பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ்வை பற்றி நிறைய சுவையான சம்பவங்கள், சிறந்த சிந்தனைகள், அழகான தத்துவார்த்த எண்ணங்கள் பல இருந்தாலும் நேரமின்மை காரணத்தால் எழுத முடியவில்லை. அவரைப்பற்றிய இந்த பதிவை முடிக்கும் வண்ணமாக அவரின் குடும்பம், இளமைப்பருவம், பால்ய நண்பர்கள், பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு, தீவிர கடவுள் மறுப்பு கொள்கை பரப்புதல், அம்பேத்காரால் கவரப்பட்டு புத்த மதத்தில் இணைதல், இஸ்லாத்தின் மீது ஏற்பட காரணமாக இருந்த நிகழ்வுகள், இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொள்ளுதல் ஆகிய அனைத்தையும் அவரின் வாய் மொழியின் வாயிலாகவே சொல்கிறார். அவர் சார்ந்திருந்த கழகம், கொள்கை, இப்போது இணைந்திருக்கும் மார்க்கம் என்று எதையும் மனதில் இருத்தாமல் அவரின் இந்த பேச்சை கேட்டால் நீங்கள் நிச்சயம் இரசிப்பீர்கள்..!! 40 வருடங்களாக தீவிர கடவுள் மறுப்பு கொள்கையை பரப்பி வந்த ஒருவர் இத்தனை தீவிரம், ஈடுபாட்டுடன் ஒரு கடவுள் கொள்கையை ஓங்கி உரைப்பது ஏன் என்ற ஒரு கேள்வி உங்களை நிச்சயம் உலுக்கும்..!!
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 6
அன்பெனும் பெருநதி
-
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன்
விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும்
தோழமையும...
1 நாள் முன்பு
2 கருத்துகள்:
பெரியார்தாசன் சேம் சைடு கோல் போடுகிறார்;அது போகப் போகத் தெரியும்;தேவையில்லாமல் (கிறித்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக எண்ணிக் கொண்டு) "இஞ்சில்" எனும் இஸ்லாமிய நூலையே கேலி செய்கிறார்;
அவருக்கு ஏற்பட்டதாகக் கூறும் புல்லரிப்பு கங்கா ஸ்நானம் செய்பவர்க்க்கும் வரும்,திருப்பதியில் கிரிவலம் செல்பவர்க்கும் வரும்;சபரியில் உபரியாகச் சென்றவர்க்கும் வரும்;மனோதத்துவ நிபுணர்கள் மனநோயாளியாவது இயல்புதானே,இவர் எம்மாத்திரம்..?
காஞ்சிப் பெரியவரின் கண்களின் ஒளியைப் பரியாசம் செய்யும் இவர் கண்களின் ஒளி இறை ஒளியாக இருந்தால் ஏன் கண்ணாடி போட வேண்டும்?
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக