நேரம்:

ஞாயிறு, 29 ஜூன், 2008

தசாவதாரம் - விமர்சனம்

நான் இன்னும் படம் பார்க்கலை. எப்ப பார்ப்பேன்னு அந்த கூகிள் அம்மனுக்கு தான் வெளிச்சம்.! ஆனா இணைய தளங்கள், வலைப்பூக்கள்னு எல்லா இடத்திலும் நீக்கமற நிறைஞ்சு கிடக்கிற தசாவதார விமர்சனங்களை படிச்சி, படிச்சி ஏறக்குறைய தசாவதாரம் பார்ட்-2 எடுக்கிற அளவுக்கு எனக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. நான் மனதில் கற்பனை செஞ்சி வச்சிருக்கும் காட்சிகளும், படத்தில் இருக்கும் காட்சிகளும் படத்தோட எத்தனை பொருந்துதுனு உறுதி செய்ய தான் படம் பார்க்கணும்னு நினைச்சிட்டிருக்கேன்.!

ஆனா, மத்தவங்க சொல்றது போல் ஒரு முறை பார்க்கலாம்-கிறதை என்னால் ஏற்க முடியலை. ஏன்னா கமல் ஏற்ற பத்து பாத்திரங்கள் எதுன்னு உறுதி செய்யவே 2 தடவை பார்க்க வேண்டியிருக்கும்கிறது என் கணிப்பு. அதுக்கு பிறகு கதையின் போக்கு, பிரமாண்டம், மல்லிகாஷெராவத்-ன்னு அவங்கவங்க மனநிலைக்கு தகுந்தது போல் எண்ணிக்கை கூடும், குறையும்.!! உங்களுக்கு தெரியுமா..? மக்களோட பொங்கி வழியும் கற்பனையின் படி தசாவதாரம் படத்துல கமல் 87 வேடத்துல நடிச்சிருக்கிறதா இது வரை மக்கள் கணிச்சிருக்காங்க. இதுல பெரிய காமெடி என்னன்னா படத்தில் கமலின் மகனா வரும் அந்த சிறுவன் கூட மேக்கப் போட்ட கமல் தான்னு சிலர் மத்தவங்க தலையில் அடிச்சி சத்தியம் பண்றாங்களாம்.!!

இரசனைகள் ஆளாளுக்கு மாறும். கதைன்னு ஒரு விஷயமே இல்லாத சிவாஜி மாதிரியான கண்றாவி படத்தை எல்லாம் வெற்றியடையச்செய்ற அளவுக்கு அமோக இரசனை, தாராள மனசு, பொறுமை கடலான நம் மக்கள், தமிழ் சினிமாவில் திறமையை கொண்டு படங்களை தரும் கமலை கை விடமாட்டார்கள்-ன்னு நான் நினைக்கிறேன். மாஸ்க் மாதிரியான மேக்கப்-னாலும் நடிப்புங்கிற கலைக்காக மணிக்கணக்கில் கஷ்டங்களை பொறுத்துக்கிட்டு நடிக்கிறதுக்காக குறைகளை அனுசரிப்பதில் தவறில்லை. பொதுவா ஹாலிவுட், தமிழ் படங்களை ஒப்பிட்டு பார்க்கிறதில் உடன்பாடில்லை. ஹாலிவுட் படங்களுக்கான வீச்சு, அதன் இரசிகர்களின் மனநிலை (தமிழர்களையும் சேர்த்தே) ஆகியவை தமிழ் படங்களுக்கு கொஞ்சமும் பொருந்தாதவை. சிவாஜி படத்தில் வரும் கார் மோதல் காட்சியை ஆஹா, ஓஹோ-வென்று நம்மவர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். என் அனுபவத்திலும் அத்தனை விறுவிறுப்பான மோதலை தமிழில் நான் கண்டதில்லை. ஆனால், என் மொத்த இரசனையின் அடிப்படையில் டை ஹார்டு-4 படத்தில் வரும் சுரங்க மோதலுக்கு முன் சிவாஜி பட காட்சி ஜுஜுபி.! மற்ற மொழிகளோடு நம் திரைப்படத்தை ஒப்பிடுவது நம் குழந்தைக்கு வெள்ளைக்காரனின் குழந்தை போல் இங்கிலீஷ் பேச வரலையே என்று ஆதங்கப்படுவதற்கு ஈடானது..!!

சிலர் சொல்வது போல் 10 பாத்திரங்கள் என்னன்னு பார்க்கிறவங்களுக்கே நினைவில் வச்சிக்க முடியலைன்னா, அந்த பாத்திரங்களை செஞ்ச கமலின் திறமையை நாம் நிச்சயம் மதிக்கணும். அதான் ஒரு உண்மையான கலைஞனுக்கு நாம் கொடுக்கிற கௌரவம்.!!

நன்றி..!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails