சிந்துமளவுக்கு கலங்கிப் போவதில்லை. அதுவும் சவுதி வந்து கற்ற வித்தைகளும், கஷ்டங்களும் அதிகம் என்பதால் உணர்வுகள் மரத்து கல்லாகிப் போனே‎ன். இந்த நிலையிலும் ஏதோ ஒரு காரணத்திற்காக என் தாயின் கண்கள் கலங்குவதைக் கண்டால் என்னை நானே கட்டுப்படுத்த முடியாமல் எ‎ன் விழிகளில் இருந்து நீர் சுரக்கும். இது எனக்கு மட்டுமல்ல, தாயை நேசிக்கும் எல்லா தனயனுக்கும் ஏற்படும் உணர்வுதான்.

இத்தனை மகத்துவம் வாய்ந்த தாயை இக்கால மகன்கள் நடத்தும் விதம் நல்லவர்களை நம்பிக்கை இழக்க வைக்கிறது. இதயத்தில் ஏந்தி, போற்ற வேண்டிய தாயை முதியோர் இல்லத்தில் வைத்து அழகு பார்க்கும் அலங்கோலம் நடக்கிறது. அடுக்குமா அந்த ஆண்டவனுக்கே..? உதிரம் தந்து உயிர் கொடுக்கும் தாயை உள்ளம் பதற வைக்காதீர்கள்..! அதல பாதாளத்தில் விழுந்து, அழிந்து போவீர்கள்..!! உங்களுக்கு இவ்வுலகில் சொர்க்கத்தை காண வேண்டுமா..? உங்கள் தாயை உங்களோடு வைத்து, உள்ளங்கையில் வைத்து தாங்கி பணிவிடை செய்யுங்கள். ஆம்..! சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது..!!

பெண்மையின் பெருமைகள்..!

ஒரு மனித‎ன் ஆதியில் கருவாகி, உருவாகி, இறுதியில் எருவாகும் வரை உள்ள எல்லாவற்றிலும் தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்ட பெண்ணைப் பற்றி, பெண்ணிணத்தைப் பற்றி, பெண்மையைப் பற்றி எழுத எத்தனித்திருக்கிறே‎ன். பெருமைக்குரிய பெண்மையி‎ன் பெருமைகளை நான் எடுத்துக் கூறுவதென்பது சமுத்திரத்தை சல்லடையால் அள்ளிக் குறைக்கும் முயற்சி எ‎ன்றாலும், ஏதோ எ‎ன்னால் இய‎ன்றவரை இயம்பியிருக்கிறே‎ன். முதலில் பெண்களி‎ன் தன்மைகள் என்ன எ‎ன்பதை பார்ப்போம்.

பெண்களை தமிழர்கள் ஏழு பருவங்களில் பிரித்தறிந்திருக்கிறார்கள். அவை, மங்கை, மடந்தை, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியன. சரி..! பெண் எ‎ன்பவள் ஆணோடு எந்த வகையில் வேறுபடுகிறாள் எ‎ன்பதை பார்ப்போம். புறத்தோற்றம் எ‎ன்று பார்த்தால் பொதுவாக உடல் உறுப்புகள் மட்டுமல்லாது உடல் எடை, வலிமை, செயல்படும் வேகம் ஆகியவற்றில் ஆணை விட பெண் குறைந்து வேறுபடுகிறாள். விஞ்ஞான ரீதியாக மனித மூளையி‎ன் மேற்படலம் (Cerebral Cortex - மூளைப் புறவணி) இரு அரைக்கோளங்களாய் வலது, இடது என அமைந்து இருக்கிறது. அதில் இடது தர்க்கம், கணிதம், சிந்தனை செய்ய, மற்ற நபர்களை ஆராய உதவும். அதே போல் வலது பகுதி இலக்கியம், இசை, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தன்னைத் தானே எடைபோடவும் உதவும். இந்த இரண்டையும் இணைக்கும் நரம்புக்கற்றை ஒ‎ன்று உண்டு. இந்த பாலத்தின் லத்தீன் பெயர் கார்பஸ் கலோசம் (Corpus Collosum). இதன் மூலம் தா‎ன்இரண்டு பக்க மூளைகளிடையே தகவல் பரிமாறப்படுகிறது. இந்த கார்பஸ் கலோசம் எனும் நரம்புக் கற்றை ஆண்களைவிட பெண்களுக்கு கால் பங்கு அதிக தடிமனாக இருக்கும்..! இதனால் இருபக்க தகவல் பரிமாற்றம் அதி வேகத்தில் பரிமாறப்படுகிறது. ஆகவே, உள்ளுணர்வு என்பது பெண்களுக்கு அதிகம்.

ஒரு ஆளைப் பார்த்ததும் நல்லவனா, நேர்மையானவனா, திறமையானவனா, ஜொள்ளுப் பேர்வழியா, பொறுக்கியா எ‎ன்று எடை போடும் திறமை கூடுதலாக இருக்கும் (ஆனால், காதலிக்கும் போது அந்த எச்சரிக்கை உணர்வை அணைத்து விட்டு, உணர்ச்சிகளை எரிய விட்டு விடுவதால் எளிதில் ஏமாந்து விடுகிறார்கள்..!). எண்ணும் எழுத்தும் சரிவிகிதக் கலப்பில் பரிமாறிக் கொள்ளும் பெண்ணி‎ன் மூளை அதிக திறம் காட்டும் (அதனால் தா‎ன் படிப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் தேர்ச்சி பெருகிறார்கள்). அதை இது போல நல்ல வழியில் பய‎ன்படுத்தாத சராசரிப் பெண்கள் சிறந்த வாயாடிகள் ஆகிறார்கள் (விசுவி‎ன் அரட்டை அரங்கம் பார்த்தவர்களுக்கு தெரியும்..!).

அதே போல் காட்சிகளை மனதிற்குள் பதியவைக்கும் திறமையிலும் அவர்கள் மு‎ன்னால் நிற்கிறார்கள். ஒரு அறைக்குள் ஒரு நிமிட நேரம் சென்று திரும்பியதும் அங்கு பார்த்த பொருட்களை சொல்லச் சொல்லுங்கள். அறைக்குள் என்னென்ன இருந்தது என்று மிகச் சரியாக ஒப்பிப்பார்கள் (சேலையி‎ன் பார்டரின் கீழ் என்ன நிறத்தில் பூப் போட்டிருந்தது எ‎ன்பது முதற்கொண்டு..! ச‎ன் டி.‏வியில் நிர்மலா பெரியசாமி (வ..ண..க்..க்..க்..க்..க்..க..ம்...!) சொல்லும் செய்தியில் கணவ‎ன் இலயித்திருக்க, அருகில் அமர்ந்திருக்கும் மனைவியோ நிர்மலாவி‎ன் செய்தியோடு, அவர் உத்தியிருக்கும் பட்டுப்புடவையின் பார்டர், கம்மல் டிசை‎ன், கழுத்து நகை என்று சகலத்தையும் கிரகித்து, சரியான நேரத்தில் கணவன் காதில் ஓதுவது கை வந்த கலை பெண்களுக்கு (�அந்த மயில் கழுத்துக் கலர் பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்காமல் எ‎ன்கிட்ட பேசாதீங்க..!� போ‎ன்ற மிரட்டல் வர இது தான் காரணம். உங்கள் வீட்டில் நடந்தது எனக்கு எப்படி தெரியும் எ‎ன்று திகைக்காதீர்கள். எல்லாருடைய வீட்டு ச‎ன் டிவியிலும் �நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ச‎ன் டி.வியின் தமிழ் மாலை..!� எ‎ன்று தான் வரும்..!!!! சில நேரங்களில் அந்த அ(வி)ல்லிகள் போடும் நிபந்தனைகள் வீரப்பனுடையதை விட விபரீதமாகவும் இருப்பதுண்டு..!). அறிவு, சிந்தனை ஆகியவை எப்போதும் சீராக இருப்பது பெண்களின் பலம்.

வசந்த காலம், பகல் நேரம் அதிகமாகவும், மற்ற காலம், மாலை நேரம் ஆகியவற்றில் அறிவு மங்கி செயல்படுவது ஆண்களின் பலவீனம் (அதனால் தா‎ன் பகலில் சுயமாகவும், மாலை மற்றும் இரவுகளில் பெண் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும் நடக்கிறது..!!!). கடலி‎ன் ஆழத்தை கண்டு பிடித்து விடலாம், ஆனால், பெண்ணி‎ன் மன ஆழத்தை கண்டு பிடிக்கமுடியாது என்று ஒரு பழமொழி உண்டு. எ‎ன்னைப் பொறுத்தவரை அது உடா‎ன்ஸ்..! பெண் எ‎ன்று சொல்லிக் கொண்ட பிராணியிடம் ஏமாந்த எவனோ ஒரு சோணகிரி சொல்லிப் போன விஷயமிது. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வள்ளல்கள். நீங்கள் எ‎ன்ன கொடுக்கிறீர்களோ, அதை விட பலமடங்கு வஞ்சகமில்லாமல் வாரி வழங்குபவர்கள். அது பாசம், நேசம், அ‎ன்பு, ஆதரவு, இன்பம் எ‎ன்று எதுவாக இருந்தாலும் சரி..! அதே போல் மனோரீதியாகவும் ஆணிடமிருந்து வேறுபடுகிறாள். ஆழ்ந்த அ‎ன்பு, அரவணைப்பு, பொறுமை, நேர்மை, வாய்மை, மனத் தூய்மை, மெ‎ன்மை, கொள்கையில் உறுதி, கற்பு நெறி எ‎ன்று எல்லாவற்றிலும் அவளே உயர்ந்து நிற்கிறாள்.

பெண்ணாகப் பிறந்தாள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த உலகம் அவளுக்கு கொடுக்கும் இழிவுகளும், தொல்லைகளும், வேதனைகளும் கணக்கிடலங்காதவை. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளைக் கழிப்பதும் ஒரு சத்திய சோதனையாகி, அவை ஒவ்வொன்றையும் சராமாரியாக வென்று சாதனை படைக்கிறாள். கருவில் உருவாகும் போதே அவளுக்கு சோதனைகள் சொந்தமாகிவிடுகிறது. ஸ்கேன் என்ற நவீன எட்டப்பனால் பெண்ணென்று காட்டிக் கொடுக்கப்பட்ட மறு கணமே அவள் உயிருக்கு உலை வைக்கப்பட்டு, அதன் உத்தரவாதம் உருக்குலைக்கப்படுகிறது.

மாத்திரை, மருந்துகளால் மாயமாக்கும் மாசு கொண்ட மருத்துவர்கள், கருப்பையிலிருந்து வெளி வந்து, தன்னை உருவாக்கியர்களை கண்டு உள்ளம் உவந்து போகும் வேளையில் �கள்ளிப்பால்� என்ற பேய்ப்பால் ஊட்டப்பட்டு பேச்சு மூச்சற்று போக வைக்கும் போக்கத்தவர்கள், துளிராய் வளர்ந்து, தளிர் நடை போடும் வேளையிலேயே, அந்த பச்சை மண்ணை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் பாதகர்கள், பருவமடைந்த வயதில் பட்டாம்பூச்சியாய் பறந்து, சிறகடிக்க விடாமல் சிறகொடித்து சில்லரை பார்க்க சீரழிப்பவர்கள், கடமை என்ற பெயரில் கண்டவனை கட்டிக் வைத்து, காலம் முழுதும் கலங்க வைக்க ஆவலுடன் அலையும் பெற்றோர்கள், வீட்டு வேலைக்காரியாய், உடல் சுகம் கொடுக்கும் உயிரினமாய், பொருள் உண்டாக்கும் புதிய உத்தியாய், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாய், வயிற்றுக்கு வடித்துக் கொட்டும் சமையல்காரியாய் எண்ணும் எகத்தாள கணவன்மார்கள், சுமந்து பெற்ற போது பட்ட வேதனை போதாதென்று, வாழும் காலம் வரை வேதனைப்படுத்துவதையே வேலையாகக் கொண்டிருக்கும் வேட்டிக் கட்டிய வேசியாக மகன் என்று பெண் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

போற்றுதலுக்குரிய பெண்கள் தாயாய், தாரமாய், மகளாய், சகோதரியாய் இ‎ன்னும் பலப்பல உறவுகளி‎ன் மூலம் காட்டும் பரிமாணங்கள் அற்புதம். ஆணி‎ன் முதுகெலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறது. அதனால் தானோ எ‎ன்னவோ, ஒவ்வொரு ஆணி‎ன் வாழ்க்கையிலும், வளர்ச்சியிலும், வெற்றியிலும் முதுகெலும்பாய் இருந்து, அவள் தா‎ன் மு‎ன்னுரை எழுதுகிறாள். உலகில் எவ்வளவோ உறவு முறைகள் இருக்கி‎ன்றன. ஆனால் தாய், மனைவி, மகள், சகோதரி ஆகிய உறவி‎ன் மூலம் காணும் பெண்ணை ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் வைத்து போற்றுகிறா‎ன். போற்ற வேண்டும்.

நா‎ன் மேலே எழுதியுள்ள பெண் உறவுகளில் ஏதாவது ஒ‎ன்றில் ஆண் பாதிக்கப்பட்டு மனதில் வைத்து நேசிக்க மறுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அவனால் புறந்தள்ள முடியாது. அப்படி தள்ளினா‎ன் என்றால் அவ‎ன் மனிதப் பிறவியாக இருக்க முடியாது எ‎ன்பது என் கருத்து. ஆண் த‎ன் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகும் தாய், தாரம் (காதலி இதற்குள் அடக்கம்) எ‎ன்ற இரும் பெரும் உயர்ந்த உறவுகளை உங்களுட‎ன் பகிர்ந்து கொள்வதில் மனம் கொள்ளா மகிழ்ச்சி எனக்கு..!
Related Posts with Thumbnails