அதெல்லாம் சுகமான நாட்கள்..! கழுத்துக் கயிறு அவிழ்த்து விட்ட கன்றுக்குட்டியாய், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் அலைந்து திரிந்த ஆனந்த வேளைகள்..! நான் சின்ன வயதில் நட்டு வைத்த �நட்ராஜ்� பென்சில் போல மிகவும் ஒல்லியாக இருப்பேன் (இன்னும் புரியவில்லை என்றால் எளிய உதாரணம் சொல்கிறேன். எகிப்து பிரமிடில் புதைத்து வைத்த �மம்மி�யை பொழுது போகாமல் தோண்டி எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன்..!). இந்தக் குறை எனக்கு இடைவிடாமல் கவலையை கொடுத்து கன்னச் சதையை மேலும் கரைத்தது. �எ(த்)தைத் தின்னால் பித்தம் தீரும்..?� என்பது போல் உடல் எடை ஏற ஊரில் உள்ளவர்கள் சொன்னதையெல்லாம் ஒரே மூச்சில் தின்று தீர்த்தேன். ஓரோபோலின் (Orobolin) என்ற விலையுயர்ந்த மாத்திரை (அப்போதே ஒன்று ஐந்து ரூபாய்..!) தின்றால் உடம்பு போடும் என்று ஒரு உதவாக்கரை �ஊதி� விட்டு போக, நான் அதை ஒரேயடியாக பிடித்துக் கொண்டு, அந்த மருந்து கடையின் ஒரு மாத வருமானத்தை �ஓரோபோலின்� வாங்கித் தின்றே ஒட்டு மொத்தமாக கொடுத்தது தனிக் கதை.
ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு உடனே போய் ஒரு ரூபாய் கொடுத்து எடை மிஷினில் ஏறி நின்று �எடை ஏறியிருக்கிறதா..?� என்று ஏக்கத்தோடு பார்த்த காலங்களை எண்ணிப் பார்த்தால் சிரிக்கிற சிரிப்பில் கண்களில் கண்ணீர் சிதறும். இத்தனை செய்தும் கையில் இருக்கும் காசு கரைந்ததே தவிர தூசு அளவு கூட எடை கூட வில்லை. எடையை ஏற்றும் திட்டத்தில் கையில் இருக்கும் காசு கண்மண் தெரியாமல் செலவாவதை நினைத்து கவலையில் இருந்த எடையும் எக்கச்சக்கமாக குறைந்தது உபரித் தகவல்..! இந்த நிலையில் தான் என்னை மாதிரியே மற்றொரு மம்மியின் மறு அவதாரமாக இருந்த நண்பனின் நட்பு எனக்கு ஏற்பட்டது. அவன் சொன்ன �திடீர்� தகவல் என்னை திகிலடையச் செய்தது. அப்படி என்ன சொன்னான்..?
�பீர் குடித்தால் உடல் எடை ஏறும்� என்றான். ஒரு கையில் வறுத்த சிக்கன் கறியையையும், மறு கையில் மது பானக் கோப்பையையும் வைத்துக் கொண்டு, சினிமா வில்லனை வஞ்சகத் திட்டம் போட வைக்கும் வினைப் பிடித்த பானம் என்றும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்தில் விற்கும் மதுபானத்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, உற்ற மனைவியை உருட்டி உருட்டி அடிக்க வைக்கும் பானமாகத்தான் அதை அதுவரை நினைத்திருந்தேன். அன்பரின் அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் இறுதியாக சொன்ன �எடை ஏறும்� என்ற வாக்கியம் மனதில் ஏறி என்னை மயக்கிவிட்டது. ஒரு வழியாக உடல் எடையை ஏற்றும் பொருட்டு பீரின் மீது பிரியம் பீரிட்டது. அதனால் அதை வாங்குவதற்காக வகை வகையாக திட்டம் போட ஆரம்பித்தோம்.
மூன்று நாள் முழுவதும் மூச்சு முட்ட சிந்தித்ததில் முடிவில் திறமையான திட்டம் உருவானது. என் அருமை நண்பனின் தென்னந்தோப்பை பீர் குடிக்க பயன்படுத்தும் �பார்� ஆக்க முடிவெடுத்தோம். அடுத்த ஊரின் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நான் நின்று கொண்டு, அந்த ஊரின் ஒதுக்குப் புறமாக இருக்கும் �எடை ஏற்றும்� அதிசய மருந்து கடைக்கு என் உயிர் நண்பனை (எனக்கு போக பயமாக இருந்ததால் அவனை ஏகத்துக்கு ஏற்றி விட்டு போக வைத்தேன். எனக்காக ரிஸ்க் எடுக்கிறான் அல்லவா..? அதான் உயி(பீ)ர் நண்பன்..!!) உரு ஏற்றி அனுப்பி வைத்தேன்.
அவன் அங்கிருந்து போன பிறகு என் நிலை சங்க காலத்தில் தலைவனைப் பிரிந்த தோழியின் நிலையானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு �உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..!� என்று ஒரு மணி நேரமாய் தவித்திருக்க, ஒரு வழியாய் வந்து சேர்ந்தான். இன்கம் டாக்ஸ் ரெய்டு வர இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் கருப்புப் பணத்தை கவனமாய் பதுக்கும் பலே அரசியல்வாதி போல ஆளுக்கொன்றாய் வாங்கி வந்த �ஆ�ப் (Half)�ஐ அடுத்தவர்கள் அறியாமல் பைக்குள் போட்டு காணாமல் ஆக்கினேன். அடுத்து சரக்குக்கு சரியான சைட் டிஷ் (Side dish) பற்றி எங்கள் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. இறுதியில் ஐந்து பைசா முறுக்கு பனிரெண்டை பதவிசாக வாங்கிக் கொண்டோம். அஞ்சு வயதில் அரை டவுசர் போட்டு திரிந்த போது தின்று தீர்த்த அதே முறுக்கு, அரைக் கழுதை வயதில் �ஆ�ப்� அடிக்க சைட் டிஷ் ஆனதில் சராமாரியாக சந்தோஷப்பட்டோம்.
எங்கள் பயணம் எச்சரிக்கையுடன் �தெய்வீக� தென்னந்தோப்பிற்கு ஆரம்பமானது. முதல் முதலில் பீர் குடிக்கப் போவதை நினைத்து உடல் உற்சாகமாய், மூடி திறந்த முழு பீராய் பீறிட்டது. மனமோ பய உணர்ச்சியில் பல்லாங்குழி ஆடியது. �மம்மி� நண்பன் மமதையுடன் �ம்ஹ�ம்..! இதெல்லாம் ஒரு விஷயமா..? ஒரு பாட்டில் பீரை நான் ஒரே மூச்சில் குடிப்பேன்..! என்று பெருமை அடித்தான். அய்யய்யோ.! சர்வதேச குடிகாரனுடன் சகவாசம் வைத்திருக்கிறோமோ என்று என் மனம் மறுகியது. உடல் எடையை எப்படியாவது ஏற்றிவிட வேண்டும் என்ற என் எண்ண நெருப்பில், அவன் பேச்சு பெட்ரோலை ஊற்றியது. ஒரு வழியாய் இடம் பிடித்து அமர்ந்து �ஊற்றுடா பீரை..!� என்று உற்சாகத்துடன் கூவிய போது தான் ஒரு விஷயம் உறைத்தது.
ஒளிந்து, ஒளிந்து வந்த பதட்டத்தில் ஊற்றிக் குடிக்க ஒரு குவளை கூட எடுத்து வரவில்லை. சரி..! �ஹார்லிக்ஸ்� போல் அப்படியே சாப்பிடலாம் என்று திரைப்படங்களில் பார்த்து தெரிந்து கொண்டபடி, பாட்டிலின் மேலே ஒரு தட்டு, கீழே ஒரு தட்டு தட்டி மூடியை திறக்க முயற்சி செய்தால் �திறப்பேனா..?� என்றது. பல்லால் கடித்து படாரென திறந்தேன். சக்தியின்றி மூடியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சர்வதேச குடிகாரனுக்கும் �சடக்�கென்று திறந்து கொடுத்தேன். பீர் திரவம் நுரைத்துப் பொங்கி ஆவல் கொண்ட மனதை அசைத்துப் போட்டது. ஆனால், ஆல்கஹால் வாசனை அருவருப்பை ஏற்படுத்தியது. �அர்னால்டு� ஆகும் கனவு �அருவருப்பை� அடித்து சாய்க்க, அங்கே எங்கள் அட்டகாசம் அமைதியாய் தொடங்கியது. �உனக்கு பழக்கமில்லாததால் நான் குடிக்கிறதைப் பார்த்து விட்டு அதே மாதிரி நீயும் குடி..!�என்று குடிப்பதற்கான செயல் திட்டம் வகுத்துக் கொடுத்தார் ச.தேச குடிகாரர். திறந்து வைத்த பீர் பாட்டிலை வெகு தெனாவட்டாக வாயில் வைத்து, கொஞ்சமாக சரித்துக் கொண்டு அணு உலை போல் அட்டகாசமாக பெருமூச்சு விட்டார். அவரை பார்த்து நான் தொடங்கினேன்.
முதலில் முகர்ந்து பார்த்தேன். பிறகு மூக்கை பொத்திக் கொண்டு முக்கால்வாசியை விழுங்கினேன். இனிப்பும் கசப்புமாய் இரக்கமில்லாத அரக்க திரவம் இம்சையாய் இறங்கியது. ஆனால் எந்த ஒரு தடுமாற்றத்தையும் கொடுக்காமல் தங்கு தடையில்லாமல் சென்றதில் நான் சந்தேகப்பட்டு சரக்கில் கலப்படம் எதுவும் இருக்குமோ என்று கேட்பதற்காக ச.தேச குடிகாரரை பார்க்க திரும்பிய நான் அதிர்ச்சியில் அயர்ந்து போனேன்..! கால் பாட்டில் கூட காலி செய்யாத என் உயிர் நண்பர் கண் சொருகி, கை கால்களை இயந்திரம் போல் அசைத்து அடாவடி செய்து கொண்டிருந்தார். எனக்கு பார்க்க பார்க்க பைத்தியம் பிடித்தது. முக்கால்வாசிக்கு மேல் குடித்த நான் ஒன்றும் நிகழாமல் ஒழுங்காய் உட்கார்ந்திருக்க, கால்வாசி கூட கடக்காத கண்ணியத்திற்குரிய நண்பர் கண்ணில் போதை ஏறி �கண்டபடி� இருந்தார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. �போதையேறாத பாவியாகி விட்டேனே..?� என்ற பதைபதைப்பில் இருந்த எனக்கு, பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. போதை எதுவும் ஏறாமல் பொட்டிப் பாம்பாய் இருந்தால், நண்பர் பாதை மாறி �குடியில் சிறந்த கோமான்� என்று மற்ற சகாக்களிடம் என்னைப் பற்றி சளைக்காமல் சொல்லி சங்கடப்படுத்திவிடுவார் என்று வலது பக்க மூளை வலுக்கட்டாயமாக எச்சரிக்க, அந்த ஆபத்தை சரி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசரத் தகவல் அடுத்த பக்க மூளையிடம் இருந்து வந்தது. உடனே உடம்பின் ஒட்டு மொத்த உறுதியையும் என் ஒரு காலுக்கு கொண்டு வந்து, எதிரே எள்ளி நகையாடிக் கொண்டிருந்த என் உயிர் நண்பனின் இடுப்பில் விட்டேன் ஒரு உதை..! நண்பர் எகிறிப் போய் எங்கோ விழுந்தார். சுதாரித்து எழுந்தவர் சுள்ளென்ற கோபத்துடன் அருகில் வந்து �ஏண்டா அடிச்சே..?� என்று எதிர்க் கேள்வி கேட்டார். அதற்கு பதிலாக ஒரு அறை விட்டேன் கன்னத்தில்..! சகாவுக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. �சும்மா கிடந்தவனை சுறுசுறுப்பு ஏற்றி கூட்டி வந்து, குளிர்பானம் கொடுத்தால் ரவுண்டு கட்டி அடித்து ராவடி செய்கிறானே..!� என்று அவர் கவலையுடன் புலம்ப ஆரம்பித்தார்..!
நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக �பக்கா� குடிகாரனைப் போல் படு ஜோராக நடித்துக் கொண்டிருந்தேன். �இனி இவன் சகவாசமே வேண்டாம்..!� என்று மிச்சம் வைத்த முக்கால் பாட்டிலை எடுத்து கொண்டு, என்னிடமிருந்து பிரிந்து நாற்பதடி தூரத்தில் நல்லபடியாக அமர்ந்து கொண்டார். நான் என் உடம்பின் கோணத்தை மாற்றி, மல்லாந்து படுத்துக் கொண்டு �என் இனிய நண்பரை என்ன செய்து இம்சிக்கலாம்..?� என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். யோசனையிலேயே நேரம் கரைய �ஓவ்� என்ற அலறல் ஓங்காரமாக கேட்டது. அலறியடித்துக் கொண்டு எழுந்த நான், என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை �அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்� என்று தள்ளி வைத்து விட்டு, அலறல் வந்த திசை நோக்கி அம்பாய் பாய்ந்தேன்.
அங்கே நான் கண்ட காட்சி, எனக்கு ஒரு குடம் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்த மயக்கத்தை உண்டாக்கியது. �அதிகம் குடிப்பதில் அதிரடி சாதனை செய்வதாக� சொன்ன என் அன்பு நண்பர் அவரைச் சுற்றி இந்தியாவின் மேப்பையும், அதன் இயற்கை வளங்களையும் �வாந்தியால்� வரைந்து போட்டு வசமாய் மயக்கம் போட்டிருந்தார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. �என்ன கருமம்டா இது..?� என்று கடிந்து கொண்டேன். கிடந்த நிலையை பார்த்தால் எழுந்து நடக்க ஏற்பாடு செய்வதெல்லாம் வீண் என்பது புரிந்தது. திட்டமிட்டிருந்த என் �ஆஸ்கார் விருது� அபிநயத்தை அடுத்த நொடியில் கைவிட்டேன். சவமாய் கிடக்கும் சகாவை, சமமாய் நடக்க வைப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். சினிமாவில் பார்த்த �சீன்�கள் சீராய் சிந்தனைக்குள் சிலிர்த்துக் கொண்டு வந்து போனது. மூளைக்குள் ஐடியா மின்னல் பளிச்சிட்டு அழகாய் வேலை செய்தது.
சிங்கம் கிழித்துப் போட்ட சிறு மானின் உடலை, கடைசியில் வந்த கள்ள நரி புதருக்குள் இழுத்துச் செல்வது போல, அவன் உடம்பு மண்ணில் தேய, தேய இழுத்துப் போய் அங்கிருந்த முழங்காலளவு தண்ணீர் உள்ள மணற்கிணற்றில் தள்ளி விட்டேன். எனக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத அந்த அற்புத சினேகிதனை மண்டியிட்டு அமர்ந்து மடியில் போட்டு குளிப்பாட்டினேன். அத்தனை சேவை செய்தும் அசைந்து கொடுக்காமல் மௌனத்தை அடைகாத்தார் மகான். மீண்டும் கரைக்கு இழுத்து வந்து போட்டு, காலடியில் உட்கார்ந்து கொண்டு கலக்கத்துடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.
வினாடிகள் நிமிடத்தை விரைவாய் தின்று விரைந்து கொண்டிருந்தது. அசதியில் அப்படியே உறங்கிப் போனேன். எதார்த்தமாக விழித்த போது எங்கோ தூரத்தில் மட்டும் ஒரு வெளிச்சப்புள்ளி. நிலா வெளிச்சத்தில் நிலவு கூட தெளிவாக தெரியவில்லை. ஆனந்த சயனத்தில் இருப்பவரை அசைத்துப் பார்த்தேன். அசராமல் கிடந்தான் பரதேசி..! �ஒருவேளை அதிகம் குடித்ததில் செத்துப் போய்விட்டானா..?� என்ற சந்தேகம் ஏற்பட, நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தேன். அப்பாடா..! மூச்சு வந்தது நிம்மதியாக இருந்தது. அடுத்த அரை மணி நேரம் கழித்து அரை இஞ்ச் அசைந்தான். அப்போது தான் எனக்கு உயிர் வந்தது. உடலைப் பிடித்து உலுக்கினேன். ஒரு வழியாக உணர்வு திரும்பியவன், யார் மயக்கம் தெளிந்து எழுந்தாலும் கேட்கும் அதே கேள்வியை அட்சரசுத்தமாக கேட்டதும் அசந்து போனேன்.
அவன் கேட்ட கேள்வி � நான் எங்கே இருக்கேன்..!�. கோபத்தில் கொதித்தாலும் கண்ணியத்துடன் கட்டுப் படுத்திக் கொண்டு �ம்ம்.. உன் மாமியார் வீட்டில்..!� என்றேன். கொஞ்சம் ஓவராய் பேசினாலும் ஓங்கி ஒரு அறை விட்டு உயிரை எடுத்து விடுவேனோ என்ற அநியாய கோபத்தில் நான் இருந்தேன். என் நிலை உணர்ந்தவன் எக்குத் தப்பாய் பேசி �எத்து� வாங்காமல் எதார்த்தமாக எழுந்து, இயல்பாக நடக்க ஆரம்பித்தான். எடையை ஏற்ற வேண்டும் ஆசைப்பட்டு, இப்படி ஒரு �எடுபட்ட பயலோடு� கூட்டு சேர்ந்ததை நினைத்து குற்ற உணர்வோடு என் தலைவிதியை நொந்து கொண்டே அவனோடு சேர்ந்து நானும் நடக்க ஆரம்பித்தேன். அத்தோடு எடையை ஏற்றும் திட்டம் எனக்கு எட்டாக் கனியானது..!
அன்பெனும் பெருநதி
-
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன்
விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும்
தோழமையும...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக