நேரம்:

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஒரு கிராமி(யனின்) இசைப்பயணம்..!!

 

இசைக்க வந்த புயலே..!!
அசைக்க முடியா ஆற்றலே..!!

திசையெங்கும் உன் இசையால்
திக்குமுக்காட வைக்கிறாய்.!!
பசை போட்டு இதயங்களில்
பற்றி அமர்கிறாய்..!!

அன்றொரு நாள் நீ பெற்ற
ஆஸ்கார் விருதுக்கே
அகிலம் அதிர்ந்தது..!!

அதற்கு மேலும் உன்
அழகு தொப்பியில்
அடுத்ததொரு சிறகாய்
கிராமி விருது கிரீடம்..!!

இசையெனும் மந்திரத்தால்
இவ்வுலகை மயக்கியவன் நீ..!!
அசையாத மனிதரையும்
ஆட வைத்தவன் நீ..!!

புவியுலகில் புகழுக்கும் விருதுக்கும்
புலம்புகின்றவர்களுக்கு மத்தியில்
இசையுலகில் இத்தனை சாதித்தும்
ஆசையில்லா அபூர்வம் குறிஞ்சி நீ..!

இசையை புகழ்ந்தால்
இறைவனாக தன்னை நினைக்கும்
தலைக்கன ஞானிகள் இங்கே..!!

ஆனால்
இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும்
என்றும் மாறா உன் புன்னகை
எங்கும் காணா முரண்..! அதனால்
இசையும் உன்னிடம் சரண்..!!

எட்டுத்திக்கும் இசையால்
கொட்டி முழக்கும் உன்னிடம்
தலைக்கனமே தவறுணர்ந்து
தலை குனிகிறது.!!

கிராமத்தில் தொடங்கிய
உன் இசைப்பயணம்
கிராமி விருதை பெற்றும்
கிஞ்சித்தும் தளர்ச்சியில்லை..!!

உன்னிடம்
புகழ் போதையில்லாததால்
தடுமாற்றம் தகர்ந்து போனது..!!
போக வேண்டிய தூரம் உனக்கு
புரிந்து போனது ..!!

இந்த பணிவும், பண்பும்
இருக்கும் வரை
உலகம் உன்னை இன்னும்
உயரத்தில் வைக்கும்
அந்த அற்புத நாள்
அத்தனை தொலைவில் இல்லை..!!

அகில உலக அகராதிகளில்
இசைக்கு இன்னொரு பெயர்
ஏ. ஆர். ரஹ்மான்
என்றாகும் நாளுக்காய்
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்..!!

வாழ்த்துகள்..!!

2 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//அகில உலக அகராதிகளில்
இசைக்கு இன்னொரு பெயர்
ஏ. ஆர். ரஹ்மான்
என்றாகும் நாளுக்காய்
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்..!!//

இப்பதிவை பதிந்த உங்களுக்கும், அவருக்கும் வாழ்த்துக்கள்...

Jaafar சொன்னது…

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி Sangkavi..!! அடிக்கடி வாருங்கள்..!!

Related Posts with Thumbnails