நேரம்:

ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்யானந்தா..ரஞ்சிதா..ரகசிய கேமரா..!! (Full coverage)



நித்யானந்தாவின் வெளிவராத இரகசியங்கள்..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33 நாடுகளில் கிளைகள். 32 வயதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பலமாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது.

பெயர் வைத்த ரஜினியின் குரு!

மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது.

ஆனந்த நடன அசிங்கம்!

இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்லாம் புகார் சொல்லப்பட்டது.

பெங்களூரு டூ சேலம் ...

இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம்.

இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே.

ரஞ்சிதா என்ட்ரி ...

இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர்,

அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . .

மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான்.

எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

அமெரிக்க கேமரா அஸ்திரம் . . .

இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான். (அட). அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.

துணையோடு தூண்டில்

இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளாகத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர்.

ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான்.

ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளியாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது.

நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

நேரடிப் பேச்சில் நித்தியானந்தா

பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய்

நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராமகிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது.

தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப் பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா.

நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்திலேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

டி.ஜி.பி. இருக்கிறார்

இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடுவோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.

இப்போது ரஞ்சிதா

நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமிஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார்.

இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்?காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது

மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.

இப்போது அவத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 11.3.2010

நித்யானந்தா மாட்டிக்கொண்ட பிறகு ஊடகத்திற்கு கொடுத்த முதல் பேட்டி கீழே..!!


மனதில் கடவுளாய் வைத்து கொண்டாட ம(மா)க்கள், மாட மாளிகை,  மலையளவு பணம், மயக்கும் நடிகைகள் என்று உல்லாசத்தின் உச்சத்தில் இருந்த நித்யானந்தாவுக்கு ஏழரையில் பிடிச்ச சனியால் இப்போது எல்லாமே தலைகீழ்..! ஒளிந்து வாழும் வாழ்க்கை, சுதந்திரம் இல்லாமல் போன நிலை, உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள சூழல், மனிதனாய் கூட மதிக்க நினைக்காதபடி சமூகத்தில் அவமானம்.. அவ்வளவு ஏன்... தன் பேட்டியை கூட மொபைல் கேமராவில் மட்டும் படம் பிடிக்க முடிந்திருக்கும் அவலம் என்று இப்பொழுது காலம் அவனை தலைகீழாய் புரட்டி போட்டு விட்டது. ”எப்படி இருந்தவ(ன்)ர் இப்படி ஆயிட்டா(ன்)ர்..?” என்று சொல்ல தோன்றுகிறது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை..!!

மற்ற சாமியார்களை கேட்டால் ”எல்லாம் சிவ மயம்” என்பார்கள்..!! ஆனால் இவன் மட்டும் ”எனக்கு  கேமரா பயம்” என்பான்..!!!

9 கருத்துகள்:

வாசிக்க மட்டும் சொன்னது…

இவரு பாபாஜிய பார்த்து இருக்கவே முடியாது .
இதுல அவரு பேர் வச்சார ...!? கொஞ்சம் ரஜினிய விட்டுவையுங்க சாமிகளா

Jaafar சொன்னது…

பரபரப்புக்காக ரஜினியின் பேரை இதில் சேர்த்து இருக்கலாம். குமுதத்துக்கு இது தான் கை வந்த கலை ஆச்சே..!!

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி வாசிக்க மட்டும்..!!

anbarasan சொன்னது…

clik to read
சுவாமிகளும் தேவடியாள்களும்

பெயரில்லா சொன்னது…

கதவை சாத்து காதல் வரட்டும் இல்லீங்கோ, அது ’காமம்’ வரட்டும்

SARAVANAN சொன்னது…

NAN LAST 7 YEARS AGA ANMEGATHIL MIGUNTHA EDUPATTUDAN ERUNDUVARUKIREN. BUT INTH NITHIYANTHA [PEYARI SOLLAKUDA ARUVERUPPAKA ERUKIRATHU] NADAVADIKAIGALI PARTHU UNMAIL MANAM NOONDUPOONEN.
DINDUKALIL ORU SITHTHAR PONDURU ORU SAMIYAR ROADELAYE PADUTHU, ANGEYA UNAVARUNTHI ENTHAVITHA YETHIRPARUPUM ENDRI VALGIRAR.
UNAMIYANA ANMEEGAVATHIGAL ENMEL ASARAMAM MAYIR MATTAAI ETHELLAM ELLAMAL ON THE WAY EL VALLVATHA ERUNTHAL ANMEEGA PANNIKU VARAVENDUMAI NAN VANAGUM ESANAI VENDI MANAKUMURALOADU
EN COMMANDIA MUDIKIRAN.
IPPADIKU VAIGAISARAVANAN.

Jaafar சொன்னது…

வருகைக்கு நன்றி ராஜ்..!

Jaafar சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை தான் தமிழ் மைந்தன்..! நன்றி உங்கள் வருகைக்கு..!

Jaafar சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைகை சரவணன்.!

singamla366 சொன்னது…

ரஜினிய வம்புக்கு இழுக்கிற வேலை எல்லாம் வேண்டாம் ....
நீங்கள் (குமுதம்)சாமியார்க்களை வளர்த்து விட்டு ...
கதவை தொற காத்து வரட்டும் போட்து....
விளக்கம் வேண்டாம் ...காசு வாங்கி தானே போட்ட ......
சும்மா போடலை ......
ரஜினிய இழுக்க வேண்டாம் ........
குமுததிருக்கு எச்சரிக்கை ............

Related Posts with Thumbnails