uFOCUS: விசுவாமித்திர கோத்திரத்தில் ஒரு செயலி
-
Pa Raghavan
சொர்க்கம் உனக்கில்லை, நரகம் உனக்கு வேண்டாமெனில் உனக்கென ஒரு சொர்க்கத்தை
நான் உருவாக்கித் தருவேன் என்று சூரிய வம்சத்துத் திரிசங்குவுக்கு
நம்ப...
I Sharmi Diamond Ep39
-
39. Me
This time, the door wasn't knocked; it sounded like it was being rammed
open, as if they had decided to break it down. The faces of those i...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
கடந்த 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜப்பானைப்பற்றி வரும் செய்திகள் மனதுக்கு மிகவும் வேதனை தருகின்றன. இது வரை பலியானவர்கள் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் செய்திகளில் சொல்லப்படுகிறது. இலட்சக்கணக்கானவர்கள் வீடிழந்திருக்கிறார்கள். மின்சாரம், குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அங்கிருந்த அணு உலைகள் குளிரூட்டப்படுவது நின்று போனதால் வெப்பம் அதிகரித்து வெடித்து விட்டிருக்கிறது. இதனால் அணு உலை கதிர் வீச்சு அபாயமும் உண்டாகியிருக்கிறது. பொதுவாகவே இது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிர்கள் பலியாவது இப்பொழுதெல்லாம் சகஜமாகிப்போனது. ஆனால், நான் குறிப்பாக ஜப்பானைக் குறித்து வேதனைப்பட இது ஒரு பேரழிவு என்ற ஒரு காரணம் மட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருக்கின்றது. பொதுவாக ஜப்பான் என்றால் வல்லரசு நாடுகளில் ஒன்று, வறுமை இல்லாத தேசம், தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடு என்று உங்களைப்போல் தான் நானும் தெரிந்து வைத்திருந்தேன். அதை விட அதிகமாக ஜப்பானை, ஜப்பானியர்களை பற்றி நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.
ஜித்தாவிலிருந்து 170 கிமீ தூரத்தில் மதினா செல்லும் வழியில் இருக்கிறது ராபிக் என்ற சிறிய நகரம். ஒரு நேரத்தில் அதிக வசதிகள் இல்லாத பெரிய கிராமம் போல் இருந்த ராபிக்கில் இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. காரணம், சவுதியின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் அராம்கோ என்ற எண்ணெய் நிறுவனம். அது ராபிக்கில் ஒரு மிகப்பெரும் எண்ணெய், எரிவாயு ஆலையை கட்ட முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அராம்கோ நிறுவனம் ஜப்பானின் புகழ்பெற்ற சுமிட்டோமோ (sumitomo) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, இருவரும் சேர்ந்து அந்த ஆலையை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதில் வரும் வருமானத்தை இரு நிறுவனங்களும் சரி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, புது நிறுவனத்திற்கு பெட்ரோராபிக் எனப்பெயரிட்டு ஆலை கட்டும் வேலையை தொடங்கினார்கள். அதன் கட்டுமானத்தின் தலைமை நிர்வாகக் குழுவில்(Project Management Team) நானும் ஒருவனாக 4 வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தேன். அதில் பெரும்பாலோனோர் ஜப்பானியர்கள். மீதி இந்தியர் மற்றும் சவுதியை சேர்ந்தவர்கள். இது தவிர கட்டுமான பகுதியில் வேலை பார்க்கும் எஞ்சினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களில் கணிசமான ஜப்பானியர்கள் இருந்தனர். எங்களின் புராஜெக்ட் மேனேஜர் தக்கெஹிக்கோ கவாசே (Takehiko Kawase) என்ற ஜப்பானியர் தான். சவுதி வந்த பின் ஜப்பானியர்கள் பலரை நான் பார்த்திருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய கிடைத்த முதல் வாய்ப்பு அது. மற்ற எந்த நாட்டவரையும் விட ஜப்பானியர்கள் என்னை பல வகைகளில் கவர்ந்தனர். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் அவர்களிடம் பார்த்த பல விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது, கற்றுக்கொள்ள உதவியது.
ஜப்பானியர்களுக்கு தாய் மொழிப்பற்று ரொம்ப அதிகம். அவர்களின் படிப்பு முதல், பார்க்கும் வேலை, பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றிலும் ஜப்பானிய மொழி தான். ஆங்கிலம் என்றாலே அவர்களுக்கு கசப்பு தான். சவுதியில் நாங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல், டாக்குமெண்டேஷன் போன்ற எல்லாவற்றிலும் ஆங்கிலத்தை பயன்படுத்தினோம். ஆனால் அவர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பும் போது ஜப்பானிய மொழியில் தான் அனுப்பி கொள்வார்கள். ஆங்கிலம் புரியாமல் பல ஜப்பானியர்கள் கையோடு ஜப்பான் - ஆங்கில அகராதி சாதனத்தை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களின் உடைந்த ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. T உச்சரிப்பு சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வராது. தேங்க்ஸ் என்பதை சேங்க்ஸ் என்று தான் சொல்வார்கள். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அவர்கள் மற்றவர்களை மதிக்கும் பண்பு. வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். பதவியில் உயர்ந்தவர், குறைந்தவர் பார்க்கமாட்டார்கள். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக மிகுந்த மரியாதையுடன் பழகுவார்கள், பேசுவார்கள்.
நாம் மரியாதைக்கு ”சார்” என்று சொல்வது போல் அவர்கள் ”சான்” என்பார்கள். நானும் சான் போட்டு தான் எல்லோரையும் கூப்பிடுவேன். இப்படியே பழக்கமாகி அதன் பிறகு சவுதிகளையும் நான் சான் போட்டு கூப்பிட ஆரம்பித்தது பெரிய காமெடி. அவர்கள் முறையில் வணக்கம் சொல்ல உடம்பை கொஞ்சம் முன்பக்கம் வளைத்து செய்வது பார்க்க சுவராஸியமாக இருக்கும். அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருந்தன. அவர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை என்று இறங்கி விட்டால் ஊண், உறக்கம் பார்க்க மாட்டார்கள். அதே போல் நேரத்தை பேணுவதில் மிகவும் சிறந்தவர்கள். அலுவலகம் ஏழு மணிக்கு என்றால் அனைவரும் ஆறே முக்காலுக்கே வந்து விடுவார்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கோபமே வராது. மிகவும் பொறுமைசாலிகள். மற்றவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவதில் மன்னர்கள். நாங்களெல்லாம் கலர் கலரா உடையுடன் வேலைக்கு போவோம். ஆனால் ஜப்பானியர்களில் புராஜெக்ட் மேனேஜரிலிருந்து கடை நிலை பணியாளர் வரை யூனிஃபார்மில் தான் வருவார்கள். அவர்களின் சாப்பாடை பார்த்தால் ஆச்சரியம் வரும். நம்மை விட மிகவும் குறைவாக சாப்பிடுவார்கள். நம்மை போல் அரிசி சாதம் தான் அவர்களும் சாப்பிடுவார்கள் என்றாலும் அது எவ்வளவு, எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் தான் சுவராஸியம் அடங்கி இருக்கிறது. நம்மை போல் அவர்கள் அரிசியை அடுப்பில் வேக வைத்து வடித்து சாப்பிடுவதில்லை. ப்ளாஸ்டிக் பேப்பர்களுக்குள் உருண்டையாக சுற்றிய அரிசியை வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன் கொதிக்கும் நீரில் அந்த அரிசி உருண்டைகளை போடுகிறார்கள். 5 நிமிடம் கழித்து எடுத்து சுற்றி இருக்கும் ப்ளாஸ்டிக் பேப்பரை பிரித்து பார்த்தால் சோற்று உருண்டைகள் நம் ஊரில் கிடைக்கும் லட்டு அளவில்..!! ஒரு ஆள் அதிகபட்சம் 3 அல்லது 4 உருண்டைகள் தான் சாப்பிடுகிறார்கள். நமக்கு அதையெல்லாம் வைத்து பசியடக்க முடியுமா.? கூடவே கொஞ்சம் காய்கறி, பழங்கள் அடங்கிய சாலட் சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் எங்கள் அலுவலகத்தில் ஜப்பானிய முறையில் விருந்து கொடுப்பார்கள். அதில் பல உணவுகள் நம் ஊர் மசாலா எதுவும் இல்லாததால் சாப்பிடவே முடியாது.
நிறுவன பயிற்சிக்காக சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை அராம்கோ நிறுவனம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவுக்கு அனுப்பினார்கள். அங்கு போய் வந்த நண்பர்கள் அங்கு கண்டவற்றை அதிசயத்துடன் எங்களிடம் வாய்வலிக்க சொன்னார்கள். அங்குள்ள அதி வேக புல்லட் ட்ரெய்ன், அதிநவீன பாலங்கள், பெரும் அடுக்குமாடி கண்ணாடி கட்டிடங்கள், சுரங்க பாதைகள், பொம்மை போல் இருக்கும் ஜப்பானிய பெண்கள், எங்கும் வரிசை கட்டி நிற்கும் கார்கள், போகுமிடமெல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், அங்கிருக்கும் விண்ணை முட்டும் விலைவாசி என்று அவர்கள் சொன்ன பல விஷயங்கள் மிகவும் சுவராஸியமாக இருந்தன. இன்றைய தேதியிலும் ஜப்பானிய பொருட்கள் தான் தொழில்நுட்பத்திலும், தரத்திலும் சிறந்தவை. அப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட ஜப்பான் சிதைந்து நொறுங்கி நிற்கிறது. ஜப்பானுக்கு அழிவு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி சுனாமி, பூகம்பம் என சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவு ஏன், அமெரிக்கா 1945-ம் வருடம், ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி ”லிட்டில் பாய்” என்ற அணுகுண்டுகளை வீசி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை முழுதும் அழித்த பின்னும் தங்களின் கடுமையான உழைப்பால் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட கடும் உழைப்பாளிகளை இறைவன் அடிக்கடி இயற்கை சீற்றங்களை கொண்டு சோதித்துக்கொண்டே இருக்கின்றான். வாழ்க்கையை இழந்து நிற்கும் அவர்களுக்கு இப்பொழுது இறைவன் மட்டுமே துணை..!!
தேர்தல் தீபாவளி தொடங்கி விட்டது. கூட்டணிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுயேட்சைகள், லெட்டர் பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்புடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இப்போதைக்கு திமுகவுடன், பாமக கூட்டணி சேர்ந்ததும், காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் பிணக்கு ஏற்பட்டு பிறகு பாமக மற்றும் முஸ்லீம் லீக்கிடம் இருந்து 3 தொகுதிகளை எடுத்து காங்கிரஸுக்கு தானம் செய்ததும் சுவராஸியமான நிகழ்வுகள். அதை விட பெரும் சுவராஸியம் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்த ஜெயலலிதாவும், மக்களுடன் மட்டுமே கூட்டணி என வசனம் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்தும் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். இனியும் கட்சி மாற்றம், காட்சி மாற்றம் நிறைய பார்க்கலாம்.
இது வரை உறுதியாகியிருக்கும் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு கீழே:
* திமுக – 121 * காங்கிரஸ் – 63 * பாமக – 30 * விடுதலைச் சிறுத்தைகள் – 10 * கொங்குநாடு முன்னேற்றக் கழகம் – 7 * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2 * மூவேந்தர் முன்னேற்றக் கழகம் – 1
காங்கிரஸ் தான் போட்டியிடப்போகும் 63 தொகுதிகளின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே அதிமுக கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு இருக்கும் என அரசியல் வட்டாரம் சொல்கிறது.
காங்கிரஸ் போட்டியிடப்போகும் தொகுதிகள் கீழே:
சென்னை மாவட்டம்
1. தி.நகர்
2. அண்ணா நகர்
3. ராயபுரம்
4. மைலாப்பூர்
5. ஆவடி
6. திரு.வி.க.நகர்