இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை என்ற தலைப்பில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழ் மன்றம் என்ற இணைய தளத்தில் இதயம் என்ற புனைப்பெயரில் எழுதி வந்தேன். இஸ்லாம் தொடர்பான தவறான புரிதல்களை போக்கவும், மத நல்லிணக்கம் வளர்க்கவும் நான் எடுத்துக்கொண்ட முயற்சி அது.! மாற்று மத சகோதரர்கள் மட்டுமில்லாமல் இஸ்லாத்தை தவறாக விளங்கி வைத்திருக்கும் முஸ்லீம்களுக்கும் நிறைய புரிதல்களை ஏற்படுத்தியது இந்த கேள்வி பதில் கட்டுரை (அதை நிரூபிக்கும் பொருட்டு அவர்களின் பின்னூட்டங்களையும் கூடவே இணைத்திருக்கின்றேன்).
பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்பது போலவே எந்தவொரு நல்ல விஷயத்திற்கும் கட்டாயம் என்பது தேவைப்படுவதில்லை. சரி என்று உணரும் பட்சத்தில் அனைவரும் தாங்களாகவே வருவார்கள் என்பது என் பொறுப்பு. அதை விடுத்து சங்கத்திற்கு ஆள் பிடிப்பது போல் சில இஸ்லாமிய அமைப்புகள் நடந்து கொள்வது வருத்தத்திற்குரியது. அவர் உண்மையில் செய்யவேண்டியது இஸ்லாம் சொல்லிக்கொடுக்கும் கொள்கைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே...!! புனித ரமலான் மாதம் தொடங்கி இருக்கும் தருணத்தில் உங்களுக்கு இதை அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்..!!
என் முன்னுரை:
இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்கள் பற்றிய விளக்கங்களுக்காக இந்த திரியை தொடங்குகிறேன். தொடக்கத்திலேயே அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் மதம், என் மதம் என்று பிரித்து கூறுவதை நான் விரும்பவில்லை. காரணம், எந்த மதமும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சொந்தமும் கிடையாது. மனிதனி பகுத்தறிவிற்கேற்ப அவன் மதங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடிகிறது.
எனக்கும் இஸ்லாத்தை பற்றி உங்கெளுக்கெல்லாம் எடுத்துரைக்க ஆசை. ஆனால், அலுவல்கள் என்னை விடுவதில்லை. அது மட்டுமல்ல, எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நினைக்காமல், நாம் எழுதினால் போதும், அடுத்தவர்களுக்கு புரிந்ததா என்று கூட கவலைப்படாமல் எழுதித் தள்ளவும் முடியாது. இஸ்லாத்தில் உள்ள விஷயங்களை நான் கற்பனையாக எழுதாமல் புனித குரான், நபி வழிகளில் உள்ளதை உள்ளது உள்ளபடி அத்தியாயம், வசன எண் குறிப்பிட்டு எழுத வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த அலட்சியம் தான் அறியாமையை ஆரம்பித்து வைக்கும். சில நேரங்களில் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல நேரமில்லாமல் போகலாம். ஆனால், அதற்கு நண்பர்கள் அதற்கான பதில் இல்லாமல் பின்னூட்டம் இடவில்லை என்று நினைக்கக் கூடாது.
இஸ்லாத்தை அறிந்து கொள்ள நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம் என்னை சந்தோஷப்படுத்துகிறது. ஆனால், நீங்கள் எல்லாவற்றையும் என்னிடமிருந்து அறிந்து கொள்ளுமளவுக்கு எல்லாம் தெரிந்தவனா என்றால், நிச்சயம் கிடையாது. நான் சொன்ன கருத்துக்கள் உங்களை கவர்ந்தால் அது நான் கொண்டிருக்கும் அடிப்படை அறிவால் மட்டுமே வந்தது. இருந்தாலும் இருக்கும் அறிவை பயன்படுத்தி ஓரளவுக்கு உங்களுக்காக இஸ்லாத்தை பற்றிய விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்.
பொதுவாக வலுக்கட்டாய மதமாற்றம் ஒன்று நடந்தது என்று சொல்வார்கள். ஆனால், அப்படி வலுக்கட்டாயம் என்பதே இஸ்லாத்தில் கிடையாது. அதன் கொள்கைகளால் கவரப்பட்டு வருவது வரவேற்கப்படுகிறது. வாள் முனையால் இஸ்லாம் பரப்பப்பட்டதாக பெரும்பாலனரால் சொல்லப்படுகிறது. அதில் உண்மை எதுவும் இல்லை. இந்தியாவிற்குள் யார் வந்து போரிட்டு இஸ்லாத்தை பரப்பினார்கள் அல்லது மதமாற்றினார்கள்.?அரேபியர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு நம் நாட்டிற்குள் வந்து நம் மக்களோடு கலந்து வணிகம் செய்தபோது அவர்களின் நற்குணம், நன்னம்பிக்கை, கனிவு, அன்பு, நாணயம் ஆகியவற்றால் கவரப்பட்டு நம்மவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். இன்றளவும் கூட வலுக்கட்டாயத்தின் பேரில் இஸ்லாத்திற்குள் வருதல் என்பது சொந்த விருப்பும், வறுமையும், சாதிக்கொடுமைகளும் இணைந்து தான் நடைபெறுகிறது. எந்த மதம் நல்ல மதம், எது மனிதனை வாழ வைக்கிறது, வழி நடத்துகிறது என்பதை மதத்தின் பெயரில் யாரும் சொல்லக் கூடாது. அது சம்பந்தப்பட்டவர்களே புரிந்து கொள்ள வேண்டும். அது தான் நிலைக்கும்.!!
பின்னூட்டங்கள்:
சுட்டிபையன் :
உங்கள் ஆரம்பம் மெய்சிலிர்க்க வைக்கிறது எல்லோரும் ஆண்டவனின் பிள்ளைகள், ஆண்டவன் ஒருவனே என்ற கொள்கை
உங்கள் கட்டுரைய படிக்க ஆவலுடனிருகிறோம் மேலும் தொடருங்கள் நண்பரே
LEOMOHAN:
அருமையான பகுதி. நானும் அறிந்ததை பகிர்ந்துக் கொள்ளலாம் அல்லவா?
அக்னி:
மதங்கள் நல்லுறவிற்காக இருப்பவையே... ஆனால், அவற்றை விஷமாக்குபவர்களை விட்டுவிட்டு இதயசுத்தியுடன் ஒன்றிணைவோம்.திரியைத் தொடருங்கள் நண்பர்களே... வாழ்த்துக்கள்...
LOLLUVATHIYAAR:
நான் கேட்டு கொண்டதன் பேரில் இந்த ஆன்மீக திரி ஆரம்பித்த சகோதரர் ஜாபருக்கு நண்றி.என் அருமை ஹிந்து நன்பர்களே இந்த ஆண்மீக திரியில் சர்சைக்கு உண்டான கேள்விகளை தவிர்த்து
முதலில் நாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
நேரமின்மை காரனமாக உங்களுக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பம் இருக்கலாம்.
எங்களுக்கு அருமையான விளக்கம் பெற உங்களுக்கு நான் உதவி செய்யலாம் என்று இருகிறேன்.
நான் வரிசையாக வேள்விகள் கேட்கிறேன்.
அவற்றிர்கு உங்கள் பதிலை தாருங்கள் நன்பரே.
முதல் கேள்வி மசூதியை பற்றியது.
மசுதியின் Basic Structure என்ன?
உள்ளே என்ன இருக்கும்?
உருவமில்லை என்று கேள்வி பட்டிருகிறேன்.
ஹிந்து கோவிலை போல கருவரை இருக்குமா?
அப்படி இருந்தால் அங்கு என்ன இருக்கும்?
பச்சை விளக்கு இருக்கும் என்று என் நன்பர்கள் சொன்னார்கள். அது சரியா?
சிலை இருக்காது, ஆனால் ஏதாவது படங்கள் இருக்குமா?
மெக்காவின் திசை நோக்கி இருப்பது - மசூதியின் வாசலா, அல்லது தொழுகை செய்யும் திசையா?
உங்கள் விளக்கம் பார்த்து அடுத்த சந்தேகங்களை கேட்கிறேன்.
நண்றி ஜாபர்
ஓவியா:
அருமையான ஆரம்பம். நானும் உங்கள் மதத்தை கற்றுக்கொள்கிறேன். மிக்க மகிழ்சியுடன் நன்றிகள்..
தொடருங்கள் நண்பரே.
தங்கவேல்:
உமர் முக்தாரை தந்த இஸ்லாம், அலி ,பே என்று எனது இளம்பிராயத்து உருது மொழி படிக்கும் ஆர்வம், பாத்தியா ஓதும் போது விழி விரிய பார்த்தது. பெரு நாள் அன்று நண்பர்களின் வீட்டில் இருந்து வரும் ஆட்டுக்கறி, பலகாரங்கள் இதெல்லாம் மறக்கவும் முடியுமோ..?? மட்டன் பிரியானி, கிரேவி டேஸ்ட்டுக்கு என்ன விலை கொடுத்தாலும் தகாதே.. எழுதுங்கள் ஜாபர்.. ஆர்வமாய் இருக்கிறது படிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக