நேரம்:

செவ்வாய், 29 ஏப்ரல், 2008

தசாவதாரம் பட ஒலிநாடா வெளியீட்டு விழா..!

நான் ஒரு ஜாக்கிசான் ரசிகன். அவருடைய ஏறக்குறைய எல்லா படங்களையும் பார்த்துவிட்டவன். என்னை பொருத்தவரை ஏற்கனவே பார்த்துவிட்ட ஒரு படத்தை மீண்டும் பார்க்கும் ஆவல் இருந்தால் அது பெரும்பாலும் ஜாக்கிசான் படமாகத்தான் இருக்கும். பொதுவாக நடிகர்கள் திரைப்படங்களில் தங்கள் அதிகபட்ச உழைப்பை கொடுக்க நினைப்பார்கள், ஆனால் இவர் கொடுக்க நினைப்பது உயிரையும் கூட..! பல விபத்துக்களில் இருந்து இவர் உயிர் தப்பியிருக்கிறார். சரி.. அதற்கும் இந்த விழாவுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்கிறது..!!

ஜாக்கிசானின் பெரும்பாலான படங்களை இந்தியாவில் ரிலீஸ் செய்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அதற்காகவே ஆஸ்கார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அவரின் படங்களின் இந்திய உரிமை பெற்று வெளியிட்டு வந்தார். ஆரம்ப காலகட்டங்களில் நம் ரசிகர்களிடம் ஜாக்கிசான் படங்களுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை, தியேட்டர்களில் நடக்கும் ஆரவாரங்களை படம் பிடித்து சென்று ஜாக்கியிடம் காட்டினார். அதை பார்த்தவருக்கு இந்திய இரசிகர்களின் மேல் பெரும் அன்பும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டது. அந்த இந்திய அன்பு நம் தேச நடிகையான மல்லிகா ஷெராவத்தை மித் (Myth) என்ற படத்தில் நடிக்க வைத்தது. அவரின் படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து இன்று தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களில் ரவிச்சந்திரனும் ஒருவராக வளர்ந்திருக்கிறார். இன்று பெரும் பட்ஜெட் படத்தை கமலை வைத்து தயாரிக்கும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சி இது. ஜாக்கிக்கும், அவர் இரசிகர்களுக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் ரவி என்று தான் சொல்ல வேண்டும்..!

தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் ஹைலைட் ஜாக்கி தான். அவரின் குழந்தை தனம், எளிமை இந்த விழாவில் முழுமையாக வெளிப்பட்டது. அவர் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் எழுந்த கரவொலிக்கு எழுந்து அவர்களின் கலாச்சாரப்படி குனிந்து நிமிர்ந்து நன்றி தெரிவித்தார். சின்ன குழந்தை போல் அடிக்கடி இரசிகர்களுடன் சேர்ந்து கை தட்டி குதூகலித்தார். ஒலிநாடா வெளியிட்ட போது பிரித்து கீழே போட்ட காகித குப்பையை எடுத்து சென்று மேடை ஓரத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நம் மக்களும் அதற்கு கரவொலியால் தங்கள் பாராட்டை தெரிவித்தார்கள். விஜய்க்கும், கே.எஸ் ரவிக்குமாருக்கும் மேடை பேச்சு வரவில்லை. மம்முட்டி, அமிதாப், கலைஞர், கமல் வழக்கம் போல் நன்றாக பேசினார்கள். சோனி ஆடியோ நிறுவனத்திற்காக பேசியவர் தன் ஆங்கிலத்தில் அருவியாய், அழகாய் கொட்டி மகிழ்வித்தார். மல்லிகா ஷெராவத்தின் பேச்சு, நடவடிக்கைகள் அநாகரீகமாக தெரிந்தது. நம் கலாச்சாரத்துடன் ஒன்றாத பெண் அவர்.

ஜாக்கியின் பேச்சு பெரும் ஹைலைட். அவரால் நம்மவர்களின் பெயரை உச்சரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கவும், இந்திய திரைப்படங்களில் நடிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்தது இந்தியர்களுக்கு பெருமை. கமல் தன் பேச்சில் ஜாக்கியையும் சேர்த்து தனக்கு 3 சகோதரர்கள் என்று சொன்னதை அவர் மிகவும் இரசித்தார். இந்நிகழ்ச்சி மூலம் தசாவதாரம் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. அப்படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. சிவாஜி படத்தின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பே அந்த படம் சரியாக ஓடாததற்கு அல்லது படம் சரியில்லை என்ற கருத்து நிலவ காரணமாக அமைந்தது. அதனால் இந்த படம் வெறும் எதிர்ப்பார்ப்பை கூட்டுவது மட்டுமல்லாமல் அதை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். இல்லையென்றால் இந்த படத்தின் சம்பந்தப்பட்ட அனைவரும் விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகளை பெறுவார்கள்..!! தசாவதாரம் இன்னொரு ஆளவந்தானாகும்..!!! கவனம் கமல்..!!!

ஞாயிறு, 27 ஏப்ரல், 2008

அறை எண் 305_ல் கடவுள்- விமர்சனம்

இந்த படத்தை இ. அ. 23-ம் புலிகேசியை பார்க்க போகும் மனநிலைக்கு என்னை தயார் படுத்திக்கொண்டு தான் பார்க்க தொடங்கினேன். ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே மேன்ஷன் வாழ்க்கையை அப்பட்டமாக காட்டுவதிலிருந்தே இது யதார்த்தத்தை சொல்லும் படம் என புரியத்தொடங்கியது. இன்றைய எதார்த்த உலகில் பெரும் கஷ்டத்தில் இருக்கும் இரு இளைஞர்களுக்கு உதவ காக்கும் கடவுள் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் வந்தால் என்ன நடக்கும் என்று கற்பனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். மக்களை சிரிக்க வைக்கும் படம் என்று போனால் நம்மை சிந்திக்கச்சொல்லி பாடமே நடத்தியிருக்கிறார் சிம்பு தேவன். ஆனால், யாருக்கு தான் பாடம் பிடிக்கிறது..? அதனால் இந்த படம் வரவேற்பை பெறாமல் போக வழக்கம் போல் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் வற்புறுத்தும் கருத்துக்களில் பெரும்பாலும் நாம் பின்பற்ற அவசியமானவை. உழைப்பின்றி சோம்பி திரிவது, இந்த போட்டி உலகில் கொஞ்சமும் எடுபடாத தன் கல்வி தகுதியை பெருமை பேசி திரிவது. 5 பைசாவுக்கு வக்கில்லாவிட்டாலும் காதல் என்கிற பெயரில் கண்ட பெண்கள் பின்னால் அலைவது, கடவுளின் பெயரால் களவாணித்தனம் செய்வது, பொய் சொல்வதையே பிழைப்பாக கொண்டிருப்பது, வெட்டி பந்தா செய்வது, கெட்ட சகவாசங்களில் ஈடுபடுவது போன்ற இவையெல்லாம் சரி என்று சொல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.

கண்ணால் தெரியாத கடவுளின் பெயரால் நாம் நடத்தும் கேலிக்கூத்துக்களை இந்த படத்தில் வெகு அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர். கடவுள் பக்தி என்பது வெறும் வியாபாரமாக்கப்பட்டதை பல இடங்களில் பெரும் கோபத்துடன் குத்திக்காட்டி உணர்த்துகிறார். அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற பிரகாஷ்ராஜ் வெகு அழகாக பொருந்துகிறார். கடவுளை கூட தன் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்த, ஏமாற்ற தயங்கமாட்டார்கள் என்று காட்டியிருப்பது வாழ்வியல் எதார்த்தம். கடவுள் என்றால் யார் என்று ராஜேஷிடம் கடவுள் பிரகாஷ்ராஜ் கொடுக்கும் விளக்கம் வெகு அற்புதம். படத்தின் நாயகன் என்று சந்தானம் சொல்லப்பட்டாலும் உண்மையில் கடவுளாக வரும் பிரகாஷ்ராஜ் தான் கதையின் நாயகன். கடவுளாக பூமியில் அவதரித்த பிறகு சந்தானத்தையும், கஞ்சா கருப்பையும் தன் நடிப்பினால் தூக்கி தூர வீசி விடுகிறார். மொக்கை ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள் சொல்லாத சந்தானத்தை நம்மால் நம்ப முடியாமல் அவர் தான் சந்தானமா என்று எண்ண வைத்திருக்கிறார். நடிப்பு நன்றாக வருகிறது. முயற்சித்தால் தமிழக முதலமைச்சர் நாற்காலியை குறிவைக்கும் தகுதியை அடையலாம்..!

கஞ்சா கருப்பு என்னண்ணே இப்புடி சொல்லிப்புட்டிய..? என்ற தன் பாணி நடிப்பில் சிரிக்க வைத்திருக்கிறார். இரண்டாம் கதாநாயகனாக வளர்ந்திருக்கும் க.கருப்புவின் இந்த அவதாரம் அவரின் வெள்ளந்தி தனமான நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். ஊரிலிருந்து வந்த சொந்தக்காரனிடம் புருடா விடுவது, காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரியையே கமெண்ட் அடித்து தர்ம அடி வாங்கும் இடங்களில் சிரிப்பு பீறிடுகிறது. நிறைய இடங்களில் நடிப்பில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறார். ஒரு நகைச்சுவைப்படத்தில் பெரும் நகைச்சுவை பஞ்சம் ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நிறைய நகைச்சுவை இருந்தால் கருத்தையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம்.

ஆக மொத்தத்தில் பார்த்து சிரிக்கவும், சிந்திக்கவும் ஏற்ற படம். சிரிப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டியதற்காக சிம்பு தேவனுக்கு ஷொட்டு..! ஆனால், சிரிக்க நினைத்த நேரத்தில் சிந்திக்க சொன்னதால் அவருக்கு குட்டு..!!

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

இதயத்தின் இம்சை கடிகள்..!-10

ராசா: அசின் ஃபோன் நம்பர் வேணுமா..?

சுகந்த ப்ரீதன்: ம்ம்ம்..!

ராசா: தப்புடா செல்லம்..! அத்தை ஃபோன் நம்பர் உனக்கு எதுக்கு..?
அதான் மாமா நம்பர் இருக்கில்ல..!! அது போதும்..!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வணிகவியல் பேராசிரியர்: ஒரு தொழில் செய்ய தேவைப்படும் மிக முக்கிய ஆதார மூலதனம்..?

மாணவன்: மாமனார்..!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போ நீங்க உங்க செல்லுல TENNIS பார்க்கணுமா..?
அது ரொம்ப சுலபம்..!!


is is is is is
is is is is is

இப்ப எண்ணி பாருங்க.. Ten is இருக்கும்.!! என்ன தேடறீங்க..?? இதயம்... எஸ்ஸாயிடு..!!


இதயத்தின் இம்சை கடிகள்..!-09

உன் திருமண தேதியை தெரிந்து கொள்ள வேண்டுமா..?

Pls. visit, www.mundirikottai.com

இப்ப என்ன உனக்கு அவசரம்..?!!
போ.. போ.. போயி சுட்டி டிவி பாரு..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராசா: உங்களுக்கு நீச்சல் தெரியுமா..?

இதயம்: தெரியாது..!

ராசா: உங்களை விட நாய் மேல்..! அது நீந்தும்..!

இதயம்: உங்களுக்கு நீச்சல் தெரியுமா..?

ராசா: தெரியுமே..!!

இதயம்: அப்படின்னா உங்களுக்கும், நாய்க்கும் என்ன வித்தியாசம்..?!!

ராசா: !!!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு: ஏன் பாப்கார்ன் சூடான பாத்திரத்தில் போட்டதும் குதிக்குது..?!!

ஓவியன்: ம்ம்ம்... நீ அதுல உட்கார்ந்து பார்.. ஏன் குதிக்குதுன்னு உனக்கே தெரியும்..!!!

இதயத்தின் இம்சை கடிகள்..!-08

தீவிரவாதிகள் எங்கள் கல்லூரி பேராசிரியர்களை பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு 10 கோடி ரூபாய் கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் அவர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் பங்கை அளியுங்கள்..!

என்னது நான் எவ்வளவு கொடுத்தேனா..?
நான் 50 லிட்டர் கொடுத்திருக்கிறேன்..!!!!!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போலீஸ்: உம்பேரென்ன...?

அவன்: குப்புசாமி..!

போலீஸ்: என்ன தொழில் பண்றே...?

அவன்: உப்பு சாமி..!

போலீஸ்: ஏன் தள்ளாடுறே..?

அவன்: மப்பு சாமி..!!

போலீஸ்: மாமூல் எடு..!

அவன்: தப்பு சாமி..!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கைன்னா....
1000 மேடு, பள்ளம்
1000 கல்லு, முள்ளு எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
அதையெல்லாம் கடந்து போகணும்னா.....




நல்ல குவாலிட்டியான செருப்பு வாங்கி போட்டுக்கங்க..!!!!

இதயத்தின் இம்சை கடிகள்..!-07

கண்டக்டர்: யோவ் டிரைவர்..! என்னய்யா இது... நான் விசிலடிச்சும் வண்டி நிக்காம போகுது..?!

டிரைவர்: போயா புண்ணாக்கு...! நான் ப்ரேக் அடிச்சே இங்க வண்டி நிக்கல..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் உன் மேல வச்சிருக்கிற அன்பு வெங்காயம் மாதிரி..!

அதை கட் பண்ண நினைச்சா கண்ணீர் உனக்குத்தான்..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கப்பல் கேப்டன்: (மகிழ்ச்சியில்) நண்பர்களே.. கரை தெரியுது.. கரை தெரியுது..!!

ராசா: சர்ஃப் எக்ஸல் போடுங்க.. அந்தக்கறை... இந்தக்கறை... எந்த கறைனாலும் போய்டும்..!

இதயத்தின் இம்சை கடிகள்..!-06

இந்தியாவுல...
தோண்டினா தங்கம் கிடைக்கும்.!
வெட்டினா வெள்ளி கிடைக்கும்.!
அடிச்சா அலுமினியம் கிடைக்கும்.!
இடிச்சா இரும்பு கிடைக்கும்.!

ஆனா,
படிச்சா வேலை மட்டும் கிடைக்காது..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதயம்: மாப்ள..சிகரெட் பிடிச்சா கேன்ஸர் வரும்னு டாக்டர் சொல்றது உண்மையா..?

ராஜா: தெரியல மச்சான்.. நான் பிடிச்சா புகை மட்டும் தான் வருது..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்: டாக்டர்... டாக்டர்..! என் வீட்டுக்காரர் தவறுதலா பெட்ரோலை குடிச்சிட்டார்.. என்ன செய்றது..?

டாக்டர்: அவரை 2, 3 கிலோ மீட்டர் ஓடச்சொல்லுங்க.. காலி ஆயிடும்..!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதயத்தின் இம்சை கடிகள்..!-05

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவு:
5% பெண்கள் திரைப்படத்தை விரும்புகிறார்கள்
2% பெண்கள் சீரியலை விரும்புகிறார்கள்
3% பெண்கள் இசையை விரும்புகிறார்கள்
4% பெண்கள் நகையை விரும்புகிறார்கள்
6% பெண்கள் சேலையை விரும்புகிறார்கள்
ஆனா...
80 பெண்கள் விரும்புவது...??

போங்க... அழகா பொறந்தாலே இதான் தொல்லை..!!

(யோவ்...யாருய்யா அது.. கல்லை எடுத்து வீசுறது.?!!)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பசங்க எத்தனை sms அனுப்பினாலும் பொண்ணுங்க அனுப்பற ஒரே sms Pls. Call

பசங்க எத்தனை கால் பண்ணினாலும் பொண்ணுங்க பண்ணுற ஒரே கால் Miss Call

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தலைமை ஆசிரியர்: டேய் எவண்டா.. தமிழ் வாத்தியார் காலை பிடிச்சி வாரி விட்டது...?

மாணவன்: இல்ல சார்.. நேத்து ஸ்கூல் விட்டதும் அவர் தான் நாளை காலை வாருங்கள்..!-னு சொன்னார்..!!

இதயத்தின் இம்சை கடிகள்..!-04

ஒருத்தர்: என்ன சார்.. அந்த தியேட்டர்ல அவ்வளவு கூட்டம்..?

இன்னொருத்தர்: வீராசாமி படம் பார்த்தவன் எவனோ உயிரோட இருக்கானாம்.. அதான் எல்லோரும் போய் பார்க்கிறாங்க..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ராசா: சிவாண்ணா..கொஞ்ச நாள்ல நான் பெரிய பணக்காரணாகிடுவேன்..?

சிவா: எப்படி ராசா..?

ராசா: எங்க கணக்கு வாத்தியார் நாளைக்கு பைசாவிலேர்ந்து ரூபாய்க்கு எப்படி மாத்துறதுங்கிற சொல்லித்தரப்போறதா சொல்லியிருக்கார்..!!

சிவா:!!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தளபதி படத்துல நான் ரஜினின்னா நீ மம்மூட்டி..! பிதா மகன் படத்துல நான் விக்ரம்னா நீ சூர்யா...? என்ன பார்க்கிறே..?! எப்பவும் நீ தான் முதல்ல சாகணும்..!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதயத்தின் இம்சை கடிகள்..!-03

ஒரு இடத்துல 2 பிச்சைக்காரங்களும், 2 சாஃப்ட்வேர் இஞ்சினியர்களும் சந்திச்சிக்கிட்டாங்க..! ரெண்டு பேருமே தன் தொழில் சம்பந்தமா ஒருத்தருக்கொருத்தர் ஒரே கேள்வியை கேட்டுக்கிட்டாங்க.. அதென்ன கேள்வி...?
-



-




-




-




நீங்க எந்த ஃப்ளாட்பாரம்ல ஒர்க் பண்றீங்க..?!!

இதயத்தின் இம்சை கடிகள்..!-02

வீரன்: மன்னா.. நம் அரண்மனையை சுற்றி நம் எதிரிகள் கண்ணிவெடி வைத்திருக்கிறார்கள்..!

மன்னன்: அப்படியா..?! வெடிகளை எடுத்துவிட்டு, கன்னிகளை மட்டும் இங்கே கொண்டு வாருங்கள்...!!



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அம்மா: செல்லம்.... பக்கத்து வீட்டு ஆன்டிக்கு ஒரு முத்தம் கொடு..!

குழந்தை: கொடுக்கமாத்தேன் போம்மா.. ஆன்ட்டி அடிப்பாங்க..!!

அம்மா: அடிக்கமாட்டாங்க கொடுடா..!!

குழந்தை: உனக்கு தெரியாது.. நேத்து அப்படி கொடுத்து தான் அப்பா அடி வாங்கினாரு.!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


விஜய்: உன் பேர் என்ன...?

அஜித்: மை நேம் இஸ் பில்லா..!!

விஜய்: கரண்ட் பில்லா..? டெலிஃபோன் பில்லா..? தண்ணி பில்லா..?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதயத்தின் இம்சை கடிகள்..!

தினமும் இந்த மந்திரத்தை கோவில் முன்னாடி நின்று சொன்னா நீங்கள் சீக்கிரம் கோடீஸ்வரன் ஆவீர்கள். அப்படி ஆகவில்லை என்றால் ஏன் என்று என்னைக்கேளுங்கள்..!! சரி.. அதென்ன மந்திரம்...?!! கீழே போய் பாருங்க.!!

-





-





-



-




-




-




அய்யா... தர்மம் பண்ணுங்க சாமீ...!!


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------



நடிகர் விஜய்: சார்.... நம்ம படத்தில காமெடியே இல்லையே..!! ஏன்..?

டைரக்டர் பரதன்: படத்துக்கு கூட பேர் அழகிய தமிழ் மகன்னு தான் வச்சேன். அதுக்கு ஏதாவது கேள்வி கேட்டீங்களா..?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மிரட்டல் கவிதை:

காதலித்து பார் கவிதை வரும்..!
பிரிந்து பார் சோகம் வரும்..!
அதை நினைத்து பார் அழுகை வரும்.!
என்னை மறந்து பார்..
அடிக்கிற அடியில் ஆம்புலன்ஸே வரும்..!!



அசரடிக்குது அயிரமீன் குழம்பு..!

மீன் குழம்புகளில் அயிரை மீன் குழம்புக்கு ஒரு தனி சிறப்பு உண்டு என்பதை நான் படித்து, கேட்டும் இருக்கிறேன். சினிமாக்கள் கூட அதன் சிறப்பை காட்டியிருக்கின்றன. அத்தனை சிறப்புக்குரிய அயிரை மீன் குழம்பு எப்படி வைப்பது என்பதை இங்கு காண்போம்.

பாத்துப்பார்த்து உசுரோடவாங்கணும் அயிரைமீன. ரொம்பப் பொடுசாவும் இருக்கப்படாது; ரொம்பப் பெருசாவும் இருக்கப்படாது.

பாத்திரத்துல போட்டு அதுகமேல பால ஊத்தணும். பாலு ஒவ்வாது அயிரமீனுகளுக்கு, சாராயம் குடிச்ச ஆளு உண்மையக் கக்குவான் பாருங்க.... அப்படி வாய்க்குள்ள இருக்கிற கசடு, மண்ணுகளையெல்லாம் கக்கிப்புடும் கக்கி.

பால நல்லா இறுத்திட்டு உப்பு அள்ளி எறியணும் மீனுக மேல. செத்தவடத்துல எல்லாம் செத்துப்போகும்.

மண்வாசனை போக, தேங்காய்ப்பால ஊத்தி ஊறவிடணும்.

அப்புறம் மண்சட்டியில போட்டு ஒரசணும். மூணுதடவை ஒரசினாத்தான் வழவழப்புப் போகும்; பவளம் பாசி மாதிரி ஆயிரும்.

இப்ப மஞ்சட்டியில நல்லெண்ணெயை ஊத்திச் சோம்பு போட்டுச் சுடவைக்கணும். சோம்பு கல்யாணப் பொண்ணு மாதிரி லேசா வெக்கப்பட்டுச் சிவக்குதுன்னு தெரிஞ்சு வெந்தயம் போடணும். எண்ணெயைக் காயவிட்டு, சின்னவெங்காயம், மூக்கக்கிள்ளுன பச்ச மொளகா, தக்காளி, கருவேப்பில சேத்து வதக்கி வச்சுக்கிறணும்.

அரைச்சு ஊத்துற மொளகா மஞ்சள்ல இருக்கு அயிர மீன் குழம்பு சூத்திரம்.

சீரகம், சோம்பு, பச்சமொளகா, மல்லிப்பொடி, மஞ்சப்பொடி, பொன்முறுவலா வறுத்த வெந்தயம், வெங்காயம், வெள்ளப்பூண்டு உப்பு வச்சு அம்மியில அரைக்கணும். சும்மா வழுவழுன்னு வழிச்சு எடுக்கணும். அதுல அரைச்ச தேங்கா சேத்து வதக்கணும். வதக்க வதக்க அதையே அள்ளித்திங்கலாமான்னு ஆசைவரும். இப்ப நல்லெண்ணெயில் போடணும் அரைச்சு வைச்ச அய்ட்டத்த. அது சிவீர்ன்னு செவக்கற வரைக்கும் காய்ச்சணும், புளி கரைச்சு ஊத்திக் கொதிக்க வைக்கணும்.

தண்ணியக் குழம்பா வத்தவிட்டு, கெட்டிப்பதம் வந்ததும் அயிரமீனுகள அள்ளி உள்ள போடணும். பத்துநிமிசம் கொதிக்கவிட்டு வெந்தயத்தூள வெதச்சு எறக்கிவச்சா சும்மா மூக்குல நொழஞ்சு மூளையில மூல முடுக்கெல்லாம் ஓடிப்போய் உக்காரும் குழம்புவாசன.

ஆனா ஒண்ணு. சரக்குல மட்டுமா இருக்கு சமையல் ருசி?

ஆத்தா,அய்த்த, மதினி, மச்சினி, கைப்பக்குவத்துல இருக்கு, கருவாடு மீனாகிறதும் மீனு தேனாகிறதும்.

செய்முறை அளித்தவர்: கவிப்பேரரசு வைரமுத்து
நன்றி: குமுதம்

பின் குறிப்பு: இது போல் செய்து பார்த்து உங்களுக்கு அயிரை மீன் குழம்பு ருசிக்கிறதோ இல்லையோ, அழகு தமிழ் நடையில் கவியரசு வைரமுத்து கொடுத்துள்ள செய்முறை நிச்சயம் உங்களை மயக்கும்.!! (செய்து பார்த்து சுவைத்து விட்டு அதைப்பற்றி இங்கு இடுங்களேன்.!!)

நன்றி: வைரமுத்து

அடம் பிடிக்கும் அழகி..!

இல்லறத்தேரில்
உனை ஏற்றி
இன்ப உலகை
சுற்றிக்காட்டத்தான்
எனக்காசை..!
ஆனால் நீயோ
அன்பென்ற
அச்சாணியை தராமல்
அடம்பிடிக்கிறாயே..!!

யார் குற்றம்.?

செய்வது எதுவாகினும் உயிர்
உய்த்தல் என்பது உன் கையில்..!
துயரம் என்னை தூக்கிலிட்டாலும்
உயரம் தாண்டி உனை அடைவேன்
தேடி வந்தது குற்றமென்றால்
நாடி வந்த என்னை
நற்றாற்றில் விட்ட உன்
குற்றத்தை என்ன சொல்ல..?

புதன், 16 ஏப்ரல், 2008

முளைக்கும் காதல்..!

புதைத்து தான் பார்த்தேன்...
என் மனமென்ற கல்லறையில்
உன் இனிய நினைவுகளை..!
அது காதலாய் முளைத்து,
கண்டபடி வளர்ந்து நிற்குமென்று
கனவிலும் எண்ணவில்லை..!

காதல் கொடுமை.!

இனியது என்று நான்
இங்கே பட்டியலுடன்
காதலின் விரிவுரை எழுத
கடைசிப் பக்கங்கள் வரை போதுமா..?

விரிந்து பரந்த அதன்
வீரியத்தை விளக்கி சொல்ல
ஒருங்குறியின் ஆதரவு
ஒரு போதும் போதாது..!

அதற்கு பதிலாய் என்னை
கொன்றொழிக்கும்
கொடிய பிசாசென்று
ஒரே வார்த்தையில்
நம் பிரிவை சொல்லவா..?
__________________

ஒரு கிளியின் கிலி கதை..!

எனக்கு பறவை, செல்லப்பிராணி, செடி வளர்க்கிறதுன்னா அவ்ளோ இஷ்டம்..! செடி வளர்க்கிறேன்னு வளர்த்து, வளர்த்து எங்கப்பா காசை காலியாக்குனதும், பறவை, பிராணி வளர்க்கிறேன்னு அதை அற்ப ஆயிசாக்கி சாவடிச்சதும் தான் மிச்சம். ஆனாலும் (கொல்றதுல) ஆர்வம் மட்டும் குறையவே குறையலை. ஒரு தடவை சின்னப்பிள்ளையா இருக்கும் போது பட்டுக்கோட்டையில பிச்சையெடுத்திட்டிருந்த யானையை பார்த்துட்டு அதை வாங்கித்தரச்சொல்லி அம்மாக்கிட்ட அடம்பிடிச்சத இப்ப நினைச்சாலும் சிரிப்பு, சிரிப்பா வருது..! இது சம்பந்தமா என் கைவசம் நிறைய கதை இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும் இங்க போட்டா மேனகா காந்திக்கு மேட்டர் போய் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துல என்னை உள்ளை தூக்கிப்போட நானே எடுத்துக்கொடுத்த மாதிரி ஆயிடும். அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும்..!

ஒரு தடவை என்னோட ஏழு மாமாவுல ஒருத்தர் கிளிக்குஞ்சு ஒண்ணை கொண்டு வந்தார். உடம்பில கிளிக்கே உரிய இறகெல்லாம் முளைக்காம உரிச்ச கோழி மாதிரி இருந்த அதை பார்த்தா எனக்கு பாவமா இருந்துச்சி. ஆனாலும், அதைப்பார்த்ததும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். அதை கையில வாங்கின உடனேயே அது நல்லா புசு, புசுன்னு பச்சை இறகெல்லாம் வளர்ந்து அழகாகி, நான் சொல்றதெல்லாம் செய்ற மாதிரியும், நான் பேசுறதையெல்லாம் பேசிக்கேட்கிற மாதிரியும், எங்க கிராமத்து தாத்தா வீட்டுக்கு கொண்டு போய் தாத்தாக்கிட்ட லெட்டர் கொடுத்திட்டு வர்ற மாதிரியும் கற்பனையில் கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அந்த கிளிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செஞ்சி உண்ண, உறங்க குறையில்லாம பார்த்துக்கிட்டேன். கொஞ்ச நாள்ல மொட்டிலேர்ந்து பூ மலர்ற மாதிரி சொரசொரன்னு இருந்த அது தோலிலேர்ந்து அசத்தல் பச்சைல இறகெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா முளைக்க ஆரம்பிச்சது.

நம்ம ஆள் கொஞ்சம், கொஞ்சமா க்ளாமர் ஆகிட்டிருந்தார். ஆனா, அன்புத்தொல்லை எப்பவும் ஆபத்து தானே..? அதுக்கு எவ்வளவு வேணுமோ அவ்ளோ தானே சாப்பிடும்.? நான் அதை தான் ஒரு அநாதைங்கிற நினைப்பில், கழிவிரக்கத்துல ஒழுங்கா சாப்பிடாம இருக்குதோன்னு கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சேன். எந்த அளவுக்குன்னா, கிளியோட அலகை விரிச்சி உள்ளே உணவை தள்ளிவிடுற அளவுக்கு..! கொஞ்ச நாள் கழிச்சி அது கொஞ்சம், கொஞ்சமா பலவீனமா போற மாதிரி தெரிஞ்சது. ஏன்னா எப்ப பார்த்தாலும் உறக்கமா இருக்கிறது, நடையில் தள்ளாட்டம் இப்படி..! நான் அதை உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டுன்னு நினைச்சிட்டேன். ஆனா, ஒரு குண்டன் தான் அதை கொஞ்சம், கொஞ்சமா அன்புத்தொல்லையால கொன்னுக்கிட்டு இருக்கான்னு எனக்கு அப்ப புரியலை.

ஒரு நாள் பாதுகாப்பா என் அறையில் வச்சிட்டு ஸ்கூல் போய்ட்டு திரும்பி வந்து பார்த்தா என் மவராசா உடல் ஊதி மரிச்சி போய் கிடந்தார். மனம் அப்படியே நொறுங்கி போச்சு..! ஒரு நாள் முழுசும் அழுதேன். அதை கொண்டு போய் ராணுவ மரியாதையோட எங்க வீட்டு பின்புறத்துல அடக்கம் பண்ணி, தினமும் சாயந்தரம் அந்த இடத்துல போய் அஞ்சலி செலுத்துற மாதிரி அரைமணி நேரம் நின்னுட்டு வருவேன். இப்படி பல கதை என்கிட்ட இருக்குங்க. !

ஹைக்கூ: வங்கி கடன்..!

வங்கியில் கடன் வாங்க
அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்
நீங்கள் பணக்காரர் என்று..!!

செல்வா பெருமையுடன் வழங்கும் சந்துல மிதி..!!

சந்திரமுகியில் வந்த மிகப்பிரபலமான ரஜினி, வடிவேலு நகைச்சுவை உங்களுக்கு தெரிந்திருக்கும். பேய் பங்களாவை பார்க்க போய், அங்கே வடிவேலுவை தனியாக விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார் ரஜினி..!! அந்த காட்சியை அப்படியே கொஞ்சம் உல்டா செய்து இங்கே வேறு விதமாக தந்திருக்கிறேன். படித்துவிட்டு பதிலிடுங்கள்..!!


செல்வா பெருமையுடன் வழங்கும் சந்துல மிதி..!!


நம் இலக்கியச்சோலை செல்வாவுக்கு அது திருமணமான புதிது..! தம்பதிகள் இருவரும் வீட்டின் பின்பகுதியில் ஜாலியாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். செல்வா தன் மனைவியின் தோளில் கையை போட்டவாறு மனைவியிடம் கேட்கிறார்....

செல்வா: ஏம்மா.... என்னைப்பத்தி நம்ம உறவுக்காரங்க என்ன பேசிக்கிறாங்க..?

திருமதி. செல்வா: அதை ஏன் கேட்கறீங்க..? நீங்க நல்லவரில்லையாம்..!

செல்வா: பொறாமை பிடிச்சவனுங்க..!!

திருமதி. செல்வா: நீங்க யாருக்கும் உதவவே மாட்டீங்களாம்..!!

செல்வா: சின்னப்பசங்க..!!

திருமதி. செல்வா: உங்களுக்கு மத்தவங்களை மதிக்க தெரியாதாம்..!!

செல்வா: கெட்ட எண்ணம் புடிச்சவனுங்க..!!

திருமதி. செல்வா: நீங்க என்னை லவ் பண்ணவேயில்லையாம்..!!

செல்வா: புரியாத பசங்க..!!

திருமதி. செல்வா: நீங்க எங்க சொந்தக்காரங்களை மதிக்கவே மாட்டீங்களாம்..!!

செல்வா: திருட்டுப்பசங்க...!

திருமதி. செல்வா: என்னை கடைசி வரை வச்சி வாழ வைக்க மாட்டீங்களாம்.!!

செல்வா: அரைவேக்காடுங்க..!!

திருமதி. செல்வா: என் ஆசையை நிறைவேத்தவே மாட்டீங்களாம்..!

செல்வா: முட்டாள் பசங்க..!!

திருமதி. செல்வா: நான் என்ன கேட்டாலும் வாங்கி தரமாட்டீங்களாம்...!!

செல்வா: தூண்டிவிடுற பசங்க.!!

திருமதி. செல்வா: அதுமட்டுமில்லாம லலிதா ஜூவல்லரில புதுசா வந்திருக்கிற அரையடி நீளமும், 25 பவுன் எடையும் உள்ள நெக்லஸை இன்னிக்கு நீங்க எனக்கு வாங்கி தரமாட்டீங்களாம்...!!

கடைசியாக சொன்னதை கேட்டதும் செல்வாவின் முகம் திடீரென்று மாறுகிறது..!!

நெ...நெ...நெக்...நெக்....நெக்கு... நெக்..நெ...நெக்கு..நெக்...நெக்...(திருமதி சொன்ன நகை கொடுத்த அதிர்ச்சியில் உயிர் சிக்கிக்கொண்டது போல் செல்வா திக்க, அது தெரியாமல் கணவருக்கு விக்குவதாக நினைத்து வீட்டினுள்ளே ஓடிப்போய் செம்பில் தண்ணீர் கொண்டு வருகிறார். அவர் திரும்பி வந்து பார்த்தால் செல்வா முதற்கொண்டு அங்கே ஒரு ஈ, காக்காய் கூட காணோம்..!!)

அதிர்ச்சியுடன் தன் கணவரை கூப்பிடுகிறார்..!!
செல்வா...செல்லு...!! செல்லு...!! செல்...(எந்த பதிலுமில்லை..!!!) செல்வா..!! எனக்கு குடுத்துட்டான்யா அல்வா.!!! என்ற அலறி அழுதபடி அவரை சந்தில் மிதிக்க தேடி வீட்டுக்குள் ஓடுகிறார்..!!

இதயத்தின் ஏக்கம்..!

உற்சாக ஊற்று வற்றியது
உனை நீங்கியதால்..!
உற்சவ தினமாயிருந்தன
உன்னுடன் நானிருந்த நாட்கள்.!

சிற்பமாய் உனை கண்ட நாட்கள்
சொற்பமென்றாலும் அது சொர்க்கம்.!
அற்ப பணத்தை தேடி இங்கே
அலையும் வேலையில் எனக்கு
உற்சாக பானமாய் உடனிருப்பது
உன் நினைவுகள் மட்டும்..!!

கனவும், காதலியும்..!!

நிமிடங்கள் யுகங்கள் ஆகி
நித்திரை போன காலமது.!

புரண்டு படுத்தே படுக்கை
புண்ணாகிப் போன இரவுகள்!
அரண்டு விழிக்க வைக்கும்
அர்த்தமில்லா கனவுகள்.!!

உருண்ட காலச்சக்கரத்தில்
உன்னருகே ஒரு நாள் நான்..!
இருண்ட காலம் விலகி
இன்ப உலகில் சஞ்சரிப்பு..!

வருடங்கள் நிமிடங்களாய்
வண்ணம் பூசிய வனப்பு.!!
உறக்கம் கலைந்து உண்மை தெரிய
இரக்கமற்ற அரக்க உலகில் நான்..!

எனக்காய் ஒரு இதயம்..!

உள்ளக்காதலை என்னுள்
உறுதி செய்ய உன் வாயால்
அள்ள, அள்ள குறையா
அமுத சொற்கள் வேண்டாம்..!

இதயத்தில் எனை வைத்து
இறுதி வரை எனக்காய்
எதையும் செய்யும்
என்னுயிராய் நீ இருப்பாயாடா..?

பிரகாஷ்ராஜ்-லலிதா குமாரி: விவாகரத்து.!

நடிகர், நடிகையர் குறைந்த கால அவகாசத்தில் தங்களுக்கு கிடைக்கும் அதீத பணத்திற்கும், பொருளுக்கும் கிடைக்கும் விலை தான் இப்படி சொந்த வாழ்க்கையில் தோற்றுப்போவது. இதில் மிகவும் பாதிக்கப்படுவது நடிகைகள் தான். பொதுவாகவே திரையுலகம் (நடிக்கும்) பெண்களை ஒழுக்கத்தோடும் உண்மையோடும் இருக்கவிடுவதில்லை. அவற்றை அவர்கள் பலி கொடுப்பதால் கிடைப்பது தான் பணமும், புகழும். அதன் பிரதிபலனாக தான் பெரும்பாலானவர்கள் சொந்த வாழ்க்கையில் தோற்கிறார்கள். அதன் பிறகு காலத்தை ஓட்ட முன்பை விட மிக கேவலமானவற்றை வேறு வழியில்லாமல் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நடிகர்கள் நடிப்பது சினிமாவில் தான் என்றாலும் சமூகம் அவர்களை நிஜத்திலும் நடிக்க வேண்டிய நிலையை உண்டாக்கி விடுகிறது.

பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர் மற்றும் நல்ல மனிதர் என்பதை அவர் நடித்த படம்+அவர் தயாரித்த படங்களை வைத்து நம்புகிறேன். ஆனால், அவர் பொதுவாழ்க்கையில் இருப்பவர் என்பதால் ஒழுக்கத்தை பேணுவதும் அவசியமே..! இந்த பிரிவிற்கு இருவரில் யார் காரணம் என்பது தெரியாமல் யாரையும் குறை சொல்ல கூடாது. அது மட்டுமல்லாமல் ஒரு நடிகரின் அந்தரங்க வாழ்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவது நமக்கு சினிமா மேல் உள்ள அதீத மோகத்தை தான் காட்டுகிறது. மணமுறிவு எல்லா துறையினர்களிடமும் இருக்கிறதென்றாலும், இந்த துறையில் தான் அதிகம். நம்மால் அதிகம் பேசப்படுகிறது. இது தமிழர்களின் தலையெழுத்து. நம்முடைய கடமை நல்ல திரைப்படங்களை வரவேற்பது, அதில் நடிப்பவர்களை பாராட்டுவது மட்டுமே..!!

ஒரு நடிகை கணவனாக நடிப்பவனின் அருகாமையை நடிப்பின் மூலம் பெற்ற பிறகு, உண்மையான கணவன் தரும் அருகாமை குடும்ப பெண்களுக்கு கிடைப்பது போன்ற இனிமையை தரும் என நம்புகிறீர்களா..? இதே போல் காதலையும் சிந்தித்தால் நடிக, நடிகர்களின் ஆயுள் பலவீனத்திற்கு காரணம் புரியும். ஒரு சராசரி மனிதனே ல.குமாரியை மணக்க விரும்பாத போது பி.ராஜ் மணக்க காரணம் காதல் என்பதை விட சூழ்நிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அப்போது பி.ராஜ் வாய்ப்பு தேடும் சிறிய நடிகர். ல.குமாரி வாய்ப்பே இல்லாத வாடகை வீடு தர வாய்ப்புள்ள நடிகை. தங்கள் பலவீனங்களை மறைத்து ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் வைத்துக்கொண்ட பெயர் தான் காதல்..!!

பணம் புகழ் வந்தாலே அதற்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் ஒரு ஆபாச நடிகையின் தங்கையை இத்தனை நாளும் வாழ வைத்ததே பெரிய விஷயம் தான். பல பிரச்சினைகளுக்கு நடுவிலும் கணவன், மனைவி உறவை கட்டி வைப்பது அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யம். சினிமாவில் அதீத அந்நியோன்யத்தை மற்ற நடிக, நடிகைகளுடன் கேமராவிற்கு முன் பார்த்து விடுவதாலோ அல்லது நடித்துவிடுவதாலோ என்னவோ நிஜ உறவுக்கு அர்த்தமில்லாமல் போய் விடுகிறது. இது தான் இந்த துறையினரின் வாழ்க்கை தோல்விக்கு பெரும் காரணம்.!!

அஞ்சாதே - திரைப்பட விமர்சனம்

சமீபத்தில் என்னைக்கவர்ந்த ஒரு சில படங்களில் அஞ்சாதே-யும் ஒன்று..!! குணத்தில் இருவேறுபட்ட துருவங்கள் தங்கள் இலட்சியத்திலும் எதிர் துருவத்தை அடையும் போது நடக்கும் நிகழ்வுகள் வெகு சுவராஸியம். நரேன், அஜ்மலின் நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லாத அசத்தல் ரகம். தாங்கள் எண்ணத்தில் கொண்ட இலட்சியம் சூழ்நிலையால் சீரழிக்கப்படும் பொழுது மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள் என்பதை வெகு எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

தன்னுடைய முந்தைய படமான சித்திரம் பேசுதடியில் கொடுத்த கமர்ஷியல் ஹிட்டான வாள மீனுக்கும் பாடல் போல், அஞ்சாதே-யிலும் ஒரு ஹிட் கத்தாழ கண்ணால பாடல்..!! பிரசன்னா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடம் (கதாநாயக ரேஸில் இருக்கும் இவர் எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாரென்று தெரியவில்லை). நிறைய பேருக்கு அந்த நீள முடி வில்லன் பிரசன்னா என்பதே தெரிந்திருக்காதென்று நினைக்கிறேன். பிரசன்னா இமேஜ் பார்க்காத நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். பாண்டியராஜன் வித்தியாச வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அவரும் நடிப்பில் சோடை போகவில்லை. ஒரு மொட்டைத்தலை துணை நடிகரை முகம் காட்டாமல் நடிக்க வைத்திருக்கிறார்கள், ஏனென்ற காரணம் புரியவில்லை.

படத்தில் மனதை கவர்ந்த பல காட்சிகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி காட்சி..! தான் எதிரியாக நினைக்கும் நரேனால் சுடப்பட்டு சாகும் தருவாயில் நரேனின் கழுத்தில் தான் அன்பளிப்பாய் கொடுத்த மோதிரத்தை கயிறில் கட்டி கழுத்தில் அணிந்திருப்பதை பார்த்ததும் தன் நண்பனின் உயர்ந்த நட்பை உணர்ந்து நரேனிடம் சாரி சொல்லி அஜ்மல் இறக்கும் காட்சி மிகவும் உருக்கம்.

சினிமாத்தனமில்லாத, அதிக செலவில்லாமல் ஒரு தரமான படத்தை எடுத்திருக்கிறார்கள்..! இது போன்ற படங்களை பார்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை..!!

(அதே போல் பிரசன்னா நடித்த கண்ணும், கண்ணும் படமும் வெகு அருமை. தவறாமல் பார்த்து விடுங்கள்..!!)

பிரியாத பிரிய சகி..!

நிஜமில்லை நம் நீண்ட பிரிவும்,
நெஞ்சை உலுக்கும் தனிமையும்..!
உள்ளுக்குள் உறைந்திருக்கும்
உன்னுடனேயே என் பொழுதுகள்
ஒவ்வொரு நிமிடமாய் கரைகிறது!

நம் இனிய நினைவுகள் கை கோர்க்க..
பகிர்ந்து கொண்டவை பக்கமிருக்க..
என் இதயம் எப்போதும் போல்
காதலை கசிந்த படி..!

எனக்கொன்றும் வித்தியாசமோ,
விநோதமோ தெரியவில்லை..!
உன்னை பிரிகையில்
நான் தான் சொன்னேனே..
உன்னுள் இருக்கும் என்னை
வெளியே தேடாதே என்று..!!

இனிக்கும் காதல்..!

நீதான் நினைவுகளாய்
எனக்குள் நிறைந்து வழிகிறாய்..!
உன் இனிய நினைவுகளும்,
நீ குடித்து மிச்சம் தந்த
எச்சில் தே(ன்)நீரும்
ஏற்படுத்தி விடுமோ சர்க்கரை நோயை
என்ற கவலையில் இப்போது
என் இதயம்..!!

உனை நோக்கி ஒரு பயணம்..!

ஆயுதமின்றி, ஆதரவின்றி
செல்லாத வழியில்
செய்வதறியாத என் பயணம்.!

உள்ளத்துள் உனை வைத்து
உயிர் பயத்துடன் தொடர்கிறது..!
வழியெங்கும் வலியென்றாலும்
போதையாய் உன் காதல்..!

முள்ளாய் உன் பிரிவிருக்க
முனைப்புடன் கால்கள் உனை நோக்கி.!
எண்ணியது நடக்காது போனாலும்
முயற்சித்த புண்ணியம் அது போதும்
புண்பட்ட இதயத்திற்கு புத்துயிர் தர..!!

பூங்காவன காதல்..!!

அன்புத்தேனை சேகரிக்க
அனுதினமும் அலையும்
ஆண் வண்ணத்துப்பூச்சி நான்..!

அள்ள அள்ளக்குறையா
காதல் தேனை கனிவுடன்
தரும் வண்ண மலர் நீ..!

தேன் குடித்து நானும்,
தேன் கொடுத்து நீயும்
களைக்காது போனாலும்
போதுமென்று காலம் ஒரு நாள்
பொறாமையுடன் சொல்லிற்று.!!

காலத்தின் கட்டளையை
கவலையுடன் ஏற்றோம்..!!
பிரிவென்பது நம்மை
பிரித்து போட்டாலும்
என் வண்ணம் உன்னிலும்
உன் மணம் என் உடலிலுமாய்
இருந்து உயிரோடு வைத்திருக்கிறது
நம் பூங்காவன காதலை..!!

கலைத்துறையினருக்கு காரியத்தில் கண்..!!

சினிமாத்துறையினர் நடத்தும் எந்த வகையான போராட்டத்திலும அதுல உண்மையை விட சினிமா ஸ்டண்ட் தான் அதிகம் இருக்கும். குறிப்பா இதுக்கு இவங்க உண்ணாவிரதத்துல குதிக்க முக்கிய காரணம் தமிழ் சினிமா படங்கள் கர்நாடகவுல ஓடுறது தடை பட்டதும், அந்த தியேட்டர்கள் தாக்கப்பட்டதும் தான்..!! அவங்க பிழைப்பில் மண்ணைப்போடுற எந்த விஷயத்தையும் பார்த்துக்கிட்டு சினிமாக்காரங்களால சும்மா இருக்க முடியாது. ஆனா அதில் கலந்துக்கிட்ட சிலருக்கு மட்டும் தமிழுணர்வு இருந்தது கொஞ்சம் ஆறுதல். குறிப்பா சத்யராஜ்..!!

நடிப்பு தாண்டி சத்யராஜை எனக்கு பிடிக்க காரணம் அவர் இமேஜுக்கு பணியாத ஆளு, மனசுல பட்டதை பட்டுன்னு போட்டு உடைக்கிற ஆளு, பகுத்தறிவு பேர்வழி..!! இந்த போராட்டத்தில் சத்யராஜோட பேச்சு தான் ஹைலைட்டான சமாச்சாரம். அவர் சொன்ன கருத்துல சில விஷயங்கள் சபை நாகரீகத்துக்கு சரி வராதுன்னாலும் ஒரு சினிமாக்காரன் இத்தனை உண்மையா, நேர்மையா இருக்கிறது பெரிய விஷயம். அதுவும் ரஜினியை தாக்கோ, தாக்குன்னு தாக்கி ரஜினியை ரொம்பவே நெளிய வச்சிட்டார்..!!
அவர் பேசியது கீழே: (அவர் பேசியவற்றில் சபை நாகரிகம் மீறியவை தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது..!)

இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் ம*ரு மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள் எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள். நமக்கு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான்..!!

இப்படி பேச வேற எந்த நடிகனுக்கும் தைரியம் வரும்னு எனக்கு தோணலை. என்னைக்கேட்டா தமிழனுக்கு அங்க ஏற்பட்ட பிரச்சினைக்கு ரொம்ப வேதனைப்பட்டவர் நடிகர்கள்ல சத்யராஜா தான் இருக்க முடியும். காரணம், பேச்சில் அத்தனை காரம்..!! அவரோட பேச்சில் அங்க இருந்தவங்கள்லாம் அதிர்ச்சியானது நிஜம்..!! விஜய்காந்த் வரும் போதே அரசியல்வாதியா தான் வந்தார். ரஜினி எழுந்திரிச்சி விஜய்காந்துக்கு கை கொடுக்கும் போது புத்தம்புது அரசியல்வாதி சரத்குமார் தனக்கு கை குடுப்பாரா மாட்டாராங்கிற குழப்பத்தில் எழுந்தும், எழாமலும் இரு தலைக்கொள்ளி எறும்பா தவிச்சது சூப்பர் காமெடி. அவர் சந்தேகப்பட்ட மாதிரியே சரத்தை அவர் கண்டுக்கவே இல்லை. விஜய்காந்த் பேச்சில் அரசியல் நுழைக்க ரொம்பவே சிரமப்பட்டார். ஆனாலும், ஏறக்குறைய யாருக்கு ஓட்டுப்போடக்கூடாதுன்னு சொல்லிட்டு பேச்சை முடிச்சிட்டுக்கிட்டார். சரத் ஒவ்வொருத்தரையும் அவர்களேன்னு நீட்டி முழக்கினதும், என் அருமைச்சகோதரர்னு வலிய பேசியதும் ஒரு அரசியல்வாதியாக தன்னை மாத்திட்டிருக்கார்னு புரிஞ்சது. ரஜினி வழக்கம் போல வெண்டைக்காய் வழ, வழ.. ஆனா கண்டனத்தை வேற வழியே இல்லாம ஸ்ட்ராங்கா சொன்னார். வைரமுத்து வரலாறை இழுத்து அதன் படி நமக்கு தான் பிரச்சினைக்குரிய பகுதி சொந்தம்னார். கமல் தேசிய நடிகர்ங்கிறதாலோ என்னவோ அதிகமா கன்னடர்களை தாக்காம பேசினார். நிறைய கூத்து நடந்தது..!!

சினிமாக்காரங்களால இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒண்ணும் காணமுடியாது. ஆனா, சினிமாக்காரங்களெல்லாம் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுறவங்கங்கிற தோற்றத்தை ஏற்படுத்த இந்த போராட்டம் ரொம்பவே பயன்பட்டிருக்கு..!! அவ்ளோ தான் மேட்டர்..!!!

கடவுள்களுக்கு கண்டனம்..!

தெரியாமல் போனது
தெய்வத்தின் பலவீனங்கள்..!!
அவதார புருஷர்களுக்கு
ஆயுள் மிகக்குறைவு..!!
பாலாபிஷேக கடவுளை
பல்வலி படுத்துகிறதாம்..!!

பகுத்தறிவை பயன்படுத்தாமல்
பாழாகும் கூட்டம் இங்கே..!
ஏழையின் வயிற்றிலடித்து
ஏய்த்துப்பிழைக்கும் இறைவன்கள்
இறுமாப்புடன் வரிசையில்.!!

என்ன கொடுமையடா இது..?
எப்போது சிலிர்த்து எழும்
சிந்தனை பறவை
இந்த சீர்கெட்ட மாக்களிடம்..?

சுத்தி பார்க்கணும்னா இங்க வாங்க..!!

நம்மால அடுத்தவங்களுக்கு சுத்தி காட்டமுடியாதோன்னு எனக்கு மனசுக்குள்ள ஒரே வேதனை..! அதுவே கொஞ்ச நேரத்துல வெறியாயிடுச்சி..நம்ம நண்பர்களுக்கு நிச்சயம் சுத்தி காட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டு என்னால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு சுத்தி காட்டியிருக்கேன்.

டிக்கெட் போட்டெல்லாம் நான் அநியாயம் பண்ணலே..! மக்கள் நலனைப்பத்தியே தூங்குற நேரத்துலயும் சிந்திக்கிற நான் இதை இலவசமா தான் தருகிறேன். பாத்துட்டு பதில் எழுதுங்க மக்களே..!!












இது தான் சுத்தி..!




பெண்ணின் பெருமைகள்..! (மனைவி) - 02

தாரம்..! ஒரே உறவு முறையின் மூலம் பல பரிமாணம் காட்டும் பத்தினிப் பெண். அன்பில் இராட்சசிகள் இவர்கள். ஆணின் கண்ணி‎ன் வழி நுழைந்து, முதலில் இதயத்தில் இடம்பிடிப்பவர்கள். பிறகு அங்கிருந்து இம்மியளவும் நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள். இவர்கள் தியாகத்தின் திருவுருவம், தேவதையின் மறு உருவம். தனக்கு தலைவலி வந்தால் தன் கணவனுக்கு தைலம் தேய்ப்பார்கள். நமக்கு ஜலதோஷம் பிடித்தால் அவர்கள் தும்முவார்கள். தன்னை பெற்று வளர்த்து, கஷ்டத்தை அனுபவித்ததற்காக தாய்க்கு தன் வாழ்க்கையில் முதல் பாதியை காணிக்கையாக்கும் மனிதன், இரண்டாம் பகுதியை மனைவிக்கு சுலபமாக மறுபரிசீலனை இன்றி தந்து விடுகிறா‎ன். காரணம், அவர்கள் காட்டும் அ‎ன்பில், பாசத்தில், காதலில், நட்பில், ஆதரவில், பணிவிடையில், த‎ன்னை தருவதில் காட்டும் அர்ப்பணிப்பு, வேகம், வெறி..! ஆரம்பத்தில் மனதிற்குள் தென்றலாய் நுழையும் இவர்கள், தன் அன்பால் சூறாவளியாய் சுழற்றி அடித்து ஆணை சாய்த்து விடுகிறார்கள். அப்போது சாய்பவ‎ன் தான், அதன் பிறகு அவன் எழுவதே இல்லை..!!

பெரும்பாலான மட சாம்பிராணிகள் திருமணத்திற்கு பிறகு மகான்களாய் மாறிப் போகும் மர்மம் இது தான். பெண்கள் இயல்பில் முகர்ந்தால் வாடிப் போகும் மென்மையான அனிச்சமலர்கள் என்றாலும், இதயத்தில் ஒன்றை இருத்தி வைத்தால் இரும்பின் உறுதி தோற்கும்..! தனக்காக இல்லாமல் தன்னைக் கவர்ந்தவனுக்காக வாழும் வாச மலர்கள். முன்பின் தெரியாத ஒருவனை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தாலும், அந்த தெரியாதவனையே தெய்வமாக்கி பூஜிக்கும் இந்தியப் பெண்கள் உலகி‎ன் எட்டாவது உலக அதிசயம்..! இந்திய திருமண முறை குறித்து எனக்கொரு கோபம் உண்டு. நேற்றுப் பார்த்த ஒருவனை திருமண பந்தம் மூலம் இன்று இணைத்து, அப்பெண்ணை அன்றிரவே அவனோடு உடை களைந்து, உறவு கொள்ள வைக்கும் உச்சக்கட்ட அநியாயம் இங்கு தான் நடக்கிறது. இணைந்த இருவரும் தங்களைப் பற்றி இயன்றவரை புரிந்து கொள்ளவே கட்டாயம் கால அவகாசம் தேவைப்படும் போது ஏன் இந்த ஏற்க முடியாத ஏற்பாடு..? முதலிரவு என்பது ஆண்மையை நிரூபிக்கும் ஆராய்ச்சிக் கூடமா..? உடல் உணர்ச்சியை பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்கள் இவ்விஷயத்தில் சராசரியாக அறைகுறை ஆடை அணிந்த அழகியை பார்த்தால் போதும், அவ்வளவு ஏன்..? அவள் அழகியாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அரை குறை ஆடையுடன் இருந்தால் போதும். உணர்ச்சியால் உந்தப்பட்டு உறவுக்கு தயாராகிறான்.

ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல..! அவள் கணவ‎னுடனான உறவுக்கு தயாராக கூட என்னவெல்லாம் அவளுக்குள் நடக்க வேண்டும் தெரியுமா..? அவ‎ன் மீது நேசம், பாசம், அன்பு, பற்றுதல், கை விட மாட்டான் என்ற நம்பிக்கை, நமக்கு சொந்தமானவன் என்ற உரிமை, புண்படுத்த மாட்டான் என்ற தைரியம், இவனோடு உறவு கொண்டால் ஆபத்தில்லை என்ற நிச்சயம், �நம்ம ஆளு� தானே என்ற பரிவு என்று எல்லாம் ஒன்றாக கூடி வந்தால் தான் �சரி, சம்மதிப்போம்..!� என்று துணிவு ஏற்பட்டு உடலும், மனமும் ஒரே நேரத்தில் உறவுக்கு தயாராகிறது. நான் சொன்ன இவை எல்லாம் ஒரு சில நிமிஷங்களில் நடக்கும் இரசவாதம் என்பது தான் ஆண்டவன் படைப்பில் உள்ள அற்புதம். நா‎ன் மேலே பட்டியலிட்ட அத்தனையும் நேற்று பார்த்து, இன்று தாலி கட்டிய கணவனிடம் முதலிரவில் எதிர்ப்பார்க்க முடியுமா..? முதலிரவு என்ற சத்திய சோதனையில் சங்கமிக்க முடியாமல், சக்தி இழந்து, சந்தேகப்பட்டு விடிந்தவுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்த கதையும் உண்டு..! வேண்டாமே இந்த வினையாகும் விளையாட்டு..! கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அள்ளிச் செல்லும்..?!!

திருமணம் என்ற பந்தத்தால் தனக்கு சொந்தமானாள் என்ற ஒரே காரணத்திற்காக மனைவிக்கு சில கணவன் எ‎ன்னும் கழுகுகள் கொடுக்கும் கஷ்டங்கள் ஏராளம், ஏராளம்..!! த‎ன் உடல், மன அரிப்புகளை சொறிந்து கொள்ள உடலாலும், பேச்சாலும் த‎ன் துணையை கொத்திக் கிழிப்பது கொடுமை. நான் மட்டும் ஒரு பெண்ணாக பிறந்து ஒரு நயவஞ்சகனை திருமணம் செய்து, அவன் என்னை நாளும் கொடுமைப் படுத்தினால், அவ‎ன் நன்றாக உறங்கும் போது அம்மிக்கல்லை நடு மண்டையில் நச்சென்று போட்டு �காலி� செய்து, நள்ளிரவில் நடுக்கூடத்தில் நல்லபடியாக புதைத்து, நமஸ்கரித்து விட்டு �நண்பர்களைக் காணப்போன என் நாயகனை நான்கு நாட்களாய் காணவில்லை..!� என்று நடித்து நாட்டையே நம்ப வைப்பே‎ன் (எத்தனை �ந� இருக்கிறது எ‎ன்று எண்ணுங்கள் பார்ப்போம்..!. நல்லவேளை, நான் ஆணாக அவதாரம் எடுத்ததால் உங்களில் யாரோ ஒருவர் உயிர் பிழைத்தீர்கள்..!) ஒவ்வொரு வருடமும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து உலக அழகியாக உலகுக்கு அறிவிக்கிறார்கள் சில உதவாக்கரைகள்..! அழகு என்பதன் அர்த்தம் என்ன..? எனக்கு செந்தூரப்பூ அழகு..! உங்களுக்கு..? செண்பகப்பூவா..? செந்தாழம்பூவா..? சாதாரணமாக மலர்�லேயே இத்தனை இடறல் இருக்கிறதென்றால் மங்கையில் சொல்லவா வேண்டும்..? அழகு என்பது ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். இன்று அழகாய் தோன்றுவது நாளை அது அவலட்சணமாய் தோன்றலாம். ஆனால், மன அழகு எந்நாளும் மாறுவதில்லை. புற அழகும், மன அழகும் இணைந்து, இயல்பாய் அசத்தும் அவரவர் மனைவி தான் உலகின் சிறந்த அழகிகள்..! மனைவியை புரியாதவர்களுக்கு நான் சொல்லியிருப்பது புதிது. புரிந்தால் வாழ்க்கை இனிது..!!

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். ஆனால், தந்தை, கணவ‎ன், மகன், சகோதரன் போ‎ன்ற உறவுகளில் கட்டுண்டு போய், ஆண்களுக்கு வழி விட்டு, அவர்களை சாதிக்க வைத்து சந்தோஷப்படுகிறார்கள். அந்த உயர்ந்த பண்பு ஆண்களுக்கு வராது..!! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே எ‎ன்று தமிழில் ஒரு பதம் உண்டு. ஆனால், எ‎ன்னைப் பொறுத்தவரை அது �அழிவதும் பெண்ணாலே அல்ல, ஆள்வதும் பெண்ணாலே..!!� தா‎ன். தேசத்தி‎ற்கு மன்னனாக இருந்தாலும், அவ‎ன் தாய்க்கு மக‎ன். ஒரு ஆண் தேசத்தை ஆள்வதில் பெண்ணுக்கு அதிக பங்கு உண்டு. Yes, Woman is the real king maker.! இத்தனை பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றுவோம். அவர்கள் மனதில் உள்ள ஆறா இரணங்களை ஆற்றுவோம். உலகம் உயிர்த்து செழித்து வாழ, அதுவே சிறந்த வழி..!

பெண்ணின் பெருமைகள்..! (தாய்) - 01

தாய்..! இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் விட ஒரு அற்புத படைப்பு இருக்குமென்றால் அதை நான் தாய் தான் என்று சொல்வேன். தனக்கென்று எந்த ஒரு தேவைகளும் இல்லாமல் பிறர்க்கென்று வாழ்ந்து இந்த உலகை உய்வித்துக் கொண்டிருக்கும் உன்னதம் தான் தாய். அந்த உன்னதத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பெருமை உரைத்துத் தா‎ன் தெரிய வேண்டும் எ‎ன்ற அவச்�யம் இல்லாவிட்டாலும், நம்மைப் பெற்ற கடனை என் எழுத்து இம்மியளவு குறைத்தால் குளிர்ந்து போவேன். உங்களிடம் நான் ஒரு சிறு பொருளை தந்து உங்களிடமே இது இருக்க வேண்டும், படுக்கும் போது கூட பக்கத்தில் வைத்து விட வேண்டாம் என்றால் எத்தனை நாள் வைத்திருப்பீர்கள். ஒரு நாள் முடியுமா உங்களால்..? ஆனால் தாய் தன் வயிற்றில் கருக்கொள்ளும் சிசுவை பத்து மாதங்களாக அது கொடுக்கும் தொந்தரவை, தொல்லைகளை துடைத்து தூர எறிந்து வ்�ட்டு, அதையே இன்பமாய் ஏற்றுக் கொள்கிறாளே..! அந்த குணம் வருமா இந்த ஆண் வர்க்க வானரங்களுக்கு..! சேயை சுமக்கும் பொழுதில் ஒழுங்காக உண்ண முடியாது, உடை உடுக்க முடியாது, உறங்க முடியாது, எண்ணியபடி நடக்க முடியாது. ஆனாலும், அடி வயிற்றில் குடி கொண்டிருக்கும் குழந்தையே அவள் உலகமாகிறது.

நீங்கள் கருவைச் சுமக்கும் கர்ப்பிணிகளை கவனித்திருக்கிறீர்களா..? நடக்க அல்ல நகர கூட நான்கு நிமிட யோசிக்க வேண்டிய நிலை இருந்தும், அதைப் பற்றிய வேதனையோ, வருத்தமோ இல்லாமல் முகத்தில் புதுப்பொலிவோடும், இழையோடும் புன்னகையோடும் காணும் அந்த எதிர்காலத் தாயை காணும் பொழுது எ‎ன் மனம் ஈரமாய் கச்�யும். ஒரு பிள்ளையைப் பெறுவதில் ஆணுடைய பங்கு படுக்கையறை சம்பந்தப்பட்டது மட்டுமே. ஆனால், அந்தப் பிள்ளையை சுமந்து, பெற்று, வளர்ப்பது எ‎ன்பது பெண்ணுக்கு பெரும்பாடாகும். ஒருவன் எவ்வளவு மோசமானவனாக, கெட்டவனாக, அயோக்கியனாக இருந்தாலும் சரி..! அவன் தாயிடம் அவனைப் பற்றி கேளுங்கள். �என் பிள்ளையா..? அவனைப் போல் வருமா..? அவனுக்கு ஒன்றுமே தெரியாது, அவன் குழந்தை மாதிரி..!� என்று தான் பதில் வரும். நீங்கள் கேட்டது �ஆட்டோ� சங்கர், �ஆசிரமப் புகழ்� பிரேமானந்தா, �இன்டர்நெட் புகழ்� டாக்டர் பிரகாஷ், �அயோத்தியாக்குப்பம்� வீரமணி ஆகியோரைப் பற்றி இருந்தால் கூட இருந்தால் கூட அப்படித்தா‎ன் சொல்வார்கள்..! அப்படி அவர்கள் சொல்வது தவறில்லை. அது தாயி‎ன் தனித் தன்மை. தாய்மைக்கு வெறுக்கத் தெரியாது, கோபப்பட தெரியாது, சுயநலம் தெரியாது, தற்பெருமை தெரியாது, ஆசைகள் தெரியாது. அவளுக்கு தெரிந்தது மூன்றே மூன்று தான். அவை அன்பு, பாசம், பொறுமை.

பெரும்பாலும் வாலிப வயது வரை ஆண்களுக்கு வில்லன் வெளியில் யாரும் கிடையாது. தந்தை என்ற பெயரில் தான் அவர் தரிசனம் தருவார். அவர் உக்ரமடைந்து, சாமியாடும் போதெல்லாம் பொறுமையாய் இருந்து அன்பு நீர் தெளித்து, ஆறுதல் வேப்பிலை அடித்து, அவர் கோபத்தை மலையேற வைக்கும் மகராசி தான் தாய்..! நான் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை, கவலைகளை அடைந்தாலும் கண்ணீர் சிந்துமளவுக்கு கலங்கிப் போவதில்லை. அதுவும் சவுதி வந்து கற்ற வித்தைகளும், கஷ்டங்களும் அதிகம் என்பதால் உணர்வுகள் மரத்து கல்லாகிப் போனே‎ன். இந்த நிலையிலும் ஏதோ ஒரு காரணத்திற்காக என் தாயின் கண்கள் கலங்குவதைக் கண்டால் என்னை நானே கட்டுப்படுத்த முடியாமல் எ‎ன் விழிகளில் இருந்து நீர் சுரக்கும். இது எனக்கு மட்டுமல்ல, தாயை நேசிக்கும் எல்லா தனயனுக்கும் ஏற்படும் உணர்வுதான்.

இத்தனை மகத்துவம் வாய்ந்த தாயை இக்கால மகன்கள் நடத்தும் விதம் நல்லவர்களை நம்பிக்கை இழக்க வைக்கிறது. இதயத்தில் ஏந்தி, போற்ற வேண்டிய தாயை முதியோர் இல்லத்தில் வைத்து அழகு பார்க்கும் அலங்கோலம் நடக்கிறது. அடுக்குமா அந்த ஆண்டவனுக்கே..? உதிரம் தந்து உயிர் கொடுக்கும் தாயை உள்ளம் பதற வைக்காதீர்கள்..! அதல பாதாளத்தில் விழுந்து, அழிந்து போவீர்கள்..!! உங்களுக்கு இவ்வுலகில் சொர்க்கத்தை காண வேண்டுமா..? உங்கள் தாயை உங்களோடு வைத்து, உள்ளங்கையில் வைத்து தாங்கி பணிவிடை செய்யுங்கள். ஆம்..! சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது..!!

பெண்மையின் பெருமைகள்..!

ஒரு மனித‎ன் ஆதியில் கருவாகி, உருவாகி, இறுதியில் எருவாகும் வரை உள்ள எல்லாவற்றிலும் தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்ட பெண்ணைப் பற்றி, பெண்ணிணத்தைப் பற்றி, பெண்மையைப் பற்றி எழுத எத்தனித்திருக்கிறே‎ன். பெருமைக்குரிய பெண்மையி‎ன் பெருமைகளை நான் எடுத்துக் கூறுவதென்பது சமுத்திரத்தை சல்லடையால் அள்ளிக் குறைக்கும் முயற்சி எ‎ன்றாலும், ஏதோ எ‎ன்னால் இய‎ன்றவரை இயம்பியிருக்கிறே‎ன். முதலில் பெண்களி‎ன் தன்மைகள் என்ன எ‎ன்பதை பார்ப்போம்.

பெண்களை தமிழர்கள் ஏழு பருவங்களில் பிரித்தறிந்திருக்கிறார்கள். அவை, மங்கை, மடந்தை, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியன. சரி..! பெண் எ‎ன்பவள் ஆணோடு எந்த வகையில் வேறுபடுகிறாள் எ‎ன்பதை பார்ப்போம். புறத்தோற்றம் எ‎ன்று பார்த்தால் பொதுவாக உடல் உறுப்புகள் மட்டுமல்லாது உடல் எடை, வலிமை, செயல்படும் வேகம் ஆகியவற்றில் ஆணை விட பெண் குறைந்து வேறுபடுகிறாள். விஞ்ஞான ரீதியாக மனித மூளையி‎ன் மேற்படலம் (Cerebral Cortex - மூளைப் புறவணி) இரு அரைக்கோளங்களாய் வலது, இடது என அமைந்து இருக்கிறது. அதில் இடது தர்க்கம், கணிதம், சிந்தனை செய்ய, மற்ற நபர்களை ஆராய உதவும். அதே போல் வலது பகுதி இலக்கியம், இசை, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தன்னைத் தானே எடைபோடவும் உதவும். இந்த இரண்டையும் இணைக்கும் நரம்புக்கற்றை ஒ‎ன்று உண்டு. இந்த பாலத்தின் லத்தீன் பெயர் கார்பஸ் கலோசம் (Corpus Collosum). இதன் மூலம் தா‎ன்இரண்டு பக்க மூளைகளிடையே தகவல் பரிமாறப்படுகிறது. இந்த கார்பஸ் கலோசம் எனும் நரம்புக் கற்றை ஆண்களைவிட பெண்களுக்கு கால் பங்கு அதிக தடிமனாக இருக்கும்..! இதனால் இருபக்க தகவல் பரிமாற்றம் அதி வேகத்தில் பரிமாறப்படுகிறது. ஆகவே, உள்ளுணர்வு என்பது பெண்களுக்கு அதிகம்.

ஒரு ஆளைப் பார்த்ததும் நல்லவனா, நேர்மையானவனா, திறமையானவனா, ஜொள்ளுப் பேர்வழியா, பொறுக்கியா எ‎ன்று எடை போடும் திறமை கூடுதலாக இருக்கும் (ஆனால், காதலிக்கும் போது அந்த எச்சரிக்கை உணர்வை அணைத்து விட்டு, உணர்ச்சிகளை எரிய விட்டு விடுவதால் எளிதில் ஏமாந்து விடுகிறார்கள்..!). எண்ணும் எழுத்தும் சரிவிகிதக் கலப்பில் பரிமாறிக் கொள்ளும் பெண்ணி‎ன் மூளை அதிக திறம் காட்டும் (அதனால் தா‎ன் படிப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் தேர்ச்சி பெருகிறார்கள்). அதை இது போல நல்ல வழியில் பய‎ன்படுத்தாத சராசரிப் பெண்கள் சிறந்த வாயாடிகள் ஆகிறார்கள் (விசுவி‎ன் அரட்டை அரங்கம் பார்த்தவர்களுக்கு தெரியும்..!).

அதே போல் காட்சிகளை மனதிற்குள் பதியவைக்கும் திறமையிலும் அவர்கள் மு‎ன்னால் நிற்கிறார்கள். ஒரு அறைக்குள் ஒரு நிமிட நேரம் சென்று திரும்பியதும் அங்கு பார்த்த பொருட்களை சொல்லச் சொல்லுங்கள். அறைக்குள் என்னென்ன இருந்தது என்று மிகச் சரியாக ஒப்பிப்பார்கள் (சேலையி‎ன் பார்டரின் கீழ் என்ன நிறத்தில் பூப் போட்டிருந்தது எ‎ன்பது முதற்கொண்டு..! ச‎ன் டி.‏வியில் நிர்மலா பெரியசாமி (வ..ண..க்..க்..க்..க்..க்..க..ம்...!) சொல்லும் செய்தியில் கணவ‎ன் இலயித்திருக்க, அருகில் அமர்ந்திருக்கும் மனைவியோ நிர்மலாவி‎ன் செய்தியோடு, அவர் உத்தியிருக்கும் பட்டுப்புடவையின் பார்டர், கம்மல் டிசை‎ன், கழுத்து நகை என்று சகலத்தையும் கிரகித்து, சரியான நேரத்தில் கணவன் காதில் ஓதுவது கை வந்த கலை பெண்களுக்கு (�அந்த மயில் கழுத்துக் கலர் பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்காமல் எ‎ன்கிட்ட பேசாதீங்க..!� போ‎ன்ற மிரட்டல் வர இது தான் காரணம். உங்கள் வீட்டில் நடந்தது எனக்கு எப்படி தெரியும் எ‎ன்று திகைக்காதீர்கள். எல்லாருடைய வீட்டு ச‎ன் டிவியிலும் �நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ச‎ன் டி.வியின் தமிழ் மாலை..!� எ‎ன்று தான் வரும்..!!!! சில நேரங்களில் அந்த அ(வி)ல்லிகள் போடும் நிபந்தனைகள் வீரப்பனுடையதை விட விபரீதமாகவும் இருப்பதுண்டு..!). அறிவு, சிந்தனை ஆகியவை எப்போதும் சீராக இருப்பது பெண்களின் பலம்.

வசந்த காலம், பகல் நேரம் அதிகமாகவும், மற்ற காலம், மாலை நேரம் ஆகியவற்றில் அறிவு மங்கி செயல்படுவது ஆண்களின் பலவீனம் (அதனால் தா‎ன் பகலில் சுயமாகவும், மாலை மற்றும் இரவுகளில் பெண் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும் நடக்கிறது..!!!). கடலி‎ன் ஆழத்தை கண்டு பிடித்து விடலாம், ஆனால், பெண்ணி‎ன் மன ஆழத்தை கண்டு பிடிக்கமுடியாது என்று ஒரு பழமொழி உண்டு. எ‎ன்னைப் பொறுத்தவரை அது உடா‎ன்ஸ்..! பெண் எ‎ன்று சொல்லிக் கொண்ட பிராணியிடம் ஏமாந்த எவனோ ஒரு சோணகிரி சொல்லிப் போன விஷயமிது. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வள்ளல்கள். நீங்கள் எ‎ன்ன கொடுக்கிறீர்களோ, அதை விட பலமடங்கு வஞ்சகமில்லாமல் வாரி வழங்குபவர்கள். அது பாசம், நேசம், அ‎ன்பு, ஆதரவு, இன்பம் எ‎ன்று எதுவாக இருந்தாலும் சரி..! அதே போல் மனோரீதியாகவும் ஆணிடமிருந்து வேறுபடுகிறாள். ஆழ்ந்த அ‎ன்பு, அரவணைப்பு, பொறுமை, நேர்மை, வாய்மை, மனத் தூய்மை, மெ‎ன்மை, கொள்கையில் உறுதி, கற்பு நெறி எ‎ன்று எல்லாவற்றிலும் அவளே உயர்ந்து நிற்கிறாள்.

பெண்ணாகப் பிறந்தாள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த உலகம் அவளுக்கு கொடுக்கும் இழிவுகளும், தொல்லைகளும், வேதனைகளும் கணக்கிடலங்காதவை. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளைக் கழிப்பதும் ஒரு சத்திய சோதனையாகி, அவை ஒவ்வொன்றையும் சராமாரியாக வென்று சாதனை படைக்கிறாள். கருவில் உருவாகும் போதே அவளுக்கு சோதனைகள் சொந்தமாகிவிடுகிறது. ஸ்கேன் என்ற நவீன எட்டப்பனால் பெண்ணென்று காட்டிக் கொடுக்கப்பட்ட மறு கணமே அவள் உயிருக்கு உலை வைக்கப்பட்டு, அதன் உத்தரவாதம் உருக்குலைக்கப்படுகிறது.

மாத்திரை, மருந்துகளால் மாயமாக்கும் மாசு கொண்ட மருத்துவர்கள், கருப்பையிலிருந்து வெளி வந்து, தன்னை உருவாக்கியர்களை கண்டு உள்ளம் உவந்து போகும் வேளையில் �கள்ளிப்பால்� என்ற பேய்ப்பால் ஊட்டப்பட்டு பேச்சு மூச்சற்று போக வைக்கும் போக்கத்தவர்கள், துளிராய் வளர்ந்து, தளிர் நடை போடும் வேளையிலேயே, அந்த பச்சை மண்ணை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் பாதகர்கள், பருவமடைந்த வயதில் பட்டாம்பூச்சியாய் பறந்து, சிறகடிக்க விடாமல் சிறகொடித்து சில்லரை பார்க்க சீரழிப்பவர்கள், கடமை என்ற பெயரில் கண்டவனை கட்டிக் வைத்து, காலம் முழுதும் கலங்க வைக்க ஆவலுடன் அலையும் பெற்றோர்கள், வீட்டு வேலைக்காரியாய், உடல் சுகம் கொடுக்கும் உயிரினமாய், பொருள் உண்டாக்கும் புதிய உத்தியாய், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாய், வயிற்றுக்கு வடித்துக் கொட்டும் சமையல்காரியாய் எண்ணும் எகத்தாள கணவன்மார்கள், சுமந்து பெற்ற போது பட்ட வேதனை போதாதென்று, வாழும் காலம் வரை வேதனைப்படுத்துவதையே வேலையாகக் கொண்டிருக்கும் வேட்டிக் கட்டிய வேசியாக மகன் என்று பெண் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

போற்றுதலுக்குரிய பெண்கள் தாயாய், தாரமாய், மகளாய், சகோதரியாய் இ‎ன்னும் பலப்பல உறவுகளி‎ன் மூலம் காட்டும் பரிமாணங்கள் அற்புதம். ஆணி‎ன் முதுகெலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறது. அதனால் தானோ எ‎ன்னவோ, ஒவ்வொரு ஆணி‎ன் வாழ்க்கையிலும், வளர்ச்சியிலும், வெற்றியிலும் முதுகெலும்பாய் இருந்து, அவள் தா‎ன் மு‎ன்னுரை எழுதுகிறாள். உலகில் எவ்வளவோ உறவு முறைகள் இருக்கி‎ன்றன. ஆனால் தாய், மனைவி, மகள், சகோதரி ஆகிய உறவி‎ன் மூலம் காணும் பெண்ணை ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் வைத்து போற்றுகிறா‎ன். போற்ற வேண்டும்.

நா‎ன் மேலே எழுதியுள்ள பெண் உறவுகளில் ஏதாவது ஒ‎ன்றில் ஆண் பாதிக்கப்பட்டு மனதில் வைத்து நேசிக்க மறுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அவனால் புறந்தள்ள முடியாது. அப்படி தள்ளினா‎ன் என்றால் அவ‎ன் மனிதப் பிறவியாக இருக்க முடியாது எ‎ன்பது என் கருத்து. ஆண் த‎ன் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகும் தாய், தாரம் (காதலி இதற்குள் அடக்கம்) எ‎ன்ற இரும் பெரும் உயர்ந்த உறவுகளை உங்களுட‎ன் பகிர்ந்து கொள்வதில் மனம் கொள்ளா மகிழ்ச்சி எனக்கு..!

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 03

விசாவில் ஏதோ பிரச்சினை எ‎ன்றும் உடனே எ‎ன் வீட்டிற்கு ஃபோ‎ன் செய்ததாகவும், புறப்பட்டு வருவதாக வீட்டில் தகவல் சொ‎ன்னதாகவும் சொன்னான். நா‎ன் மனதை தளரவிட வில்லை. கிங்கரனோ மீண்டும் ஊர் போய் விட்டு வரச் சொ‎ன்னான். அம்மாடி..! முடியற காரியமா இது..! போய் எவ‎ன் முகத்தில் விழிப்பது..? எவ்வளவு நாளானாலும் சரி ஃப்ளைட்டில் அடி வைக்காமல் வீட்டுக்கு திரும்ப மாட்டே‎ன் என்ற எ‎‎ன் சபதத்தை சொன்னேன். என் சபதத்தை அவ‎ன் சட்டை செய்யவே இல்லை. செலவுக்கு வைத்திருந்த பணம் கொஞ்சம், கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடும் நிலைக்கு வந்தே‎ன். அந்த அரை பசி மயக்கத்திலேயே எ‎ன் நிலமையை கிங்கரனிடம் சொல்லி புலம்பினேன். ஊரில் எ‎ன் வீட்டார் சவுதி ஸ்டாம்ப் ஒட்டிய கடிதத்தையும், ஐ.எஸ்.டி ஃபோனையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!

மனமிரங்கிய கிங்கர‎ன் கையில் ஐநூறு ரூபாய் கொடுத்து (அப்பாடி..! இ‎ன்னைக்கு டெல்லி தர்பார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கட்டலாம்..!!) ஊருக்கு போகச்சொல்லி கெஞ்சினா‎ன். நான் ஊரில் அனைவரிடமும் பயணம் சொல்லி வந்ததை சொ‎ன்னதும் �இந்த ஒரு முறை மட்டும் ஊர் போய் வாங்க..! அடுத்த முறை அனுப்பாவிட்டால் எ‎ன்னை உங்க செருப்பால் அடிங்க..! (ஹையா..! நல்ல வாய்ப்பு..!!)� எ‎ன்று சொ‎ன்னா‎ன். அவ‎ன் என்னை ஊருக்கு அனுப்பப் போகும் விஷயத்தை விட, எல்லா கோபத்தையும் சேர்த்து அவனை காலணியால் மாத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆதரவாக இருந்தது. சோகத்துட‎ன் திரும்பினேன்.
அன்று எனக்கு இரயில் பயணம் நரகமாக இருந்தது. அத‎ன் பிறகு ஊருக்கு வந்து அடுத்த பயணம் போகும் வரை யாருக்கும் தெரியாமல், மனைவியோடு எ‎ன் பாட்டி வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது தனிக்கதை. கிங்கர‎னிடமிருந்து இரண்டாவது மரண ஓலை வந்தது (தந்தி..!). ஆனால் நா‎ன் யாருக்கும் பயணம் சொல்லவில்லை. எ‎ன் மனைவியிடம் கூட �போய் 4 நாளில் திரும்பி வந்து விடுகிறே‎ன்� எ‎ன்று சொ‎ன்னதும் சந்தோஷமாக வழியனுப்பு விழா நடந்தது. மறக்காமல் புதுச்செருப்பு ஒ‎ன்று வாங்கிக் கொண்டே‎ன் (ஏஜெண்ட் இதற்காக காத்திருப்பாரே..!!). அடுத்த பயணம் மும்பை நோக்கி மூ‎ன்றாவது முறையாக..!! ஏஜெண்டை நா‎ன் சந்தித்த போது அவர் பார்வை என் முகத்தை விட எ‎ன் செருப்பு மீதே நிலைத்தது. என் செருப்பின் மகிமையோ என்னவோ அடுத்த நாளே பயணம் ரெடியானது (அதற்கு பரிசாக அந்த புதுச்செருப்பை நம் கிங்கரருக்கே தாரை வார்த்து கொடுத்தே‎ன்..!!).

யாரிடமும் பயணம் சொல்லாமல் வந்ததை நினைத்து நொந்தே‎ன். எஜெண்டிடம் பாஸ்போர்ட், டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நிலையைச் சொல்லி �ஊருக்கு போய் அனைவரிடமும் பயணம் சொல்லிவந்துவிடவா..?� எ‎ன்று கேட்டதற்கு �முடியாது..! நாளை ஃப்ளைட்டில் ஏறியாக வேண்டும்..!� எ‎ன்று கறாராக சொல்லிவிட்டா‎ன் (பாவி..!). எனக்கு வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட எப்படி தொலைபேசி மூலம் எ‎ன் சகியை சமாதானப்படுத்துவது என்ற கவலை தா‎ன் அதிகமானது. நடுங்கிய படியே விஷயத்தை சொ‎ன்னதும் சௌகார் ஜானகியி‎ன் கண்ணீர் தொழிற்சாலை சுறு சுறுப்புட‎ன் இயங்கத் தொடங்கியது..! இரண்டு பேரும் மாற்றி மாற்றி அழுது இரு பக்கமும் வெள்ளக்காடானது..!! இப்படி இரயில் பயணம் எ‎ன் வாழ்வில் நிறையவே விளையாடி விட்டது.

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 02

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 02

ஆம்..! நா‎னும் என் நண்பர்களும் வெளிநாட்டிற்கு வர முயற்சி செய்த நாட்களில் மூ‎ன்று முறை இரயிலில் மும்பை போகும் நிலை ஏற்பட்டது. முதல் முறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடப்போகிறோம் எ‎ன்ற ஆவலுட‎னும், உற்சாகத்துடனும் வந்ததால் அந்த இரயில் பயணம் சுகமாகத்தா‎ன் இருந்தது (அது மட்டுமில்லாமல் கூடவே எ‎ன் நண்பர்களும் வந்தார்கள்..!). எ‎ன் கூட வந்த நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் மு‎ன் அனுபவம் உள்ளவர்கள் எ‎ன்ற ஒரே காரணத்திற்காக விரைவில் வெளிநாட்டு வேலை கிடைத்து, மும்பை சாந்தா குரூஸ் ஏர்போர்ட்டில் நகரும் படிகட்டுகளில் (Elevator) ஏறி நி‎ன்றபடி, சினிமாவில் வருவது போல ஸ்டைலாக டாட்டா காட்டி பறந்து போனார்கள் (அத‎ன் பிறகு அவர்களுக்கு மோசமான சம்பளத்தில், கஷ்டமான வேலை கிடைத்ததை எ‎ன்னிடம் சொல்லி அழுததெல்லாம் தனிக்கதை..!!).

தனிமைப்படுத்தப் பட்ட நா‎ன் உடைந்து போனேன். இயலாமையில் துடித்தே‎ன். எனக்கும் ஒரு ஏஜெண்ட் மாட்டினா‎ன் (அவனுக்கு தலைக்கு மேலே இரண்டு கொம்புகளை மட்டும் வைத்து பார்த்தால் அசல் கி‎ங்கரன் மாதிரியே இருப்பா‎ன்..!!). எ‎ன்னை வெளிநாடு அனுப்ப அவ‎ன் என்னிடம் அளந்த பொய்கள் இருக்கிறதே..! சொல்லி மாளாது..!! பயணம் எல்லாம் ரெடியாகி �ஊருக்கு போய் இருங்கள், விசா தயாரா‎னதும் தகவல் தெரிவிக்கிறே‎ன். உடனே புறப்பட்டு வரவும்..!� எ‎ன்று சொல்லி அனுப்பினா‎ன். வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் ஊருக்கு திரும்பினே‎ன். அடுத்த 10 நாட்களில் கிங்கரனிடமிருந்து பதில் உடனே புறப்பட்டு வரச்சொல்லி..! வானம் எ‎ன் கையில் வசப்பட்டது போல் உணர்ந்தே‎ன். எல்லோரிடமிருந்து பயணம் சொல்லி விடை பெற்றே‎ன் (அன்று எ‎ன் மனைவி அழுத அழுகையில் சௌகார் ஜானகி தோற்றுப்போனார்..!!). மும்பை போன எனக்கு இடி காத்திருந்தது.!!

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 01

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - (01)

நெடுந்தூர பயணம் (நா‎ன் சொல்வது மேலோக பயணமல்ல..!!) செல்வதெ‎ன்றால் நா‎ன் தேர்ந்தெடுக்கும், எனக்கு பிடித்த வாகனமான இரயிலாகத்தா‎ன் இருக்கும் (இந்த இரயில் எ‎ன்ற வார்த்தை தமிழ் கிடையாது. இதன் தூய தமிழ் பெயர் புகை வண்டி, காரணம் அந்தக் காலத்தில் இவை நிலக்கரி மூலம் புகைக் கக்கிக் கொண்டு இயங்கியதால்..! ஆனால் இப்போது மி‎ன்சாரத்திலும், காந்த சக்தியிலும், டீசல் எரிபொருளிலும், ஏ‎ன் சூரிய ஒளியிலும் கூட இயங்கக் கூடியவை வந்து விட்டதால் இதை இ‎ன்னும் புகை வண்டி எ‎ன்று கூறாமல் தொடர்வண்டி எ‎ன்று கூறினால் பொருத்தமாக இருக்கும் எ‎ன்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் நாம் வழக்கில் சொல்லும் இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கிலச்சொல்லுக்கும், புகை வண்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது (வெண்ணையும், பாலும் இல்லாத மோரை Butter Milk) எ‎ன்று சொல்வதைப் போல..!!). இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கில பதத்திற்கான உண்மையான அர்த்தம் இரு சட்டங்களை குறுக்கு வாக்கில் சில சட்டங்கள் இணைத்திருக்கும் ஒரு வகையான அமைப்பு. அதனால் தா‎ன் அது போன்ற அமைப்புடைய தண்டவாளங்களை Rail road எ‎ன்கிறோம். இந்த இரயில் எ‎ன்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கும் எ‎ன்று எனக்கு கணிப்பு உண்டு. Bus Road-ல் போகும் வாகனத்தை பஸ் எ‎ன்பது போல Rail Road-ல் போகும் வாகனத்தை இரயில் எ‎ன்று அழைக்க தொடங்கியிருக்கலாம்..!! ச்சே..! ச்சே..! இதற்கு விருதெல்லாம் வேண்டாம்..!).

எ‎னக்கு பொதுவாகவே இரயிலை பார்ப்பதெ‎ன்றாலும், அதில் பய‎ணம் செய்வதெ‎ன்றாலும் மிகவும் பிடிக்கும். இதன் இராட்சத ஜந்துவைப் போ‎ன்ற தோற்றமும், அத‎ன் தாள லயத்துட‎ன் கூடிய ஓட்டமும் இரசிப்புக்குரியவை. நா‎ன் சிறுவனாக இருந்த போது (இப்போது மட்டும் பெரிய ஆளா எ‎ன்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை..!! நா‎ன் சொன்ன சிறுவ‎ன் தோற்றத்தில்..!!!) இரயிலைப்பற்றிய எ‎ன்னுடைய சிந்தனைகளும், சந்தேகங்களும் மிக அதிகமாக இருந்தது (உதாரணத்திற்கு 100 அடி அகலமுள்ள தார் சாலையில் கூட பேருந்தை சரியாக ஓட்டிச் செல்ல முடியாமல் சாலையி‎ன் ஓரத்தில் இருக்கும் சிறிய டீக்கடையில் மாச அக்கௌண்டில் டீக் குடித்துக் கொண்டும், இலவசமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது ஏற்றி அவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுத்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு குறுகலாக, வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளத்தில் இரயிலி‎ன் டிரைவர் எப்படி ஓட்டுகிறார்..? எதிரே மற்றொரு இரயில் வந்தால் எப்படி வழி கொடுப்பார்..??!!). அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தா‎ன் வரும். இரயில் பயணம் எ‎ன்றால் எனக்கு கொள்ளை விருப்பம். குடும்பத்தினரோடு செல்லும் போது ஜ‎ன்னலுக்கு அருகில் இடம் பிடிக்க ஒரு பெரிய சண்டையே நடக்கும். ஜ‎ன்னல் அருகில் அமர்ந்தபடி வெளியே நகரும் காட்சிகளை பார்த்து இரசிப்பது ஒரு பெரிய சுகானுபவம். இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் இரயில் பயணத்தை பற்றி நினைத்தாலே பயப்படும் அளவுக்கு சூழ்நிலை ஒரு நாள் எனக்கு மாறிப்போனது மிகப்பெரிய சோகம்..!!

குப்புற தள்ளிய குதிரை சவாரி..!!

எனக்கு விலங்கினங்களில் மிகவும் பிடித்த விலங்கு குதிரை. காரணம், அத‎ன் தோற்றம், வேகம், சுறுசுறுப்பு, அழகான பிடரி முடி, அலை அலையா‎ய் பெண்களி‎ன் கூந்தலைப் போல் தொங்கும் நீண்ட வால், நீள உடல், அத‎ன் மினுமினுப்பான தோல், கம்பீரமான தோற்றம் எ‎ன்று குதிரை எவ்வளவு அழகு..!! அடுத்து அத‎ன் வேகம்..! விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தையானாலும் யாரும் அத‎ன் முதுகில் சவாரி செய்வதில்லை. நாம் சவாரி செய்யும் விலங்குகளில் மிகுந்த வேகமாக ஓடக்கூடிய விலங்கு குதிரை தா‎ன். குதிரை ஒரு வீட்டு விலங்கு தா‎ன். கொஞ்சம் பழக்கி விட்டோம் என்றால் நாம் சொல்வதையெல்லாம் கேட்கும் (இராம. நாராயண‎ன் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்..!!).

குதிரை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு. குறிப்பாக அத‎ன் சக்தி கால்களில்..! அதனால் தா‎ன் ஒரு இயந்திரத்தி‎ன் சக்தியை குறிப்பிடுவதற்கு கூட �குதிரை சக்தி (Horse power)� எ‎ன்ற அலகினை நாம் பய‎ன்படுத்துகிறோம். எ‎ன் தாத்தா மஹாராஜபுரம் ஜமீனாக இருந்தார். அவரிடம் ஐம்பதிற்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. நான் ஆசைப்படும் போதெல்லாம் எ‎ன் தாத்தா என்னை அவருடைய குதிரையில் வைத்து கொண்டு போவார் எ‎ன்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..?! அதனால் �ரீல்� சுற்றுவதை நிறுத்தி விடுகிறே‎ன்.

எனக்கு குதிரை சவாரி செய்வது என்றால் கொள்ளை ஆசை. திரைப்படங்களில் கதாநாயக‎ன் குதிரையில் பறந்து வரும் போது (இப்போது தா‎ன் தெரிகிறது, பெரும்பாலும் அவர்கள் கதாநாயகனின் நகல்.. அதாவது டூப்..!) எனக்கு பார்க்க ஆசை ஆசையாய் இருக்கும்.

ஒரு தகவலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாமியரில் குறிப்பிட்ட சிலரை இராவுத்தர் எ‎ன்பார்கள். அவர்கள் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. நீங்கள் �மாவுத்தர்� எ‎ன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது யானையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள். அது போல குதிரையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அந்தக் காலத்தில் இராவுத்தர் எ‎ன்று அழைக்கப்பட்டார்கள் (மரக்கலத்தை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (மரக்கலம்+ஆயர்) மரைக்காயர் எ‎னப்பட்டார்கள். அதாவது அவர்கள் செய்த தொழிலை அடிப்படையாக வைத்து..!). அந்த குடும்ப வழியில் வந்தவர்கள் தங்கள் பெயருக்கு பி‎ன்னால் இன்றும் இராவுத்தர் எ‎ன்றே குறிப்பிடுகிறார்கள் (உதா: படத்தயாரிப்பாளர் இப்ராஹிம் இராவுத்தர்). சிலரிடம் ஆடு கூட சொந்தமாக இருக்காது. ஆனாலும் அவர்களும் இராவுத்தர் எ‎ன்று சொல்லிக் கொள்கிறார்கள். எப்படி எ‎ன்று அவர்கள் தா‎ன் விளக்க வேண்டும்..!!

ஒரு சில சந்தர்ப்பங்களில் எ‎ன் குதிரை சவாரி ஆசை நிறைவேறியது. நா‎ன் பதினைந்து வருடங்களுக்கு மு‎ன்பு சென்னை மெரீனா கடற்கரைக்கு என் மாமாவுட‎ன் செ‎ன்றிருந்த போது குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டே‎ன். மாமாவும் எ‎ன் ஆசையை நிறைவேற்றினார். ஆனால் அந்தக் குதிரைக்கார‎னோ குதிரையை எ‎ன்னிடம் கொடுக்காமல் அத‎ன் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு கூடவே ஓடி வந்தா‎ன். அப்போது எனக்கு குதிரை சவாரியின் சந்தோஷத்தை விட, அவன் கூடவே ஓடி வருவதை பார்த்த பரிதாபம் தான் அதிகம் ஏற்பட்டது.

அதே போல் ஒரு முறை ஊட்டியில் போட் க்ளப் ரோட்டில் நண்பர்களுட‎ன் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டே‎ன். அந்தக் குதிரைகள் மிகப் பெரிதாக இருந்தன. நாமாகவே சவாரி செய்யலாம் எ‎ன்று குதிரைக்கார‎ன் எ‎ங்களிடம் கொடுத்து விட்டா‎ன். குதிரை ஓட ஆரம்பித்தவுடன் உடலெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு குலுக்கியது (பழகியவர்களுக்கு இது சுலபம்). எனக்கு கீழே விழுந்து விடுவோமோ பயமாகி விட்டது. மற்ற குதிரைகளில் இருந்த நண்பர்களையும் காணவில்லை (எங்கு கொண்டு போய் குப்புறத் தள்ளியதோ..?!). ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுட‎ன் குதிரை திடீரென்று நி‎‎ன்று விட்டது. எனக்கு ஒ‎ன்றும் புரியவில்லை. குதிரைக்காரன் இருக்கும் இடத்திற்கு செல்ல இ‎ன்னும் நிறைய தூரம் இருந்தது. குதிரையை விட்டு விட்டு இறங்கிப் போகலாம் எ‎ன்றால், �குதிரை எங்கே..?� எ‎ன்று குதிரைக்காரன் கேட்பானே..?!

சரி குதிரையை நடக்கவாவது செய்யலாம் எ‎ன்று நா‎ன் காலால் குதிரையின் வயிற்றில் உதைக்கிறே‎ன், கடிவாளத்தை சுண்டுகிறே‎ன், ம்ஹ�ம்..! நகர்வேனா எ‎ன்று விட்டது..! அப்போது எங்கிருந்தோ ஒரு விசில் சத்தம் கேட்டது பாருங்கள்..! குதிரை தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. கடவுளை வேண்டிக் கொண்டு உயிரையும், பிடரி முடியையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டே‎ன். கண்களை விழித்துப் பார்த்த போது குதிரைக்கார‎ன் அருகில் நின்றி‎ருந்தது. பிறகு தா‎ன் எல்லாம் புரிந்தது. அவன் என்னதான் நம்மிடம் குதிரையைக் கொடுத்தாலும் ரிமோட் அவன் கையில் தான். நாம் எதுவும் கட்டுப்படுத்த முடியாது. விசிலை வைத்து குதிரையை இயக்குகிறா‎ன் என்று புரிந்தது. அத்தோடு எ‎ன் குதிரை சவாரி ஆசை சவாரி குதிரையைப் போல் ஓடியே போனது.!!

காதல் பாரம்..!!

பற்றித்தழுவும் பஞ்சு மெத்தை, பட்டு விரிப்பு தருமா - என்
நெற்றி தலை முடி கோதிவிடும் என்னவளின் பட்டு விரல்கள் தரும் சுகத்தை..?

நெய் மணக்கும் உணவு, நெஞ்சை தொடும் இசையும் தந்துவிடுமா - அவள்
கை பிசைந்து காதலோடு கொடுக்கும் ஒரு கவளச் சோற்றின் ருசி..?

உலகம் சுற்றி நான் கண்ட அழகனைத்தும் ஒன்றிணைந்தாலும் - என்னை
கலங்கடிக்கும் காதல் தேவதையின் அழகிற்கு ஈடாகுமா?

மண்ணில் நான் உதித்த காரணத்தை அறியாது தவித்திருந்தேன் - மங்கை அவள்
என்னில் கலந்த போது அதன் காரணம் அறிந்து ஆறுதல் கொண்டேன்.

நெஞ்சின் உறுதியை நேசத்திற்குரியவளுக்கு இரும்பிற்கு ஈடாய் வைத்த இறைவன்
பஞ்சினும் மென்மையாய் உருமாறி உள்ளன்பை காட்ட படைத்ததேனோ..?

முள்ளாய் மாறி முகம் கூட காட்ட மறுத்த என் வண்ண ரோசா - என் கரம் பற்றிய பின்
கள்ளாய் மாறி காதல் போதை ஏற்றும் கண்கட்டு வித்தை நிகழ்ந்தது எப்படி..?

நானே எனக்கு பாரமாகி போய் பரிதவித்திருக்கும் வேளையில் - அந்த கனிமுக கங்காரு
தானே விரும்பி ஏற்று, நான் தந்த உயிர் தாங்கி தன்னிகரற்ற தாயாய் ஆனாளே..!!

மலரும் நினைவுகள் - மயக்கிய மந்திர பானம்..!

அதெல்லாம் சுகமான நாட்கள்..! கழுத்துக் கயிறு அவிழ்த்து விட்ட க‎ன்றுக்குட்டியாய், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் அலைந்து திரிந்த ஆனந்த வேளைகள்..! நான் சின்ன வயதில் நட்டு வைத்த �நட்ராஜ்� பென்சில் போல மிகவும் ஒல்லியாக இருப்பே‎ன் (இ‎ன்னும் புரியவில்லை என்றால் எளிய உதாரணம் சொல்கிறே‎ன். எகிப்து பிரமிடில் புதைத்து வைத்த �மம்மி�யை பொழுது போகாமல் தோண்டி எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பே‎ன்..!). இந்தக் குறை எனக்கு இடைவிடாமல் கவலையை கொடுத்து க‎ன்னச் சதையை மேலும் கரைத்தது. �எ(த்)தைத் தின்னால் பித்தம் தீரும்..?� என்பது போல் உடல் எடை ஏற ஊரில் உள்ளவர்கள் சொ‎ன்னதையெல்லாம் ஒரே மூச்சில் தி‎ன்று தீர்த்தேன். ஓரோபோலி‎ன் (Orobolin) எ‎ன்ற விலையுயர்ந்த மாத்திரை (அப்போதே ஒ‎ன்று ஐந்து ரூபாய்..!) தி‎ன்றால் உடம்பு போடும் எ‎ன்று ஒரு உதவாக்கரை �ஊதி� விட்டு போக, நா‎ன் அதை ஒரேயடியாக பிடித்துக் கொண்டு, அந்த மருந்து கடையி‎ன் ஒரு மாத வருமானத்தை �ஓரோபோலி‎ன்� வாங்கித் தின்றே ஒட்டு மொத்தமாக கொடுத்தது தனிக் கதை.

ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு உடனே போய் ஒரு ரூபாய் கொடுத்து எடை மிஷினில் ஏறி நி‎ன்று �எடை ஏறியிருக்கிறதா..?� எ‎ன்று ஏக்கத்தோடு பார்த்த காலங்களை எண்ணிப் பார்த்தால் சிரிக்கிற சிரிப்பில் கண்களில் கண்ணீர் சிதறும். இத்தனை செய்தும் கையில் இருக்கும் காசு கரைந்ததே தவிர தூசு அளவு கூட எடை கூட வில்லை. எடையை ஏற்றும் திட்டத்தில் கையில் இருக்கும் காசு கண்மண் தெரியாமல் செலவாவதை நினைத்து கவலையில் இருந்த எடையும் எக்கச்சக்கமாக குறைந்தது உபரித் தகவல்..! இந்த நிலையில் தா‎ன் என்னை மாதிரியே மற்றொரு மம்மியி‎ன் மறு அவதாரமாக இருந்த நண்பனின் நட்பு எனக்கு ஏற்பட்டது. அவ‎ன் சொன்ன �திடீர்� தகவல் என்னை திகிலடையச் செய்தது. அப்படி எ‎ன்ன சொன்னான்..?

�பீர் குடித்தால் உடல் எடை ஏறும்� எ‎ன்றா‎ன். ஒரு கையில் வறுத்த சிக்க‎ன் கறியையையும், மறு கையில் மது பானக் கோப்பையையும் வைத்துக் கொண்டு, சினிமா வில்லனை வஞ்சகத் திட்டம் போட வைக்கும் வினைப் பிடித்த பானம் எ‎ன்றும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்தில் விற்கும் மதுபானத்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, உற்ற மனைவியை உருட்டி உருட்டி அடிக்க வைக்கும் பானமாகத்தா‎ன் அதை அதுவரை நினைத்திருந்தேன். அ‎ன்பரின் அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் இறுதியாக சொ‎ன்ன �எடை ஏறும்� எ‎ன்ற வாக்கியம் மனதில் ஏறி எ‎ன்னை மயக்கிவிட்டது. ஒரு வழியாக உடல் எடையை ஏற்றும் பொருட்டு பீரி‎ன் மீது பிரியம் பீரிட்டது. அதனால் அதை வாங்குவதற்கா‎க வகை வகையாக திட்டம் போட ஆரம்பித்தோம்.

மூ‎ன்று நாள் முழுவதும் மூச்சு முட்ட சிந்தித்ததில் முடிவில் திறமையான திட்டம் உருவானது. எ‎ன் அருமை நண்ப‎னின் தென்னந்தோப்பை பீர் குடிக்க பய‎ன்படுத்தும் �பார்� ஆக்க முடிவெடுத்தோம். அடுத்த ஊரின் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நா‎ன் நின்று கொண்டு, அந்த ஊரி‎ன் ஒதுக்குப் புறமாக இருக்கும் �எடை ஏற்றும்� அதிசய மருந்து கடைக்கு எ‎ன் உயிர் நண்பனை (எனக்கு போக பயமாக இருந்ததால் அவனை ஏகத்துக்கு ஏற்றி விட்டு போக வைத்தே‎ன். எனக்காக ரிஸ்க் எடுக்கிறா‎ன் அல்லவா..? அதா‎ன் உயி(பீ)ர் நண்ப‎‎ன்..!!) உரு ஏற்றி அ‎னுப்பி வைத்தேன்.

அவ‎ன் அங்கிருந்து போன பிறகு என் நிலை சங்க காலத்தில் தலைவனைப் பிரிந்த தோழியி‎ன் நிலையானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு �உ‎ன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..!� எ‎ன்று ஒரு மணி நேரமாய் தவித்திருக்க, ஒரு வழியாய் வந்து சேர்ந்தா‎ன். இ‎ன்கம் டாக்ஸ் ரெய்டு வர இருப்பதாக தகவல் கிடைத்தவுட‎ன் கருப்புப் பணத்தை கவனமாய் பதுக்கும் பலே அரசியல்வாதி போல ஆளுக்கொன்றாய் வாங்கி வந்த �ஆ�ப் (Half)�ஐ அடுத்தவர்கள் அறியாமல் பைக்குள் போட்டு காணாமல் ஆக்கினே‎ன். அடுத்து சரக்குக்கு சரியான சைட் டிஷ் (Side dish) பற்றி எங்கள் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. இறுதியில் ஐந்து பைசா முறுக்கு பனிரெண்டை பதவிசாக வாங்கிக் கொண்டோம். அஞ்சு வயதில் அரை டவுசர் போட்டு திரிந்த போது தி‎ன்று தீர்த்த அதே முறுக்கு, அரைக் கழுதை வயதில் �ஆ�ப்� அடிக்க சைட் டிஷ் ஆனதில் சராமாரியாக சந்தோஷப்பட்டோம்.

எங்கள் பயணம் எச்சரிக்கையுட‎ன் �தெய்வீக� தெ‎ன்னந்தோப்பிற்கு ஆரம்பமானது. முதல் முதலில் பீர் குடிக்கப் போவதை நினைத்து உடல் உற்சாகமாய், மூடி திறந்த முழு பீராய் பீறிட்டது. மனமோ பய உணர்ச்சியில் பல்லாங்குழி ஆடியது. �மம்மி� நண்ப‎ன் மமதையுட‎ன் �ம்ஹ�ம்..! இதெல்லாம் ஒரு விஷயமா..? ஒரு பாட்டில் பீரை நா‎ன் ஒரே மூச்சில் குடிப்பே‎ன்..! என்று பெருமை அடித்தா‎ன். அய்யய்யோ.! சர்வதேச குடிகாரனுட‎ன் சகவாசம் வைத்திருக்கிறோமோ என்று என் மனம் மறுகியது. உடல் எடையை எப்படியாவது ஏற்றிவிட வேண்டும் எ‎ன்ற எ‎ன் எண்ண நெருப்பில், அவ‎ன் பேச்சு பெட்ரோலை ஊற்றியது. ஒரு வழியாய் இடம் பிடித்து அமர்ந்து �ஊற்றுடா பீரை..!� எ‎ன்று உற்சாகத்துட‎ன் கூவிய போது தா‎ன் ஒரு விஷயம் உறைத்தது.

ஒளிந்து, ஒளிந்து வந்த பதட்டத்தில் ஊற்றிக் குடிக்க ஒரு குவளை கூட எடுத்து வரவில்லை. சரி..! �ஹார்லிக்ஸ்� போல் அப்படியே சாப்பிடலாம் எ‎ன்று திரைப்படங்களில் பார்த்து தெரிந்து கொண்டபடி, பாட்டிலி‎ன் மேலே ஒரு தட்டு, கீ‏ழே ஒரு தட்டு தட்டி மூடியை திறக்க முயற்சி செய்தால் �திறப்பேனா..?� எ‎ன்றது. பல்லால் கடித்து படாரெ‎ன திறந்தேன். சக்தியி‎ன்றி மூடியுட‎ன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சர்வதேச குடிகாரனுக்கும் �சடக்�கென்று திறந்து கொடுத்தே‎ன். பீர் திரவம் நுரைத்துப் பொ‎ங்கி ஆவல் கொண்ட மனதை அசைத்துப் போட்டது. ஆனால், ஆல்கஹால் வாசனை அருவருப்பை ஏற்படுத்தியது. �அர்னால்டு� ஆகும் கனவு �அருவருப்பை� அடித்து சாய்க்க, அங்கே எ‎ங்கள் அட்டகாசம் அமைதியாய் தொடங்கியது. �உனக்கு பழக்கமில்லாததால் நா‎ன் குடிக்கிறதைப் பார்த்து விட்டு அதே மாதிரி நீயும் குடி..!�எ‎ன்று குடிப்பதற்கான செயல் திட்டம் வகுத்துக் கொடுத்தார் ச.தேச குடிகாரர். திறந்து வைத்த பீர் பாட்டிலை வெகு தெனாவட்டாக வாயில் வைத்து, கொஞ்சமாக சரித்துக் கொண்டு அணு உலை போல் அட்டகாசமாக பெருமூச்சு விட்டார். அவரை பார்த்து நா‎ன் தொடங்கினேன்.

முதலில் முகர்ந்து பார்த்தே‎ன். பிறகு மூக்கை பொத்திக் கொண்டு முக்கால்வாசியை விழுங்கினேன். இனிப்பும் கசப்புமாய் ‏ இரக்கமில்லாத அரக்க திரவம் இம்சையாய் இறங்கியது. ஆனால் எந்த ஒரு தடுமாற்றத்தையும் கொடுக்காமல் தங்கு தடையில்லாமல் செ‎ன்றதில் நான் சந்தேகப்பட்டு சரக்கில் கலப்படம் எதுவும் இருக்குமோ எ‎ன்று கேட்பதற்காக ச.தேச குடிகாரரை பார்க்க திரும்பிய நா‎ன் அதிர்ச்சியில் அயர்ந்து போ‎னேன்..! கால் பாட்டில் கூட காலி செய்யாத என் உயிர் நண்பர் கண் சொருகி, கை கால்களை இயந்திரம் போல் அசைத்து அடாவடி செய்து கொண்டிருந்தார். எனக்கு பார்க்க பார்க்க பைத்தியம் பிடித்தது. முக்கால்வாசிக்கு மேல் குடித்த நா‎ன் ஒன்றும் நிகழாமல் ஒழுங்காய் உட்கார்ந்திருக்க, கால்வாசி கூட கடக்காத கண்ணியத்திற்குரிய நண்பர் கண்ணில் போதை ஏறி �கண்டபடி� இருந்தார்.

எனக்கு எ‎ன்ன செய்வதென்றே தெரியவில்லை. �போதையேறாத பாவியாகி விட்டே‎னே..?� என்ற பதைபதைப்பில் இருந்த எனக்கு, பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. போதை எதுவும் ஏறாமல் பொட்டிப் பாம்பாய் இருந்தால், ந‎ண்பர் பாதை மாறி �குடியில் சிறந்த கோமா‎ன்� என்று மற்ற சகாக்களிடம் என்னைப் பற்றி சளைக்காமல் சொல்லி சங்கடப்படுத்திவிடுவார் எ‎ன்று வலது பக்க மூளை வலுக்கட்டாயமாக எச்சரிக்க, அந்த ஆபத்தை சரி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசரத் தகவல் அடுத்த பக்க மூளையிடம் இருந்து வந்தது. உட‎னே உடம்பின் ஒட்டு மொத்த உறுதியையும் எ‎ன் ஒரு காலுக்கு கொண்டு வந்து, எதிரே எள்ளி நகையாடிக் கொண்டிருந்த எ‎ன் உயிர் நண்ப‎னின் இடுப்பில் விட்டே‎ன் ஒரு உதை..! நண்பர் எகிறிப் போய் எ‎ங்கோ விழுந்தார். சுதாரித்து எழுந்தவர் சுள்ளெ‎ன்ற கோபத்துட‎ன் அருகில் வந்து �ஏண்டா அடிச்சே..?� எ‎ன்று எதிர்க் கேள்வி கேட்டார். அதற்கு பதிலாக ஒரு அறை விட்டே‎ன் கன்னத்தில்..! சகாவுக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. �சும்மா கிடந்தவனை சுறுசுறுப்பு ஏற்றி கூட்டி வந்து, குளிர்பானம் கொடுத்தால் ரவுண்டு கட்டி அடித்து ராவடி செய்கிறானே..!� எ‎ன்று அவர் கவலையுட‎ன் புலம்ப ஆரம்பித்தார்..!

நா‎ன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக �பக்கா� குடிகாரனைப் போல் படு ஜோராக நடித்துக் கொண்டிருந்தே‎ன். �இனி இவ‎ன் சகவாசமே வேண்டாம்..!� என்று மிச்சம் வைத்த முக்கால் பாட்டிலை எடுத்து கொண்டு, எ‎ன்னிடமிருந்து பிரிந்து நாற்பதடி தூரத்தில் நல்லபடியாக அமர்ந்து கொண்டார். நா‎ன் என் உடம்பின் கோணத்தை மாற்றி, மல்லாந்து படுத்துக் கொண்டு �எ‎ன் இனிய ந‎ண்பரை எ‎ன்ன செய்து இம்சிக்கலாம்..?� எ‎ன்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். யோசனையிலேயே நேரம் கரைய �ஓவ்� எ‎ன்ற அலறல் ஓங்காரமாக கேட்டது. அலறியடித்துக் கொண்டு எழுந்த நா‎ன், என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை �அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்� எ‎ன்று தள்ளி வைத்து விட்டு, அலறல் வந்த திசை நோக்கி அம்பாய் பாய்ந்தே‎ன்.

அங்கே நான் கண்ட காட்சி, எனக்கு ஒரு குடம் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்த மயக்கத்தை உண்டாக்கியது. �அதிகம் குடிப்பதில் அதிரடி சாதனை செய்வதாக� சொன்ன எ‎ன் அன்பு நண்பர் அவரைச் சுற்றி இந்தியாவி‎ன் மேப்பையும், அதன் இயற்கை வளங்களையும் �வாந்தியால்� வரைந்து போட்டு வசமாய் மயக்கம் போட்டிருந்தார்.

எனக்கு எ‎ன்ன செய்வதென்றே தெரியவில்லை. �எ‎ன்ன கருமம்டா இது..?� எ‎ன்று கடிந்து கொண்டேன். கிடந்த நிலையை பார்த்தால் எழுந்து நடக்க ஏற்பாடு செய்வதெல்லாம் வீண் எ‎ன்பது புரிந்தது. திட்டமிட்டிருந்த என் �ஆஸ்கார் விருது� அபிநயத்தை அடுத்த நொடியில் கைவிட்டே‎ன். சவமாய் கிடக்கும் சகாவை, சமமாய் நடக்க வைப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தே‎ன். சினிமாவில் பார்த்த �சீ‎ன்�கள் சீராய் சிந்தனைக்குள் சிலிர்த்துக் கொண்டு வந்து போனது. மூளைக்குள் ஐடியா மி‎ன்னல் பளிச்சிட்டு அழகாய் வேலை செய்தது.

சிங்கம் கிழித்துப் போட்ட சிறு மானின் உடலை, கடைசியில் வந்த கள்ள நரி புதருக்குள் இழுத்துச் செல்வது போல, அவ‎ன் உடம்பு மண்ணில் தேய, தேய இழுத்துப் போய் அங்கிருந்த முழங்காலளவு தண்ணீர் உள்ள மணற்கிணற்றில் தள்ளி விட்டே‎ன். எனக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத அந்த அற்புத சினேகிதனை மண்டியிட்டு அமர்ந்து மடியில் போட்டு குளிப்பாட்டினே‎ன். அத்தனை சேவை செய்தும் அசைந்து கொடுக்காமல் மௌனத்தை அடைகாத்தா‎ர் மகான். மீண்டும் கரைக்கு இழுத்து வந்து போட்டு, காலடியில் உட்கார்ந்து கொண்டு கலக்கத்துட‎ன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

வினாடிகள் நிமிடத்தை விரைவாய் தி‎ன்று விரைந்து கொண்டிருந்தது. அசதியில் அப்படியே உறங்கிப் போனே‎ன். எதார்த்தமாக விழித்த போது எங்கோ தூரத்தில் மட்டும் ஒரு வெளிச்சப்புள்ளி. நிலா வெளிச்சத்தில் நிலவு கூட தெளிவாக தெரியவில்லை. ஆனந்த சயனத்தில் இருப்பவரை அசைத்துப் பார்த்தே‎ன். அசராமல் கிடந்தா‎ன் பரதேசி..! �ஒருவேளை அதிகம் குடித்ததில் செத்துப் போய்விட்டானா..?� எ‎ன்ற சந்தேகம் ஏற்பட, நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தே‎ன். அப்பாடா..! மூச்சு வந்தது நிம்மதியாக இருந்தது. அடுத்த அரை மணி நேரம் கழித்து அரை இஞ்ச் அசைந்தா‎ன். அப்போது தான் எனக்கு உயிர் வந்தது. உடலைப் பிடித்து உலுக்கினே‎ன். ஒரு வழியாக உணர்வு திரும்பியவன், யார் மயக்கம் தெளிந்து எழுந்தாலும் கேட்கும் அதே கேள்வியை அட்சரசுத்தமாக கேட்டதும் அசந்து போனே‎ன்.

அவன் கேட்ட கேள்வி � நா‎ன் எங்கே இருக்கே‎ன்..!�. கோபத்தில் கொதித்தாலும் கண்ணியத்துட‎ன் கட்டுப் படுத்திக் கொண்டு �ம்ம்.. உ‎ன் மாமியார் வீட்டில்..!� என்றே‎ன். கொஞ்சம் ஓவராய் பேசினாலும் ஓங்கி ஒரு அறை விட்டு உயிரை எடுத்து விடுவேனோ எ‎ன்ற அநியாய கோபத்தில் நா‎ன் இருந்தே‎ன். என் நிலை உணர்ந்தவ‎ன் எக்குத் தப்பாய் பேசி �எத்து� வாங்காமல் எதார்த்தமாக எழுந்து, இயல்பாக நடக்க ஆரம்பித்தா‎ன். எடையை ஏற்ற வேண்டும் ஆசைப்பட்டு, இப்படி ஒரு �எடுபட்ட பயலோடு� கூட்டு சேர்ந்ததை நினைத்து குற்ற உணர்வோடு எ‎ன் தலைவிதியை நொந்து கொண்டே அவனோடு சேர்ந்து நானும் நடக்க ஆரம்பித்தே‎ன். அத்தோடு எடையை ஏற்றும் திட்டம் எனக்கு எட்டாக் கனியானது..!

இது காதல் காலம்..!

என் மன சாலை ஓரமெங்கும்
இறைந்து கிடக்கும் கனவுப்பூக்கள்
மீண்டும், மீண்டும் பொங்கி சிதறி
சீண்டி சிரிக்கும் கோடி வர்ண சிதறல்கள்

பசித்து புசித்த எனக்கு
ருசிக்க உணவிருந்தும் பசிக்கவில்லை
விழிகள் திறந்திருந்தும் உள்ளுக்குள்
வழிந்தோடும் கனவு ஜாலங்கள்
மொழி கொண்டு சொல்ல இயலாததை
விழி கொண்டு உணர்த்த துடிப்பு

தனிமை பிடிக்கிறது
இருளும் இனிக்கிறது
எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்
இலக்கை தொட்டுவிட்ட நினைப்பு
இன்னும் முழுமையடையா தவிப்பு

வாழ்க்கை வண்ணமயமாகி போனது
வசந்தத்தின் வாசம் எங்கும் நிறைந்தது

தன் மண்ணை பிரிந்த தமிழனை போல்
உன்னை காணா நொடிகள் நரகம்..!

இப்படி சிலிர்ப்பும், தவிப்பும், துடிப்பும்
இம்சையாய் மாறி.. மாறி..என்னுள்..!
என்ன நேர்ந்தது எனக்கு?

ஒரு சொல்
வாழ்வை பூக்க வைத்தது
வசந்தத்தின் வாசல் திறந்தது

"விரும்புகிறேன்" என்று நீ சொன்ன
ஒற்றை சொல்லின் வித்தையா இவை?

இது தான் காதலா..?

ஆஹா..!
இது எனக்கு காதல் காலம்..!

அன்னைக்கு அர்ப்பணம்..!!

அம்மா..!
தனக்கென்று வாழா
தன்னிகரற்ற ஜீவன் நீ..!
கணக்கின்றி இரவுகளில்
கண் விழித்து காத்தவள் நீ..!

எனக்கென்று உதிரம் தந்த
என் அன்னை நீ..!
பிணக்கென்ற நேரமெல்லாம்
பிள்ளை பாசம் பொழிந்தவள் நீ..!
உனக்கென்று எதுவும் தேடா
உத்தம பெண் நீ..!

அன்னை வடிவில் வந்த
அன்பின் அவதாரம் நீ.!
என்னை காத்து வளர்த்த
என் இதய தெய்வம் நீ..!
கண்ணின் இமை போல்
கருத்தாய் பார்த்தவள் நீ..!

தன்னலம் மறந்தே போன
தகைமை வாய்ந்த தாய் நீ..!
என்ன செய்து கடன் தீர்ப்பேன்..?
என்று உன் மடி பார்ப்பேன்..?
என் செல்லத்தாயே...
எனக்கு எல்லாம் நீயே..!!

தேவதைக்கு திருவிழா..!

பெண்ணே..!
கண்ணில் உனை நான்
கண்ட நேரம் கனவானாய்.!
உன்னை பிரிய மனமின்றி
என்னில் உனை ஒளித்தேன்.!
கனவாய் போன கன்னியின்
கணவனானது காதலின் வரம்.!

மண்ணில் நான் கண்ட
மாணிக்க கல் உனக்கு
என்னில் பிடிக்க சிறப்பாய்
ஏதும் இருக்கிறதா..?

பொன்னின் தரம் கொண்ட
பெண்ணின் வடிவம் நீ.!
விண்ணின் உயரமாய் காதலை
உன்னில் க(கொ)ண்டேன்..!

வரமளிக்கா கடவுளுக்கும்
வருடா வருடம் திருவிழா..!
அனுதினமும் அன்பு காட்டி எனை
ஆளும் தேவதைக்கு எடுப்பேன்
தினந்தோறும் திருவிழா..!!

அனிமேஷன் அற்புதம் Beovulf-திரை விமர்சனம்.!

பியோவுல்ஃப் (Beovulf) - திரை விமர்சனம்.

சமீபத்தில் பியோவுல்ஃப் (Beovulf) என்ற படத்தின் போஸ்டர் பார்த்து அதை பார்க்க ஆவல் கொண்டேன். அதை இணையத்திலிருந்து டிவிடியாக தட்டி நேற்றிரவு பார்த்தேன். திரைப்படத்தை பார்க்க தொடங்கிய எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சி என்னவென்றால் அது ஒரு அனிமேஷன் படம். அதன் பின், படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை நான் பெற்றது அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகள். பொதுவாக அனிமேஷன் படங்கள் என்பவை கற்பனை கதாநாயகர்களையோ, பிரபமான பெயர்களுடைய மிருகங்களை கதாபாத்திரங்களாக கொண்ட படங்களாக தான் இருக்கும். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது. திரைநாயகர்களை வைத்து படம் எடுப்பது போல், அவர்களையே அச்சு அசலாக அனிமேஷனில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள் (ரஜினியை வைத்து அப்படி ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. அதன் ட்ரைலர் பார்த்த வகையில் தொழில்நுட்பத்தில் அந்த படம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்). இப்படி ஒரு புதுமையான முயற்சி உலக திரைப்பட உலகில் பெரும் புரட்சியை, மாற்றத்தை எதிர்காலத்தில் உண்டு பண்ணப்போவது சர்வ நிச்சயம்..!! ஒரு படம் ஒழுங்காக ஓடிவிட்டாலே உச்சிக்கு ஓடிப்போய் அமர்ந்து கொள்ளும் நம் கதாநாயர்களின் பல்லை பிடுங்கும் வேலையை இந்த புதுமை செய்யும். இனி ரஜினி படத்தில் நடிக்க ரஜினி தேவை இல்லை. அவரில்லாமல் ரஜினி படம் வெளியாகும். அவர் இல்லாவிட்டாலும் அவர் பெயரை, உருவத்தை பயன்படுத்தியதற்கு காப்பிரைட் போன்ற தொகை தரவேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம். இனி ரஜினி உருவம் கூட தேவையில்லை. எந்த நடிகருக்கும் பொருந்தாத புது நாயகனை உருவாக்கி திரையில் பிரபலப்படுத்தினால் அவன் தான் ஹீரோ, அதாவது மாய கதாநாயகன் (ஆனால், கதாநாயக மோகம் மக்களிடம் குறையுமா என்பது கேள்விக்குறி தான்..!!)

எனக்கு வரைவதில் விருப்பம் உள்ளவன் என்பதால் நான் பொதுவாக அனிமேஷன் படங்களை விரும்பி பார்ப்பேன். இந்த படத்தின் பெயர் என்னை கவராததால் இதை பார்க்க தவற விட்டிருக்கிறேன். இதை பார்த்த பிறகு இத்தனை நாள் பார்க்காததற்காக என்னை நான் நொந்து கொண்டேன். ஹாலிவுட் படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலம் செய்யப்படும் ஒரு சில காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு அவர்களின் திறமையை நினைத்து வியப்பேன். ஆனால், இந்த படத்தில் மொத்த படத்தையும் ஒரு அனிமேஷன் போல் இல்லாமல் நிஜ திரைப்படத்தை போல் எடுத்திருப்பதால் அவர்களுக்கு இனி எதுவும் சாத்தியமே என்று நிச்சயமாகிறது. அனிமேஷன் படங்களில் பொதுவாக இருக்கும் குறை கேரக்டர்களின் நடை, உடை, பாவனைகள், முக உணர்ச்சிகள் சரியாக அமையாது. அதுவும் மனிதர்களை கொண்டு செய்யப்படும் படங்களில் அது பெரும் குறையாக இருந்து விடும். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் கூட அந்த வித்தியாசங்கள் எதுவும்இல்லாமல் அனிமேஷனில் கன கச்சிதமாக கலக்கியிருக்கிறார்கள். படத்தில் வரும் காட்சிகளும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது.



சரி.. கதை என்ன..? அனிமேஷன் படங்களில் என்ன பெரிய கதை இருந்து விடப்போகிறது.?!! வழக்கம் போல அம்புலிமாமா கதை தான்.! ஆனால், அனிமேஷனில் தரத்தை உயர்த்தி எல்லோரையும் விழி விரித்து வியப்புடன் பார்க்க வைத்து விட்டார்கள். கதைப்படி மன்னன் ஹ்ரோத்கர் ஆளும் ஒரு நாட்டில், மிக கோர உருவமுள்ள க்ரண்டல் என்ற இராட்சத மனிதன் இருக்கின்றான். அவன் அவ்வப்போது நாட்டுக்குள் வந்து மக்களை கொல்கிறான். இதனால் மன்னருக்கு பெரும் கவலை ஏற்படுகிறது. அப்போது தான் நம் கதாநாயகன் பியோவுல்ஃபின் பிரவேசம் (அவர் நடந்த நிகழ்வாக சொல்லி காட்டும் காட்சியில் அவர் கடலில் இராட்சத ஜந்துக்களை கொல்லும் காட்சிகள் வெகு அமர்க்களம்!). அதை தன் வீர, தீர பராக்கிரமத்தை பயன்படுத்தி பயன்படுத்தி நாயகன் வெற்றி கொள்கிறான். இதனால் கோபம் கொள்ளும் அவனின் அம்மா பதிலுக்கு ஊரில் புகுந்து மக்களை கொண்டு பழி வாங்குகிறாள்..! (அம்மா வில்லி யார் தெரியுமா..நம்ப மாட்டீர்கள்.. நம்ம ஏஞ்சலினா ஜூலி தான்...! கடல் கன்னி போல் வருகிறார்..!!). அம்மா வில்லியை நாயகன் கொல்லப்போய், அதை செய்யாமல் அவள் மீது மையல் கொள்கிறார்.! பிறகு அதை கொன்றதாய் வந்து சொல்லிக்கொள்கிறார். இதன் மூலம் அரசன் தன் ஆட்சியை நாயகனிடம் கொடுத்துவிட்டு தன்னை மாய்த்துக்கொள்கிறார்.

காலம் ஓடுகிறது..!! நாயகனால் வில்லிக்குஉருவான இராட்சத ட்ராகனால் மீண்டும் நாட்டில் தொல்லை.! இது நாயகனுக்கு பெரும் கவலையை கொடுக்கிறது. அதை கொல்ல முடிவெடுத்து போகிறார். அதை கொன்றாரா, வென்றாரா என்பது தான் மீதி கதை..!!



அம்மா வில்லியாக ஏஞ்சலீனா ஜூலியை அமைக்க எப்படி மனம் வந்தது இயக்குனருக்கு என்று தெரியவில்லை. படத்தில் அவர் நடிக்காமல் நடித்திருக்கிறார், அதுவும் உடை எதுவும் இல்லாத கடல்கன்னியாக..! (படத்தில் சில இடங்களில் நிர்வாண காட்சிகள் இருந்தும் கொஞ்சம் கூட ஆபாச உணர்வு வரவில்லை. அதனால் படத்துக்கும் P13 என்று தரவுப்படுத்தி இருக்கிறார்கள்). காட்சிகளை கலை நயத்துடன், கொஞ்சம் கூட பிசகாமல் செதுக்கி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கு வயதானதை வெகு அற்புதமாக கற்பனையில் வடித்து, அதை தோற்றத்தில், செயல்களில் காட்டியிருக்கிறார்கள்..!!

கதாநாயகனாக ரே வின்ஸ்டன், கதாநாயகியாக ராபின் ரைட் பென், மன்னனாக அந்தோணி ஹாப்கின்ஸ், தளபதியாக ப்ரெண்டன் க்ளீசன், வில்லன் கிரண்டலாக க்ரிஸ்பின் க்ளோவர் ஆகியோர் கதாபாத்திரங்களாக உலவியிருக்கும் இப்படத்தில் தங்களின் கதாபாத்திரத்திற்கு அவரவர்களே குரல் கொடுத்திருக்கிறார்கள் (பேசி விட்டு நடித்ததற்கும் சேர்த்து இரட்டை சம்பளம் வாங்கியிருப்பார்களோ.!!). இப்படத்தை ராபர்ட் சிமெகிஸ் இயக்கி அற்புதமாய் இயக்கி இருக்கிறார். படத்தின் இசை விறுவிறுப்பிற்கு பெரும் பலம்..!!

வில்லனின் தோற்றம் மிக கொடூரமும், அருவெருப்பும் நிறைந்திருக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும் பொழுது ஒரு அனிமேஷன் படத்தை பார்க்கும் உணர்வேயில்லாமல் நிஜ நடிகர்கள், காட்சிகளை காணுவது போல் தோன்றி பிரமிப்பு ஏற்படுகிறது. இது போன்ற படங்கள் இனி அதிகமானால் கதாநாயக மோகம் ஒழிந்து நிஜ கதாநாயர்களான இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பெயர் கிடைக்கும்.

இந்த படத்தின் பெருமை நான் சொல்வதை விட நீங்களே பார்த்து உணர்வது தான் பொருத்தமாக இருக்கும். இதை தியேட்டரில் பார்க்க வேண்டும், அப்படி முடியாத போது குறைந்த பட்சம் டிவிடி தரத்தில் பார்த்தால் தான் இரசிக்க ஏதுவாக இருக்கும். இந்த படத்தை பார்த்தது ஒரு இனிமையான அனுபவமென்றால் அது மிகையல்ல..!!

புதன், 9 ஏப்ரல், 2008

என் அறிமுகம்..!

என் இயற்பெயர் ஜாஃபர். இதயம் என்ற புனைப்பெயரில் மனதில் பட்டதை எழுதி வருகிறேன். இந்த பெயரை நான் தேர்ந்தெடுக்க காரணம்,

1. இதயம் உயிர் வாழ தேவையான இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது. அங்கு தான் உயிர் துடிப்பும் தோன்றுகிறது. அது போல சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கை, சமுதாய முரண்பாடுகள் என்ற கெட்ட இரத்தத்தை சுத்திகரிக்க இந்த இதயம் முயற்சி செய்யும்.

2. அன்பிற்கும் இதயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது மூளை என்ற எஜமானனின் ரசவாதமே. ஆனால், அன்பு பற்றிய எல்லா விஷயத்திலும் அதற்கு காரணமான மூளையின் பெயர் வராமல் இதயத்தின் பெயர் தான் குறிப்பிடப்படுகிறது. அது போலவே நான் என்னவோ சாதித்தது போலும், சாதிப்பது போலும் பெயர் இதயம் என்ற எனக்கு எப்போதும் கிடைக்கிறது. ஆனால், அதன் பின்னணியில் மூளை போன்ற ஒரு காரணம் இருக்கிறது என்பது தான் உண்மை.

நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன். தற்பொழுது சவூதியில் வாசம். Real வாழ்க்கையை இழந்து விட்டு Riyal வாலை பிடித்து துரத்திக்கொண்டிருப்பவன். கணிணிக்காதலன். தமிழ் மீதும், தமிழ் எழுதுவதிலும் கூடுதல் ஈடுபாடு. சமூக அவலங்கள் எங்கு இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்பவன். இந்தியாவிற்கு சிறந்ததொரு எதிர்காலம் இருக்கிறது என்று நம்புபவன். மற்றபடி பெரிதாக சொல்லுமளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை.

வழக்கம் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். இனி இவன் இதயம்..!! நன்றி.

என்றும் அன்புடன்,
இதயம்


Related Posts with Thumbnails