நேரம்:

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 மார்ச், 2010

நீ..!

 நீ..
தொடா
வானம்.!

நீ..
சுடா
தீ..!

நீ..
வாடா
மலர்..!


நீ
ஓடா
மான்..!

நீ
பாடா
தேனீ..!


நீ
கரையா
சர்க்கரை..!

நீ
உறையா
பனிக்கட்டி..!

நீ..
வரையா
ஓவியம்..!

நீ
இறையா
விண்மீன்..!

நீ
குறையா
செல்வம்..!

நீ
மறையா
நிலவு..!
__________________

நீ
பூங்கா
வாசம்..!

நீ
பொங்கா
எரிமலை..!

நீ
நீங்கா
உயிர்..!

நீ
மங்கா
புகழ்..!

நீ
(ஸ்ரீ)லங்கா
தமிழ்..!

-------------------

நீ
விழுங்கா
உணவு..!

நீ
துலங்கா
உண்மை..!

நீ
வழங்கா
பரிசு..!

நீ
கலங்கா
தமிழச்சி..!

-----------

நீ
படிக்கா
கவிதை..!

நீ
வெடிக்கா
மொட்டு..!

நீ
துடிக்கா
இதயம்..!

நீ
அடிக்கா
அப்பா..!

நீ
கடிக்கா
குலோஜாமூன்..!

நீ
நடிக்கா
(கவர்ச்சிக்)கன்னி..!

நீ
இடிக்கா
மாளிகை..!

நீ
வடிக்கா
பொற்சிலை..!

நீ
குடிக்கா
மது..!

நீ
ஒடிக்கா
கரும்பு..!

நீ
முடிக்கா
கவிதை..!

--------------------


நீ
தீண்டா
நாகம்..!

நீ
தாண்டா
எல்லை..!

நீ
தூண்டா
கிளர்ச்சி..!

நீ
சீண்டா
சில்மிஷம்..!

நீ
ஏண்டா
அழகு..?!

------------

நீ
கறக்கா
பால்..!

நீ
பறக்கா
மயில்..!


நீ
பிறக்கா
குழந்தை..!

நீ
மறக்கா
காதலி..!

நீ
துறக்கா
இன்பம்..!

நீ
திறக்கா
சொர்க்கம்..!

நீ
இறக்கா
காதல்..!

----------

நீ
சுட்டா
விரல்..!

நீ
குட்டா
கை..!

நீ
கொட்டா
மழை..!

நீ
எட்டா
கனி..!

நீ
வெட்டா
வாழை..!

நீ
பட்டா
நிலம்..!

நீ
சொட்டா
தேன்..!

நீ
தொட்டா
இன்பம்..!

------------------

நீ
தீரா
பசி..!

நீ
ஆறா
சோறு..!

நீ
கூறா
நகைச்சுவை..!

நீ
பாரா
அதிசயம்..!

நீ
ஏறா
சிகரம்..!

நீ
மாறா
கொள்கை..!

நீ
சோரா
மழலை..!

நீ
வாரா
சுனாமி..!

நீ
கோரா
நிவாரணம்..!

நீ
மேரா
லடிக்கி..!


----------------

நீ
வணங்கா
சிலை..!

நீ
சிணுங்கா
செல்ஃபோன்..!

நீ
முணங்கா
காமுகி..!

நீ
இணங்கா
பசு..!

நீ
சுணங்கா
வீராங்கனை..!!


----------------------


நீ
அறுக்கா
வாள்..!


நீ
கருக்கா
மேகம்..!

நீ
பருக்கா
பாவை..!

நீ
உருக்கா
பொன்..!


நீ
முறுக்கா
காதலி..!

நீ
வெறுக்கா
இதயம்..!


நீ
மறுக்கா
கொடையாளி..!

நீ
(உயிர்) எடுக்கா
கொலையாளி..!

------------------


நீ
ஏற்கா
மதம்..!

நீ
விற்கா
கல்வி..!

நீ
கற்கா
கலவி..!

நீ
விளங்கா
புதிர்..!

நீ
கலங்கா
மனம்..!

நீ
முழங்கா
மந்திரம்..!

நீ
துலங்கா
செப்புச்சிலை..!

நீ
புழங்கா
அரண்மனை..!


----------------



நீ
உழுகா
நிலம்..!

நீ
ஒழுகா
தேனடை..!

நீ
விழுகா
பைசா கோபுரம்..!

நீ
அழுகா
மழலை..!

நீ
புழுகா
அரசியல்வாதி..!

நீ
முழுகா
பொண்டாட்டி..!

---------------------------------


நீ
அள்ளா
வைரம்..!

நீ
கிள்ளா
மலர்..!

நீ
நில்லா
தேர்..!

நீ
சொல்லா
சிந்தனை..!

நீ
கொள்ளா
போதைப்பொருள்..!

நீ
வெல்லா
வீராங்கனை..!

நீ
தள்ளா
தாய்..!

நீ
கொல்லா
கொலையாளி..!

-----------------


நீ
உடுத்தா
பட்டு..!

நீ
படுத்தா(த)
குழந்தை..!

நீ
தடுத்தா
நியாயம்..!

நீ
கொடுத்தா
முத்தம்..!

நீ
எடுத்தா
பாக்கியம்..!


-----------------------

நீ
வாழா
அன்னம்..!

நீ
சோழா
பூரி..!

நீ
கூலா
கோக்..!

நீ
ஆளா
தேசம்..!

நீ
வீழா
சாம்ராஜ்யம்..!

நீ
மீளா
சொர்க்கம்..!

------------------

நீ
கொழுக்கா
குதிரை..!

நீ
குலுக்கா
(நாட்டியத்)தாரகை..!

நீ
பழுக்கா
நெல்லி..!

நீ
உலுக்கா
மாமரம்..!

நீ
வெளுக்கா
இரவு..!

நீ
அலுக்கா
பாடம்..!

நீ
சலிக்கா
விளையாட்டு..!

------------------------------


நீ
காணா
காட்சி..!

நீ
தோணா
கற்பனை..!

நீ
கோணா
குணம்..!


நீ
பேணா
அழகு..!

நீ
தானா
இதயம்..?









செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஒரு கிராமி(யனின்) இசைப்பயணம்..!!

 

இசைக்க வந்த புயலே..!!
அசைக்க முடியா ஆற்றலே..!!

திசையெங்கும் உன் இசையால்
திக்குமுக்காட வைக்கிறாய்.!!
பசை போட்டு இதயங்களில்
பற்றி அமர்கிறாய்..!!

அன்றொரு நாள் நீ பெற்ற
ஆஸ்கார் விருதுக்கே
அகிலம் அதிர்ந்தது..!!

அதற்கு மேலும் உன்
அழகு தொப்பியில்
அடுத்ததொரு சிறகாய்
கிராமி விருது கிரீடம்..!!

இசையெனும் மந்திரத்தால்
இவ்வுலகை மயக்கியவன் நீ..!!
அசையாத மனிதரையும்
ஆட வைத்தவன் நீ..!!

புவியுலகில் புகழுக்கும் விருதுக்கும்
புலம்புகின்றவர்களுக்கு மத்தியில்
இசையுலகில் இத்தனை சாதித்தும்
ஆசையில்லா அபூர்வம் குறிஞ்சி நீ..!

இசையை புகழ்ந்தால்
இறைவனாக தன்னை நினைக்கும்
தலைக்கன ஞானிகள் இங்கே..!!

ஆனால்
இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும்
என்றும் மாறா உன் புன்னகை
எங்கும் காணா முரண்..! அதனால்
இசையும் உன்னிடம் சரண்..!!

எட்டுத்திக்கும் இசையால்
கொட்டி முழக்கும் உன்னிடம்
தலைக்கனமே தவறுணர்ந்து
தலை குனிகிறது.!!

கிராமத்தில் தொடங்கிய
உன் இசைப்பயணம்
கிராமி விருதை பெற்றும்
கிஞ்சித்தும் தளர்ச்சியில்லை..!!

உன்னிடம்
புகழ் போதையில்லாததால்
தடுமாற்றம் தகர்ந்து போனது..!!
போக வேண்டிய தூரம் உனக்கு
புரிந்து போனது ..!!

இந்த பணிவும், பண்பும்
இருக்கும் வரை
உலகம் உன்னை இன்னும்
உயரத்தில் வைக்கும்
அந்த அற்புத நாள்
அத்தனை தொலைவில் இல்லை..!!

அகில உலக அகராதிகளில்
இசைக்கு இன்னொரு பெயர்
ஏ. ஆர். ரஹ்மான்
என்றாகும் நாளுக்காய்
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்..!!

வாழ்த்துகள்..!!

திங்கள், 14 ஜூலை, 2008

படிக்கப்போறேன்..!

கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!

படிச்சி கலெக்டராவணும்னு
பாடுபடும் அப்பனோட ஆசை!
மடிப்பு கலையாத ட்ரெஸ்ஸோட
மகராசி என் ஆத்தாவுக்கு நான்
மனம் நெறஞ்சி வாழணுமாம்..!!

அப்பன், ஆத்தா ஆசை நிறைவேத்த்
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே போறேன்..!
விலா ஒடிக்கும் வீட்டுவேலை,
திணறடிக்கும் தீப்பெட்டி வேலை
எல்லாத்துக்கும் இனி விடுதலை..!!

பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

அடம் பிடிக்கும் அழகி..!

இல்லறத்தேரில்
உனை ஏற்றி
இன்ப உலகை
சுற்றிக்காட்டத்தான்
எனக்காசை..!
ஆனால் நீயோ
அன்பென்ற
அச்சாணியை தராமல்
அடம்பிடிக்கிறாயே..!!

யார் குற்றம்.?

செய்வது எதுவாகினும் உயிர்
உய்த்தல் என்பது உன் கையில்..!
துயரம் என்னை தூக்கிலிட்டாலும்
உயரம் தாண்டி உனை அடைவேன்
தேடி வந்தது குற்றமென்றால்
நாடி வந்த என்னை
நற்றாற்றில் விட்ட உன்
குற்றத்தை என்ன சொல்ல..?

புதன், 16 ஏப்ரல், 2008

முளைக்கும் காதல்..!

புதைத்து தான் பார்த்தேன்...
என் மனமென்ற கல்லறையில்
உன் இனிய நினைவுகளை..!
அது காதலாய் முளைத்து,
கண்டபடி வளர்ந்து நிற்குமென்று
கனவிலும் எண்ணவில்லை..!

காதல் கொடுமை.!

இனியது என்று நான்
இங்கே பட்டியலுடன்
காதலின் விரிவுரை எழுத
கடைசிப் பக்கங்கள் வரை போதுமா..?

விரிந்து பரந்த அதன்
வீரியத்தை விளக்கி சொல்ல
ஒருங்குறியின் ஆதரவு
ஒரு போதும் போதாது..!

அதற்கு பதிலாய் என்னை
கொன்றொழிக்கும்
கொடிய பிசாசென்று
ஒரே வார்த்தையில்
நம் பிரிவை சொல்லவா..?
__________________

ஹைக்கூ: வங்கி கடன்..!

வங்கியில் கடன் வாங்க
அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்
நீங்கள் பணக்காரர் என்று..!!

இதயத்தின் ஏக்கம்..!

உற்சாக ஊற்று வற்றியது
உனை நீங்கியதால்..!
உற்சவ தினமாயிருந்தன
உன்னுடன் நானிருந்த நாட்கள்.!

சிற்பமாய் உனை கண்ட நாட்கள்
சொற்பமென்றாலும் அது சொர்க்கம்.!
அற்ப பணத்தை தேடி இங்கே
அலையும் வேலையில் எனக்கு
உற்சாக பானமாய் உடனிருப்பது
உன் நினைவுகள் மட்டும்..!!

கனவும், காதலியும்..!!

நிமிடங்கள் யுகங்கள் ஆகி
நித்திரை போன காலமது.!

புரண்டு படுத்தே படுக்கை
புண்ணாகிப் போன இரவுகள்!
அரண்டு விழிக்க வைக்கும்
அர்த்தமில்லா கனவுகள்.!!

உருண்ட காலச்சக்கரத்தில்
உன்னருகே ஒரு நாள் நான்..!
இருண்ட காலம் விலகி
இன்ப உலகில் சஞ்சரிப்பு..!

வருடங்கள் நிமிடங்களாய்
வண்ணம் பூசிய வனப்பு.!!
உறக்கம் கலைந்து உண்மை தெரிய
இரக்கமற்ற அரக்க உலகில் நான்..!

எனக்காய் ஒரு இதயம்..!

உள்ளக்காதலை என்னுள்
உறுதி செய்ய உன் வாயால்
அள்ள, அள்ள குறையா
அமுத சொற்கள் வேண்டாம்..!

இதயத்தில் எனை வைத்து
இறுதி வரை எனக்காய்
எதையும் செய்யும்
என்னுயிராய் நீ இருப்பாயாடா..?

பிரியாத பிரிய சகி..!

நிஜமில்லை நம் நீண்ட பிரிவும்,
நெஞ்சை உலுக்கும் தனிமையும்..!
உள்ளுக்குள் உறைந்திருக்கும்
உன்னுடனேயே என் பொழுதுகள்
ஒவ்வொரு நிமிடமாய் கரைகிறது!

நம் இனிய நினைவுகள் கை கோர்க்க..
பகிர்ந்து கொண்டவை பக்கமிருக்க..
என் இதயம் எப்போதும் போல்
காதலை கசிந்த படி..!

எனக்கொன்றும் வித்தியாசமோ,
விநோதமோ தெரியவில்லை..!
உன்னை பிரிகையில்
நான் தான் சொன்னேனே..
உன்னுள் இருக்கும் என்னை
வெளியே தேடாதே என்று..!!

இனிக்கும் காதல்..!

நீதான் நினைவுகளாய்
எனக்குள் நிறைந்து வழிகிறாய்..!
உன் இனிய நினைவுகளும்,
நீ குடித்து மிச்சம் தந்த
எச்சில் தே(ன்)நீரும்
ஏற்படுத்தி விடுமோ சர்க்கரை நோயை
என்ற கவலையில் இப்போது
என் இதயம்..!!

உனை நோக்கி ஒரு பயணம்..!

ஆயுதமின்றி, ஆதரவின்றி
செல்லாத வழியில்
செய்வதறியாத என் பயணம்.!

உள்ளத்துள் உனை வைத்து
உயிர் பயத்துடன் தொடர்கிறது..!
வழியெங்கும் வலியென்றாலும்
போதையாய் உன் காதல்..!

முள்ளாய் உன் பிரிவிருக்க
முனைப்புடன் கால்கள் உனை நோக்கி.!
எண்ணியது நடக்காது போனாலும்
முயற்சித்த புண்ணியம் அது போதும்
புண்பட்ட இதயத்திற்கு புத்துயிர் தர..!!

பூங்காவன காதல்..!!

அன்புத்தேனை சேகரிக்க
அனுதினமும் அலையும்
ஆண் வண்ணத்துப்பூச்சி நான்..!

அள்ள அள்ளக்குறையா
காதல் தேனை கனிவுடன்
தரும் வண்ண மலர் நீ..!

தேன் குடித்து நானும்,
தேன் கொடுத்து நீயும்
களைக்காது போனாலும்
போதுமென்று காலம் ஒரு நாள்
பொறாமையுடன் சொல்லிற்று.!!

காலத்தின் கட்டளையை
கவலையுடன் ஏற்றோம்..!!
பிரிவென்பது நம்மை
பிரித்து போட்டாலும்
என் வண்ணம் உன்னிலும்
உன் மணம் என் உடலிலுமாய்
இருந்து உயிரோடு வைத்திருக்கிறது
நம் பூங்காவன காதலை..!!

கடவுள்களுக்கு கண்டனம்..!

தெரியாமல் போனது
தெய்வத்தின் பலவீனங்கள்..!!
அவதார புருஷர்களுக்கு
ஆயுள் மிகக்குறைவு..!!
பாலாபிஷேக கடவுளை
பல்வலி படுத்துகிறதாம்..!!

பகுத்தறிவை பயன்படுத்தாமல்
பாழாகும் கூட்டம் இங்கே..!
ஏழையின் வயிற்றிலடித்து
ஏய்த்துப்பிழைக்கும் இறைவன்கள்
இறுமாப்புடன் வரிசையில்.!!

என்ன கொடுமையடா இது..?
எப்போது சிலிர்த்து எழும்
சிந்தனை பறவை
இந்த சீர்கெட்ட மாக்களிடம்..?

காதல் பாரம்..!!

பற்றித்தழுவும் பஞ்சு மெத்தை, பட்டு விரிப்பு தருமா - என்
நெற்றி தலை முடி கோதிவிடும் என்னவளின் பட்டு விரல்கள் தரும் சுகத்தை..?

நெய் மணக்கும் உணவு, நெஞ்சை தொடும் இசையும் தந்துவிடுமா - அவள்
கை பிசைந்து காதலோடு கொடுக்கும் ஒரு கவளச் சோற்றின் ருசி..?

உலகம் சுற்றி நான் கண்ட அழகனைத்தும் ஒன்றிணைந்தாலும் - என்னை
கலங்கடிக்கும் காதல் தேவதையின் அழகிற்கு ஈடாகுமா?

மண்ணில் நான் உதித்த காரணத்தை அறியாது தவித்திருந்தேன் - மங்கை அவள்
என்னில் கலந்த போது அதன் காரணம் அறிந்து ஆறுதல் கொண்டேன்.

நெஞ்சின் உறுதியை நேசத்திற்குரியவளுக்கு இரும்பிற்கு ஈடாய் வைத்த இறைவன்
பஞ்சினும் மென்மையாய் உருமாறி உள்ளன்பை காட்ட படைத்ததேனோ..?

முள்ளாய் மாறி முகம் கூட காட்ட மறுத்த என் வண்ண ரோசா - என் கரம் பற்றிய பின்
கள்ளாய் மாறி காதல் போதை ஏற்றும் கண்கட்டு வித்தை நிகழ்ந்தது எப்படி..?

நானே எனக்கு பாரமாகி போய் பரிதவித்திருக்கும் வேளையில் - அந்த கனிமுக கங்காரு
தானே விரும்பி ஏற்று, நான் தந்த உயிர் தாங்கி தன்னிகரற்ற தாயாய் ஆனாளே..!!

இது காதல் காலம்..!

என் மன சாலை ஓரமெங்கும்
இறைந்து கிடக்கும் கனவுப்பூக்கள்
மீண்டும், மீண்டும் பொங்கி சிதறி
சீண்டி சிரிக்கும் கோடி வர்ண சிதறல்கள்

பசித்து புசித்த எனக்கு
ருசிக்க உணவிருந்தும் பசிக்கவில்லை
விழிகள் திறந்திருந்தும் உள்ளுக்குள்
வழிந்தோடும் கனவு ஜாலங்கள்
மொழி கொண்டு சொல்ல இயலாததை
விழி கொண்டு உணர்த்த துடிப்பு

தனிமை பிடிக்கிறது
இருளும் இனிக்கிறது
எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்
இலக்கை தொட்டுவிட்ட நினைப்பு
இன்னும் முழுமையடையா தவிப்பு

வாழ்க்கை வண்ணமயமாகி போனது
வசந்தத்தின் வாசம் எங்கும் நிறைந்தது

தன் மண்ணை பிரிந்த தமிழனை போல்
உன்னை காணா நொடிகள் நரகம்..!

இப்படி சிலிர்ப்பும், தவிப்பும், துடிப்பும்
இம்சையாய் மாறி.. மாறி..என்னுள்..!
என்ன நேர்ந்தது எனக்கு?

ஒரு சொல்
வாழ்வை பூக்க வைத்தது
வசந்தத்தின் வாசல் திறந்தது

"விரும்புகிறேன்" என்று நீ சொன்ன
ஒற்றை சொல்லின் வித்தையா இவை?

இது தான் காதலா..?

ஆஹா..!
இது எனக்கு காதல் காலம்..!

அன்னைக்கு அர்ப்பணம்..!!

அம்மா..!
தனக்கென்று வாழா
தன்னிகரற்ற ஜீவன் நீ..!
கணக்கின்றி இரவுகளில்
கண் விழித்து காத்தவள் நீ..!

எனக்கென்று உதிரம் தந்த
என் அன்னை நீ..!
பிணக்கென்ற நேரமெல்லாம்
பிள்ளை பாசம் பொழிந்தவள் நீ..!
உனக்கென்று எதுவும் தேடா
உத்தம பெண் நீ..!

அன்னை வடிவில் வந்த
அன்பின் அவதாரம் நீ.!
என்னை காத்து வளர்த்த
என் இதய தெய்வம் நீ..!
கண்ணின் இமை போல்
கருத்தாய் பார்த்தவள் நீ..!

தன்னலம் மறந்தே போன
தகைமை வாய்ந்த தாய் நீ..!
என்ன செய்து கடன் தீர்ப்பேன்..?
என்று உன் மடி பார்ப்பேன்..?
என் செல்லத்தாயே...
எனக்கு எல்லாம் நீயே..!!

தேவதைக்கு திருவிழா..!

பெண்ணே..!
கண்ணில் உனை நான்
கண்ட நேரம் கனவானாய்.!
உன்னை பிரிய மனமின்றி
என்னில் உனை ஒளித்தேன்.!
கனவாய் போன கன்னியின்
கணவனானது காதலின் வரம்.!

மண்ணில் நான் கண்ட
மாணிக்க கல் உனக்கு
என்னில் பிடிக்க சிறப்பாய்
ஏதும் இருக்கிறதா..?

பொன்னின் தரம் கொண்ட
பெண்ணின் வடிவம் நீ.!
விண்ணின் உயரமாய் காதலை
உன்னில் க(கொ)ண்டேன்..!

வரமளிக்கா கடவுளுக்கும்
வருடா வருடம் திருவிழா..!
அனுதினமும் அன்பு காட்டி எனை
ஆளும் தேவதைக்கு எடுப்பேன்
தினந்தோறும் திருவிழா..!!
Related Posts with Thumbnails