நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-03)


மசூதியின் அடிப்படை கட்டுமானம் என்ன..?

மசூதிக்கென்று அடிப்படை கட்டுமானம் என்று எதுவும் கிடையாது. சலவைக்கல்லால் இழைக்கப்பட்டும் இருக்கலாம், சாதாரண ஓலை வேயப்பட்டும் இருக்கலாம். சிறியதாகவும் இருக்கலாம், பரந்து விரிந்தும் இருக்கலாம். இரண்டும் மசூதி தான். அந்தந்த பிரதேசமக்களின் பொருளாதார நிலைக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால், வழிபாட்டுத்தலமான மசூதி பொழுதுபோக்குக்கான இடம் என்று குறிக்கும் எந்த பொருளும் இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள், விளையாட்டு சம்பந்தமான பொருட்கள். ஒரு மசூதி இருந்தால் அங்கு ஒரு பொது கழிப்பறையும், தொழுகைக்கு முன் சுத்தம் செய்து கொள்ள தேவையான தண்ணீர் வசதியும் அவசியம் இருக்கும். இறை வழிப்பாட்டை மசூதிக்கு செல்லாமல் வீட்டிலும் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மிக தொலைவில் மசூதி இருந்தால், போய் தொழ முடியாத அளவுக்கு உடல்நிலை இருந்தால் போன்ற சூழ்நிலைகளின் போது வீட்டில் தொழலாம். ஆனால், வீட்டில் தொழுவதை விட பல மடங்கு சிறப்பும், இறைவனுக்கு பிடித்ததுமானது பள்ளியில் போய் தொழுவது. அங்கு போவதின் மூலம் சகோதரத்துவம் வளர்கிறது. ஒரு நாளில் ஐந்து முறை நமக்குள் சந்தித்துக் கொள்ளும் போது உறவு, நட்பு வளர்கிறது. சகோதரத்துவத்தை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுடன் சண்டையிட்டு பேசுவதை நிறுத்திக் கொண்டால் 3 நாட்களுக்கு மட்டும் அது நீடிக்க வேண்டும். அடுத்த நாள் அவன் மற்றவனிடம் பேச வேண்டும். இல்லயென்றால் அவன் இறைவனின் வெறுப்புக்கு ஆளாகிறான். எவன் தானாக இறங்கி வந்து பேசி உறவை வளர்க்கிறானோ, அவன் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவனாவான்.



உள்ளே என்ன இருக்கும்?


நீங்கள் நினைப்பது போல் மாயஜால விஷயங்கள் எதுவும் அங்கு இருக்காது. நாம் வாழ்க்கையில் தேடும் அமைதியும், நிம்மதியும் அங்கு இருக்கும். மசூதி உள்பகுதி ஒரு வீட்டின் அறையைப் போலவோ, ஹால் போலவோ பெரும்பகுதி பொருட்கள் இல்லாமல் காலியாக இருக்கும். மற்றபடி அவரவர் வசதிக்கேற்ப மின்விசிறி, விளக்குகள் இருக்கும். அலமாரி போன்றவற்றில் திருக்குரான், நபி வழி பிரதிகள் இருக்கும். அதை தொழ வருபவர்கள் தொழுகைக்கு முன்னும், பின்னும் விருப்பப்பட்டவர்கள் படிப்பார்கள். நீங்கள் சொல்லும் கருவறை, மூலவர் போன்ற விஷயங்கள் எதுவும் இருக்காது. வெளிச்சத்தால் நிறைக்கப்பட்டிருக்கும். நிசப்தமாக இருக்கும். எப்படிப்பட்டவர்களும் மசூதியில் உள் நுழைந்தால் அமைதியின் சொரூபமாக மாறி விடுவார்கள். பச்சை விளக்கிற்கும் பள்ளிவாசலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பொதுவாக இஸ்லாமியர்களின் நிறம் பச்சை என்பது போல் ஒரு தோற்றம் இருக்கிறது (சவுதியின் தேசியக் கொடி கூட பச்சை தான்). அது இயல்பான ஒன்றே தவிர உருவாக்கப்பட்டதல்ல. எந்த வகையான உருவப்படங்களோ, கையால் வரையப்பட்ட ஓவியங்களோ அங்கு இருக்காது. உருவ வழிப்பாடு விஷயத்தில் அணுவளவும் அனுசரிப்பதில்லை இஸ்லாம். மேலும் மசூதியின் உள்ளே திருக்குரான் வசனங்கள், நபி மொழிகள் ஆகியவை வருபவர்களின் பார்வைக்காக சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் அல்லது வைக்கப்பட்டிருக்கும்.




இறைவனுக்காக தொழப்படும் எந்த தொழுகையும் மக்காவில் அமைந்துள்ள கஃபா எனப்படும் இறைவனுக்காக கட்டப்பட்ட முதல்வழிப்பாட்டுத் தலத்தின் திசை நோக்கி செய்யப்படல் வேண்டும் (அது பற்றி இனி வரும் பகுதிகளில் விளக்கப்படும்). அதை அரபியில் கிப்லா என்பார்கள். மசூதியின் வாசல் எந்த திசையை நோக்கியும் இருக்கலாம். ஆனால், தொழுகையில் நிற்கும் போது அனைவரும் கிப்லாவை நோக்கி நிற்க வேண்டும். இது மிக அவசியம் (அதற்கும் காரணம் உள்ளது). 



LOLLUVAATHIYAR:


இதுவரை நான் தெரியாத விசயங்களை தெரிய படுத்தினீர்கள். நண்றி ஜாபர்
மசூதியை பற்றி மேலும் சந்தேகங்களை கேட்டு விடுகிறேன்.

மசூதிக்குள் காலனியுடன் போகலாமா?
மசுதிக்குள் செல்பவர்கள் பெரும்பாலும் வெள்ளை ஜிப்பா அனிந்து போகிறார்கள்
குல்லாவுடன் தான் மசூதிக்குள் செல்ல அனுமதிப்பார்களா?

எனக்கு தெரிந்து பெண்கள் மசூதி பக்கம் பார்த்ததில்லை.

பெண்கள் மசூதிக்குள் போகலாமா?
பெண்களுக்கு என்று தனி மசூதி இருகிறதா?

இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு போக மாட்டார்கள்.

அதே போல் உங்கள் மதத்திலும் பழக்கம் இருகிறதா.
ஊரில் இருக்கும் மசூதிக்குள் தொழுகை தெரியாத ஹிந்து பார்வையாளராக வரலாமா?
விசேச காலங்களில் மசூதியில் எங்கள் கோவிலில் தரபடுவது போல
பிரசாதம் ஏதாது உண்டா?

மிகவும் சின்ன பிள்ளைதனமாக என் கேள்வி இருக்கிறது என்று தவறாக நினைக்க வேண்டாம்.

இந்த சின்ன சமாச்சாரங்கள் கூட எனக்கு தெரியாது. 



SNS:


மசூதியை பற்றிய மேலதிக தாகவழுக்காக எமது ஊரில் தற்போது நிர்மானித்துவரும் மசூதியிங் 2 படங்கலை இத்துடன் இனைத்துல்லேன், அதை பார்தலே உங்களுக்கு புரியும் மசூதியினுல் எவ்வித ரகசியமும்மில்லை என்று

இது உற்பாள்ளியின் தோற்றம்


http://img249.imageshack.us/img249/2969/internalxv4.th.jpg




இது பாள்ளியினுல் நுலய முன்பு சுத்தாம் செய்வதற்ககா நீர் வைக்கப்பட்டுல்ல இடம்


http://img510.imageshack.us/img510/1058/hawz1ry9.th.jpg

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails