நேரம்:

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர்..!! - 03






காதல் வயப்பட்டிருப்பதை எப்படி உணர்ந்து கொள்வது..? எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். நேரா நேரத்திற்கு பசிக்காது, அப்படியே பசித்தாலும் சாப்பிட அமர்ந்தால் சாப்பிடவே பிடிக்காது, கண்ணாடியின் முன் அதிக நேரம் செலவழிப்பீர்கள், இரவு நேரம் மிக நீளமாக தெரியும் (தூங்கினால் தானே..!), நாம் தான் பெரிய ஆள் போலவும், நம்மைத் தான் எல்லோரும் கவனிக்கிறார்கள் என்பது போலவும் உணர்வீர்கள், எதையாவது எழுத கை துறுதுறுக்கும் (உங்களுக்கு கையெழுத்தே போடத் தெரியாவிட்டாலும் கூட..!), பல் விலக்காமல் குளிப்பீர்கள், சாப்பிட்டு விட்டு பல் விளக்குவீர்கள், குடும்பத்தினரிடம் திருட்டுத்தனமாக நடந்து கொள்வீர்கள், தனி அறைக்குள் சென்று அவசியமே இல்லாமல் கதவை தாழிட்டு, விளக்கை அணைத்து, படுக்கையில் விழுந்து, கொட்ட, கொட்ட விழித்துக் கிடப்பீர்கள், உங்கள் “ஆளை”ப் பார்த்தால், பேச்சைக் கேட்டால் முகத்தில் 100 வாட்ஸ் பல்பின் பிரகாசம் வரும் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்..! காதல் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தக் காதலால் நிறைய சாம்ராஜ்யங்கள் சரிந்த கதையெல்லாம் உண்டு. பெற்ற தாய், தகப்பன் எதையாவது சொன்னால் சுலபமாக மறுக்கப்படும், ஆனால் அதே விஷயம் “மேலிடத்திலிருந்து” ஒரு வரியில் எழுதி வந்தாலோ, அல்லது நேருக்கு நேர் கண்ணுக்குள் பார்த்து “செய்யாதே” என்று ஒரு வார்த்தை சொன்னாலோ போதும். அதற்கு அப்பீலே கிடையாது. அப்படியே பெட்டிப் பாம்பாய் அடங்கி போவான். அதற்கு பெயர் பயமல்ல..! அது அவன் கொடுக்கும் “ஃபாசில் இயக்கி, விஜய்-ஷாலினி நடித்த வெற்றிப்படத்தி‎ன் தலைப்பு ..!!”.

என்னைப் பொறுத்தவரை (நன்றாக கவனியுங்கள்..! என்னைப் பொறுத்தவரை..!) காதலித்து திருமணம் செய்யும் வாழ்க்கையில் உள்ள சந்தோஷம், இருவருக்கிடையேயான புரிதல் பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணத்தில் இல்லையோ என்று எண்ணுவதுண்டு. ஆனால், அதே நேரம் காதல் திருமணம் செய்து விவாகரத்து செய்து பிரிந்தவர்களும் உண்டு, பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்தால் இன்றும் காதலித்து வாழ்பவர்களும் உண்டு. காதல் எந்த வகை திருமணத்தில் என்பது இல்லை, இருவருடைய புரிதலில் தான் இருக்கிறது..!. பொதுவாக மனிதர்களுக்கு குணம் உண்டு. ஒரு பொருள் கிடைக்காத வரை அதைப் பெற போராடுவார்கள். அதைப் பெற்றதும் அதன் மேல் உள்ள முக்கியத்துவம் போகும். அடுத்த பொருளின் மீது நாட்டம் போகும் (இந்த விஷயத்தில் பெண்கள் எவ்வளவோ தேவலை..!). இந்த தத்துவத்தில் தான் சில காதல் திருமணங்கள் தோல்வியுறுகின்றன. பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டு, உடல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் வரும் வினை இது.

இவ்வுலகில் எதுவும் நிலை இல்லை. உடல் உணர்விற்கு அடிப்படையாக இருக்கும் உடலழகும் கூட நிலையில்லை. ஆனால், காதல் நிலையானது. காதல் எத்தனையோ வகையான மனிதர்களைக் கண்டிருக்கிறது. அதை நாம் மறந்து விடக்கூடாது. காலத்திற்கு எதையும் மறக்கடிக்கும் குணம் உண்டு என்பார்கள், ஆனால் ஒன்றைத் தவிர..! அது தான் காதல்..! வெட்ட, வெட்ட வளரும், முன்பை விட வேகமாக வளரும் மரம் போல் பிரிந்திருக்கும் காலம் அதிகரிக்க, அதிகரிக்க காதலின் வீரியமும் கூடும். இது காதலின் தனிச் சிறப்பு. காதலை எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் கைவிடாதீர்கள். காதலில் விழுந்தவர்களுக்கெ‎ன்று ஒரு சில சிறப்பு குணங்கள் உண்டு. ஒரு மலர் மொட்டவிழ்த்து மலரும் ஓசையை அவர்களால் கேட்க முடியும், தனிமையில் ‏இருக்கும் ஒரு மரத்தி‎ன் வேதனையை உணர முடியும், பறந்து திரியும் சுதந்திர பறவைகளி‎ன் பாஷை புரியும். ஒரிஸாவி‎ல் வெள்ளம், குஜராத்தில் கலவரம், கல்கத்தாவில் விபத்து, மும்பையில் குண்டுவெடிப்பு, ஆந்திராவில் மழை, காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல், தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பிரச்சினை என்று எது நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அது வருடாவருடம் நிகழ்வது தா‎ன். நீங்கள் உங்கள் காதலில் உறுதியாய், உண்மையாய் இருங்கள். உங்கள் காதலை நீ‎ங்கள் முழுதும் நம்புங்கள். நம்பிக்கை தான் காதலின் அடிப்படை. அந்த நம்பிக்கை தா‎ன் உங்கள் காதலுக்கு எதிராக எத்தனை எதிர்ப்புகள் வந்து எரிக்கப்பட்டாலும், அந்த சாம்பலிலிருந்து ·பீனிக்ஸ் பறவையாய் இ‎ன்னும் வீரியத்துடன் உயிர்த்தெழும்..!

திருமணம் ஆனவர்கள் உங்கள் துணையைக் காதலியுங்கள். திருமணமாகாதவர்கள் அத்தை மகளாக, மாமன் மகளாக இருந்தாலும் கூட காதலித்து திருமணம் செய்யுங்கள். காதலுக்கு உறவு எதிரி அல்ல..! மனிதனை அமைதியாக, நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வைப்பதில் காதலுக்கு என்றும் முதலிடம். நான் உன்னை காதலிக்கிறேன் (தமிழ்), ஐ லவ் யூ (இங்கிலீஷ்), நின்னே ஞான் பிரேமிக்குன்னு (மலையாளம்), மை தும்சே ப்யார் கர்த்தாஹும் (ஹிந்தி), அனா ஒஹிபுக் (அராபிக்), நானு நின்னனு ப்ரீத்திசுத்தேனு (கன்னடம்). இதெல்லாம் காதலை வெளிப்படுத்த சில மொழிகளில் உள்ள வாக்கியங்கள்.
இவ்வளவு தானான்னு கேட்பவர்களுக்கு உலக மொழிகளில் காதலை எப்படி சொல்வது என கீழே கொடுத்திருக்கிறேன். காதலுக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, கலாச்சாரம், தோற்றம் எதுவும் தடையில்லை. காதலிக்க இதயம் மட்டும் வேண்டும். எனவே காதலியுங்கள்..! என்றும் இளமையாக இருப்பீர்கள். காதலியுங்கள்..! என்றும் அழகாக இருப்பீர்கள். காதலியுங்கள் என்றும் சந்தோஷமாக இருப்பீர்கள். காதலியுங்கள்..! என்றும் நிம்மதியாக இருப்பீர்கள். காதலியுங்கள்..! என்றும் வாழ்க்கை சுவைக்கும். காதலியுங்கள்..! வானம் உங்கள் வசப்படும். ஆதலினால் காதல் செய்வீர்..!


காதல் சொல்ல வாருங்கள்:

Afrikaans - Ek het jou lief
Albanian - Te dua
Arabic - Ana behibak (to male)
Arabic - Ana behibek (to female)
Armenian - Yes kez sirumen
Bambara - M'bi fe
Bangla - Aamee tuma ke bhalo baashi
Belarusian - Ya tabe kahayu
Bisaya - Nahigugma ako kanimo
Bulgarian - Obicham te
Cambodian - Bung Srorlagn Oun (to female)
Oun Srorlagn Bung (to male)
Cantonese/Chinese  Ngo oiy ney a
Catalan - T'estimo
Cheyenne - Ne mohotatse
Chichewa - Ndimakukonda
Corsican - Ti tengu caru (to male)
Creol - Mi aime jou
Croatian - Volim te
Czech - Miluji te
Danish - Jeg Elsker Dig
Dutch - Ik hou van jou
English - I love you
Esperanto - Mi amas vin
Estonian - Ma armastan sind
Ethiopian - Ewedishalehu : male/female to female
Ewedihalehu: male/female to male.
Faroese - Eg elski teg
Farsi - Doset daram
Filipino - Mahal kita
Finnish - Mina rakastan sinua
French - Je t'aime, Je t'adore
Gaelic - Ta gra agam ort
Georgian - Mikvarhar
German - Ich liebe dich
Greek - S'agapo
Gujarati - Hu tumney prem karu chu
Hiligaynon - Palangga ko ikaw
Hawaiian - Aloha wau ia oi
Hebrew - Ani ohev otah (to female)
Hebrew - Ani ohev et otha (to male)
Hiligaynon - Guina higugma ko ikaw
Hindi - Hum Tumhe Pyar Karte hai
Hmong - Kuv hlub koj
Hopi - Nu' umi unangwa'ta
Hungarian - Szeretlek
Icelandic - Ég elska þig
Ilonggo - Palangga ko ikaw
Indonesian - Saya cinta padamu
Inuit - Negligevapse
Irish - Taim i' ngra leat
Italian - Ti amo
Japanese - Aishiteru
Kannada - Naa ninna preetisuve
Kapampangan - Kaluguran daka
Kiswahili - Nakupenda
Konkani - Tu magel moga cho
Korean - Sarang Heyo
Latin - Te amo
Latvian - Es tevi miilu
Lebanese - Bahibak
Lithuanian - Tave myliu
Macedonian Te Sakam
Malay - Saya cintakan mu / Aku cinta padamu
Malayalam - Njan Ninne Premikunnu
Maltese - Inhobbok
Mandarin Chinese - Wo ai ni
Marathi - Me tula prem karto
Mohawk - Kanbhik
Moroccan - Ana moajaba bik
Nahuatl - Ni mits neki
Navaho - Ayor anosh'ni
Nepali - Ma Timilai Maya Garchhu
Norwegian - Jeg Elsker Deg
Pandacan - Syota na kita!!
Pangasinan - Inaru Taka
Papiamento - Mi ta stimabo
Persian - Doo-set daaram
Pig Latin - Iay ovlay ouyay
Polish - Kocham Cie
Portuguese - Amo-te
Romanian - Te ubesc
Roman Numerals - 333
Russian - Ya tebya liubliu
Rwanda - Ndagukunda
Scot Gaelic - Tha gra\dh agam ort
Serbian - Volim te
Setswana - Ke a go rata
Sign Language - ,\,,/ (represents position of fingers when signing 'I Love You'
Sindhi - Maa tokhe pyar kendo ahyan
Sioux - Techihhila
Slovak - Lu`bim ta
Slovenian - Ljubim te
Spanish - Te quiero / Te amo
Surinam- Mi lobi joe
Swahili - Ninapenda wewe
Swedish - Jag alskar dig
Swiss-German - Ig liebe di
Tajik Man turo Dust Doram
Tagalog - Mahal kita
Taiwanese - Wa ga ei li
Tahitian - Ua Here Vau Ia Oe
Tamil - Naan unnai kathalikiraen
Telugu - Nenu ninnu premistunnanu
Thai - Chan rak khun (to male)
Thai - Phom rak khun (to female)
Turkish - Seni Seviyorum
Ukrainian - Ya tebe kahayu
Urdu - mai aap say pyaar karta hoo
Vietnamese - Anh ye^u em (to female)
Vietnamese - Em ye^u anh (to male)
Welsh - 'Rwy'n dy garu
Yiddish - Ikh hob dikh
Yoruba - Mo ni fe
Zimbabwe - Ndinokuda



முற்றும்..!!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர்..!! - 02



சிலரைப் பார்த்திருக்கிறீர்களா..! பையன் பத்தாவது படித்துக் கொண்டிருப்பான், அதே வகுப்பில் அந்தப் பெண்ணும். இருவரும் காதலிப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அதற்கென்றே தமிழ் சினிமாவில் வரையறுக்கப்பட்ட நிறைய சேட்டைகளையும் செய்வார்கள். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் தனிமையில் இருக்கும் போது அவ‎ன் வயதுக் கோளாறில் சேட்டை ஏதோ செய்ய, அதை யாராவது பார்த்து, அது வீட்டுக்கு தெரிந்து பெண்ணுக்கு படிப்பு கட்டாகும், ஆணுக்கு முதுகுத் தோல் உரியும். அதன் பிறகு அவன் அந்தப் பெண் பக்கமே திரும்ப மாட்டான், அந்தப் பெண்ணும் அப்படியே..! இதே இன்னும் கொஞ்ச அட்வான்ஸாக போய் ஊர்க் கலவரம் வரை போவதும் உண்டு. இப்போது இந்த இருவருக்குமிடையே இருந்த உறவு என்ன..? அது தான் காதலா..? நிச்சயமாக இல்லை. அது ஆண், பெண் பாலின ஹார்மோன்களின் சாகசம். எதிர்பாலினரிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (infatuation)..! ஒரு குறிப்பிட்ட வயதில் இந்த மாயையிலிருந்து நாம் யாரும் தப்ப முடியாது. அவருக்கு வயது 40, அந்த ஊரில் இருக்கும் தன் கணவனை இழந்த பெண் மேல் இவருக்கு ஒரு ஈர்ப்பு, அவளுக்கும் அப்படியே..! ஊருக்கு பயந்து, யாருக்கும் தெரியாமல் நடு இரவில் அந்தப் பெண்ணை போய் சந்தித்து வருவார். ஒரு நாள் அப்படி போகும் போது யாராவது பார்த்து விட்டால் போச்சு..! அதற்கப்புறம் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூட அவர் படுக்க மாட்டார். அதற்கு பெயரென்ன..? அதுவும் இனக்கவர்ச்சிதான் என்றாலும் நம்மூரில் அதற்கு செல்லமாக வேறு பேர் வைத்துக் கூப்பிடுவார்கள் (இந்த விஷயத்தால் தான் குடும்பத்தில் நிறைய கொலைகள் விழுவதாக தினந்தந்தி நிருபர்கள் கூறுகிறார்கள். அதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்..!).

இதிலிருந்து காதலுக்கு எப்படி கண் இல்லையோ, அது போலதான் வயதும் இல்லை. காதலிப்பவர் மற்றும் காதலிக்கப்படுபவர் எந்த வயதிலும் இருக்கலாம் னால், அது தான் முதல் காதல் உணர்வாக இருக்க வேண்டும். இதென்ன கலாட்டா என்கிறீர்களா..? அய்யா..! நான் யார் சொன்னதையாவது மொழிபெயர்த்து உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கவில்லை. காதலைப் பற்றின என்னுடைய பார்வையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்..! உடனே நீங்கள் கேட்பீர்கள்..? நீ வாழ்க்கையில் ஒரு முறைதான் காதலித்திருக்கிறாயா என்று ..? யார் சொன்னது அப்படி..! நிறைய..! அதாவது காதலிப்பதாக நினைத்திருக்கிறேன், என்னையுமறியாமலேயே..! அந்த வகையில் பார்க்கப் போனால் என்னுடைய முதல் (!) காதல் நான் எட்டாவது படிக்கும் போது ஏற்பட்டது..! (சிரித்தால் அப்புறம் நா‎ன் சொல்ல மாட்டேன்..!!). அதற்கு காதல் என்று நானாக அர்த்தம் செய்து கொண்டேன் (அந்த அமர காதல் (!) அந்தப் பெண்‎ணிடம் நா‎ன் கேட்ட ஹீரோ பேனாவை கொடுக்காததால் முறிந்து போனது சோகமான கதை..!!!). ஆனால் இப்போது மூளைக்கு உரைக்கிறது அது காதல் அல்ல என்று..! சரி..! காதல் எந்த வயதில் வரும் என்று எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். அதற்கு நேரமில்லை, காலமில்லை. ஆனால் நிச்சயம் வரும். அந்த நேரத்தை சரியாக தன் பகுத்தறிவை கொண்டு கண்டறிந்து, அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்தக் காதலில் உறுதியாக இருந்து, எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்து, திருமணம் செய்து, அந்த காதலை திருமணத்திற்கு பிறகும் இம்மி கூட குறையாமல் தொடருங்கள். அப்போது தெரியும் வாழ்க்கை எவ்வளவு சுவையானது, சுகமானது என்று..!

நான் சொன்ன அந்தக் காதல் இருபாலினராலும் உணரப்பட வேண்டும். ஒருதலைக் காதல் இந்த வகையில் சேராது. ஒருதலைக்காதல், உண்மைக்காதல் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே எனக்கு சிரிப்பு தான் வருகிறது. காதல் என்பது இரு உள்ளங்களின் சங்கமம் தான். பிறகு ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் நேசம் மட்டும் எப்படி காதலாகும்..? அடுத்து அதென்ன உண்மைக் காதல்..? அப்படியென்றால் காதலில் பொய்க்காதலும் உண்டா..? காதல் என்றால் அங்கு உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. காதலைக் கெடுத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் காட்டப்படுவது தான் காதல் என்று அர்த்தப்படுத்தி அதனால் கிடைக்கும் பலனை பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் (அன்றாட செய்திகளை கவனித்தால் புரியும்). காதலுக்கான அர்த்தம் தெரிய சினிமா தா‎ன் காதலின் அகராதியாக புரட்டப்படுகிறது. இது நிழலை நிஜமாக நம்பியதால் வந்த வினை. காதல் சுகமானது, இதமானது, புனிதமானது. மே‎ன்மையானது. காதலுக்கு யாரையும் சந்தோஷப்படுத்தத் தெரியுமே தவிர, காயப்படுத்தத் தெரியாது.!!

தொடரும்....




சனி, 13 பிப்ரவரி, 2010

ஆதலினால் காதல் செய்வீர்..!! - 01



நண்பர்களே..!
காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்றைய பதிவு காதல் ஸ்பெஷலாக மலர்கிறது. 

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா..! உங்களிடம் போய் நான் கேட்கிறேன் பாருங்கள்..! நீங்கள் தான் அந்த விஷயத்தில் ரேகாவின் தந்தையாயிற்றே (அதாங்க..! "காதல் மன்னன்" ஜெமினி கணேசன்..!!). சரி..! காதல் பற்றி உங்க கருத்து என்ன..? என்னது..? என் கருத்து என்னவா..? என்னங்க..! சின்னப் பைய‎ன்கிட்ட போய் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டு..?! சரி..! நீங்கள் வற்புறுத்தி கேட்பதால் சொல்கிறேன். காதல் என்றால்.....அதென்ன அங்கே யாரோ சத்தம் போடுகிறார்கள்..? ஹலோ..! எதுவாக இருந்தாலும் நேரடியாக என்னிடம் கேளுங்கள். தூரத்தில் இருந்து கொண்டு முனக வேண்டாம். சரி..! என்னிடம் என்ன கேட்க வேண்டும் கேளுங்கள்..?! நண்பர்களே..... இவர் என்ன கேட்டார் பார்த்தீர்களா..? காதலைப் பற்றி எனக்கு என்ன தெரியும்..? என்று கேட்கிறார். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரே பெண்ணையே நினைவு தெரிந்தது முதல் நேசித்து, அந்த நேசம் காதலாக மலர்ந்து, ஏகப்பட்ட போராட்டங்களுக்கிடையில் அந்தப் பெண்ணையே மணந்தவன் நான். அதனால் காதல் எனக்கும் கொஞ்சம் தெரியும், அதைப் பற்றி பேசவும் எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிகைகளோடோ அல்லது நடிகர்களோடோ உருண்டு, புரண்டு காதல் செய்வதாக நடிக்கும் நடிகர், நடிகையரிடம் பத்திரிக்கையாளர்கள் “காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன..?” என்று கேட்கும் போது, அதற்கு அவர்கள் அமெரிக்கையாக காதலைப் பற்றி வியாக்கியானம் பேசலாம். ஆனால் காதலித்தவன் (உண்மையாக..!), காதலித்த பெண்ணையே கரம் பிடித்தவன், அந்த பெண்ணையே இன்னும் காதலித்துக் கொண்டிருப்பவனான நான் பேசக் கூடாதா..? இதென்ன அநியாயமாக இருக்கிறது..??!! எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா..!!

காதலுக்கு நம்மவர்கள் கற்பித்து வைத்திருக்கும் அர்த்தம் அபத்தமானது. சிலருக்கு காதல் என்றால் பொழுது போக்கு, சிலருக்கு தகுதி, சிலருக்கு கௌரவம், சிலருக்கு அவமானம், சிலருக்கு அசிங்கம், சிலருக்கு வேதனை, சிலருக்கு கெட்ட வார்த்தை, வெகு சிலருக்கு மட்டும் அது உயிர்..! இந்த வெகு சிலரால் தான் காதல் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில் காதல் என்றால் என்ன..? காதலிக்க பொருத்தமான வயது என்ன..? சொல்லுங்கள்..! சரி..! என் கருத்தை சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஆண், பெண் இரு பாலினருக்கிடையே ஏற்படும் ஒரு இனிமையான, அற்புதமான உணர்வின் (உணர்ச்சியல்ல..!) பரிமாறல்..!! அந்த உணர்வு பரிமாறல் அவர்களுக்கிடையே ஏற்படும் நேசம், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றால் உறுதியடைந்து இறுகும் நிலை. இந்த நிலையில் இருவருக்குமிடையே இருக்கும் அன்பில் பொய் இருக்காது, போலித் தனம் இருக்காது, சுய நலம் இருக்காது. சரி..! அது எந்த வயதில் வரும்..? அது ஒரு மர்மமான விஷயம்..!

அதை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..! நீங்கள் எத்தனை முறை காதலித்திருக்கிறீர்கள்..! அதற்கு மூன்று வகையான பதில்கள் மட்டும் உங்களிடம் இருக்கும். A.ஒன்றுக்கு மேற்பட்ட முறை. B.எதுவும் இல்லை. C. ஒரே ஒரு முறை தான், ஆனால் அது இன்னும் தொடர்கிறது..! இதில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை என்று சொன்ன A பிரிவினருக்கு இரண்டு வகையான பதில்கள். 1. நீங்கள் காதலின் அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 2. காதலின் பெயரால் பெண்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் (உங்களை எப்போது வேண்டுமானாலும் போலீஸ் பிடிக்கலாம்..!). அடுத்து இரண்டாம் வகையான B பிரிவினருக்கு இரண்டு வகையான பதில்கள்..! 1. நீங்கள் இன்னும் பால் குடி மறக்க வில்லை. 2. உங்கள் வாழ்க்கையை வாழத் தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மூன்றாம் வகையான C வகை மனிதர்கள். ம்ம்..! உட்காருங்கள்..! நீங்கள் தான் எனக்கு வேண்டும் ராஜா..!! மற்ற A-யும், B-யும் சத்தம் போடாமல் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள். இல்லாவிட்டால் போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்..! இந்த C பிரிவில் காதலித்துக் கொண்டிருப்பவர்களில் கல்யாணம் ஆகாதவர்கள் மட்டுமல்ல, ஆனவர்களும் கூட இடம் பெறவேண்டும். மேலே உள்ள எ‎ன் கேள்வியை இன்னும் ஒரு முறை  நன்றாக பார்க்கவும். அங்கு கல்யாணம் ஆன, ஆகாத என்ற எந்த நிபந்தனையும் நா‎ன் குறிப்பிட வில்லை. சரி..! இனி நாம் விட்ட இடத்திற்கே வருவோம். காதல் எந்த வயதில் வரவேண்டும், வரும் என்று எந்த வரம்பும் கிடையாது. ஆனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவறாமல் வரும் வைரஸ் தான் காதல்.!!

தொடரும்....

திங்கள், 8 பிப்ரவரி, 2010

கனவுலகின் கம்பீர விருது - ஆஸ்கார்..! - 02




விருதாக வழங்கப்படும் ஆஸ்கர் சிலையின் மொத்த உயரம் பதிமூன்றரை அங்குலம் (அதாவது ஒரு அடி நீளத்திற்கு சற்றே கூடுதல்). எடையோ எட்டரை பவுண்ட். இடையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது சிலை செய்ய உலோகம் கிடைக்கவில்லை என ஆஸ்கரை 'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' என்ற சிலை செய்யும் சுண்ணாம்பினால் செய்து தங்க முலாம் பூசியும் கொடுத்திருக்கிறார்கள் (நம் ஊரில் கூட சாமி சிலை, தாஜ்மஹால், மிருகங்களி‎ன் சிலைகளை செய்து தெருவோரம் 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்பனை செய்வார்களே, அந்த முறையில்..!). சில நேரங்களில் பிரிட்டானியம் என்ற உலோகக் கலவை சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பல முறை விருது வழங்கும் தினம் முடிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னும், பின்னும் மாறிப் போனாலும் கூட அனைவரது கவனத்தையும் கவர்ந்த முக்கிய செய்தியாக அது அப்போது மாறியிருந்தது. முதல் ஆண்டு விருது வழங்கப்பட்டபோது மொத்தம் 15 விருதுகள் கை மாறின. ஆனால் இரண்டாம் ஆண்டு, இது ஏழு ஆக குறைந்து போனது. சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குனர், எழுத்து வடிவம், ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு (Art Direction) என்பன மட்டுமே ஆரம்ப நாட்களில் அகாடமி விருதுக்கான துறைகளாக இருந்தன. இவை மட்டுமின்றி சிறப்பு விருது என்று ஒன்றை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தாலும் முதல் ஆண்டில் இது இடம் பெறவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டில் இரண்டு விருதுகளாக வழங்கப்பட்டன.

அச்சிறப்பு விருதுகளில் ஒன்றை, 'சர்வ சிரஞ்சீவி'யாகிவிட்ட நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினும், மற்றொன்றை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் பெற்றன. ''சர்க்கஸ்'' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி, நடித்து என பல்வேறு பணிகளில் வித்தைகள், சாகசம் செய்து காட்டியதற்காக சாப்ளினுக்கும், பேசா மடந்தையாகக் கிடந்த திரைப்படங்களைப் பேச வைக்கும் முயற்சிகள் நடந்த போது 'தி ஜாஸ் சிங்கர்' எனும் பேசும் படத்தை துணிந்து எடுத்து வெற்றி கண்டதற்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்பிறகு திரைப்படத் தொழில் நுட்பம் இன்று எவ்வளவோ மு‎‎ன்னேறி ஸ்டீரியோ, டால்ஃபி, டி.டி.எஸ் எ‎ன்று தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது தனி கதை. அது சரி அகாடமி அவார்ட் எ‎ன்று இருந்த இந்த விருதுக்கு ஆஸ்கார் எ‎ன்று எப்படி பெயர் வந்தது..? அது ஒரு சுவராஸ்யமான சம்பவம்..!

'அகாடமி' தொடங்கி அதன் மூலம் விருது கொடுப்பதாக முடிவு செய்த பிறகு இந்த விருதுக்கான 'மாடல் சிலை எப்படியிருக்கலாம்' என்ற கேள்வி எழுந்தது. படம் வரையத் தெரிந்த அகாடமி உறுப்பினர்கள் பலரும் இதற்கான மாடல் என நிறைய வரைந்து தள்ளினார்கள். இதில் எம்.ஜி.எம் என்ற கம்பெனியின் ஆர்ட் டைரக்டர் 'செட்ரிக் ஜிப்பான்ஸ்' என்பவரும் ஒரு மாடல் வரைந்தார். அந்த மாடல் பலருக்கும் பிடித்துப் போக அதுவே இறுதித் தேர்வானது. டேபிள் கிளாத் ஒன்றில் ஜிப்பான்ஸ் வரைந்த மாடலைக் கொடுத்து 'ஜார்ஜ் ஸ்டான்ஸி' என்பவரை சிலை வடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்ஸி அன்று உருவாக்கிய அந்த சிலைதான் இன்றுவரை அகாடமி விருது சிலையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது (பார்க்க படம்). ஆரம்பத்தில் இந்த சிலை வெண்கலத்தான சிலையாக வடிக்கப்பட்டுதான் விருதாக வழங்கப்பட்டது.

ஒரு முறை இந்த சிலை செய்யப்பட்டு அகாடமிக்கு வந்தபோது அப்போதைய அகாடமியின் செயலாளர் மார்கரெட் ஹெரிக் “இந்த சிலை எங்க மாமா 'ஆஸ்கார்' மாதிரியே இருக்குப்பா..!” என்று கிண்டலடித்துள்ளார் (கிண்டல் இவரது மாமா பற்றியதுதான்). இதனால் சிலையைக் குறிப்பிடும்போது அவர் 'ஆஸ்கார்' என்றே சொல்வது பலரையும் பாதித்து, பிடித்துப் போய் “அட..! சொல்வதற்கும் கூட இது எளிதாக இருக்கிறதே..!” என்று எண்ணி பலரும் இதை 'ஆஸ்கார் விருது' என தப்பிதமாக குறிப்பிடப்போய் மெல்ல, மெல்ல 'அகாடமி விருது', 'ஆஸ்கார் விருது' ஆக பெயர் மாறிப் போனது. இன்றைக்கும் ஆஸ்கார் விருது என்றால் விளக்கம் ஏதுமின்றி அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் விருதின் நிஜ பெயரைச் சொன்னால் இன்று பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. 'எந்த அகாடமி...?, எந்த விருது..? என எதிர் கேள்வி கேட்கும் நிலையே உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் ஆஸ்காரின் பழைய கதையையும், தற்போதைய நிலையையும் நினைக்கும் போது நமக்கு ஏற்படுவது ஒரே உணர்வு தான்.! அது ஆச்சரியம்..!!!

இந்த முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களும் அது தொடர்புடையவர்களின் பெயர்களும் கீழே..!

Best Picture 

'Avatar'
'The Blind Side'
'District 9'
'An Education'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'Precious'
'A Serious Man'
'Up'
'Up in the Air'


Best Director
Kathryn Bigelow
'The Hurt Locker'

James Cameron
'Avatar'

Lee Daniels
'Precious'

Jason Reitman
'Up in the Air'

Quentin Tarantino
'Inglourious Basterds'


Best Actor
Jeff Bridges
'Crazy Heart'

George Clooney
'Up in the Air'

Colin Firth
'A Single Man'

Morgan Freeman
'Invictus'

Jeremy Renner
'The Hurt Locker'


Best Actress
Sandra Bullock
'The Blind Side'

Helen Mirren
'The Last Station'

Carey Mulligan
'An Education'

Gabourey Sidibe
'Precious'

Meryl Streep
'Julie and Julia'


Best Supporting Actor
Matt Damon
'Invictus'

Woody Harrelson
'The Messenger'

Christopher Plummer
'The Last Station'

Stanley Tucci
'The Lovely Bones'

Christoph Waltz
'Inglourious Basterds'


Best Supporting Actress
Penelope Cruz
'Nine'

Vera Farmiga
'Up in the Air'

Maggie Gyllenhaal
'Crazy Heart'

Anna Kendrick
'Up in the Air'

Mo'nique
'Precious'


Best Animated Feature Film
'Coraline'
'Fantastic Mr. Fox'
'The Princess and the Frog'
'The Secret of Kells'
'Up'



Best Original Screenplay
Mark Boal
'The Hurt Locker'

Quentin Tarantino
'Inglourious Basterds'

Alessandro Camon and Oren Moverman
'The Messenger'

Joel Coen and Ethan Coen
'A Serious Man'

Peter Docter, Bob Peterson, Tom McCarthy
'Up'

Best Adapted Screenplay
Neill Blomkamp and Terri Tatchell
'District 9'

Nick Hornby
'An Education'

Jesse Armstrong, Simon Blackwell, Armando Iannucci, Tony Roche
'In the Loop'

Geoffrey Fletcher
'Precious'

Jason Reitman, Sheldon Turner
'Up in the Air'


Best Documentary Feature
'Burma VJ'
'The Cove'
'Food, Inc.'
'The Most Dangerous Man in America: Daniel Ellsberg and the Pentagon Papers'
'Which Way Home'


Best Foreign Language Film
'Ajami'
Israel

'El Secreto de Sus Ojos'
Argentina

'The Milk of Sorrow'
Peru

'Un Prophète'
France

'The White Ribbon'
Germany

Best Original Score
'Avatar'
'Fantastic Mr. Fox'
'The Hurt Locker'
'Sherlock Holmes'
'Up'


Best Original Song
'Almost There' from 'The Princess and the Frog'
Music and Lyric by Randy Newman

'Down in New Orleans' from 'The Princess and the Frog'
Music and Lyric by Randy Newman

'Loin de Paname' from 'Paris 36'
Music by Reinhardt Wagner Lyric by Frank Thomas

'Take It All' from 'Nine'
Music and Lyric by Maury Yeston

'The Weary Kind (Theme from Crazy Heart)' from 'Crazy Heart'
Music and Lyric by Ryan Bingham and T Bone Burnett

Best Film Editing
'Avatar'
'District 9'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'Precious'


Best Cinematography
'Avatar'
'Harry Potter and the Half-Blood Prince'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'The White Ribbon'


Best Visual Effects
'Avatar'
Joe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones

'District 9'
Dan Kaufman, Peter Muyzers, Robert Habros and Matt Aitken

'Star Trek'
Roger Guyett, Russell Earl, Paul Kavanagh and Burt Dalton


Best Sound Editing
'Avatar'
Christopher Boyes and Gwendolyn Yates Whittle

'The Hurt Locker'
Paul N.J. Ottosson

'Inglourious Basterds'
Wylie Stateman

'Star Trek'
Mark Stoeckinger and Alan Rankin

'Up'
Michael Silvers and Tom Myers


Best Sound Mixing
'Avatar'
Christopher Boyes, Gary Summers, Andy Nelson and Tony Johnson

'The Hurt Locker'
Paul N.J. Ottosson and Ray Beckett

'Inglourious Basterds'
Michael Minkler, Tony Lamberti and Mark Ulano

'Star Trek'
Anna Behlmer, Andy Nelson and Peter J. Devlin

'Transformers: Revenge of the Fallen'
Greg P. Russell, Gary Summers and Geoffrey Patterson


Best Short Film (Live Action)
'The Door'
Juanita Wilson and James Flynn

'Instead of Abracadabra'
Patrik Eklund and Mathias Fjellström

'Kavi'
Gregg Helvey

'Miracle Fish'
Luke Doolan and Drew Bailey

'The New Tenants'
Joachim Back and Tivi Magnusson


Best Short Film (Animated)
'French Roast'
Fabrice O. Joubert

'Granny O'Grimm's Sleeping Beauty'
Nicky Phelan and Darragh O?Connell

'The Lady and the Reaper (La Dama y la Muerte)'
Javier Recio Gracia

'Logorama'
Nicolas Schmerkin

'A Matter of Loaf and Death'
Nick Park



முடிப்பதற்கு முன் ஆருடம் சொல்கிறேன். இந்த முறை ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் பல துறைகளில் ஆஸ்கார்களை அள்ளும்..!!


முற்றும்..


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கனவுலகின் கம்பீர விருது - ஆஸ்கார்..! - 01



இன்றைய உலகில் சிபாரிசு, அதிர்ஷ்டம் இல்லாத இடமேயில்லை என்றாலும் கூட, திறமைக்குத் தனி இடம், மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடையாளமாக விருதுகளும் கூட வழங்கப்பட்டுத்தான் வருகின்றன. அந்த வகையில் ஜிகினா உலகமான திரைப்படத்துறையில் உலகின் முதல் தர விருதாகத் திகழ்வது ஆஸ்கார் (Oscar) விருது. 2009-ம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கனவுலகத்தின் கம்பீர விருதான ஆஸ்கார் பற்றி கொஞ்சம் பார்ப்போமா..?!!

ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதிகளில் விளையாட்டாகத் தொடங்கிய இந்த விருது வழங்கும் சம்பவம் இன்றைக்கு உலகம் முழுதும் உள்ள எல்லா நாடுகளிலும் மதிக்கப்படும், திரை உலகின் உன்னத அடையாளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் சந்தேகத்திற்கிடமின்றி முதல் தகுதி பெற்றது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விருதாகவும் இது உருமாறியிருக்கிறது. ஆஸ்கர் விருது அறிவிப்பு என்பது இன்றைக்கு இந்தியாவின் கடைக்கோடி கிராமமான “கொட்டாம்பட்டி” கோவிந்தசாமியிலிருந்து, “லாஸ் ஏஞ்சல்ஸ்” லாரா வரை எல்லாரையும் கவரும் விஷயமாக மாறி விட்டாலும் கூட இந்த விருதின் பின்னணி, அத‎ன் வளர்ச்சி போன்றவற்றில் புதைந்து கிடக்கும் நிறைய விஷயங்கள் பலருக்குத் தெரியாது.

”ஆஸ்கார்” என்பதே இந்த விருதுக்கான பெயர் என்று இன்று மாறிப் போ‎னாலும் இதன் நிஜப் பெயர் அதுவல்ல..! ஆமாம்..! இந்த விருதி‎ன் உண்மையான ஆரம்பப் பெயர் அகாடமி விருது (Academy Award) என்பதுதான்.

1927-ம் ண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தின் ஒரு மூலையில் இருந்த திரைப்படத்துறைத் தொடர்புடையவர்கள் பலர் சேர்ந்து அடித்த 'உருப்படியான' அரட்டையில்தான் இந்த ஜடியா உருவானது. இதற்கென அவர்களெல்லாம் சேர்ந்து தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (The Academy of Motion Picture Arts and Science) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து அந்த படத்திற்கும் அதை உருவாக்கியவர்களுக்கும் கெளரவம் செய்ய, பாராட்ட விருது வழங்குவது என முடிவெடுத்தார்கள். அதை இந்த அமைப்பின் பெயரிலேயே 'அகாடமி அவார்ட்' எனவும் குறிப்பிட முடிவானது. இந்த அமைப்பு உரு பெற்ற வெகு விரைவிலேயே கிட்டத்தட்ட 5000 முதல் 6000 வரையிலான திரைப்படக் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக ஆகிவிட்டனர். ஆனாலும் அகாடமி தொடங்கியது வெறும் 36 உறுப்பினர்களுடன்தான். அகாடமியின் முதல் தலைவர் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் என்பவர். இன்றைக்கு அகாடமியில் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், இயக்குனர்கள், செயலாளர், பொருளாளர், தலைவர் என ஒரு பெரும் கூட்டமே இந்த அகாடமியின் செயல்பாட்டை, நிர்வாகத்தை, இதன் சொத்துகளை, வருமானத்தை கவனித்து வந்தாலும் அகாடமியின் ஆரம்ப நாட்களில் ஏன், 1946 வரை கூட வாடகைக் கட்டடத்தில்தான் அகாடமி செயல்பட்டு வந்தது..!

அகாடமியின் முதல் விருது 1929-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதியன்று வழங்கப்பட்டது. முதல் முறை இந்த விருது வழங்கப்பட்டபோது இந்த நிகழ்ச்சியை சீந்துவாரில்லை. ஹாலிவுட் நகரத்தின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 'ப்ளாசம் ரூம்' என்ற அறையில் நடந்த விருந்து ஒன்றில் இவ்விருது வழங்கல் தொடங்கியது. விருது பெறப் போவது யார் என்பதை முன்னதாகவே முடிவு செய்த அந்நாளைய அகாடமி இதை அன்றைய தின, மாலைப் பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்திருந்தும், அந்த முதல் விழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 250 மட்டும் தா‎ன். அந்த நாளிலேயே இதற்கு கட்டணமாக 10 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்ததுதான் காரணமோ என்னமோ..! ஆனால் இரண்டாம் ஆண்டிலேயே இந்த விருதுக்கான மவுசு கூடத் தொடங்கி விட்டது. பத்திரிகைகள் இதையும் ஒரு பொருட்டாக கவனிக்கத் தொடங்கி விட்டன என்பது ஒருபுறமிருக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வானொலி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அன்று ஒலிபரப்பியது. அன்றிலிருந்து 'அகாடமி அவார்ட்' நிகழ்ச்சி அடுத்தடுத்து வானத்தை பார்த்தபடி வளர்ந்து கொண்டேதான் வருகிறதேயன்றி கீழ் நோக்கவில்லை.!!

தொடரும்..!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஒரு கிராமி(யனின்) இசைப்பயணம்..!!

 

இசைக்க வந்த புயலே..!!
அசைக்க முடியா ஆற்றலே..!!

திசையெங்கும் உன் இசையால்
திக்குமுக்காட வைக்கிறாய்.!!
பசை போட்டு இதயங்களில்
பற்றி அமர்கிறாய்..!!

அன்றொரு நாள் நீ பெற்ற
ஆஸ்கார் விருதுக்கே
அகிலம் அதிர்ந்தது..!!

அதற்கு மேலும் உன்
அழகு தொப்பியில்
அடுத்ததொரு சிறகாய்
கிராமி விருது கிரீடம்..!!

இசையெனும் மந்திரத்தால்
இவ்வுலகை மயக்கியவன் நீ..!!
அசையாத மனிதரையும்
ஆட வைத்தவன் நீ..!!

புவியுலகில் புகழுக்கும் விருதுக்கும்
புலம்புகின்றவர்களுக்கு மத்தியில்
இசையுலகில் இத்தனை சாதித்தும்
ஆசையில்லா அபூர்வம் குறிஞ்சி நீ..!

இசையை புகழ்ந்தால்
இறைவனாக தன்னை நினைக்கும்
தலைக்கன ஞானிகள் இங்கே..!!

ஆனால்
இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும்
என்றும் மாறா உன் புன்னகை
எங்கும் காணா முரண்..! அதனால்
இசையும் உன்னிடம் சரண்..!!

எட்டுத்திக்கும் இசையால்
கொட்டி முழக்கும் உன்னிடம்
தலைக்கனமே தவறுணர்ந்து
தலை குனிகிறது.!!

கிராமத்தில் தொடங்கிய
உன் இசைப்பயணம்
கிராமி விருதை பெற்றும்
கிஞ்சித்தும் தளர்ச்சியில்லை..!!

உன்னிடம்
புகழ் போதையில்லாததால்
தடுமாற்றம் தகர்ந்து போனது..!!
போக வேண்டிய தூரம் உனக்கு
புரிந்து போனது ..!!

இந்த பணிவும், பண்பும்
இருக்கும் வரை
உலகம் உன்னை இன்னும்
உயரத்தில் வைக்கும்
அந்த அற்புத நாள்
அத்தனை தொலைவில் இல்லை..!!

அகில உலக அகராதிகளில்
இசைக்கு இன்னொரு பெயர்
ஏ. ஆர். ரஹ்மான்
என்றாகும் நாளுக்காய்
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்..!!

வாழ்த்துகள்..!!
Related Posts with Thumbnails