தாரம்..! ஒரே உறவு முறையின் மூலம் பல பரிமாணம் காட்டும் பத்தினிப் பெண். அன்பில் இராட்சசிகள் இவர்கள். ஆணின் கண்ணின் வழி நுழைந்து, முதலில் இதயத்தில் இடம்பிடிப்பவர்கள். பிறகு அங்கிருந்து இம்மியளவும் நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள். இவர்கள் தியாகத்தின் திருவுருவம், தேவதையின் மறு உருவம். தனக்கு தலைவலி வந்தால் தன் கணவனுக்கு தைலம் தேய்ப்பார்கள். நமக்கு ஜலதோஷம் பிடித்தால் அவர்கள் தும்முவார்கள். தன்னை பெற்று வளர்த்து, கஷ்டத்தை அனுபவித்ததற்காக தாய்க்கு தன் வாழ்க்கையில் முதல் பாதியை காணிக்கையாக்கும் மனிதன், இரண்டாம் பகுதியை மனைவிக்கு சுலபமாக மறுபரிசீலனை இன்றி தந்து விடுகிறான். காரணம், அவர்கள் காட்டும் அன்பில், பாசத்தில், காதலில், நட்பில், ஆதரவில், பணிவிடையில், தன்னை தருவதில் காட்டும் அர்ப்பணிப்பு, வேகம், வெறி..! ஆரம்பத்தில் மனதிற்குள் தென்றலாய் நுழையும் இவர்கள், தன் அன்பால் சூறாவளியாய் சுழற்றி அடித்து ஆணை சாய்த்து விடுகிறார்கள். அப்போது சாய்பவன் தான், அதன் பிறகு அவன் எழுவதே இல்லை..!!
பெரும்பாலான மட சாம்பிராணிகள் திருமணத்திற்கு பிறகு மகான்களாய் மாறிப் போகும் மர்மம் இது தான். பெண்கள் இயல்பில் முகர்ந்தால் வாடிப் போகும் மென்மையான அனிச்சமலர்கள் என்றாலும், இதயத்தில் ஒன்றை இருத்தி வைத்தால் இரும்பின் உறுதி தோற்கும்..! தனக்காக இல்லாமல் தன்னைக் கவர்ந்தவனுக்காக வாழும் வாச மலர்கள். முன்பின் தெரியாத ஒருவனை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தாலும், அந்த தெரியாதவனையே தெய்வமாக்கி பூஜிக்கும் இந்தியப் பெண்கள் உலகின் எட்டாவது உலக அதிசயம்..! இந்திய திருமண முறை குறித்து எனக்கொரு கோபம் உண்டு. நேற்றுப் பார்த்த ஒருவனை திருமண பந்தம் மூலம் இன்று இணைத்து, அப்பெண்ணை அன்றிரவே அவனோடு உடை களைந்து, உறவு கொள்ள வைக்கும் உச்சக்கட்ட அநியாயம் இங்கு தான் நடக்கிறது. இணைந்த இருவரும் தங்களைப் பற்றி இயன்றவரை புரிந்து கொள்ளவே கட்டாயம் கால அவகாசம் தேவைப்படும் போது ஏன் இந்த ஏற்க முடியாத ஏற்பாடு..? முதலிரவு என்பது ஆண்மையை நிரூபிக்கும் ஆராய்ச்சிக் கூடமா..? உடல் உணர்ச்சியை பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்கள் இவ்விஷயத்தில் சராசரியாக அறைகுறை ஆடை அணிந்த அழகியை பார்த்தால் போதும், அவ்வளவு ஏன்..? அவள் அழகியாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அரை குறை ஆடையுடன் இருந்தால் போதும். உணர்ச்சியால் உந்தப்பட்டு உறவுக்கு தயாராகிறான்.
ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல..! அவள் கணவனுடனான உறவுக்கு தயாராக கூட என்னவெல்லாம் அவளுக்குள் நடக்க வேண்டும் தெரியுமா..? அவன் மீது நேசம், பாசம், அன்பு, பற்றுதல், கை விட மாட்டான் என்ற நம்பிக்கை, நமக்கு சொந்தமானவன் என்ற உரிமை, புண்படுத்த மாட்டான் என்ற தைரியம், இவனோடு உறவு கொண்டால் ஆபத்தில்லை என்ற நிச்சயம், �நம்ம ஆளு� தானே என்ற பரிவு என்று எல்லாம் ஒன்றாக கூடி வந்தால் தான் �சரி, சம்மதிப்போம்..!� என்று துணிவு ஏற்பட்டு உடலும், மனமும் ஒரே நேரத்தில் உறவுக்கு தயாராகிறது. நான் சொன்ன இவை எல்லாம் ஒரு சில நிமிஷங்களில் நடக்கும் இரசவாதம் என்பது தான் ஆண்டவன் படைப்பில் உள்ள அற்புதம். நான் மேலே பட்டியலிட்ட அத்தனையும் நேற்று பார்த்து, இன்று தாலி கட்டிய கணவனிடம் முதலிரவில் எதிர்ப்பார்க்க முடியுமா..? முதலிரவு என்ற சத்திய சோதனையில் சங்கமிக்க முடியாமல், சக்தி இழந்து, சந்தேகப்பட்டு விடிந்தவுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்த கதையும் உண்டு..! வேண்டாமே இந்த வினையாகும் விளையாட்டு..! கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அள்ளிச் செல்லும்..?!!
திருமணம் என்ற பந்தத்தால் தனக்கு சொந்தமானாள் என்ற ஒரே காரணத்திற்காக மனைவிக்கு சில கணவன் என்னும் கழுகுகள் கொடுக்கும் கஷ்டங்கள் ஏராளம், ஏராளம்..!! தன் உடல், மன அரிப்புகளை சொறிந்து கொள்ள உடலாலும், பேச்சாலும் தன் துணையை கொத்திக் கிழிப்பது கொடுமை. நான் மட்டும் ஒரு பெண்ணாக பிறந்து ஒரு நயவஞ்சகனை திருமணம் செய்து, அவன் என்னை நாளும் கொடுமைப் படுத்தினால், அவன் நன்றாக உறங்கும் போது அம்மிக்கல்லை நடு மண்டையில் நச்சென்று போட்டு �காலி� செய்து, நள்ளிரவில் நடுக்கூடத்தில் நல்லபடியாக புதைத்து, நமஸ்கரித்து விட்டு �நண்பர்களைக் காணப்போன என் நாயகனை நான்கு நாட்களாய் காணவில்லை..!� என்று நடித்து நாட்டையே நம்ப வைப்பேன் (எத்தனை �ந� இருக்கிறது என்று எண்ணுங்கள் பார்ப்போம்..!. நல்லவேளை, நான் ஆணாக அவதாரம் எடுத்ததால் உங்களில் யாரோ ஒருவர் உயிர் பிழைத்தீர்கள்..!) ஒவ்வொரு வருடமும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து உலக அழகியாக உலகுக்கு அறிவிக்கிறார்கள் சில உதவாக்கரைகள்..! அழகு என்பதன் அர்த்தம் என்ன..? எனக்கு செந்தூரப்பூ அழகு..! உங்களுக்கு..? செண்பகப்பூவா..? செந்தாழம்பூவா..? சாதாரணமாக மலர்�லேயே இத்தனை இடறல் இருக்கிறதென்றால் மங்கையில் சொல்லவா வேண்டும்..? அழகு என்பது ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். இன்று அழகாய் தோன்றுவது நாளை அது அவலட்சணமாய் தோன்றலாம். ஆனால், மன அழகு எந்நாளும் மாறுவதில்லை. புற அழகும், மன அழகும் இணைந்து, இயல்பாய் அசத்தும் அவரவர் மனைவி தான் உலகின் சிறந்த அழகிகள்..! மனைவியை புரியாதவர்களுக்கு நான் சொல்லியிருப்பது புதிது. புரிந்தால் வாழ்க்கை இனிது..!!
பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். ஆனால், தந்தை, கணவன், மகன், சகோதரன் போன்ற உறவுகளில் கட்டுண்டு போய், ஆண்களுக்கு வழி விட்டு, அவர்களை சாதிக்க வைத்து சந்தோஷப்படுகிறார்கள். அந்த உயர்ந்த பண்பு ஆண்களுக்கு வராது..!! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று தமிழில் ஒரு பதம் உண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரை அது �அழிவதும் பெண்ணாலே அல்ல, ஆள்வதும் பெண்ணாலே..!!� தான். தேசத்திற்கு மன்னனாக இருந்தாலும், அவன் தாய்க்கு மகன். ஒரு ஆண் தேசத்தை ஆள்வதில் பெண்ணுக்கு அதிக பங்கு உண்டு. Yes, Woman is the real king maker.! இத்தனை பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றுவோம். அவர்கள் மனதில் உள்ள ஆறா இரணங்களை ஆற்றுவோம். உலகம் உயிர்த்து செழித்து வாழ, அதுவே சிறந்த வழி..!
அன்பெனும் பெருநதி
-
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன்
விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும்
தோழமையும...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக