skip to main |
skip to sidebar
தேர்தல் தீபாவளி தொடங்கி விட்டது. கூட்டணிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுயேட்சைகள், லெட்டர் பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்புடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இப்போதைக்கு திமுகவுடன், பாமக கூட்டணி சேர்ந்ததும், காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் பிணக்கு ஏற்பட்டு பிறகு பாமக மற்றும் முஸ்லீம் லீக்கிடம் இருந்து 3 தொகுதிகளை எடுத்து காங்கிரஸுக்கு தானம் செய்ததும் சுவராஸியமான நிகழ்வுகள். அதை விட பெரும் சுவராஸியம் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்த ஜெயலலிதாவும், மக்களுடன் மட்டுமே கூட்டணி என வசனம் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்தும் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். இனியும் கட்சி மாற்றம், காட்சி மாற்றம் நிறைய பார்க்கலாம்.
இது வரை உறுதியாகியிருக்கும் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு கீழே:
* திமுக – 121
* காங்கிரஸ் – 63
* பாமக – 30
* விடுதலைச் சிறுத்தைகள் – 10
* கொங்குநாடு முன்னேற்றக் கழகம் – 7
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2
* மூவேந்தர் முன்னேற்றக் கழகம் – 1
காங்கிரஸ் தான் போட்டியிடப்போகும் 63 தொகுதிகளின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே அதிமுக கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு இருக்கும் என அரசியல் வட்டாரம் சொல்கிறது.
காங்கிரஸ் போட்டியிடப்போகும் தொகுதிகள் கீழே:
சென்னை மாவட்டம்
1. தி.நகர்
2. அண்ணா நகர்
3. ராயபுரம்
4. மைலாப்பூர்
5. ஆவடி
6. திரு.வி.க.நகர்
திருவள்ளூர் மாவட்டம்
7. மதுரவாயல்
8. பூந்தமல்லி
9. திருத்தணி
காஞ்சிபுரம் மாவட்டம்
10. மதுராந்தகம்
11. ஆலந்தூர்
12. ஸ்ரீபெரும்புதூர்
வேலூர் மாவட்டம்
13. வேலூர்
14. சோளிங்கர்
15. ஆம்பூர்
திருவண்ணாமலை மாவட்டம்
16. செய்யார்
17. கலசப்பாக்கம்
கடலூர் மாவட்டம்
18. விருத்தாச்சலம்
விழுப்புரம் மாவட்டம்
19. ரிஷிவந்தியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
20. கிருஷ்ணகிரி
21. ஓசூர்
சேலம் மாவட்டம்
22. சேலம் (வடக்கு)
23. ஆத்தூர்
நாமக்கல் மாவட்டம்
24. திருச்செங்கோடு
கோவை மாவட்டம்
25. சிங்காநல்லூர்
26. வால்பாறை
27. தொண்டாமுத்தூர்
திருப்பூர் மாவட்டம்
28. திருப்பூர் (தெற்கு)
29. அவினாசி
ஈரோடு மாவட்டம்
30. மொடக்குறிச்சி
31. ஈரோடு (மேற்கு)
32. காங்கேயம்
நீலகிரி மாவட்டம்
33. ஊட்டி
திண்டுக்கல் மாவட்டம்
34. நிலக்கோட்டை
35. வேடசந்தூர்
நாகப்பட்டினம் மாவட்டம்
36. மயிலாடுதுறை
தஞ்சாவூர் மாவட்டம்
37. பேராவூரணி
38. பட்டுக்கோட்டை
39. பாபநாசம்
திருவாரூர் மாவட்டம்
40. திருத்துறைப்பூண்டி
புதுக்கோட்டை மாவட்டம்
41. அறந்தாங்கி
பெரம்பலூர் மாவட்டம்
42. அரியலூர்
கரூர் மாவட்டம்
43. கரூர்
திருச்சி மாவட்டம்
44. முசிறி
45. மணப்பாறை
மதுரை மாவட்டம்
46. மதுரை (மேற்கு)
47. மதுரை (வடக்கு)
48. திருப்பரங்குன்றம்
ராமநாதபுரம் மாவட்டம்
49. ராமநாதபுரம்
50. பரமக்குடி
சிவகங்கை மாவட்டம்
51. சிவகங்கை
52. திருமயம்
53. காரைக்குடி
விருதுநகர் மாவட்டம்
54. விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டம்
55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்
நெல்லை மாவட்டம்
57. வாசுதேவநல்லூர்
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்
கன்னியாகுமரி மாவட்டம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக