நேரம்:

புதன், 28 ஏப்ரல், 2010

வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்..!!

நானும் என் நண்பர் ஒருவரும் சுவராஸியமா பேசிட்டிருந்தோம். அப்போ அவரோட சந்தோஷமான திருமண வாழ்க்கை பத்தி பேச்சு வந்தது. நான் அவர்கிட்ட உங்களோட வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன..?”ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் ரொம்ப பெருமிதத்தோட புருஷன் பொண்டாட்டி ஒவ்வொருத்தரும் அவங்கவங்க கடமையை புரிஞ்சி நடந்துக்கணும். மத்தவங்க உணர்வை மதிக்கணும்னு சொன்னார்.

நான் தலையை சொறிஞ்சிக்கிட்டே கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்ன்னேன்.

அவர் சொல்ல ஆரம்பிச்சார். உதாரணத்துக்கு எங்க வீட்டை பொறுத்தவரை பெரிய பெரிய விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன். சின்ன, சின்ன விஷயங்களில் முடிவு எடுக்கும் பொறுப்பை என் ஒஃய்ப் கிட்ட கொடுத்துடுவேன்னார். அது மட்டுமல்ல, ஒருத்தர் எடுக்கிற முடிவில் இன்னொருத்தர் தலையிடுறதில்ல.. அதனால் எங்களுக்குள் பிரச்சினையே வந்ததில்லைன்னாரு..!!

எனக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவா புரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். அதனால் முடிவு எடுக்கிற விஷயத்தை எப்படி டீல் பண்றீங்கன்னு கொஞ்சம் உதாரணத்தோட சொல்லுங்களேன்னு கேட்டேன்.

இன்னும் புரியலையா?!!”ன்னு என்னை கிண்டலா ஒரு பார்வை பார்த்துட்டு சொல்ல ஆரம்பிச்சார். அதாவது, சின்ன சின்ன விஷயங்கள் உதாரணத்துக்கு என் ஒய்ஃப் நகை வாங்கணுமா வேண்டாமா..? பட்டுப்புடவை வாங்கணுமா, வேண்டாமா..? வீடு கட்டணுமா, வேண்டாமா? எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வரணுமா, வேண்டாமா? நான் இந்த வேலைல இருக்கணுமா, வேண்டாமா?-ன்னு இப்படி சின்ன விஷயங்களில் என் ஒய்ஃபை முடிவு எடுக்க விட்டுடுவேன்...!!

எனக்கு ஷாக்காயிடிச்சி.!! இதெல்லாம் சின்ன விஷயமா..? அவரை அதிர்ச்சியா பார்த்துக்கிட்டே... சரி..அப்ப நீங்க எதைப்பத்தி தான் முடிவு எடுப்பீங்க..?!!”-ன்னு கேட்டேன்.

அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்துக்கிட்டே.. நான் எடுக்கிற முடிவுகள் எல்லாம் இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் இருக்காது. உதாரணத்துக்கு இப்ப அதிகமாகிக்கிட்டு வர்ற குளோபல் வார்மிங்கை குறைக்கிறது எப்படி?, அமெரிக்கா இரான் மேல போர் தொடுக்கணுமா வேணாமா?, பாக்கிஸ்தானை எப்படி கண்ட்ரோல் பண்றது?, அடுத்த ஒலிம்பிக்ல இந்தியா எத்தனை பதக்கம் வாங்கணும்?-னு இப்படி பெரிய பெரிய விஷயங்களை பத்தி தான் நான் முடிவு எடுப்பேன். இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா..? நான் எடுக்கும் எந்த முடிவிலும் என் ஒஃய் தலையிடுவதே இல்லை.. இப்ப புரியுதா எங்க சந்தோஷமான வாழ்க்கையின் சீக்ரெட்..?!!! ”ன்னார்.!!

அய்யோ...எனக்கு தலையெல்லாம் சுத்துது.. யாராவது என்னை கைத்தாங்கலா பிடிச்சி உட்கார வச்சி கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்.. ப்ளீஸ்..!!

இது நகைச்சுவைக்காக ஆங்கிலத்தில் இருந்து சுட்டு எழுதினதுன்னு சொன்னா நம்பணும்..ப்ளீஸ்..!!
Related Posts with Thumbnails