skip to main |
skip to sidebar
விருதாக வழங்கப்படும் ஆஸ்கர் சிலையின் மொத்த உயரம் பதிமூன்றரை அங்குலம் (அதாவது ஒரு அடி நீளத்திற்கு சற்றே கூடுதல்). எடையோ எட்டரை பவுண்ட். இடையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது சிலை செய்ய உலோகம் கிடைக்கவில்லை என ஆஸ்கரை 'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' என்ற சிலை செய்யும் சுண்ணாம்பினால் செய்து தங்க முலாம் பூசியும் கொடுத்திருக்கிறார்கள் (நம் ஊரில் கூட சாமி சிலை, தாஜ்மஹால், மிருகங்களின் சிலைகளை செய்து தெருவோரம் 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்பனை செய்வார்களே, அந்த முறையில்..!). சில நேரங்களில் பிரிட்டானியம் என்ற உலோகக் கலவை சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் பல முறை விருது வழங்கும் தினம் முடிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னும், பின்னும் மாறிப் போனாலும் கூட அனைவரது கவனத்தையும் கவர்ந்த முக்கிய செய்தியாக அது அப்போது மாறியிருந்தது. முதல் ஆண்டு விருது வழங்கப்பட்டபோது மொத்தம் 15 விருதுகள் கை மாறின. ஆனால் இரண்டாம் ஆண்டு, இது ஏழு ஆக குறைந்து போனது. சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குனர், எழுத்து வடிவம், ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு (Art Direction) என்பன மட்டுமே ஆரம்ப நாட்களில் அகாடமி விருதுக்கான துறைகளாக இருந்தன. இவை மட்டுமின்றி சிறப்பு விருது என்று ஒன்றை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தாலும் முதல் ஆண்டில் இது இடம் பெறவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டில் இரண்டு விருதுகளாக வழங்கப்பட்டன.
அச்சிறப்பு விருதுகளில் ஒன்றை, 'சர்வ சிரஞ்சீவி'யாகிவிட்ட நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினும், மற்றொன்றை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் பெற்றன. ''சர்க்கஸ்'' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி, நடித்து என பல்வேறு பணிகளில் வித்தைகள், சாகசம் செய்து காட்டியதற்காக சாப்ளினுக்கும், பேசா மடந்தையாகக் கிடந்த திரைப்படங்களைப் பேச வைக்கும் முயற்சிகள் நடந்த போது 'தி ஜாஸ் சிங்கர்' எனும் பேசும் படத்தை துணிந்து எடுத்து வெற்றி கண்டதற்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்பிறகு திரைப்படத் தொழில் நுட்பம் இன்று எவ்வளவோ முன்னேறி ஸ்டீரியோ, டால்ஃபி, டி.டி.எஸ் என்று தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது தனி கதை. அது சரி அகாடமி அவார்ட் என்று இருந்த இந்த விருதுக்கு ஆஸ்கார் என்று எப்படி பெயர் வந்தது..? அது ஒரு சுவராஸ்யமான சம்பவம்..!
'அகாடமி' தொடங்கி அதன் மூலம் விருது கொடுப்பதாக முடிவு செய்த பிறகு இந்த விருதுக்கான 'மாடல் சிலை எப்படியிருக்கலாம்' என்ற கேள்வி எழுந்தது. படம் வரையத் தெரிந்த அகாடமி உறுப்பினர்கள் பலரும் இதற்கான மாடல் என நிறைய வரைந்து தள்ளினார்கள். இதில் எம்.ஜி.எம் என்ற கம்பெனியின் ஆர்ட் டைரக்டர் 'செட்ரிக் ஜிப்பான்ஸ்' என்பவரும் ஒரு மாடல் வரைந்தார். அந்த மாடல் பலருக்கும் பிடித்துப் போக அதுவே இறுதித் தேர்வானது. டேபிள் கிளாத் ஒன்றில் ஜிப்பான்ஸ் வரைந்த மாடலைக் கொடுத்து 'ஜார்ஜ் ஸ்டான்ஸி' என்பவரை சிலை வடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்ஸி அன்று உருவாக்கிய அந்த சிலைதான் இன்றுவரை அகாடமி விருது சிலையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது (பார்க்க படம்). ஆரம்பத்தில் இந்த சிலை வெண்கலத்தான சிலையாக வடிக்கப்பட்டுதான் விருதாக வழங்கப்பட்டது.
ஒரு முறை இந்த சிலை செய்யப்பட்டு அகாடமிக்கு வந்தபோது அப்போதைய அகாடமியின் செயலாளர் மார்கரெட் ஹெரிக் “இந்த சிலை எங்க மாமா 'ஆஸ்கார்' மாதிரியே இருக்குப்பா..!” என்று கிண்டலடித்துள்ளார் (கிண்டல் இவரது மாமா பற்றியதுதான்). இதனால் சிலையைக் குறிப்பிடும்போது அவர் 'ஆஸ்கார்' என்றே சொல்வது பலரையும் பாதித்து, பிடித்துப் போய் “அட..! சொல்வதற்கும் கூட இது எளிதாக இருக்கிறதே..!” என்று எண்ணி பலரும் இதை 'ஆஸ்கார் விருது' என தப்பிதமாக குறிப்பிடப்போய் மெல்ல, மெல்ல 'அகாடமி விருது', 'ஆஸ்கார் விருது' ஆக பெயர் மாறிப் போனது. இன்றைக்கும் ஆஸ்கார் விருது என்றால் விளக்கம் ஏதுமின்றி அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் விருதின் நிஜ பெயரைச் சொன்னால் இன்று பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. 'எந்த அகாடமி...?, எந்த விருது..? என எதிர் கேள்வி கேட்கும் நிலையே உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் ஆஸ்காரின் பழைய கதையையும், தற்போதைய நிலையையும் நினைக்கும் போது நமக்கு ஏற்படுவது ஒரே உணர்வு தான்.! அது ஆச்சரியம்..!!!
இந்த முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களும் அது தொடர்புடையவர்களின் பெயர்களும் கீழே..!
Best Picture
'Avatar'
'The Blind Side'
'District 9'
'An Education'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'Precious'
'A Serious Man'
'Up'
'Up in the Air'
Best Director
Kathryn Bigelow
'The Hurt Locker'
James Cameron
'Avatar'
Lee Daniels
'Precious'
Jason Reitman
'Up in the Air'
Quentin Tarantino
'Inglourious Basterds'
Best Actor
Jeff Bridges
'Crazy Heart'
George Clooney
'Up in the Air'
Colin Firth
'A Single Man'
Morgan Freeman
'Invictus'
Jeremy Renner
'The Hurt Locker'
Best Actress
Sandra Bullock
'The Blind Side'
Helen Mirren
'The Last Station'
Carey Mulligan
'An Education'
Gabourey Sidibe
'Precious'
Meryl Streep
'Julie and Julia'
Best Supporting Actor
Matt Damon
'Invictus'
Woody Harrelson
'The Messenger'
Christopher Plummer
'The Last Station'
Stanley Tucci
'The Lovely Bones'
Christoph Waltz
'Inglourious Basterds'
Best Supporting Actress
Penelope Cruz
'Nine'
Vera Farmiga
'Up in the Air'
Maggie Gyllenhaal
'Crazy Heart'
Anna Kendrick
'Up in the Air'
Mo'nique
'Precious'
Best Animated Feature Film
'Coraline'
'Fantastic Mr. Fox'
'The Princess and the Frog'
'The Secret of Kells'
'Up'
Best Original Screenplay
Mark Boal
'The Hurt Locker'
Quentin Tarantino
'Inglourious Basterds'
Alessandro Camon and Oren Moverman
'The Messenger'
Joel Coen and Ethan Coen
'A Serious Man'
Peter Docter, Bob Peterson, Tom McCarthy
'Up'
Best Adapted Screenplay
Neill Blomkamp and Terri Tatchell
'District 9'
Nick Hornby
'An Education'
Jesse Armstrong, Simon Blackwell, Armando Iannucci, Tony Roche
'In the Loop'
Geoffrey Fletcher
'Precious'
Jason Reitman, Sheldon Turner
'Up in the Air'
Best Documentary Feature
'Burma VJ'
'The Cove'
'Food, Inc.'
'The Most Dangerous Man in America: Daniel Ellsberg and the Pentagon Papers'
'Which Way Home'
Best Foreign Language Film
'Ajami'
Israel
'El Secreto de Sus Ojos'
Argentina
'The Milk of Sorrow'
Peru
'Un Prophète'
France
'The White Ribbon'
Germany
Best Original Score
'Avatar'
'Fantastic Mr. Fox'
'The Hurt Locker'
'Sherlock Holmes'
'Up'
Best Original Song
'Almost There' from 'The Princess and the Frog'
Music and Lyric by Randy Newman
'Down in New Orleans' from 'The Princess and the Frog'
Music and Lyric by Randy Newman
'Loin de Paname' from 'Paris 36'
Music by Reinhardt Wagner Lyric by Frank Thomas
'Take It All' from 'Nine'
Music and Lyric by Maury Yeston
'The Weary Kind (Theme from Crazy Heart)' from 'Crazy Heart'
Music and Lyric by Ryan Bingham and T Bone Burnett
Best Film Editing
'Avatar'
'District 9'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'Precious'
Best Cinematography
'Avatar'
'Harry Potter and the Half-Blood Prince'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'The White Ribbon'
Best Visual Effects
'Avatar'
Joe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones
'District 9'
Dan Kaufman, Peter Muyzers, Robert Habros and Matt Aitken
'Star Trek'
Roger Guyett, Russell Earl, Paul Kavanagh and Burt Dalton
Best Sound Editing
'Avatar'
Christopher Boyes and Gwendolyn Yates Whittle
'The Hurt Locker'
Paul N.J. Ottosson
'Inglourious Basterds'
Wylie Stateman
'Star Trek'
Mark Stoeckinger and Alan Rankin
'Up'
Michael Silvers and Tom Myers
Best Sound Mixing
'Avatar'
Christopher Boyes, Gary Summers, Andy Nelson and Tony Johnson
'The Hurt Locker'
Paul N.J. Ottosson and Ray Beckett
'Inglourious Basterds'
Michael Minkler, Tony Lamberti and Mark Ulano
'Star Trek'
Anna Behlmer, Andy Nelson and Peter J. Devlin
'Transformers: Revenge of the Fallen'
Greg P. Russell, Gary Summers and Geoffrey Patterson
Best Short Film (Live Action)
'The Door'
Juanita Wilson and James Flynn
'Instead of Abracadabra'
Patrik Eklund and Mathias Fjellström
'Kavi'
Gregg Helvey
'Miracle Fish'
Luke Doolan and Drew Bailey
'The New Tenants'
Joachim Back and Tivi Magnusson
Best Short Film (Animated)
'French Roast'
Fabrice O. Joubert
'Granny O'Grimm's Sleeping Beauty'
Nicky Phelan and Darragh O?Connell
'The Lady and the Reaper (La Dama y la Muerte)'
Javier Recio Gracia
'Logorama'
Nicolas Schmerkin
'A Matter of Loaf and Death'
Nick Park
முடிப்பதற்கு முன் ஆருடம் சொல்கிறேன். இந்த முறை ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் பல துறைகளில் ஆஸ்கார்களை அள்ளும்..!!
முற்றும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக