நேரம்:

சனி, 5 டிசம்பர், 2009

விஜய்(க்கு) வெடிகள்..!!

நண்பர்களே..!

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் ஸ்டார் வேல்யூ, மாஸ் அதிகம் உள்ள இளம் தலைமுறை ஹீரோ விஜய். அவரின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" முதல் விஜயை கவனித்து வருகிறேன். இந்த படத்திற்கு அப்போது விமர்சனம் எழுதிய "குமுதம்" பத்திரிக்கை விஜயின் முகத்தை பற்றி "இது போன்ற முகத்தை எல்லாம் திரையில் பார்த்து தொலைக்க வேண்டும் என்பது நம் தலையெழுத்து" என்று ரொம்ப காட்டமாகவே எழுதியிருந்தது. அதற்கு பொருந்துவது போலவே அப்போதைய அவருடைய முகமும், நடிப்பும், படங்களும் இருந்தன (இந்த கோபத்தில் பிரபல ஹீரோ ஆகி வெகுநாளாகியும் குமுத்திற்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் இருந்த்து தனிக்கதை..!!) வெகுகாலமாக மாமியாருக்கு சோப்பு போடும் "ரசிகன்" போன்ற உப்புமா படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜயின் திரை உலகப்பாதையை திருப்பி, விஜய்க்கு "பூவே உனக்காக" படம் மூலம் புத்துயிர் கொடுத்தவர் டைரக்டர் விக்ரமன். அதன் பிறகு வந்த விஜயின் படங்கள் கதையம்சங்களுடனே வந்தன. விஜய் நடித்ததில் எனக்கு பிடித்த படம் டைரக்டர் பாஸிலின் "காதலுக்கு மரியாதை". அதன் பிறகு என்னவாயிற்றோ தெரியவில்லை, விஜய் அடுத்து வந்த தன் படங்களில் மீண்டும் ஆரம்ப காலத்தை போலவே கதையை பற்றியும் கவலைப்படவில்லை, நடிப்பை பற்றியும் கவலைப்படவில்லை.

இரசிகர் மன்றம் என்ற போதை தலைக்கேறி விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தோதாக பஞ்ச் டயலாக், பறந்தடிக்கும் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் எல்லோரும் விஜயின் நடிப்பையும், படத்தையும் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனாலும் விஜயின் மாஸ் ஏறிக்கொண்டே இருந்ததே தவிர கொஞ்சம் கூட குறையவே இல்லை. இத்தனைக்கும் சமீப காலங்களில் அவர் கொடுத்த 2002  -  புதிய கீதை, 2003  -  வசீகரா, 2004  -  உதயா, 2005  -  சச்சின், 2006  -  ஆதி, 2007  -  அழகிய தமிழ் மகன், 2008  -  குருவி, 2009  -  வில்லு என்று எல்லாம் அட்டர் ஃப்ளாப் படங்கள். இவற்றின் உச்சமாக விஜயை வைத்து "தமிழன்" என்று ஒரு படம் எடுத்து அந்த தோல்வி கொடுத்த நஷ்டம் தாங்க முடியாமல் பிரபல தயாரிப்பாளர் ஜி.வி என அழைக்கப்படும் ஜி.வி ஃபிலிம்ஸ் உரிமையாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலையே பண்ணிக்கொண்டார். ஆனாலு விஜய் கொஞ்சம் கூட அசரவில்லை. அடுத்து தான் கொடுக்கப்போகும் அடுத்த மொக்கை படத்திற்கு அடி போடுவதிலேயே எப்பொழுதும் கவனமாக இருக்கிறார்.

விஜயின் வீரபராக்கிரமங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. சமீபத்தில் அரசியலில் சேர்ந்து அதையும் ஒரு வழி பண்ண நினைத்து ராகுல் காந்தியை சந்தித்த போது தமிழகமே கலங்கி போனது. நல்லவேளையாக அப்படி ஒரு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காங்கிரஸ் தப்பித்தது. விஜயின் சமீபத்திய படமான வேட்டைக்காரனுக்கு வழக்கம் போலவே பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. விஜய்யின் படங்கள் வரிசையாக அடி வாங்கியும் படத்துக்கு படம் எதிர்பார்ப்பு மட்டும் கூடும் மாயம் என்னவென்று எனக்கு புரியவே இல்லை. விஜய்க்கு இருக்கும் ஃப்ளாப் சிக்கல் போதாதென்று அவரின் புதிய படத்தின் தலைப்பை பற்றி ஒரு சனி வெடியை கொளுத்தி போட்டிருக்கிறார்கள். அதாவது இது வரை பழைய எம்ஜியார் பட டைட்டில் வந்த எல்லா புதுப்படங்களில் ஒன்று கூட வெற்றி பெற வில்லை (உதா: நம் நாடு, அவசர போலீஸ் 100,  நாடோடி மன்னன் இப்படி நிறைய படங்களை சொல்லலாம்). இவை எல்லாமே ஒரே மாதிரியாக மண்ணைக்கவ்வியிருக்கின்றன. இந்த இலட்சணத்தில் எந்த புண்ணியவான் இந்த படத்திற்கு எம்ஜியாரின் படப்பெயரான வேட்டைக்காரனை விஜய் படத்திற்கு வைத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜய்க்கு எதிரி வெளியில் இல்லையோ..?!! இனி திரைக்கு வரப்போகும் "வேட்டைக்காரன்" வெற்றியில் கோட்டை விட்டால் விஜயின் முதல்வர் கனவு தவிடு பொடியாகும் என்பது நிதர்சனம். காரணம் ஒரு நடிகனின் பொதுவாழ்க்கை வெற்றி என்பது அவன் நடிக்கும் படத்தின் வெற்றியை வைத்தே அமைவது தமிழகத்தின் தலையெழுத்து..!!!

நடிகர்களில் அதிகமாக நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டவர் விஜய் என்பது கருத்து. உடனே விஜய் நல்லா காமெடி செய்கிறார் என்று சீரியஸாக நினைத்து விடாதீர்கள். பிறகு அதுவே பெரிய காமெடி ஆகிவிடும். நான் சொன்னது அவரின் நடிப்பு, பொது வாழ்க்கை, அவரின் படங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இண்டர்நெட்டில் வந்த பதிவுகள், விமரிசனங்கள், குறுஞ்செய்திகளைத்தான் அப்படி சொன்னேன். உங்களின் சந்தோஷத்தையே பெரும் இலட்சியமாக(!!) கொண்டிருக்கும் நான் இங்கே உங்களுக்காக விஜய் காமெ(வெ)டிகளை கொளுத்தி வீசியிருக்கிறேன். படித்து இரசியுங்கள்...!!!

விஜய்(க்கு) ஜோக்ஸ் (வெடிகள்)..!!

டைரக்டர்: படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

Dr.
விஜய்: சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....
டைரக்டர்: காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோவா யார போடலாம்னு கேட்டேன்....

************************************************************************************************************************************

சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் .?

கதையை ஜீரணிக்க முடியாததால்.!!

************************************************************************************************************************************

villu film record:

இந்த வார விற்பனை:

அமிர்தாஞ்சன் - 30000
அனாசின் -  20000
poison
- 10000
அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி....

************************************************************************************************************************************

எங்கே கொஞ்சம் சிரிங்க....
கொஞ்சம்...
வேணாம்.. சொன்னா கேளுங்க ...
சிரிக்க வச்சுடுவேன்....
இப்ப சிரிக்க போறீங்க .....
இதோ வந்துடுச்சு....
"DR.
விஜய்"..!!!!
(
ஹி ஹி ஹி)

************************************************************************************************************************************

அதோ போறாரே அவர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும்.. அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

************************************************************************************************************************************
விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள் பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?

அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாங்கன்னு சொல்லலாம்.

************************************************************************************************************************************

விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

************************************************************************************************************************************

கணவன்: ஏண்டி! பிச்சகாரனை நடு வீட்ல வச்சி சோறு போட்டு, டி.வி பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....

************************************************************************************************************************************

நிருபர் : சார் , ஒபாமா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ?

விஜய்:  well, how to say in Tamil எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க .

நிருபர்: உங்க அப்பா அம்மா இல்ல மூதேவி...  ஒபாமா..!!

************************************************************************************************************************************

சுப்ரமணியபுரம்  Dialogue,..

ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா. எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க... வேட்டைக்காரன் பாட்டை கேக்க வெச்சிட்டாங்கடா அவங்கள கொல்லணும்..பரமா...

************************************************************************************************************************************

எச்சரிக்கை

உங்களுக்கு 9994499999 இந்த நம்பர்ல எந்த கால் இருந்து வந்தாலும் attend பண்ணாதீங்க , உடனே cut பண்ணி  switch off பண்ணிடுங்க.... ஏன்னா அது விஜய் நம்பர்..!! போன் பண்ணி தான் நடிச்ச படத்தை பார்க்க சொல்லி கெஞ்சுது பயபுள்ள ...

************************************************************************************************************************************

எல்லா நடிகர்களும் அவர்களது flop movie பத்தி எஸ்ஸே எழுத ஆரம்பிக்கிறாங்க அப்பா சிம்பு வந்து aditional paper கேக்குறார் ,

Hall superviser: சாரி, பேப்பர் காலி ஆய்டுச்சி எல்லாத்தையும் விஜய் வாங்கிட்டாரு ...

************************************************************************************************************************************

வடிவேலுவின் தங்கச்சி: ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு போனா...மூணு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு: படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னான்.. இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான்.. இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!...

************************************************************************************************************************************

முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,

இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் fan மாதிரி மாக்கானா இருந்தா, குருவி படம் ஆஸ்கர் போகணும்னு சொல்லுவீங்களே!!!

************************************************************************************************************************************

ஆறிலும் சாவு,  நூறிலும் சாவு..!!

கொய்யால விஜய் படத்த பாத்தா அப்பவே சாவு!!!

************************************************************************************************************************************

வேட்டைக்காரன் கிளைமாக்ஸ்:

பத்து ரன் ஒரு பந்தில் அடிக்கணும். அதுவும் நம்ம விஜய் தான் Batsman

அடிச்சாரு ஒரு அடி...!!

பந்து அடிச்ச அடியில இரண்டா பிளந்து ஒண்ணு எல்லை கோட்டை மேலாக தாண்டி ஆறு ரன்..!!

மற்றது வழக்கம் போல் நாலு ரன்..!!!

அப்புறம் பார்த்திட்டு நின்ற ரசிகர்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்ய

நம்ம விஜய் சொல்லுறார் பஞ்ச்

எவளவோ கொடுமைய தாங்கிட்டீங்க .. இதையும் சேர்த்துகுங்க..............

************************************************************************************************************************************

விஜய் : நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அப்புறம் என் படத்தை நான் கூட பார்க்க மாட்டேன்

ரசிகர்: கொய்யால.... நாங்க உங்க போஸ்டர் கூட பார்க்க மாட்டோம்.. அப்புறம் எங்க படத்தை பார்க்கிறது..?!!!

************************************************************************************************************************************

பாவ மன்னிப்பு சொல்லும் ஃபாதர் :

தினமும் சிகரெட் குடி- 10 வருஷம் முன்னர் உனக்கு சாவு

தினமும் தண்ணியடி - 20 வருஷம் முன்னர் உனக்கு சாவு

யாரையாவது நீ உண்மையா காதலி - நீ தினமும் செத்து கொண்டு இருப்பாய்!!!

அதற்கு

அந்த பாவ மன்னிப்பு கேட்க வந்த பையன் சொன்னான்

ஃபாதர், நீங்க ஒருவாட்டி வில்லு படம் இல்லாட்டி போனால் போகுது.. வேட்டைக்காரன் பாருங்க ஒவ்வொரு நிமிஷமும் செத்து கொண்டு இருப்பீங்க.............!!!

============================================================

விஜய் அமீர்கானை மும்பையில் சந்திக்கிறார்)

விஜய்- ஸாரி அமீர். எனக்கு இந்தி தெரியாது

அமீர் - ஸாரி, எனக்கு உங்களையே யாருன்னு தெரியாது

************************************************************************************************************************************

போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு... உன் கடைசி ஆசை என்ன?

கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி குருவி போகலாமா ?

கைதி :அதுக்கு என்னை நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

************************************************************************************************************************************

ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்: யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

************************************************************************************************************************************

விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....

இளயதளபதி: நீங்க போங்க... நான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு வந்துடறேன்....

************************************************************************************************************************************

அருணாசலம் பார்ட் 2 ;

ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?

ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,

************************************************************************************************************************************

விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமிக்ஸ் பண்ணலாமா?

பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

************************************************************************************************************************************

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே

நாலுமாசம் தூங்க மாட்டே..!!!

ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல

************************************************************************************************************************************

பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...

நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க

விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுட்டிங்க..?

நடிகர் விஜய்: யோவ்.. உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல? இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்யா..!!

************************************************************************************************************************************

ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா? எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல அந்த படத்தையே போடுறோம்...

************************************************************************************************************************************
நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகியிருப்பேன்.

நிருபர்: அதான் இப்பவும்.. நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?!!!

************************************************************************************************************************************

நண்பர் : நான் elevator-ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....

விஜய் : நீங்களாவது பரவாயில்லை, நான் மூன்று மணி நேரம் escalator- ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

************************************************************************************************************************************

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்குக்கு இது போதும்.

************************************************************************************************************************************

போலீஸ்: உன்னை கைது செய்கிறேன் .

ஆண் : ஏன் ? சார் நான் என்ன தப்பு பண்ணினேன்..?

போலீஸ்: உன் கைல என்ன வெச்சிருக்க?

ஆண்: விஜய் பட வீ.சீ.டீ வில்லு சார்.!!

போலீஸ்: தற்கொலை முயற்சி.. அதனால கைது பண்றேன்..!!'

ஆண் : என்ன கொடுமை சார்..!! வீட்ல பொண்டாட்டி தொல்லை தங்க முடிலன்னு தற்கொலை பண்ண போனா.. அதை கூட பண்ண விட மாட்டேங்கிறாங்க..!!

************************************************************************************************************************************

அஜித் & விஜய் எக்ஸாம் ஹால் :

விஜய்: தல கொஞ்சம் காட்டு தல..!!

அஜித் : எனக்கு ஹிந்தி எக்ஸாம்.

விஜய்: பரவா இல்ல நீ அத காட்டு நா அதை தமிழ்ல ரீமேக் பண்ணிக்கறேன் .

அஜீத்: இதுக்கு பிச்சை எடுக்கலாம்.!

விஜய்: எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா ...?!!

************************************************************************************************************************************

ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவனுக்கு தன்னம்பிக்கை வரணும்னு நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.

படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.

"கொய்யால...!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"

************************************************************************************************************************************

பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல்ல சொல்ல?

அம்மா : கெட்ட செய்திய சொல்லு

பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு

அம்மா : அப்ப நல்ல செய்தி?

பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல!!!

************************************************************************************************************************************

விஜய் (பொல்லாதவன் கருணாஸ் ஸ்டைலில்) :   ஏய் மச்சி நீ கேளேன்ஏய் மாமா நீ கேளேன்ஏய் மாப்பு நீ கேளேன்நீ கேளேன்நீ கேளேன்....  

டேய்..... எவனாச்சும் கேட்டுத்தொலைங்கலேண்டா....

"வில்லுபாட்டு ரிலீஸாகியிருக்குது...

************************************************************************************************************************************

" சார் இந்த TV புதுசா மார்க்கெட்ல வந்துருக்கு .  இது தான் இப்ப fast movingநீங்க வேணா இந்த TV வாங்கிக்கிறீங்களா...?"

" அப்படிங்களா...!  என்ன விலைங்க?"

" just ஒரு லட்சம்தாங்க..."

"ஏங்க இவளோ விலை...?"

"நீங்க பாக்குற சேனல்ல விஜய் படம் வந்தா இது automatic channel மாத்திடும்.."

************************************************************************************************************************************

"சரோஜாபிரேம்ஜி ஸ்டைலில் படிக்கவும்...

2002  -  புதிய கீதை

2003  -  வசீகரா

2004  -  உதயா

2005  -  சச்சின்

2006  -  ஆதி

2007  -  அழகிய தமிழ் மகன்

2008  -  குருவி

2009  -  வில்லு

இவ்வளவு தாங்கிட்டோம்....

2010 – வேட்டைக்காரன் ---->   இதைத் தாங்க மாட்டோமா...?

************************************************************************************************************************************

 (சூரியன் பட ஸ்டைலில்) கவுண்டமணி  :    நச்சு நச்சுங்கிராங்கப்பா....  "குருவி" னு ஒரு படமாம்.  அதைப் பாக்கச்சொல்லி அனத்துறாங்கப்பா...  அது கூட பரவாயில்லை...  "வில்லு" னு ஒரு படமாம்.  அதை விஜய் ரசிகர்களாலேயே (!) பாக்க முடியலயாம்.  அத நம்மல பாக்கச் சொல்லி ஒரே டென்ஷன் பண்றாங்கப்பா...  அந்த கொடுமையெல்லாம் கூட தாண்டி வந்துட்டேன்...  இப்ப வேட்டைகாரன்னு ஒரு படம் வருதாம்.  அதை நான்தான் first show பாக்கனுமாம்...  ஒரே குஷ்டமப்பா..."

அருகிலிருக்கும் விஜய் :  ண்ணா.....  ஃபோன் வயர் பிஞ்சு நாளு நாள் ஆச்சுங்ணா..."

கவுண்டமணி :  டேய் பனங்கா மண்டைத்தலையா இது செல்போன்டா....  ஐயோ ஐயோ...!!!

************************************************************************************************************************************

நண்பா உன்னைப்போல் என் கண்ணீர் துடைக்க ஒருவன் இருந்தால்

-

-

100 விஜய் படம் வந்தாக் கூட துணிந்துப் பார்ப்பேன்.

************************************************************************************************************************************

ஹிஸ்டரி டீச்சர்: ராஜா ராம் மோகன் ராய் யாரு?

விஜய்: அவுங்க நாலு பேரும் பெஸ்ட் பிரண்டு டீச்சர்.

போதும்.. இத்தோட நிறுத்திக்கிறேன். இன்னும் எழுதினா விஜய் பஞ்ச் டயலாக் பேசி என்னைக்கொன்னுடுவார்..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails