Box Office Report-Aug 15
-
[image: 🇧][image: 🇴][image: 🇽][image: 🇴][image: 🇫][image: 🇫][image:
🇮][image: 🇨][image: 🇪] [image: 🇷][image: 🇪][image: 🇵][image:...
1 நாள் முன்பு
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..!!
நீங்கள் என் கருத்தில் உடன்பாடில்லை எனில் அதற்கு தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு மறுத்த கூறவேண்டும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏற்க வேண்டியது என் கடமை. [/COLOR] |
வாழ்த்துக்கள் ஜாபர் தொடருங்கள் உன்கள் அழைப்பு பணியை அல்லா உன்களுக்கு அருள் புரிவனாக |
நான் நினைப்பது முதலில் இஸ்லாம் மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ள. |
சர்சைகள் அனைத்தும் பிறகு விவாதித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. சர்ச்சை இல்லாமல் எந்த கருத்தும் இல்லை. ஆனால் முதலில் கருத்து சொன்னவர் தான் சொல்ல வந்த கருத்தை அனைத்து பதித்து விட வேண்டும். அப்படி மற்றவர்கள் இந்த திரியை தொடர்ச்சியாக முழுவதும் படித்து விட்டு, பிறகு ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவித்து விட்டு விவாதம் தொடரலாம். விவாதம் ஆரம்பத்திலேயே தொடங்கினால், விவாதம் வளரும் |
வேதம் பொதுவாக மனித வாழ்கை அமைவதை பற்றி எழுதபட்டது. இந்து என்ற மதத்துக்காக எழுதபட்டதல்ல.அந்த காலத்தில் இந்து மதத்தவர்கள் அதை பின்பற்றினார்கள் அவ்வளவுதான். வேதத்துக்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை |
இஸ்லாம் பற்றி கொஞ்சமே தெரிந்த நீங்கள் இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்படவில்லை என்பதை நான் தகுந்த ஆதாரம், காரண காரியங்களுடன் விளக்கும் போது அதை ஏற்க மறுப்பது முரண்பாடாக தெரியவில்லையா வாத்தியார் அவர்களே..? இஸ்லாம், குரானின் நெரிகள் பற்றி தான் எனக்கு அதிகமாக தெரியாது என்று சொன்னேன் இதயமே. அது உன்மையும் கூட. ஆனால் வரலாறு தெரியாது என்று நான் சொல்லவில்லை. நான் முரன்படவில்லை. இஸ்லாம் மதம் வாளின் உதவியால் பரப்ப வேண்டும் என்று குரான் கூறவில்லை என்பதை உங்கள் படைப்பின் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். ஆனால் வரலாறு வேறு, அதுக்கு குரானுக்கும் சம்மந்தமில்லை அல்லவா? தோராயமாக 750 வருடக்க்களுக்கு முன் சில இஸ்லாமிய மனிதர்கள் (மன்னர்கள்) செய்த தவறுக்கு இஸ்லாம் காரனமல்ல என்பதை உங்கள் படைப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் முகலாய மன்னர்கள் இஸ்லாமை வாள் முனையில் பரப்பவில்லை என்ற ஒரே கருத்தை தான் ஏற்க மறுகிறேன். இந்த திரி இஸ்லாம் பற்றிய திரி, முகலாய மன்னர்களை பற்றி இப்பொழு ஏன் விவாதிக்க வேண்டும் என்று தான் என் கேள்வி. !! அப்படியானால் அடுத்தவர்கள் எப்படி போதித்தார்களோ, அதையே அறைகுறையாக அறிந்து நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மனிதனுக்கே உரிய குற்றம் கண்டு பிடிக்கும் குணம் உறுதுணையாக இருக்கிறது. அப்படி தானே..? ஆன் உன்மைதான் நான் அப்படிதான் குரானை பற்றி தவறாக நினைத்து கொண்டிருந்தேன். உங்கள் குற்றத்தை ஒப்பு கொள்கிறேன். எல்லாம் முடிந்த பிறகு கேள்வி கேட்கிறேன் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. காரணம், இஸ்லாத்தில் உள்ள விஷயங்களை சொல்ல ஆரம்பித்தால் என் வாழ்நாள் போதாது. உன்மைதான் , முழுவதாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஓரளவுக்காக தெரிந்து கொள்ளாமல்லவா? அதனால் தான் நான் உங்களை கேள்வி மூலம் கேட்கிறேன். நீங்கள் என் கேள்வியை உற்று நோக்கினாலே தெரியும். வேதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் அந்த மதச்சட்டங்களாக வேதங்களில் குறிப்பிடப்பட்டவை ஏன் பின்பற்றப்படுகிறது.? வேதங்களில் சட்டம் என்று எதுவுமே குறிப்படவில்லை. முன்பு எப்படி நீங்கள் சொன்னீர்கள் பலவிசயம் இடை சொருகல்கள் அது போல தான். வேதத்தின் சட்டத்தை இந்துகள் பின்பற்றவில்லை, சட்டம் வேறு வாழ்கை முரை வேறு. வேதம் ஆரோக்கியமாக வாழவும் அமைதியாக வாழவும் தனி மனிதனுக்கும், சமுதாயதுக்கும் கற்று கொடுக்கும் ஒரு நூல். எந்த குறிபிட்ட மததுக்கும் எழுத படவில்லை. உங்களுடைய பதில் இந்துத்துவத்தின் அடிப்படையையே உலுக்குகிறது. தயவு செய்து விபரமாக விளக்குங்கள். அறிய ஆவலாய் இருக்கிறேன். இந்துகள் (அந்த் காலத்தில் சைவர்கள், வைனவர்கள் இன்னும் பல) வேதத்திலிருந்து சில கோட்பாடுகளை பின் பற்றினார்கள் என்பது உன்மை. ஆனால் வேதம் இந்துகளுக்காக எழுதபடவில்லை. வேதம் எழுதிய போது இந்து என்ற மதமே இல்லை. இந்துத்துவா என்பதும் முழுவதாக ஒரு மதத்தை குறிப்பிடுவதல்ல, அதை பற்றியும் தவறாக புரிந்து கொண்டார்கள். சமீபத்தில் தான் சுப்ரீம் கோர்ட் அதை பற்றி விளக்கியது. இதை பற்றி ஒரு தனி திரியாக எழுத வேண்டும் என்பது என் ஆசை. இந்துத்துவா என்பது - இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்கள் மற்றும் விலங்கினம், இயர்கை செல்வம் அனைத்தையும் பாத்காப்பது ஆகும். |
பழமையில் ஊறிப்போயிருந்த,ஒரே தத்துவத்தை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் கடைபிடித்து வந்த அந்தக்காலத்து மக்கள் விரும்பி வேறு மதத்தை ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்போது வேறு. பகுத்தறிவு மிகுந்துவிட்ட காலம். தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக ஆலோசித்துத்தான் செய்கிறார்கள். |
இஸ்லாம் சகோதரர்கள் குரானை அடிபடையாக கொண்டு வாழ்கை நடத்துகிறார்கள் பல நாடுகளில் ஷரியத் என்ற சட்டம் தான் இஸ்லாமியர் சட்டம் என்று கேள்வி பட்டிருகிறேன் ஷரியத் என்றால் என்ன? ஷரியத் சட்டம் இந்தியாவிலும் உண்டா? அது குரானோடு சம்மந்தபட்டதுதானா? இல்லை வேறு நூலா? இதை பற்றி சற்று விளக்கவும் |
Copyright © 2009 இதயம் பேசுகிறது..! |Designed by EZwpthemes |BloggerTemplate Converted by BloggerThemes.Net